Thursday, May 31, 2012

மகத்துவம் மலரும் மந்திராலய மகான்

lay
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

நம்மில் ஒருவராக பிறந்து உலக ஆசைகளைத் துறந்து துறவறம் பூண்டு மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்திய மகான்களைமாதா, பிதா, குரு, தெய்வம்.” என்று நம் அறிவு கண்களை திற்ந்து வைக்கும் குருவை தெய்வத்திற்கும் மேலாக வணங்குகிறோம். 

நம் நாட்டில் கோயில்களுக்கு இணையாக நிறைய மடங்களும் இருக்கின்றன.தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதல்லாமல் இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்திராலயத்தில் ஜீவ சமாதியடைந்தார் குரு ராகவேந்த்திரர். 

குரு ராகவேந்திரர் முன் அவதாரம் சங்கு கர்ணன் என்ற தேவன் 

ஒவ்வொரு யுகங்களிலும் சில அவதாரங்கள் எடுக்க எம்பெருமான் நாராயணன் விரும்பினார். இதை அறிந்த பிரம்ம தேவன், ஸ்ரீமன் நாராயணன் எடுக்கப் போகும் பத்து அவதாரங்கள் என்னவென்று அறிந்து, அந்த அவதாரங்களை மனதில் நினைத்துப் பூஜை செய்ய விரும்பினார்.  பூஜை செய்வதற்கான நறுமணமுள்ள மலர்கள் சத்திய லோகத்தில் கிடைப்பது அரிது என்பதால், தன்னுடைய தேவதைகளில் ஒருவரான சங்குகர்ணன் என்பவரை பூலோகத்திற்கு அனுப்பி மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, பாரிஜாதம், பவளமல்லி, தாழம்பூ போன்ற மலர்களை தினமும் எடுத்து வரப் பணித்தார்.

சங்குகர்ணனும் தினமும் பூமிக்கு வந்து மலர்களைப் பறித்துச் சென்று பிரம்மா விடம் கொடுத்தார். ஒவ்வொரு யுகத்திலும் நாராயணன் எடுக்கவிருக்கும் மூர்த்தங்களுக்கு ஏற்ப பூஜை செய்து வந்தார் பிரம்மா.

திரேதா யுகத்தில் எடுக்கப்போகும் ஸ்ரீ ராமாவதாரத்திற்கான பூஜைக்கு ஒவ்வொரு மலராக சங்குகர்ணன் எடுத்து பிரம்மாவிடம் கொடுக்க, பிரம்மா அர்ச்சனை செய்தார். .

ஸ்ரீராமனுடைய அழகிலும் கம்பீரத்திலும் தர்மத்திலும் தன் மனதைப் பறிகொடுத்த சங்குகர்ணன் மலர் கொடுப்பதை மறந்து மயங்கி நின்று கொண்டிருந்தார்.

கோபம் கொண்ட பிரம்மா, ""பூமியில் நீ பிறந்து, எந்த ராமனுடைய பெருமையில் மயங்கினாயோ- அவருடைய அவதாரப் பெருமையை மக்களுக்கு உபதேசித்து மீண்டும் சத்திய லோகத்திற்கு வருவாயாக!'' என்று சபித்தார்.
இந்த சாபத்தின் காரணமாக பூலோகத்தில் அரக்க மன்னன் ஹிரண்ணிய கசிபுவின் மகன் பிரஹல்லாதனாய் பிறந்தார்.

மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரஹல்லாதன் தன் தந்தை அரக்கன் ஹிரண்ணிய கசிபுவை வதம் செய்ய நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.

தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் .

தன் அடுத்த பிறவியில் வியாசராஜராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தான் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.

Sri Moola Rama Archana !


திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வெங்கடாஜலபதியின் அருளால் மூன்றாவது பிள்ளையாக தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தார். அவர்கள் அந்த குழந்தைக்கு வெங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
வெங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். 
கும்பகோணத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் கற்று தேர்ந்தார்.

சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவராகவும், இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார்.

 குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். வறுமையில் வாடியும் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.
வெங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தர் 
வெங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று  பகவான் கூறியதாக கனவு கண்டார்.  

தஞ்சாவூரில் துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக
ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்

1671 ஆம் ஆண்டு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்ககு முன் தன் பக்தர்களுக்கு மனம் நெகிழவைக்கும் வகையில் அவர்களை நல்வழிப்படுத்த ஒரு உரையாற்றினார்.  
• சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.
சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்.

நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது.

அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது.

சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
• கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக   இருக்கக்கூடாது'. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி . குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள் தனமே ஆகும்.

நமக்கு கடவுள் மேல் மட்டுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார்.

ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. 
அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.
ஆந்திர மாநிலம் ஆதோனி அருகே, துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த்துள்ளது மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த இடம். 

 பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம். அப்பொழுது மடத்திற்காக அளிக்கப்பட்ட நிலத்தைத் திரும்பபெற வேண்டி ஆயத்தங்கள் நடந்துக் கொண்டிருந்தது.

SWARNA MANTAPA FOR SRI MOOLARAMADEVARU

Swarna Mantapa for Sri Moolarama Devaru
அப்பொழுது அதை விசாரிக்க சர் தாமஸ் மன்றோ  நியமிக்கப்பட்டார். விசாரணைக்காக மடத்திற்கு சென்று பயபக்தியாக செருப்புகளை வெளியே கழற்றிவிட்டு, தொப்பியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு பிருந்தாவனத்திற்கு எதிரில் சென்று நின்றதுதான் தாமதம், அவர் சற்றும் எதிர்ப்பார்க்காத, சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அதிசயம் நிகழ்ந்தது. 

மடத்திற்கு அந்த இடம் எவ்வளவு அவசியம் என்று எடுத்துரைக்க அந்த ராகவேந்திர சுவாமிகளே தன் சமாதியிலிருந்து உயிர்பெற்று எழுந்து வந்து மன்றோவுடன் சரளமான ஆங்கிலத்தில் உரையாடினார்.

ஆனால் அங்கு கூடியிருந்த மற்றவர்களால் ராகவேந்திர சுவாமியைப் பார்க்கவும் முடியவில்லை, அவர் குரலைக் கேட்கவும் முடியவில்லை.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுடன் நேருக்கு நேராக ஆலோசனை நடத்திய மன்றோ உடனே அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.

ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.

""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.

""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.

""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!"" மூன்றாமவர் சொன்னார். 

"எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்...
என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்...
பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""

""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார்.

ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.
புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.


நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. 


நவாப்பிடம் மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான்.

துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார். 

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அழகு எழில் கொஞ்சும் துங்கபத்திரை நதிக்கரையோரம் அமைந்திருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மடத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் நம் பிரார்த்தனை நிறைவேறுவதோடு மன அமைதியும் கிடைக்கும்.
கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை.


Sri Guru Raghavendra: Sri Raghavendra Swamy Aradhane | itslife.inSri Guru Raghavendra: Sri_Guru_Raghavendra-image « Chiraan's Astrology


Wednesday, May 30, 2012

ஞானமய கணபதிதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தோனைக் 
காதலால் கூப்புவர்தம் கை.'
GaneshaAnimated.gif Ganesha Animated
கணபதியை வழிபட்டால் அவனருளால் வழிபடுவோர்க்கு எல்லாவிதமான இலக்குமி கடாட்சமும் கிட்டும்; செய்ய நினைக்கும் காரியங்கள் இனிது நிறைவேறும்; 

செம்மையான சொற்களைப் பேசும் வாக்கு வல்லமையை அளிக்கும்; 

பெருமை தரும்; நன்மக்களை உடையராகச் செய்யும்; ஆதலால் தேவலோகத்திலுள்ள தேவர்களும் விருப்பத் தால் பயபக்தியுடன் விநாயகரை கைகூப்பி வணங்கி அவனருளைப் பெறுகிறார்கள். 

எனவே, பூலோகத்திலுள்ள மக்களாகிய நாமும் வழிபட வேண்டும் 
என்பது இப்பாடலின் பொருள்.


சிவபெருமான் திரபுர தகனத்தின் பொருட்டு தேர்மீது ஏறிச் சென்றபோது, விநாயகரை முதற்கண் வணங்காது புறப்பட்டதால் தேர்ச் சக்கரத்தின் அச்சு முறிந்துவிட்டது. 

பின்னர், சங்கரன் அச்சிறுபாக்கத்தில் ஆனைமுகத் தானைப் பூஜித்துச் சென்றதால்தான் திரிபுராதிகளை வென்றார் என்பது மூத்த பிள்ளையாரின் பெருமை!

எடுத்த காரியங்கள் சித்தி பெற முதன்முதலில் கணேசனை வணங்குவது நம் நாட்டு வழக்கம். 

அதனால்தான் இவருக்கு மூத்த பிள்ளையார் என்று பெயர். 

தேவர்களைத் துன்புறுத்திய கஜமுகாசுரனைக் கொன்று தேவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க, சதாசிவனே தன் இச்சையால் யானைமுகத்துடன் ஞானமயமான திருமேனியைத் தாங்கித் தோன்றினான் என்பது புராண வரலாறு. 

ஆதிப் பரம்பொருள் - பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய சிவபெருமானும், பார்வதி தேவியாரும் உலகிலுள்ள மக்களுக்கு 
தாயும் தகப்பனுமாக விளங்குகின்றனர்.. 
Legends of Load Ganesha
அழித்தல் தொழில் கொண்ட அரன், அவரை நோக்கி தவம் செய்யும் அனைவருக்கும் வரம் தரும் வள்ளல். உலகமே அவனை வணங்குகிறது. 


இத்தனை பெருமை பெற்ற பரமன் தன் மகன்களான கணபதியையும் முருகனையும் இரண்டு சந்தர்ப்பங்களில் வணங்கியதாக புராணம் சொல்கிறது.


தகப்பன்சாமி பிரணவப் பொருள் அறிந்த முருகன் பிரணவ்ப்பொருள் பற்றி எல்லாரையும் கேட்டு, சொல்லாதவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கினான். 


பிரம்மதேவனைக் கேட்டான். படைக்கும் கடவுள் விழித்தான். 
அவனைச் சிறைச் சாலைக்கு அனுப்பினான் சிங்கார வேலன். 

தந்தையான பரமேஸ்வரன், "பிரணவப் பொருளை எமக்குச் சொல்வாயாக' என்று முருகனிடம் கேட்டார். 


"தந்தையாரே, உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன். ஆனால் நான் குரு ஸ்தானத்திலும் நீங்கள் சிஷ்ய ஸ்தானத்திலும் இருந்தால் நான் தயார்' என்றான் எழில்வேலன். 

அதன்படியே அரன் நிற்க, அழகன் மேலே அமர்ந்து 
பிரணவத்துக்குப் பொருள் கூறினான். 


இக்காட்சி சுவாமி மலையில் நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் பாலசுப்ரமணியனுக்கு "தகப்பன் சாமி' என்ற  பெயரும் உண்டாயிற்று.

எந்த காரியம் செய்தாலும் கணபதியை முதன்முதலில் வழிபட வேண்டும் என்றும்; யாராக இருந்தாலும் கற்பிப்பவன் மேலேயும் கற்பிக்கப்படுபவன் கீழேயும் இருக்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ளும் நிகழ்வுகள்..

தோற்றி அருணகிரி துன்பம்தளைத் துடைத்தாய்
நேற்றி அயனைச் சிறைவிடுத்தாய்- 
அப்பன் அரனுக்கே பொய்யா பிரணவப் பொருளைச் சொல்லி வந்ததென்
 பழனிஅய்யா என்பால் ஏன்அடம்?

கணபதி கழல் போற்றி! கங்கை சூடன் திருவடி போற்றி!
கண்ணன் மருகன் காலடி போற்றி!
Tuesday, May 29, 2012

முக்தித் தலம் பேரூர்


Lord Shiv - 01வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஐந்து மலைகள் அரணாக சூழ இயற்கை சூழலில் எழிலால அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.

மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வர சுவாமி அருள்பாலிக்கும் பேரூர் ஒரு முக்தித் தலம் ஆகும்

பிறவாப்புளி, இறவாப்பனை, எலும்பை கல்லாக்கும் ஆறு முதலியன விளங்கும் முக்தி தலம்.

வாகனமான நாய் இல்லாமல் பைரவர் ஞான பைரவராக அருள் பாலிக்கும் தலம். 
homer
காமதேனு வழிபட்ட தலம், அதன் கன்று பட்டியின் குளம்புத் தழும்புடன் 
தேவ தேவன் மஹா தேவன் இன்றும் திருக்காட்சி தரும் தலம்.
விஷ்ணுவாகிய பட்டிமுனியும், பிரம்மாவாகிய கோமுனியும் வழிபட்ட தலம். நாற்று நடவு விழா நடக்கும் தலம்.
"தழும்புடைய நம்பனை நாத்தழும்பேற ஓம்பினால் ஓடுமே நம் வினை." என்றபடி இத்தலத்தில் ஐயனை தரிசிக்க இனி பிறவி என்பது கிடையாது.

நான்கு யுகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் பேரூர் தலம் விளங்கியுள்ளது.

. பிறவாப்புளி, இது பூப்பூக்கும் காய் காய்க்கும் பழம் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது. இராஜ கோபுரத்தின் எதிரிலே உள்ளது இப்பிறவாப்புளி.
இரண்டாவது இறவாப்பனை, பெரிய கோவிலின் வடக்கே உள்ள காஞ்சிமா (நொய்யல்) ஆற்றின் தென் கரையிலுள்ள பிரம்மன் பூஜித்த வடகயிலாயம் என்னும் சிறு கோவிலின் வெளி முகப்பில் உள்ளது இந்த இறவாப்பனை, 

எத்தனை யுகங்களாகவோ இம்மரம் அங்கேயே உள்ளது. 

பேரூரில் ஆன்மாக்களுக்கு அழியாத நிலையான வாழ்வைத் தந்தருளுபவர் இறைவன். 

அழியாத்தன்மைக்கு சான்றாக இவ்விறவாப்பனை உள்ளது.

அறவாணர்கள் போற்றிடும் பேரூர்
அழியாமெகக்கோர் இடமாகி
உறவாம் அதனால் எமைப்போல
உலவாததனுக்கு ஒரு சான்றாங்கு


இறவாப்பனை ஒன்றுள்ளது.
இப்பனை மரத்தின் மேல் பட்டையை கஷாயம் வைத்துக் குடித்தால் தசை சம்பந்தமான நோய்கள் விலகும்.

மூன்றாவது இத்தலத்தின் சாணத்தில் புழுக்கள் உற்பத்தி ஆவதில்லை.

நான்காவது நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட எலும்புகள் வெண் கற்களாக மாறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் தங்கள் இறந்த உறவினர்களின் அஸ்தியை இக்காஞ்சிமா நதியில் கொண்டு வந்து கரைக்கின்றனர்.

ஐந்தாவது இத்தலத்தில் இறப்பவர்கள் வலது காது எப்போதும் மேலே இருக்கும்படி வைப்பர், ஏனென்றால் சிவபெருமான் ஓம் என்னும் ஐந்தெழுத்தை ஓதி தன்னடியில் சேர்த்துக் கொள்வார் என்பதால். எனவே இத்தலத்தில் பட்டீஸ்வரரை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியில்லை.

ஆதி சங்கரர் தன் தாய் முக்தி அடைய இத்தலத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்.

சுந்தரருக்காக ஐயன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் ..
ஐயனும் அம்மையும் சேற்றில் இறங்கி நாற்று நட்ட லீலைதான் அது.

ஒரு சமயம் சுந்தரர் பரவையாருடன் ஐயனை தரிசித்து பொருள் பெற பேரூர் வந்தார். எம்பிரான் தோழர் அல்லவா சுந்தரர், பெருமான் அவருடன் சிறிது விளையாட விழைந்தார்.

சர்வமும் தானே என்று சுந்தரருக்கு உணர்த்த தான் விவசாயியாக பள்ளனாகவும், அம்மை பச்சை நாயகி பள்ளியாகவும், மற்ற சிவகணங்களாகவும் நாற்று நட சென்றனர்.

அப்போது ஐயன் நந்தியிடம் நானும் அம்மையும் வயல் வெளிக்கு செல்கின்றோம், சுந்தரன் வந்தால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடு என்று சொல்லிவிட்டு சென்றார்.

திருக்கோவிலுக்கு வந்த சுந்தரர் ஐயனைக் காணாது திகைத்து நந்தியிடம் வினவ, நந்தியும் ஐயனின் ஆணையை மீறமுடியால் தெரியாது என்று கூறியது

ஆனால் சுந்தரர் வண்தொண்டர் அல்லவா எனவே குறிப்பால் வயலைச் சுட்டியது. வயல் பக்கம் சென்ற சுந்தரர் வயலில் சாதாரண மக்கள் போல சேற்றில் இறங்கி நெல் நாற்று நட்டுக்கொண்டிருந்த ஐயனையும் அம்மையும் வீழ்ந்து வணங்கி, "ஐயனே எமக்காக தாங்கள் இவ்வாறு துன்பப்படவேண்டுமா? என்று அழ, கருணாமூர்த்தியான எம்பெருமானும் சுந்தரனே யாம் உம்முடன் விளையாடவே இவ்வாறு செய்தோம் என்று கோவிலுக்கு சுந்தரருடன் திருக்கோவிலுக்கு திரும்பி வந்து அவருக்கு 
ஆனந்த தாண்டவக் காட்சியும் தந்தருளினார்.

பின்னர் சேரமான் பெருமாளிடம் சென்று பொருள் பெறவும் அருள் புரிந்தார். இந்த நாற்று நடவு விழா ஆனி மாதம் இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சரத்தில் நாற்று நடவும், உத்தரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாய் நடைபெறுகின்றது.

அம்மை மரகதவல்லி என்னும் பச்சைநாயகி தனிக்கோவிலில் அருட்காட்சி தருகின்றாள்.

அம்மையும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக அபய வரத ஹஸ்தங்களுடனும் அங்குசம், பாசம் ஏந்தி அருள் பாலிக்கின்றாள்.

விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு பச்சைநாயகி என்று பெயர் என்பார்கள்.

நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இங்கு விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள்.

அம்மன் விமானம் ஒரு கலசத்துடனும், நந்தி வாகனத்துடனும் உக்ரமில்லாத வடிவாக ஈஸ்வரி ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரு தனி சிறப்பு.

கர்மவீரர் காமராஜ் , நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகிய தன்னலம் கருதாத தியாகிகளின் அஸ்திகலச நினைவிடம் பேரூர் காஞ்சிமாநதி புனித கரையில் அமைத்து நமது பாரத தேசமே அஞ்சலி செலுத்துகிறது..  

கர்மவீரர் காமராஜ் அவர்களின் அஸ்திக்கலம். நினைவிடம்..

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் அஸ்திக்கலம். நினைவிடம்..

ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அஸ்திக்கலம். நினைவிடம்..


Perur  Pateeswarar Temple

TEMPLE'S ELEPHANT KALYANIMamudha, a Dance Drama, by Sudharani Raghupathy and Members of Shree Bharartalaya, at the 'Natyanjal 2011', organised by the Rotary Club of Coimbatore Metropolis, at Perur Temple, in Coimbatore. 
Mamudha, a Dance Drama, by Sudharani Raghupathy and Members of Shree Bharartalaya, at the 'Natyanjal 2011', organised by the Rotary Club of Coimbatore Metropolis, at Perur Temple, in Coimbatore. Photo: S. Siva Saravanan