Tuesday, May 1, 2012

ஸ்ரீ மீனாட்சி கல்யாண விருந்து
ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் குதிரைப் படை தளபதி இராஜ மாதங்கியாய் கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து நம் இன்னல் தீர்க்கும் தலமான மதுரையில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து மீனாட்சி நாயக்கர் மண்டபம் செல்லும் வழியில் உள்ளது கல்யாண மண்டபம். 

 இறைவன் திருக்கல்யாணம் நடக்கும். இந்த மண்டபம் மிகச்சிறப்பான முறையில் அலங்கரிக்கப்படும். இந்த மண்டபம் பெரியதாகவும், அடிக்கடி சமய/பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாகவும் உள்ளது. 


இந்த அரங்கத்தின் ஒரு மூலையில், சிவனின் பானை வயிற்றினை உடைய பணியாள் குண்டோ தரன் உள்ளார்.
குண்டோதரன் மதுரையின் புராண வரலாற்றில் சுவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர்.. விருந்துக்குத் தயார் செய்த உணவில் பெரும்பாதி தங்கிவிட்டது. 

அதனை அறிந்த மீனாட்சி சற்று பெருமையுடன், சிவனின் குறைவான விருந்தாளிகளைப் பற்றி பேசினாள். 

.  ""தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச்சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். 

எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே! சமையல் குழுவினர் பிரமித்தனர். இதுபற்றி முறையிட அரசி மீனாட்சியிடம் அவர்கள் ஓடினர். மீனாட்சி மடப்பள்ளியில் சென்று பார்த்தாள். சமைத்த உணவில், லட்சக்கணக்கானவர்கள் சாப்பிட்டிருந்தும் கூட, சற்று கூட குறையாமல் அப்படியே இருந்தது. 

இது இறைவனின் லீலை என்பதை அவள் எப்படி அறிவாள்? 

சுந்தரேசர் ஏதும் அறியாதவர் போல் இருந்தார்.. மீனாட்சி தன் கணவரிடம் நாணத்துடன் சென்றாள். சுவாமி! எங்கள் இல்லத்தில் நாங்கள் சமைத்த உணவு அப்படியே மீந்துவிட்டது. லட்சக் கணக்கானவர்கள் மாப்பிள்ளை இல்லம் சார்பாக வந்திருந்தும் அப்படியே இருப்பது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. உணவை வீணடிப்பது மகாபாவம் என்பது தாங்கள் அறியாததல்ல! அது அன்னபூரணிக்கு மாசு கற்பித்தது போல் ஆகும். இந்த உணவு காலியாக தாங்கள் தான் அருள்புரிய வேண்டும், என்றாள்.

அதனைக் கேட்ட சிவன், மற்றவர்களுக்கு இல்லாமல் உணவு தீர்ந்து விடுமோ என்று தன் பணியாளர்கள் யாரையும் சாப்பிட அனுப்பவில்லை என்றும், முடிந்தால் அவர்களுல் ஒருவருக்கேனும் அவர் திருப்திப்படும் வரையில் சாப்பிட வைக்க முடியுமா என்று கேட்டார். 
அவளது பேச்சில் சற்றே ஆணவம் தொனித்தது போல் தெரிந்தது. மனிதனுக்கு சிறிதளவு ஆணவம் இருந்தாலும் இறைவனை அடைய முடியாது.

அந்த ஆணவத்தைக் களைய அவன் சோதனைகளைத் தருவான். தன் மனைவியிடமும் விளையாடிப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டார். அப்படியா! ஏராளமாகவா சமைத்தீர்கள்! எல்லோரும் சாப்பிட்டாயிற்றே! சரி...என் பூதகணங்கள் சாப்பிட்டதா என விசாரித்து விடுகிறேன், என்றவர், பூதகணங்களை அழைத்து விசாரிப்பவர் போல் நடித்தார். குண்டோதரன் என்ற பூதகணத்தை தவிர மற்றவர்கள் சாப்பிட்டாயிற்று என்றனர்.

அப்போது வந்தவர்தான் குண்டோதரன். குண்டோதரனின் பசிக்கு சமைத்திருந்த உணவு நிமிடத்தில் காலியாகவே, களஞ்சியத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்து தானியங்களும் சமைத்து அவனுக்குத் தர, அதுவும் காலியானது. 

குண்டோதரனுக்கு திருமணப்பணிகள் அதிகமாக இருந்ததால், பிறகு சாப்பிடலாம் என இருந்துவிட்டான். குண்டோதரா! சாப்பிடாமல் அப்படி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்! போ போ, முதலில் சாப்பாட்டை முடி! அப்புறம், பணிகளை செய்யலாம், என செல்லமாகக் கடிந்துகொண்டார் மாப்பிள்ளை சுந்தரேசர். 


குண்டோதரன் சாப்பிடச் செல்லும் போது மீனாட்சி அவரிடம், சுவாமி! இவன் ஒருவன் சாப்பிடுவதால் உணவு தீர்ந்துவிடுமா! இன்னும் சாப்பிடாதவர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களையும் வரச்சொல்லுங்கள், என்றாள்.

புன்னகையை உதிர்த்த சுந்தரேசர், இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும், இன்னும் யார் யார் சாப்பிடவில்லை என விசாரித்து அனுப்பி வைக்கிறேன், என்றார். குண்டோதரன் மடப்பள்ளிக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவனது வயிற்றில் வடவைத்தீ எனப்படும் கொடும் பசித்தீயை எரிய வைத்தார் சுந்தரேசன்.

மடப்பள்ளிக்குள் நுழைந்த குண்டோதரன் ஒரு நிமிடத்தில் அனைத்தை யும் சாப்பிட்டு விட்டு, ஐயோ! பசி பொறுக்க முடியவில்லையே! திருமண வீட்டுக்கு வந்தவர்களுக்கு வயிற்றுக்குச் சோறிட வேண்டாமோ, என புலம்பினான். மீண்டும் சமையல் செய்யப்பட்டது.

அதுவும் கணநேரத்தில் காலியாகி விட்டது. மீனாட்சியும் அரண்மனையில் இருந்த மற்றவர்களும் அதிசய அதிர்ச்சியை அடைந்தனர்.இதென்ன புதுமை! ஒரு தனிநபரால் இப்படி உணவுண்ண முடியுமா!

 இவன் வாயைத் திறந்ததும் எல்லாமே தானாக வயிற்றுக்குள் போய் விடுகிறதே! மீண்டும் மீண்டும் சமைத்து ஓய்ந்துவிட்டனர் சமையல்காரர்கள். அரண்மனையில் வாங்கி வைத்திருந்த சமையல் பொருட்கள் அத்தனையும் காலி. மீனாட்சிக்கு இதில் ஏதோ சூட்சுமம் இருப்பது புரிந்து விட்டது.

சிவன் அவர்களிடம், ""இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.  விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். 
பெண் வீட்டார்திகைத்தனர்.""மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர்.

திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். 

சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.

அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், "" மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார்.

குண்டோதரனிடம்,"" நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார்.  இதுவே "வைகை' ஆனது.  கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

எனவே அது புண்ணிய நதியாக மாறியது.

இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் "வேகவதி' எனப்பட்டது.

இவ்வாறு பெரியஉருவத்தை உடைய குண்டோ தரன் மூலம் மதுரைக்கு ஒரு நன்மை கிடைத்திருக்கிறது.
27 comments:

 1. அரண்மனை வாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம்.//

  இதை நீங்கள் சொல்லும் போது ஒரு பாட்டு நினைவுக்கு வருது.

  ’அரசன் வீட்டு பெண்ணாக இருந்தாலும் அகந்தை கொள்ள கூடாது என் நாளும் ’
  புருஷன் வீட்டுக்கு போகும் தன் த்ங்கைக்கு புத்திமதி சொல்லும் அண்ணன் பாட்டு நினைவுக்கு வருகிறது.

  திருவிளையாடல் புராணாத்தில் உள்ள கதை, படங்கள் என எழுதி மீனாட்சி கல்யாண விருந்து அளித்து விட்டீர்கள்.

  ReplyDelete
 2. அரிய,.. காணக்கிடைக்காத குண்டோதரனின் சிற்பங்கள். ரொம்ப நல்லாருக்கு.

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. குண்டோதரன் கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.

  ReplyDelete
 4. குண்டோதரன் கதை இப்பொழுது முதன் முறையாகப் படிக்கிறேன். இறைவனின் திருவிளையாடல் ஒவ்வொன்றிலும் ஒரு கருத்து இருப்பது எவ்வளவு பெருமை நமக்கு.

  பதிவிற்கு மிக்க நன்றி அம்மா

  ReplyDelete
 5. தென் தமிழகத்தில் நடைபெறும் மிக பெரிய விழாவை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. கேட்ட கதை. ஆனால், உங்க கைப்பக்குவத்தில் இன்னும் மிளிர்கிறது. படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. தாங்கள் பதிவிடும் அழகைக் காணவே தங்கள் வலைப பக்கம் அடிக்கடி வரணும் போல இருக்கு அருமைங்க .

  ReplyDelete
 8. மஹாலஷ்மிMay 2, 2012 at 4:35 PM

  Thank you

  ReplyDelete
 9. மஹாலஷ்மிMay 2, 2012 at 4:40 PM

  களைகட்டிய கல்யாணவிருந்தில்..கல்யாண சமையல்சாதம் காய்கறிகளும் பிரமாதம் இதுவே எனக்குப் போதாத்து என்று குண்டோதரன் பாடிக்கொண்டே கடோத்கஜன் மாதிரி சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது,,..

  ReplyDelete
 10. மஹாலஷ்மிMay 2, 2012 at 4:41 PM

  வைகை அணையும் ,
  மின்னொளியில் மிளிரும் கோபுரங்களும் பதிவை ஒளிரவைக்கின்றன..

  ReplyDelete
 11. மஹாலஷ்மிMay 2, 2012 at 4:41 PM

  சித்திரைத் திருவிழா நடைபெறும் நேரத்தில் சிறப்பான பொருத்தமான பதிவு.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. மஹாலஷ்மிMay 2, 2012 at 4:41 PM

  கடைசி படம் சிறப்பாக வரையப்பட்டு வர்ணங்கள் கருத்தைக் கவர்கின்றன..

  ReplyDelete
 13. மஹாலஷ்மிMay 2, 2012 at 4:42 PM

  அருமையான படங்கள்..சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 14. முதல்படம் வெகு அழகாக உள்ளது.

  மஹாவிஷ்ணு சிவன் பார்வதி வஸ்திரங்களின் நிறங்கள் பிரமாதமாக உள்ளன.

  ReplyDelete
 15. குண்டோதரனைப்பற்றிய அனைத்துத் தகவல்களும், படத்தில் காட்டியுள்ள உருவமும் மிகவும் நகைச்சுவையாக உள்ளன.

  ReplyDelete
 16. மனுஷ்யாளுக்கு சிறிதளவு ஆணவம் இருந்தாலும் இறைவனை அடைய முடியாது என்பதைச் சித்தரிக்கும் தத்துவமும் நன்கு கூறப்பட்டுள்ளது.

  ReplyDelete
 17. கங்கை வைகை வேகவதி பற்றிய செய்திகள் அருமை.

  ReplyDelete
 18. கோபுர அழகும், தலையில் பூமுடிந்தபடி காட்டியுள்ள மகளிர் அணியும், அந்த நீர் விழும் அணையும், தேரும் தேர் திருவிழாக்கும்பலும், குதிரை வாகனத்தில் கள்ளழகரும், அழகரைக் குளிர்விப்பதற்காக பீய்ச்சி அடிக்கப்ப்டும் நீரும், ஆயிரங்கால் மண்டபமும், நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகக் காட்டியுள்ள வைகை நதியும் என அனைத்துமே, நன்றாக கவரேஜ் செய்யப்பட்டு, இன்றைக்கு எங்கள் கண்களுக்கு நல்விருந்தாகிவிட்டது.

  ReplyDelete
 19. ஸ்ரீ மீனாக்ஷி கல்யாண வைபவத்தினை நேரில் மதுரைக்கே சென்று கண்டு மகிழ்ந்து, விருந்தினை உண்டு களித்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது இந்தப்பதிவு.

  ReplyDelete
 20. மஹாலஷ்மிMay 2, 2012 at 6:25 PM

  nice

  ReplyDelete
 21. கதைகள் மூலம் நன்னெறிகள் கற்பிப்பதில் நம் முன்னோர்க்கு ஈடெ கிடையாது. ஒரு முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின் போது மதுரையில் இருந்தேன். வெயிலும் கூட்டமும் எதையும் சரியாக ரசிக்க முடியாமல் செய்து விட்டது.

  ReplyDelete
 22. //தலையில் பூமுடிந்தபடி காட்டியுள்ள மகளிர் அணியும்//

  கழுத்தினில் புதிய திருமாங்கல்யத் தாலி சரடு அணிகிறார்கள் என்பதை இப்போது தான் கவனித்தேன்.

  ReplyDelete
 23. ஸ்ரீ மீனாட்சி திருக் கல்யாணத்தை பற்றி நிறைய படங்களோடு தொகுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 24. அருமையான பதிவு.
  அருமையான விருந்து.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. 107. நித்ய சுபதப கோவிந்தா

  ReplyDelete
 26. அருமையான, புளகாங்கிதம் பெருகப் பண்ணும், புனைகதை!

  ReplyDelete