Thursday, July 21, 2011

கொடுமுடி மகுடேஸ்வரர்
மற்றுப் பற்று எனக்கு இன்றி  நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறை ஊரில் பாண்டிக்கொடுமுடி
நற்றவா ! உன்னை நான மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  என்பது சுந்தரர்  பாண்டிக்கொடுமுடி வந்து  இறைவனைக் கண்டு வணங்கி பாடிய நமச்சிவாய பதிகம் ....

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு ஏழ் சிவத்தலங்களில் 6வது தலம் கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருப்பாண்டிக்கொடுமுடி என்று புராணகாலத்தில் அழைக்கப் பட்ட கொடுமுடி தலம்.

கொடுமுடி நாதர், வடிவுடையம்மை, பெருமாள் மற்றும் தாயார் சந்நிதிகள் கொண்ட பரந்த கோவிலாகும்.இங்கு கொடுமுடி நாதர், அம்பாள் மற்றும் வீரநாராயணப்பெருமாள் சந்நிதிகளுக்குச் செல்ல மூன்று வாயில்கள் உள்ளன.

 குஞ்சிதபாத நடராஜர், தன் வலது காலைத் தூக்கி இருப்பதற்கு மாறாக, இரு கால்களையும் தரையில் வைத்துள்ளார். கதிரவனின் கிரணங்கள் (ஒளி) பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் நான்கு நாட்களுக்கு, சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளை ஒளிரச்செய்கிறது.
58 56 57
சொர்க்க வாசல்!
கோவில் கொண்டுள்ள பிரம்மனும், திருமாலும் ஈசனை வழிபட்டதால் திரிமுர்த்தி கோவில் எனப்படுகிறது.

ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் நடந்த சண்டையில், ஆதிசேடனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இவற்றில்
சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், 
மரகதம் ஈங்கோய்மலையிலும்,
நீலக்கல் பொதிகையிலும்,
மாணிக்கம் வாட்போக்கியிலும்,
வைரம் கொடுமுடியிலும் விழுந்தனவாம்.
அகத்தியர் புவியின் நிலை காக்கத் தென்னகம் வந்த புராணம் பாண்டிக்கொடுமுடியுடன் தொடர்புடையதாகும்; அவரது கமண்டல நீர், கீழ்த்திசை உழவோர் நலன்காக்க, இங்கிருந்து காவிரியாக ஓடியதாக நம்பப்படுகிறது.
அகத்தியர் சன்னதி..
 விநாயகர், காவிரி கண்ட விநாயகர் எனப்படுகிறார்.

பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது.
இங்கு பல்வேறு மன்னர்களின் கொடைகள் பற்றிய பல கல்வெட்டுகள் உள்ளன.சிங்க முகத் தூண்கள் பல்லவர்களின் கொடைகளைப் பறைசாற்றுகின்றன.

 அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமான் மேல் திருப்புகழ் பாடியுள்ளார்.
திருப்புகழ் முருகன்
மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம்.

வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார்.

வன்னிமரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். 
 பிரம்மா


அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார்.

ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம்.
ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர்
நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம்.

நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்..  

கொடுமுடியில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ..

குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம்.

அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம்.

மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம்.

இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர்.
மூலவர் மகுடேஸ்வரர்
இது ஒரு நாகர் ஸ்தலம்.

நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.
Lord Brahma's Vanni Tree
இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. பழமையான வன்னி மரம் பூக்காமலும், காய்க்காமலும் இருப்பது ஓர் அற்புதமாகும்.

ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை.

பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.

இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.

100 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுமுடியில் இருந்து பக்தர்கள் பழனிக்கு தீர்த்தக் காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதத்தின் கடைசி வாரமும், பங்குனி மாதத்தின் முதல் வாரமும், சிறப்பு தரிசன நாட்களாகும். இந்நாட்களில்

ராஜகோபுரத்தின் துவாரத்தின் வாயிலாக நுழையும் சூரிய ஒளி, சுயம்புலிங்கத்தின் மேல் விழுகிறது.

இது இருமுறை நடக்கிறது. அப்போது மகுடேசுவரர், சூரியனுக்கு ஆசி வழங்குகிறார்.
காவிரியாற்றங்கரையில் உள்ள கொடுமுடி சிவஸ்தலத்தில் காவிரித்தாய் தெற்கிலிருந்து, கிழக்கு நோக்கித் திரும்புகிறாள் காவிரித்தாய் இந்த தெய்வீகத் தன்மையுடன், பக்தியில் முழுமையும், வாழ்வில் நிறைவையும் அடைகிறாள். எனவே பக்தர்கள், இத்தலம் வந்து திரிமூர்த்திகளின் ஆசிகளும் ஆனந்தமும் பெறலாம்.

கங்கையில் புனிதமாய காவிரியில் குளிக்கும்போது உதித்தெழுந்த ஆதவன் அழகு. நதியில் காலடியில் தட்டுப்பட்ட கற்கள் ஒவ்வொன்றும் வழுவழு வென்று ஒவ்வொருவிதமாய் காட்சிப்பட்டு எத்தனை எத்தனையோ ஆண்டுகளாய் அந்த மலைப் பிஞ்சுகள் காவிரித்தாயின் மடியில் உருண்டு விளையாடிய கதை கூறியது.

வடக்கிருந்து தெற்கே வந்து கிழக்கே திரும்பும் காவிரி

கோவில் அமைப்பு: காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. 

 மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரஙளும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன.

மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன.

 பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள்.

பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

மூலவர் வீரநாராயணார்

தாயார் திருமங்கை நாச்சியார்
பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.

Nayanmars
சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.போன்று அமைப்புள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும்.

அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். 

அம்பாள் சந்நிதியில் சரஸ்வதிக்கும் தனி சந்நிதி உள்ளது.

உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் உள்ளன.

தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் ச்ந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.
சனிபகவான்
இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் பிரம்மாவின் சந்நிதி உள்ளது.
 • கோயிலின் எதிரே காவிரிக்கரையில் சக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். முதலில் இவரை தரிசித்துவிட்டுதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினால் திருமண வரமும், குழந்தைவரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயிலைச்சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை நடக்கிறது.
 
ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.

தீர்த்தம் - இது காவிரியையும், பாரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தேவ தீர்த்தம் ஆகிய கோவிலினுள் உள்ள மற்ற தீர்த்தங்களையும் குறிக்கும்.

காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற் குற்றங்களும், மனநோயும் நீங்கும்.

Sri Dakshina Murthy
நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.
அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள்.

அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.
சித்திரை திருவிழா 11 நாள் நடக்கிறது.

ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

ஆடிமாத பிறப்பு கொங்கு நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

விவசாயத் தொழிலே பிரதான தொழிலாக இருந்த காலத்தில் ஆடி பிறப்பு பொன்நாளாக கொண்டாடப்பட்டது.

அருகில் உள்ள அழகிய கொடிவேரி அணையில் குளித்து மகிழ்வார்கள்.

 பிரார்த்தனை செய்ய வருவோரில், பெரும்பான்மையோர் திருமணம் வேண்டியும், குழந்தை பிறக்க வேண்டியும் வருகின்றனர்.

 உடல் மற்றும் மன நோய்கள் தீர இங்கு வருவோரும் உண்டு.

மகுடேசுவரர் மேல் கொண்ட நம்பிக்கையாலும், பிரார்த்தனைகளாலும், தத்தம் வாழ்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

நவக்கிரக சாந்தி ஓமங்களுக்கும் பூஜைகளுக்கும் பிரசித்தி பெற்றதாகும். 

மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான்.

பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

கொடுமுடியிலிருந்து காவிரி நதியிலிருந்து நீர் எடுத்து தலையில் சுமந்துகொண்டு இசை வாத்தியங்களுடன் பஜனை செய்துகொண்டு பழனிக்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

பழனி கோவிலின் சிவாச்சாரியார்கள் முதலில் கொடுமுடியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது
Kodumudi Kaveri River
Kodumudi Kaveri River

திருஞானசம்பந்தர் மகுடேசுவரர் மேல் பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். அப்பர் ஐந்து பாடல்களையும், சுந்தரர் பத்துப் பாடல்களையும் (நமச்சிவாய பதிகம்) பாடியுள்ளனர்.

ஈரோட்டில் இருந்து சுமார் 40 Km தொலைவில் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. கோவில் ரயில் நிலயத்திற்கு அருகிலேயே உள்ளது.
22 comments:

 1. ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள்
  தேசமாம் திருப் பாண்டிக் கொடுமுடி
  ஈசனே எனும் இத்தனை அல்லது
  பேசுமாறு அறியாள் ஒரு பேதையே,

  என்னும் அப்பர் சுவாமிகளின் வாக்கிற்கு இணங்க..

  பாண்டிக் கொடுமுடியையே பேசிய
  பேதையே வாழ்த்துக்கள்..


  நன்றிகள் பல...

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 2. அருள்மிகு கொடுமுடி மகுடேஸ்வரர் தரிசனம் காலையில் கண்டேன்... மனம் மகிழ்ந்தேன்...

  வழக்கம் போலவே மிகப்பெரிய பதிவு.. நிறைய புகைப்படங்கள்... அருமையான வர்ணனை...

  மற்றுமொரு அசத்தல் பதிவிற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அருமை! புகைப்படங்கள் மிக அழகு!

  ReplyDelete
 4. நான்கு வருடங்களுக்கு முன் இத்திருத்தலத்திற்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிட்டியது. நல்ல பதிவு. :-)

  ReplyDelete
 5. உட்கார்ந்த இடத்திலிருந்தே அனைத்து கோயிலையும் தரிசிக்க வைக்கிறீர்கள் ...மிக்க நன்றி அக்கா !

  ReplyDelete
 6. கொடுமுடி கோவிலின் அருமைகளை மிகசிறந்த முறையில் சொல்லி உள்ளீர்கள் . என்னுடைய சொந்த ஊர் கொடுமுடிக்கு அருகில் உள்ள சிவகிரி ஆகும், நான் படித்ததெல்லாம் கொடுமுடி SSV பள்ளியில் தான் . சொந்த ஊரின்பெருமையை பதிவாக படித்ததில் மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 7. ஆலயம் பற்றிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி. திருமணத்தடைகளுக்கு கொங்கு நாட்டில் இத்தலம் மிக சக்தி வாய்ந்த பரிகாரத்தலமாகும். கடைசியாக நீங்கள் வெளியிட்டுள்ள படம் பவானி சங்கமேஸ்வரர் ஆலயப் படமாகும்

  ReplyDelete
 8. ஆன்மீக தரிசனம் மகிழ்ச்சியுடன் பெறுகிறோம்

  ReplyDelete
 9. கொடுமுடி மகுடேஸ்வரரை திவ்ய தரிஸனம் செய்ய வைத்துள்ளீர்கள்.

  தகவல்கள் படங்கள் யாவும் வழக்கம் போல அருமையோ அருமை.

  நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஆலய தரிசனத்திற்கு தங்களின் தளம் வந்தாலே போதும் .

  அனைத்து ஆலயங்களையும், பைசா செலவில்லாமல் தரிசிக்கலாம் .

  வாழ்த்துக்கள் ,தொடருங்கள் பதிவை ,தொடர்கிறேன் தரிசிக்க .

  பகிர்வுக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 11. அருமையான பகிர்வு..
  நன்றி தோழி..

  ReplyDelete
 12. வழக்கம்போல் படங்களும் பதிவும் அருமை
  வன்னி மரம் குறித்த தகவல்
  அபூர்வத் தகவலாய் இருந்தது
  மனதில் வரித்துக்கொண்டேன்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. தினமும் எப்படி பல கோயில்களை பற்றி தகவல்களை வெளியிடுகிறீர்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. அரிய தகவல்கள்.

  ReplyDelete
 14. படங்களை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.தகவல்கள் அருமை.

  ReplyDelete
 15. அருமை.. புகைப்படங்கள் மிக அழகு...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. பலமுறை சென்றுள்ளேன் ஆனால் இவ்வளவு அருமையாக விரிவாக யாரும் சொன்னதில்லை , இதற்காகவே தகவல் செகரித்தீர்களா, சொன்னால் என் பதிவுகளுக்கு வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 17. படங்களில் பார்க்கும் போது தெரியும் கோவிலின் அழகு மனத்தைக் கவர்கிறது.

  ReplyDelete
 18. @! ஸ்பார்க் கார்த்தி @ said...//
  கருத்துரைகளுக்கு நன்றி..
  எபோது கோவிலுக்குச் சென்றாலும் ஸ்தலபுராணங்கள் வாசித்துவிட்டும் பலரிடம் பேசியும் தகவல் சேகரித்துவிட்டுத்தான் கிளம்புவேன். அங்கு சென்றாலும் கல்வெட்டுக்களைப் படிக்க முயற்சிப்பேன். அர்ச்சகர் சுவாமிகளிடமும், கோவிலில் வேலை செய்பவர்களிடமும் விபரம் கேட்பேன்.
  கூடவருபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.

  ReplyDelete
 19. அருமையான பதிவு.
  நாங்கள் கொடுகுடி கோவிலுக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறது. காவேரி நிறைந்து
  ஓடிக்கொண்டிருந்தது. அந்த அழகே அழகு.
  நீங்கள் ஏராளமான விபரங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 20. பாடல்பெற்ற புண்ணிய ஸ்தலம் பற்றி
  தெரிந்துகொள்ள உதவிய உங்கள் பதிவு
  அருமை.

  ReplyDelete
 21. அச்யுதாநந்த கோவிந்த

  நாமோச்சாரண பேஷஜாத்!

  நஸ்யந்தி ஸகலா ரோகாஸ்

  ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!-7


  ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்ய

  முத்ருத்ய புஜமுச்யதே!

  வேதாசாஸ்த்ரம் பரம் நாஸ்தி

  நதைவம் கேசவாத்பரம்!!-8


  ஸரீரே ஜர்ஜரீபூதே

  வ்யாதிக்ரஸ்தே களேபரே!

  ஒளஷதம் ஜாஹ்நவீதோயம்

  வைத்யோ நாராயணோ ஹரி:!!-9


  ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி

  விசார்ய ச புந: புந:!

  இதமேகம் ஸுநிஷ்பந்நம்

  த்யேயோ நாராயணோ ஹரி:!!-10

  -oOo-

  ReplyDelete