Wednesday, January 13, 2016

பக்திக்கவி பூந்தானம் பாடிய ஞானப்பானை


கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர
குருவாயூர் கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே
ஆணவத்தில் அறிவிழந்த அகந்தை கொண்ட மனிதருக்கு
அறிவைஊட்டி ஆதரிக்கும் அன்பு தெய்வமே
பண்ணும் பாட்டும் அறியாத பாமரர்களையும் பாடவைத்து
பக்தராக்க பாடுபடும்  பாங்கான புண்ய மூர்த்தியே
நாமம் நம்பிச்சொல்வோருக்கு நற்கதியைத் தருவேனென்று
நாமம் சொல்லி சத்யம் செய்த நிகம வேத்யனே !

நாமம் சொல்லும் இடத்திலே நித்யவாசம் செய்வேனென்று
நாரதற்கு உறுதி சொன்ன நித்ய வஸ்துவே..
பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
பவனபுரம் வந்தடைந்த பூர்ண ரூபனே..!!


ஜய ஜகதீச ஹரே க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே
பூந்தான பக்தப்ரியா க்ருஷ்ணா  ஜய ஜகதீச ஹரே
பிருந்தாவன ரசிகா  கிருஷ்ணா ஜய ஜகதீச ஹரே

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே
ஒன்னொன்னாயி நினைக்கும் ஜனங்கள்க்கு
ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவுமாய
ஒன்னிலுமொரு பந்தமில்லாதெயாய்
நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்
ஒன்றொன்றாய் –இது தான் பிரம்மமோ, இது தான் பிரம்மமோ என்ற் ஆராய்ந்து கடைசியில் அது நம்முள்ளே இருக்கும் ஒரே பொருள் தான், அதுவே இந்த விசுவ பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.ஆனால் அதற்கு எதனுடனும் ஒரு பந்தமுமில்லாமலிருக்கிறது. என்று காண்கிறோம் இது மிகவும் சிரமமான வழிதான். ஆகவே பகவன் நாமத்தைச் சொல்லி  பாடினால் தனாக நாம் அந்த பிரமனைப் போய் அடைந்து விடுவோம் என
உபனிஷத்துக்களின் சாரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறார் 
பக்தி கவிஞர் - ஞானப்பானாவின் ஆசிரியர் பூந்தானம்மலையாள மொழியில் பக்தகவி பூந்தானம் இயற்றிய ‘ஞானப்பானை’யின் தமிழாக்கம்


 பூந்தானம் உணர்ந்த உலகவாழ்க்கைச் சுகங்களின் அர்த்தமற்ற தன்மையையும், ஹரி நாம உச்சாரணத்தின் இன்றியமையாத தேவையையும் வலியுறுத்தி அதிகம் படிப்பறிவில்லாதவர்களும்கூடப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் “பானை” என்ற சந்தத்தில் மலையாளத்தில் இயற்றிய “ஞானப்பானை” என்ற நூல் 356 வரிகள் கொண்டது..

. திருமாலின் பெருமைகளை விளக்கும் பாகவத புராணத்தின் நித்திய பாராயணத்தில் நிரந்தரமாக  ஈடுபட்டிருந்த பக்தரான பூந்தானத்திற்கு அஜாமிளோபாக்யானம்,  போன்ற பாகவதப் பகுதிகளின் வழியான கோட்பாடுகளோடு உறுதியான தொடர்புடன் கூடிய கொள்கைகளைப் பாவடிவில் விளக்கியபோது ‘ஞானப்பானை’ உருவெடுத்தது ..

ஞானம் சம்பாதிப்பதற்கான உயர்ந்த தத்துவம் எள்ளுக்குள் எண்ணெய் என்பதுபோல் லயித்திருப்பதனாலேயே ‘ஞானப்பானை’ என்ற நாமம்  அளிக்கப்பட்டது

 ஞானப்பானை  . நூலில் பக்தி மார்க்கத்தின்,  பாசாங்கற்ற, மனமார்ந்த நாமசங்கீர்த்தன பக்தியின் பெருமையையே   விளக்கியிருக்கிறார்.மிகவும் எளிய நடையிலும், தத்துவரீதியான சர்ச்சைகளோ,எடுத்துக்காட்டுக்களோ இல்லாமலும் பூந்தானகவியால் இயற்றப்பட்டு இன்றும் கேரள மண்ணில் மிகவும் புகழ் பெற்ற பக்தி சித்தாந்த நூலாகத் திகழ்கிறது

 பரம பாமரமக்களையும் பயங்கரமான பிறவிப்பெருங்கடலில் இருந்து கரையேற்றுவதற்காகவே அவர் வழிபடும் குருவாயுபுரேசனின் ஆணையால் பக்தசிரோமணியான அவரால்  மேதகு நூல் இயற்றப்பட்டது.

 . சிரத்தையோடு இந்நூலைப் பாராயணம் செய்தாலே அது பக்தியையும், முக்தியையும் அனாயாசமாக அளிக்கும்..

புகழ்பெற்ற பக்திக்கவிதையான பூந்தானம் நம்பூதிரியின் ‘ஞானப்பானை‘ யின் பகடியை குருவாயூரப்பன் ரசிப்பார்,

நாராயண பட்டத்ரியின் சமகாலத்தில் வாழ்ந்து வந்த  பக்தியில் சிறந்த பூந்தானம், அடியவர்களிடமும் அன்பு கொண்டிருந்தார். சிறந்த உபன்யாசகராகவும் விளங்கினார்.

நீண்ட  வருடங்களாக புத்திரபாக்கியமில்லாமல் வருந்திய பூந்தானம் குருவாயூரப்பனைப் பிரார்த்தித்து பெற்ற குழந்தையை முதல் வருட
அன்ன பிராசனம்  நடக்க வேண்டிய  நேரத்துக்கு  ஒரு  மணி  முன்பாக  குழந்தையைப் பறிகொடுத்து கதறினார்..

 குருவாயுரப்பன்    நானே உங்கள்  பிள்ளை  எங்கே  உங்கள்  மடி”  என்று அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டான்.

 தன்னை மறந்து   ஆனந்த பரவசத்தில்     என்றும் வந்து  நடமாட கிருஷ்ணன்  இருக்கும் போது  பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து  தெள்ளிய  எளிய  மலையாள  கவிதை  பிறந்தது.    

பூந்தானம், ‘ஞானப்பானை’ என்ற நூலை இயற்றினார்..

 நாராயண பட்டத்ரியிடம் காண்பித்து, அவருடைய அங்கீகாரத்தையும் பெற விரும்பினார் .
  
நாராயண பட்டத்ரி பூந்தானத்தை, பாமரர் என்று அலட்சியப்படுத்த  
மனம் வருந்திய பூந்தானம் குருவாயூரப்பனிடம் முறையிட்டார்.

சிறந்த வேதவிற்பன்னரும், வடமொழிப் புலவருமான  அந்தண வாலிபர் நாராயண பட்டத்ரி நூல்களில் இருந்த தவறுகளை  சுட்டிக் காட்டி அவை எப்படித் தவறாகும் என்பதையும் சான்றுகளுடன் தெளிவாக்கினார்.
 “பட்டத்ரியின் ஞானச் செருக்கை நீக்க  கலியுகந்தன்னில் கண்கண்ட கடவுள் குருவாயூரப்பன்  வந்ததை அசிரீரியாக் கேட்டு தன் தவற்றை உணர்ந்து மன்னிக்க வேண்டி பூந்தானம் இயற்றிய ஞானப்பானை நூலை வாங்கிப் படித்து . பூந்தானத்தை மனமாரப் பாராட்டி ஒரு மோதிரத்தைப் பரிசாக அளித்தார்...

 "பெரும்பண்டிதரும், நாராயணீய காவியத்தின் ஆசிரியருமான மேல்ப்புத்தூர் நாராயணபட்டத்த்ரியின்   பக்தியை விட, பூந்தானத்தின் விபக்தி குருவாயூரப்பனுக்கு உயர்வானது.


 பக்தி மார்க்கத்தின், அதிலும் பாசாங்கற்ற, மனமார்ந்த நாமசங்கீர்த்தன பக்தியின் பெருமையையேவிளக்கியிருக்கிறார்.
பக்திபூர்வமாக உபன்யாசம் செய்து வந்த பூந்தானம், இலக்கண, இலக்கிய விதிகளுக்குக் கட்டுப்படாமல் விளக்கங்களைக் கூறுவார். 

இறைவனின் புகழை அனைவரும் அறிந்து மகிழ வேண்டும் என்பது மட்டுமே அவருடைய நோக்கமாக இருந்தது

சமஸ்கிருதத்தில் எழுதப்படாத எதனையும் படிக்க மாட்டேன் என்று விரதம் பூண்டிருந்த ஸ்ரீ நாராயண பட்டத்திரி குருவாயூரப்பன் அருளால் பூந்தான புலவரை அணுகி தனது விரதத்தை முடித்துக்கொண்டார்.

பூந்தானமே நாராயண பட்டத்ரியை நாராயணீயம் பாடச் சொன்னார் என்ற ஒரு கருத்தும் உண்டு

:குருவாயூரப்பனை அனுதினமும் தரிசித்து மகிழும்  பூந்தானம். ஒரு நாள் அடர்ந்த காட்டு வழியே நடந்து செல்ல . கொடிய ஆயுதங்களுடன் சூழ்ந்துகொண்ட  திருடர்கள் “ ஆபரணங்களைக் கொடுத்தால்  உயிர்பிச்சை கொடுக்கிறோம்” என்று மிரட்டினர்.  

“குருவாயூரப்பா……..” என்று அபயக் குரலெடுத்து கதறிய நேரம் குதிரைகளின் குளம்படியோசைக் கேட்க திருடர்கள் பயந்து ஓடி விட்டனர்.
 மாங்காட்டு அச்சன்  என்ற  குதிரை வீரன் ,பூந்தானத்தின் புலமையைப் போற்றி ஸ்ரீ நாராயண பட்டத்திரி வழங்கிய மோதிரத்தை கேட்டு வாங்கிச்சென்றான்..  
அடுத்தநாள் குருவாயூரப்பன் விக்ரஹத்தின் விரலில்அந்த மோதிரம்  இருந்தது,,

  “ தான் அனுதினமும் தொழுதிடும் குருவாயூரப்பன்   காப்பாற்றியதாக  கண்ணீர் மல்க கைதொழுதார்.பூந்தானம் ..பெரும் பக்திமான்., ஆகம, சாஸ்திர விதிகள் எதையும் அறியாதவர்.  ஒரு நாள், “கடவுளை எந்த உருவத்தில் வழிபடுவது நல்லது?” என்று நாராயண பட்டத்ரியிடம் கேட்டார். “கடவுளை  எருமை வடிவில்கூட வழிபடலாம்!” என்று பட்டத்ரி வேடிக்கையாகக் கூறினார்.

பூந்தானம் பட்டத்ரியின் சொல்லை வேதவாக்காக எண்ணி குருவாயூரப்பனை எருமை வடிவத்தில் தியானிக்கத் தொடங்கிவிட்டார்!

அடுத்த நாள் குருவாயூரப்பனின் உற்சவமூர்த்தத்தை உலாவுக்காக வெளியே எடுத்து வந்தபொழுது, வாயிற்படியில் ஏதோ தடுப்பது போல் உணர்ந்தார்கள். ,  தடையாக எதுவும் கண்ணில் புலப்படவில்லை. அப்போது,  கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பூந்தானம், “இதோ, இந்த மகிஷத்தின் கொம்புகள்தான் தடுக்கின்றன!” என்று உரக்கக் கூறினார்.

அவருக்குக் குருவாயூரப்பன் எருமையாகவே காட்சியருளினான்! அதனைப் பெருமானே அசரீரியாக உறுதி செய்து உரைத்தான். பூந்தானத்தின் பக்தியைப் பட்டத்திரி பாராட்டினார்.

உடனே விக்கிரகம் எளிதாக வெளியே வந்துவிட்டது.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்திலுள்ள, ‘பத்மநாபோ அமரப் பிரபு:’ என்ற நாமத்தைப் பிரித்து, மரப்பிரபு என்று பொருள் கூறினார். அதாவது, பத்மநாபனாக இருக்கும் விஷ்ணுவே மரங்களுக்கும் தலைவன் என்று விளக்கம் கூறினார் பூந்தானம்.  பட்டத்ரி,  அது மரப்பிரபு அல்ல; அமரப்பிரபு என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.” என்று சுட்டிக் காட்டினார்.


அப்போதும் குருவாயூரப்பன், “பூந்தானம் கூறுவது போல் மரப்பிரபுவும் யாமே!” என்று அசரீரியாக உரைத்தான். ! 


மஞ்சுளை என்ற பெண், ஓர் ஏகாதசி நாளில் கையில், மாலையுடன் கோவில் வாசலில், நின்று கொண்டிருந்தாள்.  பூந்தானம்  ,  ஆலமரத்தில் மாலையை அணிவித்துவிட்டுச் செல்! குருவாயூரப்பன் மரப்பிரபு! மாலையை ஏற்றுக் கொள்வான்!” என்றார் . மஞ்சுளை  மாலையை ஆலமரத்தில் அணிவித்துச் சென்றாள்.

  நிர்மால்ய தரிசனத்தைக் காண.திருக்கதவம் திறந்த அர்ச்சகர், தான் அணிவிக்காத மாலையொன்று குருவாயூரப்பனின் கழுத்தை அலங்கரித்திருப்பதைக் கண்டு வியந்தார்!  “பக்தை மஞ்சுளை கொடுத்த மாலை இது!” என்று குருவாயூரப்பன் அனைவரும் கேட்க உரைத்தருளினான்.

பூந்தானம்! குருவாயூரப்பன் நீங்கள் கூறிய மரப்பிரபுதான்!” என்றார் பட்டத்ரி.

பாகவதம் கேட்க விரும்பும் பக்தர்களுக்குப் பூந்தானம் தன் இல்லத்திலேயே உபன்யாசம் செய்வார். ஏகாதசி முதலான விசேஷ நாள்களில் குருவாயூரப்பன் கோவிலில் அமர்ந்து உபன்யாசம் செய்வார். நள்ளிரவு வரை உபன்யாசம் செய்துவிட்டு, கோவிலிலேயே படுத்து உறங்குவார். காலையில் நிர்மால்ய தரிசனம் செய்த பிறகே இல்லத்துக்குத் திரும்புவார்.

மகாவிஷ்ணுவின் மாளிகை வாசலில் காவல் பணியில் நின்று கொண்டிருந்த இரண்டு துவாரபாலகர்கள்  சாபத்தினால் மண்ணுலகில் பலா மரங்களாகப் பிறந்திருந்து பூந்தானத்தின் பாகவத உபன்யாசத்தை நாள் தோறும் கேட்ட புண்ணியத்தால் சாபவிமோசனம் பெற்று,வைகுண்ட உலகத்திற்கு மீண்டார்கள்..
 photo c05579df.jpg
 வீட்டு வாயிலில் இருந்த இரண்டு பலா மரங்களும் வேருடன் சாய்ந்து, கீழே விழுந்து கிடந்தன! “ மரப்பிரபுதான் பலா மரங்களைத் தன்னிடம் அழைத்துச் சென்றுவிட்டான்!” என்று உணர்ந்தார் பூந்தானம்....

பூந்தானம் முதுமை எய்த குருவாயூரப்பன்!  அன்றாடம் பூந்தானத்தின் இல்லத்திற்குச் சென்று தரிசனம் அருளினான்.


7 comments:

 1. பூந்தானம் அவர்களின் வரலாறு அறிந்தேன். நன்றி.

  ReplyDelete
 2. பூந்தானம் கதை மெய்சிலிர்க்கவைக்கிறது.
  நன்றி அம்மா

  ReplyDelete
 3. பூந்தானம் ஞான பானை - பக்தி மயமான பதிவு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 4. நான் ஞானப் பானை படித்து ஒருசிலபாக்களுக்குப் பொருள் எனக்குத் தெரிந்தவரை எழுதினேன் . ஆனால் நீங்கள் ஞானப்பானையின் சாராம்சத்தையும் அதன் ஊடேயான கதைகளையும் அருமையான படங்களுடன் விளக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. விரிவான பதிவு! அழகான படங்கள்! அருமை! நன்றி!

  ReplyDelete
 6. கிருஷ்ண கிருஷ்ணா!
  ஆஹா! அருமை..அருமை!
  திகட்டா தேனமுது படைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
  http://www.friendshipworld2016.com/

  ReplyDelete
 7. வணக்கம்
  அம்மா

  வரலாறு சிறப்பாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete