Saturday, November 23, 2013

ஸ்ரீ கர்ண குண்டல ஆஞ்சநேயர்




வஞ்சனை நீக்கும் அஞ்சனை செல்வன்
கதாயுதனை காற்றின் மைந்தனை இன்சொல்
அதேகொண்டு அவனை அனைத்தும் காக்க
சதா சபிடேகம் சாற்றுவர் உவந்து

காக்க காக்க அனுமன் காக்க
நோக்க நோக்க நுணுகி நோக்க
தீர்க்க தீர்க்க தீவினை எல்லாம்
சேர்க்க சேர்க்க செம்பொருள் அனைத்தும்
சொர்ண குண்டலங்கள் அணி செய்ய ஸ்படிகம் போன்ற திருமேனியில் மௌஞ்சி யக்ஞோபவீதம் விளங்க-உதாரமான புஜபலத்துடனும் அபாரமான சக்தியோடும் காட்சி தரும் வாயு புத்திரனைப் பிரார்த்திப்போர்க்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் விருத்தியாகும்.

வலது திருக்கரத்தில் கதையைத் தாங்கி அணி மார்பில் சீதா ராமரைத் தாங்கித் திருத்தோற்றம் தரும் சிரஞ்சீவி ஸ்ரீ ராமபக்த அனுமானை ஆராதிப்பவருக்கு அவர் அபயவரத ஹஸ்தம் அளித்து என்றென்றும் ஆனந்தம் பொங்க அருள் புரிகிறார். ஸ்ரீ கர்ண குண்டல ஆஞ்சநேயர்

காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையில் உள்ள திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோலில்,அருள்கிறார்..

கடன் தொல்லை உள்ளவர்கள்  மிகவும் சக்தி படைத்த ஸ்ரீ கர்ண குண்டல ஹனுமானை வேண்டிக்கொள்கிறார்கள்.

தேன்குழல் (முறுக்கு) செய்து அமுதுசெய்விப்பதாக நேர்ந்து 
கொள்வது கடன் நிவர்த்திக்கு சிறந்த பரிகாரமாகும்.

பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அனுமன் நிவர்த்தி செய்தவுடன் நன்றிக் கடன் செலுத்த வருவதிலிருந்து ஹனுமானின் அருளை அனுபவத்தில் காணலாம்.

வாலி, கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த காலம். அஞ்சனையின் கருவில் உதிக்கப் போகும் அனுமனும் தனது மரணத்துக்குக் காரணமாகப் போகிறான் என்பதை ஜோதிடர்கள் மூலம் அறிந்தான் வாலி.

கருவிலேயே அனுமனை அழிக்க திட்டமிட்டான்.

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, வெள்ளீயம் ஆகிய உலோகக் கலவையால் அஸ்திரம் ஒன்றை தயாரித்தான். அஞ்சனை தூங்கும் நேரத்தில், அவள் மீது அஸ்திரத்தை ஏவினான்.

ஆனால், ஆஞ்சநேயன் ருத்ராம்சம் அல்லவா? சிவனருளால் அந்த அஸ்திரம் உருகி, குண்டலங்களாக மாறின; கருவிலேயே அனுமனுக்கு வெற்றிப் பரிசாக அமைந்தன ...

26 comments:

  1. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குடைபிடிக்கும் சிறுவனைக் கண்டதும் இவ்வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.. வாழ்க வளமுடன் ..

      கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த
      இனிய நன்றிகள்...

      Delete
  2. சிறப்பான படங்களுடன் விளக்கங்கள்... நன்றி அம்மா.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் . வாழ்க வளமுடன் .

      கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த
      இனிய நன்றிகள்...

      Delete
  3. அருமையான படங்கள் அம்மா....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ,.. வாழ்க வளமுடன் .

      கருத்துரைக்கு மனம் நிறைந்த
      இனிய நன்றிகள்...

      Delete
  4. அள்ளித்தந்த ஆஞ்சநேயரின் படங்களும்
    அற்புதமான தகவல்களும் மிகச் சிறப்பு!

    என் நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி ...வாழ்க வளமுடன் ..

      அற்புதமாக அள்ளித்தந்த கருத்துரைகளுக்கும் வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த
      இனிய நன்றிகள்...

      Delete
  5. ஸ்ரீ கர்ண குண்டல ஆஞ்சநேயரை தரிஸித்தோம்

    >>>>>

    ReplyDelete
  6. ஸ்திர வாரம் - சனிக்கிழமைக்கு ஏற்ற பகிர்வு.

    >>>>>

    ReplyDelete
  7. திருமுக்கூடல் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலைப்பற்றியும், அங்குள்ள இந்த ஹனுமனைப்பற்றியும் இன்று அறிய முடிந்தது அதிர்ஷ்டமே.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.. வாழ்க வளமுடன் ..

      அத்ர்ஷ்டவச்மாக கருத்துரைகள்
      அளித்து நிறைவு செய்தமைக்கு மனம் நிறைந்த
      இனிய நன்றிகள்...

      Delete
  8. ஸ்ரீ ஹனுமனுக்கு பிறக்கும்போதே கர்ண குண்டலங்கள் எப்படி ஏற்பட்டன என்ற கதையும் சுவாரஸ்யமாக இருந்தது.

    >>>>>

    ReplyDelete
  9. குடை பிடிக்கும் கொடை வள்ளல் படம் இப்போது தான் திறந்தது. அருமை. சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  10. மேலிருந்து கீழ் நாலாவது படம் இன்னும் திறக்கப்படவில்லை,

    >>>>>

    ReplyDelete
  11. இன்று இங்கு முழு நேர மின் தடை.

    பின்னூட்டம் அளிப்பதில் மிகுந்த சிரமங்கள்.

    அதனால் இன்று என் கருத்துக்கள் இந்த ஹனுமனுக்கு மட்டுமே,

    அதுவும் கையில் விசிறியுடன் UPS துணையுடன் மட்டுமே.

    ஒரே எரிச்சல் மேல் எரிச்சலாக வருகிறது.

    ஹனுமனுக்கு வெண்ணெய் சார்த்த வேண்டும் - நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டிருக்கும் என் எரிச்சல் அடங்கத்தான்.

    -o [ 7 ] o-

    ReplyDelete
  12. குண்டலம் என்பது காதணிதானே. வேறெங்காவது அணிவதா. ? ஒரு வேளை சொர்ண குண்டலத்தை கர்ணகுண்டலம் என்பது .......!!?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.. வாழ்க வளமுடன் ..
      குண்டலம் என்பது காதணிதான் ..காதில் அணிவதுவதுதான் ..
      காது குத்துவதை கர்ணபூஷணம் என்றும் சொல்லுவார்கள்..

      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  13. வணக்கம்
    அம்மா
    சிறப்பான கருத்துக்கள் அழகிய படங்கள்...பதிவு அருமை வாழ்த்துக்கள்...அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. சனிக்கிழமையன்று ஆஞ்சநேயர் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.

    ReplyDelete
  15. படங்களும் செய்தியும் அருமை...
    கடைசிப் படம் அழகு அம்மா.

    ReplyDelete
  16. ’மேலிருந்து கீழ் நாலாவது படம் இன்னும் திறக்கப்படவில்லை’ என மேலே நான் சொல்லியிருந்தேன் அல்லவா !

    அது இப்போது பறக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயராக் காட்சி அளிக்கிறது. நல்லது.

    இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

    முதலில் மறைந்திருந்து பிறகு காட்சியளித்துள்ள ஹனுமனுக்கு என் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  17. கர்ண குண்டல ஆஞ்சனேயர் - படங்களும் பகிர்வும் மிக நன்று.

    ReplyDelete
  18. எப்போதும் போலே அழகான படங்கள்.
    குடை பிடிக்கும் சிறுவன்............ஆஹா அருமை

    ReplyDelete
  19. குண்டலங்கள் வந்தவிதம் அறிந்தேன்.
    மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete