Tuesday, May 29, 2012

முக்தித் தலம் பேரூர்


Lord Shiv - 01வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஐந்து மலைகள் அரணாக சூழ இயற்கை சூழலில் எழிலால அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.

மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வர சுவாமி அருள்பாலிக்கும் பேரூர் ஒரு முக்தித் தலம் ஆகும்

பிறவாப்புளி, இறவாப்பனை, எலும்பை கல்லாக்கும் ஆறு முதலியன விளங்கும் முக்தி தலம்.

வாகனமான நாய் இல்லாமல் பைரவர் ஞான பைரவராக அருள் பாலிக்கும் தலம். 
homer
காமதேனு வழிபட்ட தலம், அதன் கன்று பட்டியின் குளம்புத் தழும்புடன் 
தேவ தேவன் மஹா தேவன் இன்றும் திருக்காட்சி தரும் தலம்.
விஷ்ணுவாகிய பட்டிமுனியும், பிரம்மாவாகிய கோமுனியும் வழிபட்ட தலம். நாற்று நடவு விழா நடக்கும் தலம்.
"தழும்புடைய நம்பனை நாத்தழும்பேற ஓம்பினால் ஓடுமே நம் வினை." என்றபடி இத்தலத்தில் ஐயனை தரிசிக்க இனி பிறவி என்பது கிடையாது.

நான்கு யுகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் பேரூர் தலம் விளங்கியுள்ளது.

. பிறவாப்புளி, இது பூப்பூக்கும் காய் காய்க்கும் பழம் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது. இராஜ கோபுரத்தின் எதிரிலே உள்ளது இப்பிறவாப்புளி.
இரண்டாவது இறவாப்பனை, பெரிய கோவிலின் வடக்கே உள்ள காஞ்சிமா (நொய்யல்) ஆற்றின் தென் கரையிலுள்ள பிரம்மன் பூஜித்த வடகயிலாயம் என்னும் சிறு கோவிலின் வெளி முகப்பில் உள்ளது இந்த இறவாப்பனை, 

எத்தனை யுகங்களாகவோ இம்மரம் அங்கேயே உள்ளது. 

பேரூரில் ஆன்மாக்களுக்கு அழியாத நிலையான வாழ்வைத் தந்தருளுபவர் இறைவன். 

அழியாத்தன்மைக்கு சான்றாக இவ்விறவாப்பனை உள்ளது.

அறவாணர்கள் போற்றிடும் பேரூர்
அழியாமெகக்கோர் இடமாகி
உறவாம் அதனால் எமைப்போல
உலவாததனுக்கு ஒரு சான்றாங்கு


இறவாப்பனை ஒன்றுள்ளது.
இப்பனை மரத்தின் மேல் பட்டையை கஷாயம் வைத்துக் குடித்தால் தசை சம்பந்தமான நோய்கள் விலகும்.

மூன்றாவது இத்தலத்தின் சாணத்தில் புழுக்கள் உற்பத்தி ஆவதில்லை.

நான்காவது நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட எலும்புகள் வெண் கற்களாக மாறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் தங்கள் இறந்த உறவினர்களின் அஸ்தியை இக்காஞ்சிமா நதியில் கொண்டு வந்து கரைக்கின்றனர்.

ஐந்தாவது இத்தலத்தில் இறப்பவர்கள் வலது காது எப்போதும் மேலே இருக்கும்படி வைப்பர், ஏனென்றால் சிவபெருமான் ஓம் என்னும் ஐந்தெழுத்தை ஓதி தன்னடியில் சேர்த்துக் கொள்வார் என்பதால். எனவே இத்தலத்தில் பட்டீஸ்வரரை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியில்லை.

ஆதி சங்கரர் தன் தாய் முக்தி அடைய இத்தலத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்.

சுந்தரருக்காக ஐயன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் ..
ஐயனும் அம்மையும் சேற்றில் இறங்கி நாற்று நட்ட லீலைதான் அது.

ஒரு சமயம் சுந்தரர் பரவையாருடன் ஐயனை தரிசித்து பொருள் பெற பேரூர் வந்தார். எம்பிரான் தோழர் அல்லவா சுந்தரர், பெருமான் அவருடன் சிறிது விளையாட விழைந்தார்.

சர்வமும் தானே என்று சுந்தரருக்கு உணர்த்த தான் விவசாயியாக பள்ளனாகவும், அம்மை பச்சை நாயகி பள்ளியாகவும், மற்ற சிவகணங்களாகவும் நாற்று நட சென்றனர்.

அப்போது ஐயன் நந்தியிடம் நானும் அம்மையும் வயல் வெளிக்கு செல்கின்றோம், சுந்தரன் வந்தால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடு என்று சொல்லிவிட்டு சென்றார்.

திருக்கோவிலுக்கு வந்த சுந்தரர் ஐயனைக் காணாது திகைத்து நந்தியிடம் வினவ, நந்தியும் ஐயனின் ஆணையை மீறமுடியால் தெரியாது என்று கூறியது

ஆனால் சுந்தரர் வண்தொண்டர் அல்லவா எனவே குறிப்பால் வயலைச் சுட்டியது. வயல் பக்கம் சென்ற சுந்தரர் வயலில் சாதாரண மக்கள் போல சேற்றில் இறங்கி நெல் நாற்று நட்டுக்கொண்டிருந்த ஐயனையும் அம்மையும் வீழ்ந்து வணங்கி, "ஐயனே எமக்காக தாங்கள் இவ்வாறு துன்பப்படவேண்டுமா? என்று அழ, கருணாமூர்த்தியான எம்பெருமானும் சுந்தரனே யாம் உம்முடன் விளையாடவே இவ்வாறு செய்தோம் என்று கோவிலுக்கு சுந்தரருடன் திருக்கோவிலுக்கு திரும்பி வந்து அவருக்கு 
ஆனந்த தாண்டவக் காட்சியும் தந்தருளினார்.

பின்னர் சேரமான் பெருமாளிடம் சென்று பொருள் பெறவும் அருள் புரிந்தார். இந்த நாற்று நடவு விழா ஆனி மாதம் இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சரத்தில் நாற்று நடவும், உத்தரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாய் நடைபெறுகின்றது.

அம்மை மரகதவல்லி என்னும் பச்சைநாயகி தனிக்கோவிலில் அருட்காட்சி தருகின்றாள்.

அம்மையும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக அபய வரத ஹஸ்தங்களுடனும் அங்குசம், பாசம் ஏந்தி அருள் பாலிக்கின்றாள்.

விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு பச்சைநாயகி என்று பெயர் என்பார்கள்.

நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இங்கு விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள்.

அம்மன் விமானம் ஒரு கலசத்துடனும், நந்தி வாகனத்துடனும் உக்ரமில்லாத வடிவாக ஈஸ்வரி ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரு தனி சிறப்பு.

கர்மவீரர் காமராஜ் , நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகிய தன்னலம் கருதாத தியாகிகளின் அஸ்திகலச நினைவிடம் பேரூர் காஞ்சிமாநதி புனித கரையில் அமைத்து நமது பாரத தேசமே அஞ்சலி செலுத்துகிறது..  

கர்மவீரர் காமராஜ் அவர்களின் அஸ்திக்கலம். நினைவிடம்..

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் அஸ்திக்கலம். நினைவிடம்..

ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அஸ்திக்கலம். நினைவிடம்..


Perur Pateeswarar Temple

TEMPLE'S ELEPHANT KALYANIMamudha, a Dance Drama, by Sudharani Raghupathy and Members of Shree Bharartalaya, at the 'Natyanjal 2011', organised by the Rotary Club of Coimbatore Metropolis, at Perur Temple, in Coimbatore. 
Mamudha, a Dance Drama, by Sudharani Raghupathy and Members of Shree Bharartalaya, at the 'Natyanjal 2011', organised by the Rotary Club of Coimbatore Metropolis, at Perur Temple, in Coimbatore. Photo: S. Siva Saravanan

17 comments:

 1. என் தள்ப் பின்னூட்டங்களில் உங்கள் புகழ் ஓஹோ என்று இருக்கிறது. பார்த்தீர்களா.?

  ReplyDelete
 2. கோவை பேரூர் கோயிலில், நாட்டியாஞ்சலி 2011 க்காக, கோவை சுழற் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லி காட்டப்பட்டுள்ள பொய்க்கால் குதிரை ஆட்டம் அழகாக உள்ள்து.

  ReplyDelete
 3. சொட்டுத் தண்ணி விட்டா சட்டிச் சாந்து வழிக்கலாம் போல,

  ஒரே இருட்டாகக் கருப்பாக இருப்பினும்

  அந்த முரட்டுக் கல்யாணி நல்ல அழகாகவே இருக்கிறாள்.

  துதிக்கையைத் தூக்கிப்பிடித்து வணக்கம் தெரிவிக்கிறாளே!! ;)

  ReplyDelete
 4. பன்னீர் மரம் பருவப்பெண் போல, பாதுகாப்புடன் வேலிபோட்டு, கண்ணும் கருத்துமாக காவலுடன் வளர்க்கப்படுகிறதே!

  ReplyDelete
 5. மேலிருந்து நாலாவது படம் ந்ன்றாக இயற்கையாக உள்ளது.

  நடுவில் நிறையப்படங்கள் இன்று திறக்க மறுக்கின்றன.

  திறந்தவற்றில் கீழிருந்து வரிசையாக
  11 படங்களும் நல்ல அழகாக உள்ளன.

  அதுவும் கீழிருந்து 11 ஆவது படத்தில்
  கோயிலின் மேற்பகுதிகளை அன்னாந்து பார்த்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது, தனிச்சிறப்பாக உள்ளது.

  சிங்கச்சிலைகளும், சிற்பங்களும், சித்திரங்களும், கலர்கலராக வெகு அருமையாக கண்ணைப்பறிப்பதாக உள்ளது.

  [அத்ற்கு மேல் காமதேனுவுக்குக்கீழ் எந்தப்படங்களும் திறக்கப்படவில்லை -அதனால் என்னால் எந்தக் கருத்துக்களும் கூற இயலவில்லை]

  கீழேயுள்ள தேர், குளம், கோபுரம் போன்றவைகளும் ஜோர் தான்.

  ReplyDelete
 6. மேலிருந்து ஐந்தாவது படமும் திறக்கப்படவில்லை.

  காமதேனுவும், சிவலிங்கமும், அதன் பிறகு வரிசையாகக் கார்கள் நிற்கும், கோபுரம் மின்னொளியில் சூப்பராக உள்ள்து. அதன் பிறகு வரிசையாக எந்தப்படமுமே பார்க்கும் படியாக இல்லை. அதாவது திறக்க மறுக்கின்றது.

  ஒருவேளை நள்ளிரவில் திறக்கப்பட்டு தரிஸனம் கிடைத்தாலும் கூட, சிறப்பாக ஏதும் தெரிய வந்தால், மீண்டும் ஏதாவது மனதுக்குத் தோன்றினால், கருத்துச்சொல்ல வருவேன்.

  ReplyDelete
 7. பேரூர் ஸ்தல பெருமைதெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா

  ReplyDelete
 8. மற்றபடி முக்தி தலம் பேரூர் பற்றி ஏதேதோ வழக்கம் போல எழுதி அசத்தியுள்ளீர்கள்.

  தகவல் களஞ்சியத்தின் பெயர் எங்கு சென்றாலும், பின்னூட்டங்களில் அமர்க்களப் ப டு த் தி ப் பேசப்படுவது கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  நான் அடிக்கடி சொல்லி வந்ததையே இன்று ”ததாஸ்து” என்பது போல “அதே அதே” என்று தூய தமிழில் பூவனம் திரு ஜீவி ஐயாவே சொல்லியுள்ளது, மட்டில்லா மகிழ்ச்சியளிக்கிறது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  இப்போதைக்கு Bye Bye !

  ReplyDelete
 9. ஐந்தெழுத்து மந்திரமான ”ஓம் நமச்சிவாய” போல 5 விளக்குகளை அழகாக் எரியவிட்டு, அதன் கீழ் சிவனையும், பார்வதியையும், தொந்திப்பிள்ளையாரையும், ரிஷபத்துடன் காட்டி, இந்தப் பதிவை ஆரம்பித்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 10. எத்தனை தகவல்கள்?அருமை,வழக்கம் போலவே!

  ReplyDelete
 11. கோவைப் புகழ் பேரூரின் பெருமைகளை உலகிற்கு எடுத்துக் கூறிய திருமதி. இராஜராஜேஸ்வரி வாழ்க, வாழ்க, வாழ்கவே.

  ReplyDelete
 12. nice post poikal kuthirai photo superb

  ReplyDelete
 13. அருமையான படங்களுடன் நல்ல தகவல்கள்.. அதுவும் அந்த பொன்னார் மேனியனாக ஜொலிக்கும் மலைகளின் படம் ரொம்ப அழகு.

  ReplyDelete
 14. வெள்ளியங்கிரி மலையை காண்கையில்
  சென்ற விடுமுறையில் பாபநாசம் அகத்தியர்
  கோவிலுக்கு சென்றது தான் ஞாபகம் வருகிறது...
  சுற்றிய மலையும் அருவிச் சத்தமும்
  மனதை நிறைத்தது..

  பதிவைப் படித்து சிவனருள் பெற்றேன் சகோதரி.

  ReplyDelete
 15. படங்கள் அனைத்தும் அருமை அக்கா பட்டீஸ்வரன் சிவனை பற்றிய நல்ல ஒரு பகிர்வு........

  ReplyDelete
 16. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete