Wednesday, May 2, 2012

சித்திரா பெளர்ணமிசிறந்த அறிவும்,ஞானமும் கொண்டவரும், எழுத்தாணி, ஏடு ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும், அழகிய ரத்தினத்தலான உடையை அணிந்திருப்பவரும்,எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக விளங்குவரான சித்ரகுப்தரே உமக்கு நமஸ்காரம்.
இந்த ஸ்லோகத்தை கூறி சித்திர குப்தரை வழிபடுவது நலம் தரும்.
சித்ரா பொளர்ணமியன்று உப்பில்லாமல் சாப்பிட்டு விரதம் இருப்பதும் நல்லது.

சித்திர குப்தன்அவரவர் தலை எழுத்தை கணித்து, வர வேண்டிய தேதி குறித்து விடுகிறான்,
தென் புலத்தான் (எமன்) இலச்சினைத் தாங்கிய தூதுவர்கள் வருவர். வந்து வயிற்றில் கயிறு கட்டி (பாசக் கயிறு) பணி செய்ய வருகின்றனர் என்கிறார்  பெரியாழ்வார்
இந்த மாதிரி நேரங்களில்  நமக்குக் காப்பு? பத்தர்க்கு அமுதான பைக்கொண்ட பாம்பணையன்தான், என்கிறார் அன்பின் உருவான பெரியாழ்வார்.
சித்திரா பெளர்ணமி சித்திர குப்தர் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. 
சித்திரபுத்திரர் சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பிறந்தவர். 

சூரியனைப் போல் அறிவிலும் தேஜஸிலும் சிறந்தவர். 
..
.சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்து  மந்திர உபதேசம் செய்து சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்து எமதர்மராஜனுக்கு உதவி செய்ய வைத்தார் 

குப்த என்றால் ரகசியம், எழுதும் பாப புண்ணியக் கணக்குகள் மிக ரகசியமாகத் தான் இருக்கின்றன. 
சூரியனுக்கும் நீளாதேவிக்கும் பிறந்த அவர் பிரும்மாவின் ஆக்கத் தொழிலையே செய்யத் தொடங்கினார்.
இதனால் பலர் சூரியனிடம் முறையிட, சூரியன் யமலோகத்தில் பாப புண்ணியக் கணக்கு மிகச் சிறந்த பணி ஆகையால் அதைச் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்.
ஒரு கையில் ஒரு அச்சாணியும் மற்றொரு கையில் ஓலையும் வைத்துக்கொண்டு கணக்கு எழுத ஆரம்பித்தார்.
நாம் செய்யும் பாப புண்ணியங்களின் கணக்குகளை எழுதி, அதற்குத் தகுந்த தகுதியையும் பெற வைக்கிறார்.
இதற்குத்தான் நாம் எப்போதும் நல்ல சிந்தனைகளுடன் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். பிறர் மனதைப் புண் செய்யக் கூடாது. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்ற வேண்டும். இது போல் நாம் நல்லது செய்ய, புண்ணியங்கள் சேமிப்பு ஏறி, பாபங்கள் குறைகின்றன.
இந்தியாவில் பதினொரு இடங்களில் சித்ரகுப்தருக்குத் தனிக் கோயில்இருந்தாலும், தென்னகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும்தான் தனிக் கோயில் உள்ளது.
  The Utsava idols of Lord Chitragupta,
சித்ராபெளர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஐஸ்வர்யகலச பூஜை , மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

ராகுபகவான் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டவர். 

ராகு தோஷம் உள்ளவர்களும், திருமணம் தடைபட்டவர்களும் சித்ரகுப்தனை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும், 

திருமணத்திற்கு இருந்த வந்ததடைகளும் நீங்கும் 

Chitragupt Bhagwan
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் சித்திர புத்திர நாயனார் 
என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கடம்ப மலர்கள்
தான் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய நினைத்த இந்திரன்,தீர்த்தயாத்திரை மேற்கொண்டு ஒரு கடம்பவனத்தை அடைந்தவுடன்  தன் பாவங்கள் விலகியதற்கான காரணத்தை அறிய தேடியவன் கண்களுக்கு  சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. 
இந்திரன் வழிபட்ட அந்நாளே சித்ரா பவுர்ணமி இந்திரன் வழிபட்ட அந்தப் பகுதியே மதுரை மாநகர்

 சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

என்ற சித்ரகுப்தரின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
Liberation from Chitragupta’s Destiny ‘Curse’ 
Chitragupta Temple 
Temple of Chitragupta Ji Maharaj near Tempo Stand, 
Kankarbagh, Patna
Temple of Chitragupta Ji Maharaj near Tempo Stand, Kankarbagh, Patna - Bihar Directory24 comments:

 1. thank you for giving unknown details and information

  ReplyDelete
 2. சித்திர புத்திரன் பெயர் காரணம் புதிய தகவல்...
  எப்படி வழிபட வேண்டும் என்ற குறிப்பும் கொடுத்தமைக்கு நன்றி அம்மா, அருமையான ஆன்மீக சேவை, நன்றி

  ReplyDelete
 3. நான் நீங்க கொடுத்த லிங்கில் உள்ள கமெண்ட்ஸ் வழியாக இங்கே வந்திருக்கேன் .டைரக்டா வந்தா flicker ஆகுது .
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. சித்திர குப்தரைப் பற்றி இவ்வளவு தகவல்களா. அவருக்கு எங்கெங்கு கோவில்கள் உள்ளன எனவும் சொல்லியது அருமை. எங்கள் ஊர் கோவிலில் வெள்ளிக்கிழமை அவரைப்பற்றிய பஜனை பாடுவார்கள். அது ஒன்றும் புரியாது. எனக்குத்தெரிந்த தகவல் அவ்வளவுதான். அவரைப்பற்றிய படங்களை எங்குதான் சேகரித்தீர்கள்!!

  ReplyDelete
 5. சிதம்பரத்தில் அம்மன் சன்னதியில் வெளிபிராகரத்தில் இடது பக்கத்தில் சித்திரகுபதருக்கு தனி சன்னதி உள்ளது சித்ராபவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.

  சித்திரகுப்தருக்கு தனி கோயில் காஞ்சிபுரத்தில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி.

  நல்லதை செய்து, நல்லதை நினைப்போம்.
  விரிவான பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. வணக்கம்! சித்திர குப்தன் பெயர்க் காரணம் தெரிந்து கொண்டேன். தங்கள் பதிவிற்கே உரிய சிறப்பம்சமான வண்ணப் படங்கள். நன்றி!

  ReplyDelete
 7. மஹாலஷ்மிMay 3, 2012 at 8:07 AM

  மிகச்சிறப்பான சித்திரகுப்தர் வழிபாடு பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 8. சித்ரகுப்தனின் பிறந்த நாள், பெயர் காரணம், அவரின் அறிவு, தேஜஸ், இரகசியமாக நமது பாப புண்ணிய கணக்குகளை எழுதிவரும் பணிகள் முதலியன நன்கு சொல்லப்பட்டுள்ளன.

  ReplyDelete
 9. சித்ரகுப்தம் ....... ....... ........ தேஹினாம்

  //இந்த ஸ்லோகத்தை கூறி சித்திர குப்தரை வழிபடுவது நலம் தரும்.
  சித்ரா பொளர்ணமியன்று உப்பில்லாமல் சாப்பிட்டு விரதம் இருப்பதும் நல்லது//

  நல்ல பயனுள்ள தகவல். வரும் சனிக்கிழமை 5.5.12 அன்று, இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி வருகிறது.

  ReplyDelete
 10. //குப்த என்றால் ரகசியம், அவன் எழுதும் பாப புண்ணியக் கணக்குகள் மிக ரகசியமாகத் தான் இருக்கின்றன.//

  புரியாத மர்மமான கணக்கு வழக்குகளை "சித்ர குப்தன் கணக்குப்போல" என்று அதனால் தான் சொல்லுகிறார்கள் போலிருக்கு.

  ReplyDelete
 11. //சித்ரகுப்தன் யம தர்ம ராஜா முன்னிலையில் இறந்தபின் வரும் ஆன்மாவின் பாப புண்ணியங்களைத் தன் ஏட்டிலிருந்து படிக்கிறார்.

  அதற்குத் தகுந்தாற்போல் நல்லவைகளும் தீமைகளும் அமைகின்றன//

  ஆமாம். இதுபோலத்தான் சொல்லிக்கேள்வி.

  பாப கார்யங்கள் செய்யாமல், புண்ணியத்தை மட்டுமே செய்து வந்தால், ஆன்மாவுக்கு நன்மை அளிக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

  இவ்வுலகை விட்டுச் செல்லும்போது நாம் நம்முடன் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவது, நாம் செய்யும் பாப புண்ணியங்கள் மட்டுமே என்பதை, நாம் அனைவரும் நினைவில் கொள்ளவோமாக.

  ReplyDelete
 12. //இந்தியாவில் பதினொரு இடங்களில் சித்ரகுப்தருக்குத் தனிக் கோயில் இருந்தாலும், தென்னகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும்தான் தனிக் கோயில் உள்ளது. ராகுபகவான் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டவராக கருதப்படுகிறார்//

  ஆச்சர்யமான நல்ல தகவல்.

  ReplyDelete
 13. //சித்ரகுப்தனின் அருகில் வெள்ளியினால் ஆன ஓலை, தங்கத்தினால் ஆன எழுத்தாணி வைப்பது உண்டு.

  எமன், சித்ரகுப்தன், சூரிய நாராயணன் உருவங்களை கோல மாவினால் வரைந்து, நான்கு கால பூஜை செய்ய வேண்டும்//

  கலச ஆவாஹனமும், பூஜை முறைகளும் ஸ்லோகங்களும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

  ReplyDelete
 14. இன்றைய பதிவினில், சித்ரகுப்தன் பற்றிய பல பயனுள்ள தகவல்களும் பொருத்தமான படங்களும் தரப்பட்டுள்ளன.

  கேது கிரஹ பரிகாரஸ்தலமாகிய காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள சித்ரகுப்தர் கோயில் நுழைவாயில் கோபுரமும், கடம்ப மலர்களும் நன்கு காட்டப்பட்டுள்ளன.

  ReplyDelete
 15. சித்திர புத்திரன் பெயர் காரணம் புதிய தகவல்...
  எப்படி வழிபட வேண்டும் என்ற குறிப்பும் கொடுத்தமைக்கு நன்றி அருமையான பகிர்வுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 16. நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 17. நிறைய தகவல்கள். பல தகவல்களை ஒன்று திரட்டித் தரும் உங்கள் பாணி இந்தப் பதிவிலும் முத்திரை பதித்திருக்கிறது.

  சித்தரகுப்தனாரின் பெயரைப் பார்த்ததுமே காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெரு கோயிலைப் பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்று படித்துக் கொண்டு வரும் பொழுதே, படத்துடன் அந்தக் கோயிலின் முகப்பைப் பார்த்ததில் இரட்டை சந்தோஷம்.

  ReplyDelete
 18. Very informative.
  Lots of pictures. Very nice as usual.
  viji

  ReplyDelete
 19. சித்ர குப்த சாமியை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 20. அருமையான பதிவு.
  அரிய தகவல்கள்.
  நன்றி.

  ReplyDelete
 21. JAI HANUMAN ! ;)

  VGK

  ReplyDelete