Thursday, November 28, 2013

திருப்பெருந்துறை இறைவன்..!




சிவபுராணம்

"ஈசனடி போற்றி எந்யைடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி"

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்  என்பது மூதுரை.....

தில்லை அம்பலவாணனாகிய ஆண்டவன் கைப்பட எழுதிக் கையொப்பமிட்ட திருவாசகம் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் பெருமை சேர்த்த திரு வாசகம் ஒப்பற்ற சிவனடியாராகிய மாணிக்கவாசகர் என்னும் திருவாதவூரர் இயற்றியது. 

இறைவனே "மாணிக்கவாசக' என்றழைத்து ஞானகுருவாகி உபதேசமும் அருளினார்.

தில்லை திருச்சிற்றம்பலத்தில் மணிவாசகர் என்னும் மனிதன் கூற ஆண்டவனே ஏட்டில் எழுதினார்!

ஆக, மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; 

தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; 

மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள்.

 திருமுறையாகிய திருவாசகம் இயற்றி முடிக்கப்பட்டதும் மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலவாணரின் ஜோதியுள் கலந்து இறைநிலை அடைந்துவிட்டார். 

"திருவாசகம் ஒருகால் ஓதக் கருங்கல் மனமும் கசிந்துருகும்' என்றார்கள்.

ஆத்ம ஒளியை அதிகரிக்கச் செய்யும் திருவாசகத்தை அருளியவர் மாணிக்க வாசகர். இவரை ஈசன் குருவாக வந்து திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆட்கொண்டார்.

திருப்பெருந்துறைகோவிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை அமைத்துள்ளனர். இது வேறெங்கும் இல்லாத அமைப்பாகும்.

எல்லா நட்சத்திரங்களையும் காட்ட முடியாது. எனவே, 27 நட்சத்திரங்கள் 
கரு வறையில் தீபமாக எரிகின்றன.

உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் காட்டும் வகையில் மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று வண்ணக் கண்ணாடி சட்டங்கள் இட்ட மூன்று விளக்குகள் கருவறையில் எரிகின்றன.

36 தத்துவங்களைக் குறிக்கும் தீபமாலை விளக்கை 
தேவ சபையில் ஏற்றி வைத்துள் ளனர்.

ஐந்து வகை கலைகளைக் குறிக்கும் ஐந்து விளக்குகளைக் 
கருவறையில் ஒன்றின்கீழ் ஒன்றாக ஏற்றி வைத்துள்ளனர்.

51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதனைக் குறிக்கும் 51 விளக்குகள் கருவறைமுன் உள்ள அர்த்தமண்டபத்தில் உள்ளன.

உலகங்கள் 87. இதனைக் குறிப்பதற்கு கனக சபையில் 
குதிரைச் சாமிக்குப்பின் 87 விளக்கு கள் உள்ளன.

11 மந்திரங்களைக் குறிக்கும் 11 விளக்குகளை 
நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர்.

இப்படி 27 நட்சத்திரங்கள், மும்மூர்த்திகள், 36 தத்துவங்கள், ஐந்து கலைகள்,
51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வண்ணமுள்ளன இவ்விளக்குகள். 

இப்படிப்பட்ட அதிசய அமைப்பு ஆவுடையார் கோவிலின் 
மட்டுமேதான் உள்ளது.

முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூறையில் தொங்கும் கற்சங்கிலிகளும்,    கொடுங்கைகளின் அற்புதங்களும் கண்களைக் கவர்கின்றன.

எவ்வுளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள்.

17 comments:

  1. திருப்பெருந்துரை படங்களும் விளக்கங்களும் அறிந்தேன் வியந்தேன். நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. இன்றைய இந்தப்பதிவு எண்: 333 of 2013. மகிழ்ச்சி. ;)

    >>>>>

    ReplyDelete
  3. முதல் படமும் 1868 இல் ஆவுடையார் கோயில் என்ற படமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    >>>>>

    ReplyDelete
  4. கருங்கல் மனதையும் கரையச்செய்யும் திருவாசகத்தின் அருமை பெருமைகளை நன்கு உணர முடிகிறது.

    >>>>>

    ReplyDelete
  5. திருப்பெருந்துறை தீப அமைப்புகள் பற்றிய தகவல்கள் நன்று.

    oooo

    ReplyDelete
  6. அனைத்துமே அற்புதம் .ஆனந்தம் நிச்சயம் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. திருப்பெருந்துறையின் சிறப்புகளை விளக்கும் அழகிய வாசகங்களும் அறிய படங்களும் காலை நேரத்தில் மனதுக்கு மலர்ச்சி ஊட்டுவதை மறுக்கமுடியுமா?

    ReplyDelete
  8. திருப்பெருந்துறை - அழகான படங்களுடன் அருமையான பதிவு!..

    ReplyDelete
  9. மனிதன் மனிதனுக்கு கூறியது திருக்குறள் உட்பட அனைத்தும் சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. திருப்பெருந்துறை தகவல்கள் வியப்பையூட்டுகின்றன. சிறப்பான படங்கள்.

    ReplyDelete
  11. வணக்கம்
    அம்மா
    அனைத்தும் சிறப்பு... வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. அழகான படங்களுடன், சிறப்பான பகிர்வு..

    ReplyDelete
  13. திருப்பெருந்துறை உறை சிவனே போற்றி!

    அனைத்தும் அத்தனை அருமை!

    நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  14. திருப்பெருந்துறை அருமை, பெருமைகளிற்கு மிக நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. திருப்பெருந்துறை இறைவன் தரிசனம் மிக அருமை.படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  16. திருப்பெருந்துறை - படங்களும் தகவல்களும் நன்று.... மிக்க நன்றி.

    ReplyDelete
  17. ஈசன் அமர்ந்துள்ள அந்த நந்தியின் வடிவம் பார்க்கப் பார்க்க பரவசம். ஆவுடையார் கோயில் பற்றிய இணைப்பும் அருமை.

    ReplyDelete