Friday, November 15, 2013

வீரம் விளங்கும் விஷ்ணு துர்க்கை ..!

துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

நவதுர்கா மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷிப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். 


வீரம் தோய்ந்த மண் என்று வரலாறு கூறும் சீவலப்பேரி  பொருத்தமாக விஷ்ணு துர்க்கை கோயில் கொண்டிருக்கிறாள். 

சிவ-பார்வதி திருமணம் கயிலையில் அரங்கேறியபோது வட பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது.

ஈசன் அகத்தியரை பார்க்க, உலகை சமன்  செய்ய தெற்கு நோக்கி நகர்ந்த குறுமுனி, குற்றாலத்தை அடைந்தார். 

சிவ பூஜைக்காக சென்றபோது திருமாலை பரமசிவமாக குறுக்கினார். பூஜையை  முடித்தபின் நெடுமாலான திருமாலைத் தேடினார்.

அவர் சீவலப்பேரியில் விஷ்ணு துர்க்கையோடு அருள் காட்டும் கோலம் பார்த்து வியந்தார்.

தாங்கள்  எப்போதும் இவ்வாறு இத்தலத்தில் அமர்ந்து அருள வேண்டும் என்று கேட்டு நிலம்பட வீழ்ந்து வணங்கினார். இன்றும் அவரின் அன்பு வார்த்தைக்கேற்ப சீவலப்பேரியில் அருள் வழங்கி வருகிறார், திருமால்.

 தேவ-அசுரர் யுத்தத்தில், அசுரர்கள் தோல்வியடைந்தனர். அசுரர்களின் தாயான திதி கலக்கம் அடைந்தாள். குருவான சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள்.

அப்போது அங்கிருந்த சுக்கிராச்சாரியாரின் தாயார் அசாத்திய சக்தி பெற்ற காவ்யா மாதாவிற்கு கோபம் அதிகரித்தது. 

அவள் நினைத்தால் எல்லாவற்றையும் அழித்து விட முடியும். இந்திரனை ஒழித்துக் கட்டிவிட்டு திதியின் குழந்தைகளுக்கு அனைத்து பதவிகளை யும் பெற்றுத்தருவதாக வாக்கு கொடுத்து தேவலோகம் நோக்கி படையுடன் கிளம்பினாள்.

இதைக் கேள்வியுற்ற தேவர்கள் கதிகலங்கி வைகுந்தவாசனை நாடி காத்தருளுமாறு திருவடி தொழுதனர்.

மகாவிஷ்ணு சுதர்சன சக்கரத்தை காவ்யா மாதாவை நோக்கி செலுத்தினார். அவளை இரண்டாகத் துண்டித்த சுதர்சன சக்கரம் வழக்கமாக வைகுந்தனை நோக்கித் திரும்பிவிடும் சக்கரம்,  சூரிய லோகம், சந்திர லோகம், துருவ மண்டலம் என்று சுழன்று திரிந்தது. 

அப்போது கபில முனிவர்  நாராயணன் கட்டளையால் நல்ல காரியம் செய்தாலும்  காவ்யா மாதா அசுர குலத்தவள் என்றாலும் அவள் பெண்  பாவம் பொல்லாதது  அதனால்தான் உன்னால் நாராயணன் கையில் மீண்டும் அமர முடியவில்லை. இந்த மகாபாவம் தொலைத்து வர. தென்னாட்டில் புரண்டோடும்  தாமிரபரணியில்- சீவலப்பேரியில் பெருமாள், விஷ்ணு துர்க்கையுடன் வீற்றிருக்கிறார். நதியில் நீராடி சீர்வளர் பெருமாளின் திருப்பாதங்களையும் துர்க்கையையும் தொழுது நில். பாவங்கள் தாமிரபரணியில் கரைந்தோடும்’’ என்று சொல்லி கபிலர் ஆசி கூறினார். 

சுழித்தோடும் தாமிரபரணியில் சக்கரம் மூழ்கி எழுந்தது. பெருமாளையும் துர்க்கையையும் தொழுது மோன நிலையில் ஆழ்ந்தது. சட்டென்று வானில்  அசரீரி ஒலித்தது. ‘‘சுதர்சன சக்கரமே உமது பாவம் அழிந்தது.  மேலும் நலம் பெற, இந்த இடத்தில் அசுவமேத யாகம் நடத்தும்’’ என்றது.

சிவனும் உமையும் ரிஷிபாரூடராக வாகனமேறி தரிசனம் தந்தனர்.

பிரம்மனும் இந்திரனும் தேவர்கள் புடைசூழ தோன்றினர்.

கபிலர் வேள்வித் தீ எழுப்ப,  அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினார் சுதர்சனர்.

அதில் தேவாதி தேவர்கள் தோன்றினர்.

திருமால் லட்சுமியுடன் கருட வாகனத்தில் காட்சியளித்து

 எப்போதுமே என்னுடனேயே இருப்பாய். என்னை நீ பூஜித்த இத்தலத்தில் இனி யார் வந்து தரிசித்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வேன். கேட்ட வரங்களை தட்டாது தருவேன்’’ என்றார். 
சிறப்பு வாய்ந்த சீவலப்பேரி துர்க்கையம்மன் கோயிலின்  ஆலயத்தின்  முன்புறம் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். மனதைக் கொள்ளை கொள்ளும்
சிற்ப நுணுக்கங்கள்.

நுழைந்தவுடன் இரண்டு கல் யானைகள் வரவேற்கின்றன.

 வசந்த மண்டபத்தில் பெண்கள் தங்கள் வேண்டுதலுக்காக நெய்தீபம் ஏற்றுகிறார்கள்.

திருமண வரம் வேண்டுவோர் மஞ்சள்  கயிறு கட்டி வைத்துள்ளார்கள்.

கோயில் கருவறையில் அகிலத்தையே அசைக்கும் துர்க்கையம்மன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தயாபரி - சாந்தசொரூபியாக தனது அண்ணனுடன் அருள்கிறாள்..!

ஒரு காலத்தில் துளசி வனமாய் காட்சியளித்த இந்த இடம் துர்க்காபுரி என அழைக்கப்பட்டது.  

 சிந்தாமணி விநாயகர் விக்னங்களை களைய காத்திருக்கிறார்.

 தியான மண்டபம்.   எப்போது ‘ஓம் துர்க்கா... ஸ்ரீ துர்க்கா... ஜெய துர்க்கா...’ என்ற மந்திர உச்சாடனம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஜெய்ப்பூரிலிருந்து வரவழைக்கப் பட்ட அம்மன் சிலை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

 அரசரடி விநாயகர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என உணர்த்தும்
வண்ணம் நாகர்களுடன் விநாயகர் தரிசனம் தருகிறார்.

 தியானேஸ்வர் எதிரே நந்தியுடன்  தியான நிலையில் இருந்து அருள் பொழிகிறார். இங்கு பிரதோஷம் மற்றும் சிவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும்.

குருவாயூரப்பன், தனிச் சந்நதியில் அருள்கிறார்.

தாஸ ஆஞ்சநேயர், அருள்பொலியும் திருக்காட்சி தருகிறார்.

 மிக அற்புதமாய் சனிபகவான் தனது மனைவி நீலாதேவியுடன் தனிச்சந்நதியில் வீற்றிருக்கிறார்.

 பால சுப்பிர மணியர் , நவகிரகங்கள்.

நவராத்திரி திருவிழா மிகச்சிறப்பாக நடந்தேறுகிறது.

எட்டாம் நாள் துர்க்காஷ்டமி அன்று மகாசண்டி யாகம் நடக்கும்.

  திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு கட்டி பூஜை செய்து பரிகாரம் செய்கிறார்கள். குழந்தை பாக்யம்  வேண்டியும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

தாமிரபரணி ஆற்றில் நீராடி இந்தக் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும்  என்பது நம்பிக்கை.

பச்சரிசி பரப்பி வைத்து அதில் தேங்காய் உடைத்து, நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, தம் விருப்பங்களை ஈடேற்றிக் கொள் கிறார்கள் பக்தர்கள்.  

சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோயில் நெல்லையில் இருந்து
17 கி.மீ. தொலைவில் உள்ளது.

11 comments:

 1. வெள்ளிக் கிழமைக்கான
  சிறப்புப் பதிவாக விஷ்ணு துர்க்கையை
  பதிவாக்கி தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  படங்களுடன் பதிவு கண்கொள்ளாக் காட்சி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. GOOD MORNING !

  HAVE A VERY NICE DAY !!

  இன்று என்ன இரண்டு வெளியீடுகளா?

  இரட்டைப்பிரஸவம் போல மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

  1] ஸ்ரீ லட்சுமி பூஜை

  2] வீரம் விளங்கும் விஷ்ணு துர்க்கை !

  இரண்டையும் பொறுமையாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

  >>>>>

  ReplyDelete
 3. GOOD MORNING !

  HAVE A VERY NICE DAY !!

  இன்று என்ன இரண்டு வெளியீடுகளா?

  இரட்டைப்பிரஸவம் போல மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

  1] ஸ்ரீ லட்சுமி பூஜை

  2] வீரம் விளங்கும் விஷ்ணு துர்க்கை !

  இரண்டையும் பொறுமையாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

  >>>>>

  ReplyDelete
 4. அருமையான விளக்கம் + சிறப்பான படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 5. சீவலப்பேரி துர்க்கையம்மன் கோவில் - புதிய தகவல்கள் - சிறப்பான படங்கள் என அசத்தல் பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 6. முதல் இரண்டு படங்களும், திருவண்ணாமலை கண்ணாடி ரிஷப வாகனமும் நல்லா ஜோரா இருக்கின்றன.

  >>>>>

  ReplyDelete
 7. சீவலப்பேரி பற்றியும், தாமிரபரணி நதி பற்றியும், அஸ்வமேத யாகம் பற்றியும், சிறப்புச் செய்திகள் அறிந்து கொண்டோம்.

  >>>>>

  ReplyDelete
 8. வீரம் விளங்கும் விஷ்ணு துர்க்கை நம் எல்லோரையும் எப்போதும் ரக்ஷிக்கட்டும்.

  >>>>>

  ReplyDelete
 9. கடைசி படத்தில் உள்ள 'பிரியாவிடை' போன்றே நானும்.... இத்துடன் பிரியாவிடை பெற்றுக்கொள்கிறேன்


  -oOo- [ 2+4=6 ] -oOo-

  ReplyDelete
 10. துளசி நிறைந்த தளம் துர்க்கா புரியான விளக்கங்கள் அருமை. படங்களும் வெகு சிறப்புங்க.

  ReplyDelete