Sunday, May 6, 2012

மதுரை அரசாளும் மீனாட்சி

ஓம்
சஹனா பவது;சகனௌ புனக்து
சக வீர்யம் கரவாவகை
தேஜஸ் விநாவதி தமஸ்து
மா வித் விஷாவகை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 • அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர். அவ்வாறு தாயின் வடிவில் அருள் புரிபவள் அன்னை பராசக்தி. அவள் காஞ்சிமாநகரில் காமாட்சியாகவும், மதுரையம்பதியில் மீனாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும் அருள் பாலிக்கிறாள்.
சைவமும், வைணவமும், இணைந்து கொண்டாடும்  ஒரு பெருவிழா மதுரை சித்திரைத் திருவிழா 

மீனாட்சியும் சொக்கரும் தங்கப் பல்லக்கில் உலா வரும் பவனியின் நோக்கம்,  பல்லக்கில் சாமியின் திருவுருவங்களை திரைச்சீலை மறைத்திருக்கும்... நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இறைவன் அன்றி யாவரும் அறியோர்.நல்லதும்,கெட்டதும்  கலந்திருக்கும்  உலகத்தில்,  நல்லவைகளுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்து நெறியோடு மனிதர்கள் வாழவேண்டும்  என்பதை  உணர்த்தவே பவனி...
.. 
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்திரை திருவிழா  கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் பக்தர்களின் "கோவிந்தா' கோஷம் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டுதோளுக்கினியாள் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு.


திருவிழாவின் முக்கிய விழாவான ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறா


சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள்,உலகை வென்ற அம்மன்,  
இறுதியாய் இறைவனையும் வென்றாள்...
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண, விண்ணுலகமே, மண்ணுலகிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்துவதாய் ஐதீகம்இறைவன் திருமணம் முடிந்த இரவு சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள்  

மூன்று திரிபுர அசுரர்கள் ஆணவம் கொண்டு மூவுலகத்தை துன்புறுத்தியதாகவும் அவர்களை வதம் செய்யவே சிவபெருமான் தேரேறிப் புறப்பட்ட புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர்.

இரவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் 
சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். 

நூபுர கங்கையில் நீராடி, பூஜையில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவர், அங்கு வந்த துர்வாசமுனிவரைக் கவனிக்காததால் கோபம் கொண்ட துர்வாசர், தவளையாகப் போகக்கடவது. என்று சுதபஸ் முனிவரைச் சபித்தார். 

மறுகணம் தவளையான முனிவர், சாப விமோசனத்தை வேண்டிக் கேட்க... வைகை கரையில் தவம் இருந்து வா, சித்திரா பௌர்ணமிக்கு மறுநாள் கள்ளழகர்  வைகைக்கு வந்து உனக்கு சாபவிமோசனம் தருவார்’’  என்று துர்வாச முனிவர் கூறியதாகவும், அதனால் சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் வழங்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.  

தன் தங்கை, மீனாக்ஷியின் கல்யாணத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்ட அழகர்,  மதுரை செல்வதற்கு தாமதமானது, 

அதற்குள் தன் தங்கையின் கல்யாணம்  முடிந்து விட்டதால், கோவம் கொண்டு மதுரைக்குள் செல்லாமல் வைகையில் சென்று, தன் கோபம் குறைய நீராடினார் என்றும் ஒரு காரணக் கதை உண்டு. 

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா மன்மதன் தகனம் நிகழ்ச்சி நடைபெறும்....


மகாதீபத் திருவிழாவை அடுத்து சித்ரா பெளர்ணமி விழாஅருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்  நடைபெறும் ..  கிரிவலம் வர கார்த்திகைதீபத்தைப் போல் சிறந்த நாளாக அமைகிறது... 


The pallav of the sari has the Madurai Sri Meenakshi Amman Koil, and on the borders are woven the seven woders of the world;
21 comments:

 1. மதுரை அரசாளும் மீனாக்ஷி......

  பாடல் வரிகளுடன் வெகு அழகான தலைப்பு.

  ReplyDelete
 2. இரண்டாவது படம் பார்க்கபார்க்க பசுமையுடன் கூடிய இனிமை ! ;)))))

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ஓம்
  சஹனா பவது;சகனௌ புனக்து......
  .................................................................
  ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  மனச்சாந்தி தரும் இனிய சொல்லைச் சொல்லி ஆரம்பித்துள்ளது, மனதுக்கு மிகவும் இதமாகவே ..... ....
  .............................

  ReplyDelete
 5. நல்ல படப்பிடிப்பு.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. /அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி................ //

  ஜில்ஜில்லென குதிரை சவாரி செய்வது போன்ற சூப்பரோ சூப்பரான வரிகள்.

  ReplyDelete
 7. //உலகை வென்ற அம்மன், இறுதியாய் இறைவனையும் வென்றாள்//

  அருமையோ அருமை.

  இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

  இறுதி வெற்றி உங்களுக்கே!

  நாங்கள் எப்போதுமே, எதற்குமே விட்டுக்கொடுத்துப் போகக்கூடியவர்களே.

  உங்களிடம் தோற்பதைத் தோல்வியாகவே நினைப்பதில்லை.

  சிவனை விட சக்தி தான், சக்தி மிக்கவள் என்பது நிரூபணமாகிவிட்டதே!!

  உங்கள் இறுதி வெற்றியில் தான் எங்கள் மகிழ்ச்சியே அடங்கியுள்ளதாக்கும்!!!

  ReplyDelete
 8. //நல்லதும், கெட்டதும் கலந்திருக்கும் உலகத்தில், நல்லவைகளுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்து நெறியோடு மனிதர்கள் வாழவேண்டும் என்பதை உணர்த்தவே...............................//

  பவனியின் விளக்கம் நன்றாகவே பதிவினில் பவனிவரச் செய்யப்பட்டுள்ளது...

  ReplyDelete
 9. மண்டூக முனிவர் சாப விமோசனம்தான் அழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டுள்ளேன்..மண்டூக முனிவருக்கு சதபஸ் முனிவர் என்ற பெயரும் உண்டோ..பட்டுச்சேலையின் முந்தியில் கோவில் கோபுரம் நெய்த வேலைப்பாடு அழகோ அழகு..அம்மனின் திரு உருவம் கண் கொள்ளாக்காட்சி.

  ReplyDelete
 10. குதிரை வாஹனப்படங்கள், இதர புறப்பாட்டு ஸ்வாமிகள்,ரிஷப வாஹனம், கோயில் கோபுரம் என பல படங்கள் இன்று நல்ல பளீச்சோ பளீச்.

  கீழிருந்து ஐந்தாவது படம்: மைத்துனர் மஹாவிஷ்ணு முன்னிலையில், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண படம், நல்ல அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

  இதுபோன்ற Frame செய்யப்பட்ட படங்களில், நம்மால் போட்டோ எடுக்கும்போது பிரதிபலிப்பை தவிர்க்க முடியாது தான். Excellent Picture. Very Good Selection. ;)

  ReplyDelete
 11. கடைசியாகக் காட்டப்பட்டுள்ள கோயில் கோபுரம் + வரைபடம் + ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கம் வெகு அருமை.

  அந்தப்படத்தில் Arrow வை வைத்து, upward arrow & downward arrow வைத் தட்டினால், அந்த கோபுர நிலைகள் ஒவ்வொன்றும் விரிந்து சுருங்கி Hallow chambers effect ஐ உணரும் வண்ணம் பதிவிட்டுள்ளது .. ச பா ஷ் !

  ReplyDelete
 12. மதுரை மீனாக்ஷி கோயிலின் அனைத்து கோபுரங்களுடன், மதுரை மாநகரை கவரேஜ் செய்துள்ள படமும் சிறப்பு.

  இதுவரை 4-5 முறைகள் அந்தக் கோயிலுக்குப் போகும் பாக்யம் கிடைத்துள்ளது.

  சரியான எண்ணிக்கை அந்த முக்குருணிப் பிள்ளையார்ஜீ அவர்களுக்கே தெரியும்.

  என் அம்மா பெயரும் மீனாக்ஷி என்பதால் ஏனோ அம்மா நினைவு வந்து கண் கலங்கிடுது.

  மிகவும் அழகான பதிவு.

  பாவம் இதற்காக, எங்களுக்கு இந்தப்பதிவினைத் தருவதற்காக, தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டீர்களோ!

  அன்னை மீனாக்ஷியின் அருள் முழுமையாக உங்களுக்குக் கிட்டட்டும்.

  ReplyDelete
 13. ஓம்
  சஹனா பவது;சகனௌ புனக்து....வேதம் புதிது படத்தில் ஒரு பாடலில் ஒலிக்கும். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் அட்டகாசம்.

  ReplyDelete
 14. சித்திரைத் திருவிழா குறித்த முத்திரைப் பதிவு, அருமை.

  ReplyDelete
 15. முதல் படமே மிக அருமை. படங்கள் மற்றும் விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு

  ReplyDelete
 16. மஹாலஷ்மிMay 7, 2012 at 2:49 PM

  பட்டுச்சேலையின் முந்தியில் கோவில் கோபுரம் நெய்த வேலைப்பாடு ,

  மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்

  என்று மிகப்பிரம்மாண்டமான படைப்புக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 17. சித்திரைத் பதிவு, அருமை.

  ReplyDelete
 18. பிரமாண்டமான படங்கள் என்று சொல்வது மிகவும் பொருத்தமாயிருக்கும்....பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 19. மீனாட்சி தங்கப் பல்லக்கு, அழகர் ஆற்றிலிறங்கும் காட்சி என மனம் நிறைவு கொள்ள வைக்கின்றது.

  ReplyDelete
 20. 112. இபராஜ ரக்ஷித கோவிந்தா

  ReplyDelete