Saturday, January 16, 2016

ஸ்ரீ தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேயர்









அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ

முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. 
அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்,

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||


அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும், நிச்சயம் கிடைக்கும்.

யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே 
எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். 

அனுமனிடமில்லாத்து ஒன்றில்லை. 
அனுமனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

அனுமன் எடுத்த வடிவங்களில் அற்புதமானதும், 
தரிசிப்போர் வாழ்வில் தடைகளைத் தகர்க்க வல்லதுமான ஒன்று,  
‘தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய’ வடிவம்
ரக்தாட்சன், ரக்தபீஜன் எனும் அரக்கர்களை இத்திரு உருவில்தான் வதைத்தானாம் அனுமன். நோய், பயங்கள், கிரக தோஷங்கள், தீயோரின் தொல்லை முதலியவை அழியும்படி அருள்பவன் அனுமன். 
விபத்து, ஆபத்துகள், சிறைவாசம் போன்றவை அனுமனை நினைப்பதாலேயே நெருங்காது ஓடிவிடும்.
அனுமனுக்கு வெற்றிலையில் பாக்கு வைத்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாலையாகக் கட்டி வியாழன், சனிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கலமான மண வாழ்க்கை கிட்டும். 

வடநாட்டில் இனிமையான வாழ்வு வேண்டுமென இனிப்புகளாலும், தென்னாட்டில் ராகு தோஷம் நீங்க உளுந்து வடையை மாலையாகக் கட்டி சாத்தியும் பலன் பெறுகிறார்கள். 
தஞ்சாவூரில் உள்ள அனந்த மங்கலத்தில் ராஜகோபால சுவாமி கோயில் தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய திருஉருவத்தை தரிசித்து அருள் பெறலாம்.





6 comments:

  1. அனுமனைத் தரிசித்தேன் அம்மா...

    ReplyDelete
  2. தசபுஜ வீர ஆஞ்சநேயர் குறித்த தகவல்கள் சிறப்பு! படங்கள் அழகு சேர்த்தன! நன்றி!

    ReplyDelete
  3. அழகான படங்களுடன், தகவல்களும் அருமை. மனதிற்கு மிகவும் பிடித்த ஆஞ்சநேயர் தரிசனம்..

    ReplyDelete
  4. ஆஞ்சநேயர் குறித்த அருமையான அரிய தகவல்களை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete