Monday, April 4, 2011

கடிகார மலரும், வீனஸ் பிளை டிராப்’ மலரும்.....இந்த அழகிய மலரை கடிகாரப்பூ என்றே அழைக்கலாம்.

கன்னட மொழியில் கடியார கண்டே என்று குறிப்பிடுகிறார்கள்.

எத்தனை அற்புதமாக் இயற்கை படைத்திருக்கிறது! 
எத்தனை நுட்பம்!! 

மணி முள்,நிமிட முள், நொடிமுள் என மூன்று மூன்றும் அடையாளம் காணும் அளவுக்கு வேறு வேறான நீளங்களில் அமைந்திருக்கிறது. 

சுற்றிலும் அறுபது நிமிடங்களைக் குறிப்பிடுமாறு நீல ,வெண்மை,பிங்க் -வண்ணத்தில் அறுபது சிறு சிறு இதழ்கள். அதனை ஐந்து அழகிய பசுமையான காம்புகள் அணி செய்கின்றன. 

அறுபது  சிறு இதழ்களையும் ஐந்து இதழ்கள் பன்னிரண்டு பகுதியாகப் பிரித்து நாளின் 12 மணி நேரத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது.  

ஒரு நாளின் பன்னிரண்டு மணிகளைக் குறிக்கும் வகையில் 
சுற்றி  இதழ்களுமாக், அமைந்திருக்கும் அழகு எண்ணிப்பார்த்து 
அதிசயப் படவைக்கிறது.


இந்த பூவைப் பார்த்து நம் முன்னோர் கடிகாரத்தை அமைத்தார்களோ அல்லது கடிகாரத்தைப் பார்த்து இந்தப் பூ தன்னைத் தகவகமைத்துக் கொண்டதா?? இயற்கையின் அதிசயப் படைப்புகள் எண்ணிமுடியாதவையாக சிந்தையைக் கொள்ளை கொள்கின்றன சில மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன. 

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இது போன்ற தாவரங்களைக் காணலாம்.  

ஜாடி போன்ற பூக்களைக் கொண்ட `பீட்சர்’ என்ற தாவரமும், 


`சன் ட்’ மலரும், 
File:Darlingtonia californica ne8.JPG

`வீனஸ் பிளை டிராப்’ மலரும் பூச்சிகளைக் கொன்று ருசிப்பதில் வல்லவை.
asaiavm.jpg (200×200)

சில தாவரங்கள் முழுநேரமும் பூச்சிகளையும், புழுக்களையும் உணவாக உட்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றன. 

உலகின் பல பகுதிகளிலும இந்தத் தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு `டிராசீரா’, `டயானியா’ என்று விஞ்ஞானிகள் அறிவியல் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  இந்த அசைவத் 


தாவரங்கள் தங்களின் இலைகளில் மிகச் சிறிய ரோமம் போன்ற அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. மெல்லிய ரோமங்களில் பசை போன்ற பொருள் காணப்படுகிறது.

எனவே இவற்றின் மீது அமரும் புழு, பூச்சிகள் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் அவற்றைத் தனது இலைகளால் மூடிச் சுருட்டிக் கொல்கிறது. அந்த உயிரினங்களை அமிலம் போன்ற சுரப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கிரகித்து விடுகிறது.  


பின் மறுபடி இலையை விரித்து அடுத்த பூச்சியின் 
வரவுக்காகக் காத்திருக்கிறது. 

இந்தத் தாவரம் மண்ணில் இருந்து நீரையோ, 
சத்துகளையோ எடுத்துக்கொள்வதில்லை.


இத்தாவரங்களுக்குத் தேவையான சத்து முழுவதும் உயிரினங்களில் இருந்தே கிடைக்கிறது.  இதைப் போன்ற விசித்திரமான தாவரங்கள் இந்தியாவில் அரிது. அபூர்வமாக நம் நாட்டின் வறண்ட காடுகளிலும், சில சதுப்புநிலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இப்படி பூச்சிகளைக் கொன்று சாப்பிடும் தாவரங்கள் பெரிதாக இருக்கும் என்று  நினைத்தால் தவறு. இவை சிறிதாகவே இருக்கின்றன. 
3 முதல் 5 அங்குலமே இருக்கும்.
இவற்றை வீடுகளில் தொட்டிச் செடியாக வளர்த்தால் கொசு, ஈக்கள், கரப்பான் பூச்சிகள் -ஏன் எலிகளைக் கூட உணவாக்கி விடலாமே!1

34 comments:

 1. //கடியார கண்டே - அறுபது நிமிடங்களைக் குறிப்பிடுமாறு நீல ,வெண்மை,பிங்க் -வண்ணத்தில் அறுபது சிறு சிறு இதழ்கள். அதனை ஐந்து அழகிய பசுமையான காம்புகள் அணி செய்கின்றன//

  ஆஹா... இயற்கையின் அற்புதம் தான் இது...

  //சில செடிகளின் மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன//

  பாவம்ங்க... இந்த பூச்சி பிடிக்கற பூக்களை விட்டுடுங்க...

  இங்க நிறைய அரசியல்வியாதிகள் மனுஷங்களையே முழுங்கி ஏப்பம் விடறாய்ங்க....

  ReplyDelete
 2. அருமை, ஆச்சரியம்,ஆனந்தம், நம் அறியாமையை உணர்ந்து அடக்கம் எல்லாம் ஒரே நேரத்தில் ஏற்படுகிறது இந்த இயற்கை விந்தைகளைப் பார்க்கும் போது!

  அந்த ஐந்து பகுதிகளை, பிரபஞ்சத்தை நிரப்பும், நிகழ்த்தும், நகர்த்தும், பஞ்ச பூதங்கள் என்று கூடக் கொள்ளலாமே!

  ReplyDelete
 3. @ R.Gopi said...

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 4. @மனம் திறந்து... (மதி) said.//
  அந்த ஐந்து பகுதிகளை, பிரபஞ்சத்தை நிரப்பும், நிகழ்த்தும், நகர்த்தும், பஞ்ச பூதங்கள் என்று கூடக் கொள்ளலாமே!//
  அருமையான விளக்கம். நன்றி.

  ReplyDelete
 5. நல்ல பதிவு.
  நிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  ReplyDelete
 6. இயற்கையின் அற்புதம் தான் இது...நல்ல பதிவு.
  நிறைய புதிய இயற்கையின் அற்புதம் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 7. நல்ல பதிவு. கெடிகாரம், முட்கள் அழகோ அழகு.

  தாவரங்களில் கூட அசைவம் சாப்பிடும் தாவரங்களா? அதிசயமான செய்திதான் எனக்கு.

  வழக்கம்போல அசத்திப்புட்டீங்க.

  இதுபோன்ற விஷயங்களை தினமும் தரும் உங்களை அடிச்சுக்க வேறு ஆளே கிடையாது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. இயற்கையின் அழகு அழகுதான்
  அதுவும் கடிகாரம் மலர் சூப்பர்

  ReplyDelete
 9. கடிகாரப்பூ எனக்கு புதுசு... நல்ல தகவல். ;-))

  ReplyDelete
 10. என்னங்க தொடர்ந்து பல புதிய புதிய விசயங்களா போட்டு தாக்குறீங்க..

  அறியமுடியா பல அறிய தகவல்களை அறியமுடிந்தது.. தேங்க்ஸ்..

  ஆன்மீக பதிவுகளுக்கு லீவ் கொடுத்தாச்சா.?

  ReplyDelete
 11. //அறுபது நிமிடங்களைக் குறிப்பிடுமாறு நீல ,வெண்மை,பிங்க் -வண்ணத்தில் அறுபது சிறு சிறு இதழ்கள்//

  wow...nature is great..:)

  நெறைய புது விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி...

  ReplyDelete
 12. இயற்கையின் அற்புதம் தான் இது... அருமையான பதிவு.

  ReplyDelete
 13. அருமையான நல்ல பதிவு!!

  ReplyDelete
 14. தங்கள் பதிவில் எப்போதும்
  அரிய தகவல்களை
  நாங்கள் இதுவரை
  அறியாத தகவல்களை
  மிகச் சரியாக
  அறிந்துகொள்ளும்படித் தருகிறீர்கள்
  படங்களுடன் பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. இயற்கையின் அழகு கொள்ளையழகு.
  அறியமுடியா பல அறிய தகவல்களை அறியமுடிந்தது..

  ReplyDelete
 16. அழகாயிருந்தாலும் ஆபத்தானவைகள் என்கிறீர்கள் !

  ReplyDelete
 17. Very interesting.
  Nice pictures.
  Thanks for sharing.
  viji

  ReplyDelete
 18. புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி. கடியார கணடே பூ நம் பக்கத்தில் காணமுடியுமா.?ரியல்லி இண்டெரெஸ்டிங்.

  ReplyDelete
 19. @ G.M Balasubramaniam said...
  புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி. கடியார கணடே பூ நம் பக்கத்தில் காணமுடியுமா.?ரியல்லி இண்டெரெஸ்டிங்.//
  தமிழ் நாட்டிலும், கர்நாடகாவிலும் பார்த்திருக்கிறேன். ஈரோட்டில் ஒரு வீட்டில் பார்த்து ,அவர்களிடம் கேட்டு, சில மலர்களும், சிறு கொம்பும் வாங்கிவந்து வீட்டில் வளர்த்து முதல் மலரைப்பார்த்து ஆனந்தப் பட்டு, கோவிலுக்குஅர்ப்பணித்தேன். காலப்போக்கில் எவ்வளவோ கவனமாகப் பராமரித்தும் கொடி வாடியது கவலை கொள்ளவைத்தது.
  மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 20. @ viji said.../
  வருகைக்க் நன்றிங்க.

  ReplyDelete
 21. @ S.Menaga said...//
  வாங்க, நன்றிங்க.

  ReplyDelete
 22. @ ஹேமா said...//
  ஆழகான செடி வேறு. அது ஆபத்தில்லாதது.

  ஆபத்தான செடி வேறு. நாம்தான் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 23. @அன்புடன் மலிக்கா said...//
  அன்புடன் தந்த பின்னுடத்திற்கு நன்றிங்க.

  ReplyDelete
 24. @ Ramani said...

  வருகைக்கும் க்ருத்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 25. @அப்பாவி தங்கமணி said...//
  வருகைக்கும் க்ருத்துகும் நன்றிங்க.

  ReplyDelete
 26. @வை.கோபாலகிருஷ்ணன் sa//பராட்டுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 27. @தம்பி கூர்மதியன் said...//
  கோவில் பதிவு போட்டாயிற்றே. வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 28. @போளூர் தயாநிதி said...//
  நன்றிங்க.

  ReplyDelete
 29. அனைத்தும் அருமை!!!!!!!!!!!!

  ReplyDelete
 30. வித்தியாசமான பெயர்தான்..

  ReplyDelete
 31. நல்ல பதிவு

  ReplyDelete