Monday, July 4, 2011

அன்பு நண்பனுக்கு ஆராதனை


201 வது பதிவு...


இந்து சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக புராணங்கள் கூறும். 

இந்துதேசமான நேபாளத்தில் தீபங்களின் வரிசையான தீபாவளி முதலிடம் பெறுகிறது.  

Tihar என்னும் ஐந்து நாள் பண்டிகையில் முதல் நாள் காகத்திற்கு. காகம் பூமிக்கும் சொர்க்கத்திற்குமான தூதுவனாகக் கருதப்படுகிறது.காகபுஜண்டர் என்ற முனிவரும் உண்டே. 
இரண்டாவது நாள் நன்றியுள்ள நாய்களுக்கு. 

பைரவராக நாய் காவல் தெய்வமல்லவா. 

ஆதிகாலத்திலிருந்து உற்ற நண்பனாக, காவலாக பழகும் நன்றிக்கு இலக்கணமாகத்திகழும் ஆசைத்தோழன் நாய்தானே.
dogworshipday.jpg picture by vinodok
 அருமை நண்பேண்டா என்று கொண்டாடுகிறார்கள்.
2006-10-21_kukur_tihar_1.jpg picture by vinodok
மூன்றாம் நாள் பசுக்களை லட்சுமி தேவியாக பூஜிக்கிறர்கள்.
நான்காம் நாள் கோவர்த்தன் பூஜை. 

சாணம் தூய்மையைக் குறிக்கும் அடையாளம். 

திரு நீறு இதிலிருதே தயாரிக்கப் படுவதே இதன் சிறப்புக்குச் சான்று பகரும்.

Tihar.jpg picture by vinodok
இதுதான் நேபாள நாட்டின் சம்பிரதாயத்தில் புத்தாண்டு தினமாக கொள்கிறார்கள். 
ஆனால் இது அலுவலக பதிவுகளில் அல்ல.

நாமும் தானே தமிழ் மாதங்களைக் கொள்கிறோம் சம்பிரதாயமாக்..  
tihar_mandala.jpg picture by vinodok
ஐந்தாம் நாள் சகோதரிகள் சகோதரர்கள் நலம் வேண்டி பூஜிக்கும் திரு நாள்.
வட இந்தியாவிலும் ஹோலி கொண்டாடி சகோதரருக்கு ராக்கி என்னும் புனிதக்கயிறு கட்டும் விழா நடைபெறுகிறது வண்ணமயமாக.
garlands.jpg picture by vinodok
ஒரு நாளிலும் வாடிவிடாத வாடாமல்லி மலர் மாலையை சகோதரர்களுக்கு அளித்து அந்த மாலை வாடாதிருக்கும் வரை தன் சகோதரனின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்று தர்மராஜனிடம் வேண்டி விருந்தளிக்கும் நாளாகக் கொண்டாடப் படுகிறது.

சமயோசிதத்துடன் எத்தனை அன்பு உடன்பிறந்த சகோதரனிடம்!
   
  
உலகில் மிகவும் விலை மதிப்புள்ள அரிய வகை நாய் வியப்பூட்டியது.
பணத்தால் அன்பை வாங்க முடியாது என்போம். 

பார்ப்பதற்கு அழகிய பொம்மை போல் அருமையான தோற்றத்துடன் காட்சிப்படும்- மனிதனுக்கு மிகவும் உற்ற நண்பனான அன்புக்குரிய இந்த நாயை ஒருவர் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளார். 

இது திபெத்தைச் சேர்ந்த சிவப்பு நிற உயர் ரக நாய்.சீனாவின் வட பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் இதை வாங்கியுள்ளார்  ஒரு பெரும் கோடீஸ்வரர். 


 இந்த நாயை பராமரிப்பது இலேசான காரியமல்ல. 

இறைச்சியும், கோழியும் தான் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும். 

இன்னும் கடல் வெள்ளரிக்காய் போன்ற பல உயர் ரக உணவும் தேவைப்படுகின்றது. 

இந்த ரக நாய்கள் மிகப் பெரிதாக வளரக் கூடியவை. 

எனவே அதற்கேற்ற பெரிய இருப்பிடமும் அவசியமாகின்றது. 

இந்த வகை சிவப்பு திபெத் நாயை வைத்திருப்பது சீனாவில் ஒரு சமூக அந்தஸ்த்துக்குரிய சின்னமாகும். 

நகை அலங்காரங்களுக்குப் பதிலாக இத்தகைய உயர ரக நாய்கள் தான் இன்று சீன செல்வந்தர்களின் சமூக அந்தஸ்த்தாகும். 

இந்த நிறம் சீனாவில் அதிர்ஷ்டத்துக்குரிய ஒரு நிறமாகக் கருதப்படுகின்றது. 

இந்த வகை நாயும் புனிதமானதாகவே கருதப்படுகின்றது. 

தமது எஜமானர்களின் செல்வத்துக்குரிய ஆசீர்வாதமாகவும் பாதுகாப்பாகவும் இது கருதப்படுகின்றது. 

இது உணவாகக் கொள்ளும் கடல் வெள்ளரியின் அற்புத குணம் ஒன்று வியப்பில் ஆழ்த்தியது.

எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் அழகிய கடல் வெள்ளரி மீனினங்கள், மன்னார் வளைகுடா பகுதியில்  கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்.

கடலடியில் வாழ்வியல் பிரச்னைகள், உணவிற்கு போராட்டம், பாதுகாப்பின்மை என எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், அவற்றை தாக்கு பிடிக்கும் திறன்கள் பல உயிரினங்களிடம் 
இயற்கையாகவே அமைந்துள்ளன. 

இவைகளின் உத்திகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. 

உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதில் பல வினோதங்கள் மீனினங்களிடம் உண்டு. 

உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். 

சற்று வித்தியாசமான கடல் வெள்ளரி தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. 
Escher Fish
சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டசிறப்பு வாய்ந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீனிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களைக் கையாள்கிறது. 
அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். 
குடலில்லாத வெள்ளி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். 
இயற்கையின் எண்ணற்ற அதிசயங்களை எண்ணத்தான் முடியுமா மனிதனால்..!!
Escher FishEscher Fish

58 comments:

  1. முதல் நண்பனின் வாழ்த்துக்கள்.
    மீண்டும் வருவேன், அன்புடன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ராஜி 200 மேலான பதிவுகளுக்கு..
    அருமையான பதிவு.
    நேபளத்தில் நடைபெறும் பண்டிகை ப்ற்றியும் அதிசய மீன் வகை பற்றியும் புதிய தகவல் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. "அன்பு நணபனுக்கு ஆராதனை"

    தலைப்பே வெகு அருமை.
    என்னைத்தான் குறிப்பிடுகிறீர்களோ என்று நினைக்க வைத்தது.

    சாதனையின் சிகரம் அல்லவா நீங்கள்!

    201 ஆவது பதிவு என்றால் சும்மாவா!

    அதுவும் ஒவ்வொரு பதிவிலும் எவ்வளவு நிறைவான விஷயங்கள்!

    எவ்வளவு அழகழகான படங்கள்!

    ஏனோதானோ என்று எண்ணிக்கையை ஏற்ற மட்டும் எழுதுபவரா நீங்கள்!

    தகவள் களஞ்சியமாயிற்றே!

    தங்கள் தனித்திறமைக்கு தலை வணங்குகிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இந்து சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக புராணங்கள் கூறும், அந்த காமதேனுவும், பசுக்களும் அருமையோ அருமையாகக் காட்டியுள்ளீர்கள்.

    இந்துதேசம் என்ற பெருமையுடன் இருந்த ஒரே நாடு நேபாளம் மட்டுமே என்று கேள்விப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
  5. நாய்களுக்கு கழுத்தில் மாலையிட்டு அழகாக கொலுப்படி போல் காட்டி அசத்திவிட்டீர்களே!

    வாலாட்டாமல் அழகாக சமத்தாக அமர்ந்திருக்கின்றன பாருங்கள்!

    தலையிருந்தால் வால் ஆடக்கூடாது என்பது அவைகளுக்கும் தெரியுமோ?

    ReplyDelete
  6. //இது திபெத்தைச் சேர்ந்த சிவப்பு நிற உயர் ரக நாய்.சீனாவின் வட பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் இதை வாங்கியுள்ளார். இவர் ஒரு பெரும் கோடீஸ்வரர். //

    ஹாங்காங்கில் ஒரு தங்க நகைக்கடை முதலாளி 20 கோடி ரூபாய் செல்வில், சுத்தத்தங்கத்தில் Western Toilet வெகு அழகாக அமைத்து, அதில் தங்கத்திலேயே குளிர்சாதன கருவிகளும் பொருத்தியிருப்பதாக நேற்றைய தினமலர் வார மலரில் செய்தி படித்தேன்.

    அவரின் அண்ணாவாக இவர் இருப்பார் போலிருக்கு. வாழ்க !

    அந்த சுழலும் நாயைப்பார்த்துக்கொண்டே இருந்ததில் என் தலையும் சுழல ஆரம்பித்து விட்டது.

    ReplyDelete
  7. //இந்த நாயை பராமரிப்பது இலேசான காரியமல்ல. இறைச்சியும், கோழியும் தான் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும். //

    கஷ்டம்...கஷ்டம்..மஹா கஷ்டம்.
    படிக்கும் போதே எனக்குக்குமட்டுது.

    //தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் அழகிய கடல் வெள்ளரி மீனினங்கள்,//

    நவாப்பழங்கள் கொடுத்த குரங்கை தன் மனைவி முதலைக்கு விருந்தாக்க நினைத்த முதலைக்கு குரங்கு சொன்ன கதைபோல உள்ளது இது. ஆனால் நிஜம் என்கிறீர்கள். உங்கள் தகவல்களே இப்படித்தான், ஒரே திகிலாக உள்ளன. ஆனால் நீங்கள் சொன்னால் அதுவே எங்களுக்கு என்றும் வேத வாக்கு.

    ReplyDelete
  8. //இயற்கையின் எண்ணற்ற அதிசயங்களை எண்ணத்தான் முடியுமா மனிதனால்..//

    சிற்றறிவு படைத்த என்னால் முடியவே முடியாது. நீங்கள் சொன்னால் அதை அப்படியே மெய்மறந்து படித்து, ரஸித்து, பாராட்ட மட்டுமே முடியும்.

    கடைசியில் காட்டப்பட்டுள்ள RUNNING மீன்கள் பார்க்க மிகவும் அழகாகவே உள்ளன. வேறென்ன நான் சொல்ல!

    நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து அசத்துங்கள்!

    ReplyDelete
  9. அவசரத்தில் ’தகவல்’ என்பதற்கு பதிலாக ’தகவள்’ என்று அடித்துள்ளேன். திருத்திக்கொள்ளவும்.


    //தகவள் களஞ்சியமாயிற்றே!//
    = த்வறு

    //தகவல் களஞ்சியமாயிற்றே!//
    = சரி

    தவறு என்னை உறுத்துகிறது.

    ReplyDelete
  10. @வை.கோபாலகிருஷ்ணன் sai//

    சாரமான கருத்துரைகளுக்கு மிகவும் நன்றி ஐயா.
    பதிவை விட அதனை ரசித்து ரசிகமணியாக தாங்கள் வெளியிரும் அருமையான பின்னூட்டடங்கள் வெகுவாக சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருக்கின்றன.
    நன்றி. நன்றி. நன்றி....

    ReplyDelete
  11. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    அவசரத்தில் ’தகவல்’ என்பதற்கு பதிலாக ’தகவள்’ என்று அடித்துள்ளேன். திருத்திக்கொள்ளவும்.//

    வள் என்று குரைக்கும் நாய் பற்றிய தகவள் என்று குறிப்பிட்டீர்கள் என்று ரசித்தேன்.
    தவறா அது. அழகாக அல்லவா இருந்தது.

    ReplyDelete
  12. @RAMVI said...
    வாழ்த்துக்கள் ராஜி 200 மேலான பதிவுகளுக்கு..
    அருமையான பதிவு.
    நேபளத்தில் நடைபெறும் பண்டிகை ப்ற்றியும் அதிசய மீன் வகை பற்றியும் புதிய தகவல் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி../

    வாங்க. வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    vaazththukkal 201th post..//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. வை.கோ சார் சொல்வது மாதிரி
    தங்கள் பதிவே உண்மையில் தகவல் களஞ்சியம்தான்
    அதுவும் தரமான படங்களுடன்
    அதற்கான முழுமையான விளக்கங்களுடனும்
    201 பதிவுகள் என்றால் உண்மையில்
    இமாலயச் சாதனைதான்
    சாத்தனைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. @ Ramani said...//
    வாழ்த்துக்களுக்கும் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  17. @ FOOD said...
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  18. அருமை...

    இரண்டு சதங்களை கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் தங்களுக்கு
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    இறையருளால் மேலும் மேலும் பல படைப்புகளை வலையுலகிற்கு வழங்க வாழ்த்துகிறேன்..

    நன்றி..

    நன்றி..

    சிவயசிவ
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  19. அன்பு நண்பனுக்கு ஆராதனை..

    சத்தியமாக செய்ய வேண்டியது தான்..

    இன்று மனித நண்பர்களை விட
    இவைகள் எவ்விதத்திலும் குறைந்துவிடுவதில்லை..

    நன்றி..

    நன்றி..

    சிவயசிவ
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  20. தகவல் களஞ்சியம்!அருமையான படங்கள்!நன்றி!

    ReplyDelete
  21. எல்லா பதிவுகளிலும் ஒரு தனி அழகு தெரிகிறது ...வாழ்த்துகள் :)

    ReplyDelete
  22. Congragulations dear.
    For your 201th post.
    Your each and every post is very interesting.
    The photos...........
    padangal pesukindrana.
    I wounder where do you get different types of subjects.
    But we are lucky to read your blog and know a lot of things.
    Thanks Rajeswari.
    As usual this post is very nice.
    viji

    ReplyDelete
  23. 201-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். நல்ல தகவல்கள் தந்து கொண்டு இருப்பதை மேலும் தொடருங்கள்...

    ReplyDelete
  24. @சிவ.சி.மா. ஜானகிராமன் sai//

    இறையருளோடு வாழ்த்துக்களுக்குநன்றி ஐயா.

    ReplyDelete
  25. @சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    அன்பு நண்பனுக்கு ஆராதனை..

    சத்தியமாக செய்ய வேண்டியது தான்..

    இன்று மனித நண்பர்களை விட
    இவைகள் எவ்விதத்திலும் குறைந்துவிடுவதில்லை.//

    ஆம். உண்மைதான். அருமையான் கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  26. @ சென்னை பித்தன் said...
    தகவல் களஞ்சியம்!அருமையான படங்கள்!நன்றி!//
    கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  27. @ தனி காட்டு ராஜா said...
    எல்லா பதிவுகளிலும் ஒரு தனி அழகு தெரிகிறது ...வாழ்த்துகள் :)/

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. @ viji said...//

    வாங்க விஜி. வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  29. @ வெங்கட் நாகராஜ் said...
    201-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். நல்ல தகவல்கள் தந்து கொண்டு இருப்பதை மேலும் தொடருங்கள்.//

    வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி..

    ReplyDelete
  30. நல்ல பதிவு அதிசயமாக உள்ளது

    ReplyDelete
  31. @கவி அழகன் said...
    நல்ல பதிவு அதிசயமாக உள்ளது//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  32. 201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்கள் எழுத்து வளரட்டும்.

    ReplyDelete
  33. சூப்பர் பாஸ்..கலக்கறீங்க...
    படங்கள் வெரி நைஸ்.
    என்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.

    ReplyDelete
  34. 201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    நல்ல தகவல் பதிவுகளை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் 200 மேலான பதிவுகளுக்கு..
    அருமையான பதிவு.

    ReplyDelete
  36. 201 பதிவுகள் என்றால் உண்மையில்
    இமாலயச் சாதனைதான்
    சாத்தனைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. வார்த்தைகளின் வழியே
    காட்சிகளின் வல்லமையை
    வளமையாய்
    வலிமையாய்
    பதிவிடும்
    உங்களின் மற்றுமொரு
    சாதனை மயில்கல்
    வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  38. பகிர்வு அருமை.. வாழ்த்துக்கள். தினம் ஒரு பதிவுக்கு>:))201 ஆவது பதிவுக்கும்.:)

    ReplyDelete
  39. அப்பப்பா எனச்சொல்லிவியக்கும் வண்ணம் -நல்
    அருமை மிகுபடங்களையே-நீர்
    தந்த வண்ணம்
    ஒப்பப்பா இல்லை யென சொல்லல் திண்ணம்
    அருமை அருமை அருமை
    அடைந்தீர் பெருமை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. @ கோவை2தில்லி said...
    201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்கள் எழுத்து வளரட்டும்.//

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  41. @குணசேகரன்... said...//

    நன்றி.

    ReplyDelete
  42. @ கோமதி அரசு said...
    201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    நல்ல தகவல் பதிவுகளை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  43. @மாலதி said...
    201 பதிவுகள் என்றால் உண்மையில்
    இமாலயச் சாதனைதான்
    சாத்தனைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்//

    இமாலய வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  44. @A.R.ராஜகோபாலன் said...
    வார்த்தைகளின் வழியே
    காட்சிகளின் வல்லமையை
    வளமையாய்
    வலிமையாய்
    பதிவிடும்
    உங்களின் மற்றுமொரு
    சாதனை மயில்கல்
    வாழ்த்துக்கள் மேடம்//

    வலிமையாய் வளமையாய் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  45. @தேனம்மை லெக்ஷ்மணன் said...
    பகிர்வு அருமை.. வாழ்த்துக்கள். தினம் ஒரு பதிவுக்கு>:))201 ஆவது பதிவுக்கும்.:)//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள், மென்மேலும் ஆயிரம், பதினாயிரமாகத் தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  47. @middleclassmadhavi said...
    வாழ்த்துக்கள், மென்மேலும் ஆயிரம், பதினாயிரமாகத் தொடரட்டும் உங்கள் பணி!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  48. @புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post "அன்பு நணபனுக்கு ஆராதனை":

    அப்பப்பா எனச்சொல்லிவியக்கும் வண்ணம் -நல்
    அருமை மிகுபடங்களையே-நீர்
    தந்த வண்ணம்
    ஒப்பப்பா இல்லை யென சொல்லல் திண்ணம்
    அருமை அருமை அருமை
    அடைந்தீர் பெருமை

    புலவர் சா இராமாநுசம் //

    ஒப்பில்லா வாழ்த்துதந்து
    பெருமைப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  49. எப்பவும் எப்பவும் வித்தியாசமான பதிவுகள்.தேடுதலின் வெற்றி உங்கள் பதிவுகளில்.பாராட்டிக்கொண்டே இருக்கலாம் தோழி !

    ReplyDelete
  50. வியத்தகு வித்யாசமான தகவல்கள் .உங்கள் வலை பூ அருமையான தகவல் களஞ்சியம் .200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .பயணத்தை தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம் உங்களோடு .
    அன்புடன் Angelin.

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள் சகோதரி 201 வது பதிவுக்கு. இவை மென்மேலும் சிறந்த ஆக்கங்களை அள்ளி வழங்க உறுதுணையாக இருக்கவேண்டும்
    என்பதே எனது பிரார்த்தனையும். பகிர்வுக்கு மிக்க நன்றி..........

    ReplyDelete
  52. அண்டி வந்து ஒண்டிக் கொல்லும் உற்ற நண்பனுக்கு நன்றி சொல்ல ஒரு நாள். அருமை. மிக விலை உயர்ந்த நாய் என்று சொன்னீர்கள். எவ்வளவு கொடுத்து வாங்கினார் என்று சொல்லவில்லையே...! கடல் வெள்ளரி பற்றிய தகவலும் அருமை. இயற்கையில்தான் எத்தனை அற்புதங்கள்...சங்கிலி போல அடுத்தடுத்த தகவல்களுக்குச் சென்றிருக்கிறீர்கள். கடைசி படம் அருமை

    ReplyDelete
  53. அன்புள்ள அம்மா,

    வெற்றிகரமாண 201'ம் பதிவிற்க்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்.

    நமது இந்து புராணங்களில் உள்ளது போல் நேப்பாளியரும், பைரவரையும், காகத்தையும், பசுவையும் பூஜிப்பது, படிக்க ஆச்சரியமாக இருந்தது.

    நாய் குட்டி எனக்கு மிகவும் பிடித்த விஷயம். படங்கள் சூப்பர்.

    கடல் வெள்ளரி'யய் ஆஸ்திரேலியாவில் உள்ள Underwater World என்ற இடத்தில் தொட்டுப் பார்த்துள்ளேன். மிகவும் மென்மையாக இருந்தது.

    ஒரு முறை chinese Restaurant'ல்லும் சுவைத்திருக்கிறேன்.

    சுவாரசியமாண தகவல்கள்.

    அன்பு மகள்,
    லக்ஷ்மி.

    ReplyDelete
  54. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கரையுடன் எழுதுவது தெரிகிறது

    ReplyDelete
  55. ஸ்ரீ ராம ஸ்தோத்ரம்
    ==================
    ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!

    லோகாபிராமம் ஸ்ரீராமம்
    பூயோ பூயோ நமாம்யஹம்!!-1

    ஆர்த்தானாமார்த்திஹந்தாரம்
    பீதானாம் பீதி நாசனம்!

    த்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்!!-2

    நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச!

    கண்டிதாகிலதைத்யாய ராமாயாபந்நிவாரிணே!!-3

    ReplyDelete
  56. 702+9+1=712

    [என்னுடைய கமெண்ட்ஸ்களை மீண்டும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. தங்களின் புத்திசாலித்தனமான {வள் வள்} பதில் அதைவிட சுவாரஸ்யமாக இருந்தது. மகிழ்ச்சி. நன்றி. ;))))) ]

    ReplyDelete