Friday, May 4, 2012

சித்திரகுப்த பூஜை
அலைகடல் அதனில் நின்று அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுள் என்று எவரும் ஏத்தும்
சிலை நுதல் உடையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலை வலமாக வந்த மதியமே போற்றி, போற்றி!

காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். 

மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது

 சித்திரா பௌர்ணமி புண்ணிய நாள் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. 

வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம். 

 கோவில்களில் சித்திரகுப்த பூஜை செய்யப்படுகிறது.
“சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற் சித்ரகுப்தன்,
அத்தின அவனை உன்னி அர்ர்சனைக் கடன்களாற்றில்,
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே எமந்தன்னூரில்
இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே”

பௌர்ணமி அன்று சூரிய சந்திரசமசப்தமமாக இருப்பது சிவசக்தியின் ஐக்கியம் 

சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள்  வணங்கிவந்த முருகப்பெருமானுக்கு கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 
பாம்பன் சுவாமிகளுக்குக் காட்சியளித்து உபதேசம் செய்த நாள்
 சித்திரா பௌர்ணமி. 
ஒவ்வோர் ஆண்டும் சித்திரா பௌர்ணமியன்று இரவு 2 மணிக்கு முழு நிலவையே முருகனாகப் பாவித்து "நிலா பூஜை" செய்து வந்தார். 
நிலா பூஜை இரவு இரண்டு மணி வரை நடைபெறும்.
 மாடவீதிகளில் ஊர்வலமும் தெப்போற்சவம் நடைபெறும்.
அம்மன் ஆலயங்களில் சித்திரா பௌர்ணமி சிறப்பு
வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சென்னை காளிகாம்பாள் கோவிலில் பெண்கள் பங்குபெறும்
திருவிளக்கு பூஜை
அம்பாள் சன்னதியில் அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி. இவர்களின் உற்சவ மூர்த்திகள் அலங்காரக் கொலுவிருக்க அவர்கள் முன்பாகப் பெண்கள் திருவிளக்கேற்றி பூஜை செய்வார்கள். 

மதுரையில் சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகன் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குத் தரிசனம் கொடுப்பது ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா. 

கன்னியாகுமரி சித்திரா பௌர்ணமி அன்றுதான் சூரியன் மறைவதையும் சந்திரன் எழுவதையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம் 
தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால்
இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

அம்பிகை ஆலயங்களில் குளிர்த்தி
பெரு விழாவாக கொண்டாடப்பெறுகின்றது.  சித்ரா பௌர்ணமியில் ஆதி சங்கரர் ஜயந்தியும், ராமானுஜர் சாத்துமுறையும், சித்ரகுப்தர் திருக்கல்யாணமும், ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சித்ரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் அற்புதமாகக் கூடுவதால், அன்று ‘கடல் ஸ்நானம்’ செய்வது சிறப்புகளை வழங்கும். 

மரங்களின் வயதைக் குறிக்கும் ஆண்டு வளையங்கள் விழ ஆரம்பிக்கும் காலமும் சித்திரைதான்
சந்திர அண்மித்த நிலை =சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாளாகும். இதனால் புவியீர்ப்புவிசைஅதிகமாகத் தொழிற்படுகிறது.
 கடலில் புதிய அலைகளை புரட்டி விடும் காலமாகும்.
தரையில்மட்டுமல்ல கடலிலும் இது புத்தாண்டுதான். 

நெல்லை மாவட்டம் திருக்குற்றால மலையிலுள்ளசித்ரா நதி சித்திரைபௌர்ணமி அன்றுதான் உற்பத்தியானதாகக் கருதப்படுகிறது.

 திருவக்கரை சித்ரா பௌர்ணமி ஜோதிவிசேஷம்.
 வக்ர மகாகாளி கோவில் கொண்டிருக்கிறாள்.எல்லாமே வக்கிரம் தான் சித்திரா பௌர்ணமி அன்று ஜோதி யைத் தரிசிபது தோஷங்களை நீக்கக்கூடியது.
சிவபெருமானை வழிபடுவதற்குரிய நாட்களுள் பௌர்ணமியும் ஒன்று. 
சித்ரா பௌர்ணமி நாளில் மருக்கொழுந்து இலையால் சிவனை அர்ச்சிப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். 
சித்ரா பௌர்ணமி பூஜை செய்தால், லட்சுமிகடாட்சமும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.
[annabishekam.jpg]
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சந்திரனுக்குஉரிய அதிதேவதை அம்பிகை. சந்திரமண்டலத்தில் பராசக்தியாகிய அம்பிகையின் உலகமான "சக்திலோகம்' இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. 

17 comments:

 1. எப்படி இத்துணைத் தகவல்களைத் திரட்டித் தருகிறீர்கள் என
  ஆச்சரியமாக இருக்கிறதுதங்கள் பதிவினை விடாது தொடர்ந்தால்
  ஓரளவு ஆன்மீக விஷயங்களில் யாரும் நிச்சயம் பாண்டித்தியம் பெறலாம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தகவல்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 3. அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள் . பிரமித்துப் போகிறேன்.
  பச்சை உடுத்திய அம்மான் அழகோ அழகு.
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. எத்தனை எத்தனை தகவல்கள். ரசித்தேன்.

  ReplyDelete
 5. எனக்கு பானகம் குடிக்க ஆசை வந்திருச்சு. சித்ரா பவுர்ணமி வியக்க வைத்தது.

  ReplyDelete
 6. அன்பின் ராஜராஜேஸ்வரி,

  சிறப்பான சித்ரா பௌர்ணமி. மிக அரிய செய்திகள்.. வாழ்த்துகள். கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணப்படங்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி.

  ReplyDelete
 7. சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா, நம் புராணங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது, இந்தப் பதிவோ மிகவும் அருமையாக உள்ளது. அணைத்து பாண்களும் அருமை, குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முதலில் இருக்கும் சிவா பெருமானும், அதிகாலை சூரியன் இருக்கும் கன்னியாகுமரியும் அற்புதமான படங்கள்

  ReplyDelete
 8. மஹாலஷ்மிMay 5, 2012 at 10:06 AM

  சித்ரா பௌர்ணமிபற்றி
  சிறப்பான பிரகாசிக்கும்
  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. மஹாலஷ்மிMay 5, 2012 at 10:09 AM

  சந்திரமண்டல மத்யஹா எனப்போற்றப்படும் அம்பிகையின் வணக்கத்திற்குரிய நாளாக அமைந்த முழுநிலவுநாள் பகிர்வும் படங்களும் மனம் கவர்ந்தன.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 10. சித்ரா பௌர்ணமி என்றால் சித்திர குப்தர் பிறந்த நாள் என்றே இதுநாள்வரை நினைத்திருந்தேன்..இப்பதிவில் பல தகவல்களை அறிந்து கொண்டேன்..பச்சை நிற சேலை உடுத்திய அம்மன் பார்க்க பக்திபரவசம் ஊட்டுகிறது.நாளை இரவு சித்திரகுப்தர் வழிபாடு எங்கள் ஊரில் நடை பெறுகிறது.சித்திர குப்தரின் கதையை இரவு படிப்பார்கள்.

  ReplyDelete
 11. உண்மையில் மிகவும் சிறப்பான பதிவு இந்த வெள்ளுவுவா (முழுநிலவு )காலத்தில் சிறப்பான பதிவு

  ReplyDelete
 12. சித்ரா பௌர்ணமி பற்றியஅருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. //சித்ராதேவிக்குப் படைக்கப்படும் 12 வித அன்னங்கள்
  (அதாவது சித்ரான்னங்கள்) இவைதாம்:

  தேங்காய் சாதம்,
  புளியோதரை,
  எலுமிச்சை சாதம்,
  தயிர் சாதம்,
  பருப்புப்பொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம்,
  மாங்காய் சாதம்,
  வெண்பொங்கல்,
  சர்க்கரைப் பொங்கல்,
  அரிசி உப்புமா,
  அவல் உப்புமா +
  கோதுமை உப்புமா.

  ஆஹா நாக்கில் நீர் வரவழைக்கும் நல்ல பிரஸாதங்கள். ;)

  ReplyDelete
 14. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. JAI HANUMAN ! ;)

  VGK

  ReplyDelete
 16. very descriptive and useful information

  ReplyDelete