Sunday, November 24, 2013

செண்பக அலங்காரர்தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. ---  
அபிராமி  அந்தாதி 
Photo
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், 
அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! 
மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! 
ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் அபிராமி அந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.

ஓம் அன்றலர் சண்பக நாசியள் போற்றி ஓம் 

என்று ஆதிபராசக்தி அன்னையைப் போற்றுவோம் ..!

அன்னைஆதிபராசக்தியின் நாசி (மூக்கு) அன்று மலர்ந்த செண்பகப் பூ போன்று அழகுடையது.

செண்பகம் பூ அழகானது மட்டுமன்றி பூவுடன் சேர்ந்து
முழு மரமுமே மூலிகைக் குணங்கள் உடையது.

செண்பக மரம் காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. செண்பக மலர்களின் வாசனை சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது.

அதனால் கூட அன்னையின் நாசிக்கு உவமையாக
செண்பக மலர்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடும்.
வாசனை மிகுந்த மலர் செண்பகம்  தெய்வீக மலராக போற்றப்படுகிறது. 


திருவேங்கடமுடையான் அருளும் திருப்பதியிலும் செண்பக வனம் மணம் வீசி மனதை கொள்ளகொள்ளும் ..! 
குற்றாலம், செண்பக வனங்கள் நிறைந்த காடுகளைக் கொண்டிருப்பதால் செண்பகக் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. 
குற்றாலத்திலுள்ள அருவிகளில் ஒன்றிற்கு செண்பக அருவி என்பதும் பெயர். 
குற்றால மலையின் காவல் தெய்வம் செண்பகா தேவி ..!

செண்பகச் சோலையும் அருவியும் சூழ வீற்றிருக்கும் குற்றாலநாதருக்கு செண்பகநாதர் என்ற பெயரும் உண்டு. 

மதுரையில் வீற்றிருக்கும் சோம சுந்தரப்பெருமானுக்கும்
செண்பக நாயகர் என்பது பெயர். 

எனவே மதுரையை ஆண்ட மன்னர்களில் பலர் செண்பக பாண்டியன், செண்பக மாறன் என்ற பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

செண்பக மாலையை விரும்பும் பெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருப்பதால் அன்னை பார்வதிக்கு செண்பகவல்லி என்பதும் பெயராயிற்று. 

இவ்வாறு சிறப்பு பெற்றது செண்பக மலர். திருநாகேஸ்வரம் முன்பு செண்பக வனமாக இருந்தது. அங்கு பைரவர் அருள்பாலிக்கிறார். 

அவரை சக்கர வடிவில் வழிபடுகின்றனர். 

பைரவர் செண்பக வனங்களில் தங்குவதோடு
செண்பக மலர் மாலைகளை விரும்பிச் சூடுகின்றார். 

பைரவருக்கு செண்பக அலங்காரர் என்பதும் பெயராகும். 
மயிலாப்பூர், கிழக்கு மாடவீதி தருமபரிபாலன மண்டபத்தில்
ஸ்ரீசுவர்ண பைரவருக்கு 1008 செண்பகப் பூ அர்ச்சனை நடைபெறும்..!

பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.


பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். 

பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள்  பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.
வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகள்
சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். 

எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.

எல்லோருக்கும் வேதம் ஓதுதல் என்பது சாத்தியமானது இல்லை.. 

ஆனால், யாராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் பைரவ மூர்த்தியை வழிபடுவதும நாய்களுக்கு உணவிடுவதும் சாத்தியமானதே. 

இதனால் வேத சக்திகள் பெருகி உலகில் தர்மம் கொழிக்கும். 

இவ்வுண்மையை உணர்த்தவே வேதநாயகனான சிவபெருமான் நான்கு வேதங்களை நான்கு நாய்களாக்கி ஆதி சங்கரருக்கு காசியில் வேதத்தின் உண்மைப் பொருளை விளக்க வந்தார்.

"ஹே ஆதி சங்கர, எதை விலகு விலகு என்று வெறுப்பு காட்டுகிறீர்! 
எதை விலக்க வேணும்? என் உடம்பையா? என் ஆத்மாவையா?
எதை விலக்கினால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்? சொல்லுங்கள்! சொல்லுங்கள்!" என்று வாள்  வீச்சுப்போல் வார்த்தைகளை வீசி சங்கரரின் அறியாமையை அகற்றினார் ..ஆதி சிவம் ..!

சங்கரர்- சண்டாளரை! வணங்கி உண்மையெல்லாம், அருவியாய்க் கொட்டிய  ஐந்து பாடல்கள் - மனீஷா பஞ்சகம்!

இன்பக் கடலாம், பிரம்மம் அதிலே ஒருதுளி பிரம்மமும் இன்பக் கடலே!
வானோர் வாசவன், முனிவரும் மூழ்கும் வேறொன் றில்லாச் சித்தம் இதுவே!
இதனுள் மூழ்கி, அறிவார் எல்லாம் அறிவார் அல்லார், அதுவே ஆவார்!
இந்திரன் துதிப்பான் இவர்தம் பாதம் சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

19 comments:

 1. வணக்கம்
  அம்மா
  அருமையான கருத்துக்கள் படங்களும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. செண்பன மலரின் மனம் அறிந்தேன் சகோதரியாரே நன்றி

  ReplyDelete
 3. செண்பக மலருக்கு இத்தனை சிறப்புக்கள் உள்ளனவா என்று
  வியக்கும் வண்ணம் இன்றைய பகிர்வு அமைந்துள்ளது அருமை !
  வாழ்த்துக்கள் தோழி மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 4. ஆன்மீகத்தை இத்தனை எளிதாய் விளக்கி விட்டீர்கள்.. செண்பக மலரின் பெருமையும், செண்பக அலங்காரரையும் பற்றித் தெரிந்து கொண்டோம். நன்றி அம்மா..

  ReplyDelete
 5. செண்பக மரம் / பூ பற்றிய புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்... நன்றி அம்மா...

  ReplyDelete
 6. செண்பகமே செண்பகமே .....
  தென்பொதிகை சந்தனமே ....
  தேடி வரும் என் மனமே ........
  சேர்ந்திருந்தால் சம்மதமே .....
  செண்பகமே செண்பகமே !

  தலைப்பைப்பார்த்ததும் தெறிக்கத்தெறிக்க அரை டிராயர் போட்ட இராமராஜன் ஏனோ ஞாபகத்துக்கு வந்தார்.

  >>>>>

  ReplyDelete
 7. அருமையான தலைப்.....பூ

  செண்பக(ப்பூ) அலங்காரர்

  நாய் படங்களின் அனிமேஷன் சூப்பர்.

  நாய் ஃபீடிங் பாட்டில் கொடுப்பது ஆட்டுக்குட்டிக்கோ?

  >>>>>

  ReplyDelete
 8. ரம்யமான நறுமணம் தரக்கூடியது, மருத்துவ குணம் வாய்ந்தது, நாசிக்கு உதாரணமாகச் சொல்லக்கூடியது, சுற்றுச்சூழலைக்காப்பது, தெய்வீக மலர், திருப்பதியிலும் பூஜிப்பது எனச்சொல்லியுள்ள தகவல்கள் மிக அருமை

  >>>>>

  ReplyDelete
 9. அபிராமி அந்தாதியில் ஆரம்பித்து, அதற்கு விளக்கமும் சொல்லி, குற்றாலக் காடுகளுக்குக் கூட்டி வந்து, செண்பகக்குற்றாலம் என சிறப்பித்துச் சொல்லி, செண்பக அருவியில் மனம் குளிரக் குளிக்க வைத்து, காவல் தெய்வமான செண்பகா தேவியை தரிஸிக்கவும் வைத்து, செண்பக நாதர் என்றும் அழைக்கப்படும் குற்றால நாதரையும் வணங்கச்செய்துள்ளது பாராட்டக்கூடியதே.

  >>>>>

  ReplyDelete
 10. மதுரை செண்பக நாதர், செண்பகவல்லி அம்பாள், இருவரையும் தரிஸிக்க வைத்து உடனடியாக திருநாகேஸ்வரத்தில் கொண்டு வந்து பைரவர் முன்பு இறக்கிட்டீங்களே, சபாஷ். அவர் பெயர்தான் செண்பக அலங்காரரா?

  நல்ல தகவல்.

  >>>>>

  ReplyDelete
 11. பைரவ மூர்த்தியை வழிபடுவதும், நாய்க்கு சோறு கொடுப்பதும், எல்லோருக்குமே சாத்தியம் தான். அதனால் வேதம் தழைத்தோங்கும்.

  அருமையான விளக்கம்.

  இதை உணர்த்தவே சிவபெருமான் நான்கு வேதங்களை நான்கு நாய்களாக்கி ஆதி சங்கரர் முன் ஓட்டி வந்தாரா!

  சூப்பர் !

  >>>>>

  ReplyDelete
 12. சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள் - பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. ஆஹா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டர்கள்
  செண்பக மலர் எனக்கு மிகவும் பிடித்தஒன்று.
  பைரவ வழிபாடு பற்றி நிறைய தகவல்கள்.
  அம்மா பைரவர் குட்டிக்கு பால் ஊட்டும் படம் எண்ணை மிகவும் கவரந்தது.ரசித்து சிரித்துமகிழ்ந்தேன்.

  ReplyDelete
 14. மனம் கவர்ந்த மணமுள்ள பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. சிந்தையும் மணக்கச் சிறப்பான பதிவு! செண்பக மலர்கள்
  கண்களுக்கும் கருத்திற்குகூட இனிமையானது.

  அழகு பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 16. பதிவெங்கும் செண்பக மலரின் வாசம்!.. முன்பெல்லாம் தெருவுக்கு நாலு செண்பகம் இருப்பார்கள்..
  எத்தனை உயர்விருந்தும் இப்போது - செண்பகம் என்று பெயர் சூட்டும் பழக்கமும் மறைந்து போனது!..

  ReplyDelete
 17. தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி அம்மா.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 18. பெங்களூரு செல்லும் போதெல்லாம் அங்கு சாலை ஓரங்களில் வளர்த்து பராமரிக்கப்படும் செண்பக மரங்கள் பூத்து குலுங்கு அழகும் அந்த பகுதியே செண்பக மலர்களின் வாசனையால் சூழ்ந்திருக்கும் காற்றும் அனுபவிக்க மனம் கவரும்.

  ReplyDelete
 19. செண்பகமலரை இன்றே கண்டேன்.
  மேலும் பல தகவல்கள் .மிக மகிழ்ந்தேன்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்

  ReplyDelete