Saturday, May 5, 2012

வசந்த வல்லபர்

ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத் ----நரசிம்ம காயத்திரி 
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம 
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம


ஸ்ரீ பிரகலாத வரத லட்சுமி நரசிம்மர் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, துயரங்களைத் தீர்க்கும் கலியுக வரதராகப் போற்றப்படுகிறார்..


வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.


வ நரசிம்ம தலங்களில் முதன்மை யாகக் கருதப்படுவது கதிரி திருத்தலம். 

முற்காலத்தில் இத்தலம் "காத்ரி' என்று அழைக்கப்பட்டது. 


அப்போது இப்பகுதி "காத்ரி' (நுணா) மரங்கள் நிரம்பிய வனமாக இருந்திருக்கிறது. 

இந்த காத்ரி என்ற சொல்லே கதிரி என்று மாறி விட்டதாகக் கூறப்படுகிறது. 

கா என்றால் விஷ்ணு பாதம்; அத்ரி என்றால் மலை. 

விஷ்ணு பாதம் கொண்ட மலை என்னும் பொருள்படும் காத்ரியே காலப்போக்கில் கதிரி என மருவியதாகக் கூறுவோரும் உண்டு. 

மேலும் சுவாமி, காத்ரி மரத்திலிருந்து ஆவிர்பவித்ததால் 
இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது... கதிரி திருத்தலத்தில் எட்டு கரங்களுடன் இரணியனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர். 

இவருக்கு இடப் புறம் அஞ்சலி செய்யும் நிலையில் பிரகலாதன் 

நரசிம்மர் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில், தனது மடியில் இரணிய கசிபுவை வைத்துக் கொண்டு, இரு கைகளாலும் வயிற்றைக் கிழிப்பது போன்ற சிலா ரூபத்தை பக்தர்கள் மிகவும் பக்தியுடன் வணங்கிச் செல்கின்றனர். 
File:Sri Kadiri Narasimha.jpg
ஒவ்வொரு நாளும் திரு மஞ்சனம் முடிந்தபின்னரும்கூட இந்த மூல மூர்த்திக்கு உடல் வியர்க்கிறது. அர்ச்சகர் ஒரு துணியினால் துடைத்து எடுப்பதை காணலாம்.

ஆலயத்தினுள் நுழைந்தவுடன்மூன்று கோபுரங்களையும் தரிசித்துவிட்டு, "ஓம் லட்சுமி நரசிம்ம சுவாமியே நம' என்று கூறிக் கொண்டு பிரதான ஆலயப் பிராகாரத்தில் உள்ள கல்யாண கட்டத்துக்குச் சென்று முடி காணிக்கை கொடுக்கின்றனர் பக்தர்கள்.. 

அருகிலுள்ள விசாலமான பிருகு தீர்த்தத்தில் நீராடிய பின்,  பிரதான ஆலயத்தின் வலப் பாகத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத் தையும், இடப் பாகத்தில் பாம்பணையில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமியின் அற்புதக் கோலத்தையும் வணங்கி தங்களது கோரிக்கை கள் நிறைவேற வேண்டிகொள்ளலாம்...


 அருகிலுள்ள க்ஷேத்ரபாலர் ஸ்ரீ சென்ன கேசவ சுவாமியை வழிபடலாம் - 


இதையடுத்துள்ள "கொட்டாய மண்டபம்' என்ற இடத் தில்தான் சுவாமிக்கு கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது.


 பிருகு மகரிஷி ஸ்ரீ மகா விஷ்ணுவின் அனுக்ரகம் வேண்டித் தவம் செய்ய, சுவாமி அவருக்கு பிரசன்னமாகி அருள, பிருகு முனிவர் இங்கு ஆலயம் அமைத்து இறைவனைப் பிரதிஷ்டை செய்த தாகக் கூறப்படுகிறது.

 ஸ்ரீ ப்ரகலாத வரத லட்சுமி நரசிம்மரைத் தரிசித்து விட்டு ஸ்ரீ அமிர்த வல்லித் தாயார் ஆலயம் தரிசிக்கலாம்... 

முன்பக்கம் சண்டி, பிரசண்டி என்ற துவார பாலிகைகள் உள்ளனர். 
ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாரின் இடப் புறம் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி உள்ளது. 

ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கும் வசந்த வல்லபர் என்னும் உற்சவமூர்த்தி மிகவும் பெரிய சிலாரூபத்தில் மிக அழகாக வடிக்கப்பட்டவர். 

இதுபோன்ற அழகுடைய- ஒளிமிக்க உற்சவமூர்த்தியை 
வேறு எங்கும் காண முடியாது


இந்த ஆலயம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில்தான், இரணிய கசிபுவை சம்ஹரித்த பிறகு நரசிம்மர் உக்ரரூபத்துடன் வந்து அமர்ந்து அமைதியடைந்ததாகக் கூறப்படு கிறது. 

ஆலயத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் அமிர்தவல்லித் தாயாரையும் வணங்கி முடித்தபின்  இந்த மலை யின் அருகிலுள்ள பாறையின் மீது உள்ள "ஸ்ரீ சுவாமி வாரி' பாத தரிசனம் சிறப்பு..

File:Narasimha oil colour.jpg
Sri+lakshmi+narasimha+swamy+photos
Sri+lakshmi+narasimha+swamy+photos14 comments:

 1. இதுவரை தெரிந்திராத கடவுள்களின் தரிசனம் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. பயபக்தியுடன் படிக்கவும் பதிவு அருமை படங்கள் அனிமேசன் படங்கள் எங்கே பிடிக்கிரேல் அருமை அருமை

  ReplyDelete
 3. உண்மையாவே படங்கள் பயம் காட்டுது.உக்கிரமான தெய்வமோ.அதுவும் அந்த கோபுரம் எப்பிடி......!

  ReplyDelete
 4. கீழிருந்து ஏழாவது படம் மிகப் பிரும்மாணடமான கோபுரம் மிக அருமையான கவரேஜ் ;)

  ReplyDelete
 5. ஸ்//ரீதேவி+பூதேவியுடன் காட்சியளிக்கும் வசந்த வல்லபர் என்னும் உற்சவமூர்த்தி மிகவும் பெரிய சிலாரூபத்தில் மிக அழகாக வடிக்கப்பட்டவர்.

  இதுபோன்ற அழகுடைய ஒளிமிக்க உற்சவமூர்த்தியை வேறு எங்குமே
  காண முடியாது//

  ஜ்வலிக்கும் படங்களே ;)

  ReplyDelete
 6. மேலிருந்து கீழாக 2,3 + 4 அனிமேஷன் படங்கள் நல்ல தேர்வு.

  மூன்றாவதாக காட்டியுள்ள ரத்தம் கக்கும் படம் மிகவும் பயங்கரமாக உள்ளது.

  4 ஆவது படத்தில் சற்றே சாந்த ஸ்வரூபியாக பிரகலாதனுக்கு பெருமாள் நரசிம்ஹர் காட்சி கொடுப்பதும், அதில் பெருமாளின் மாலை அசைவதும், ஸ்ரீசக்ரம் சுழல்வதும், பெருமாளின் வஸ்த்ரம் நிறம் மாறுவதும், பிரகலாதன் தலையில் சுற்றியுள்ள (நெற்றிச்சுட்டி?) ஆபரணம் அசைவதும் வெகு அழகாக!

  ReplyDelete
 7. Uayarthnu valarum Kopuram, Narshimha samy in parpala thiru kolangal.
  Thanks Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 8. அருமையான பதிவு ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 10. For 04.05.2012

  110. ஆத்யந்தஹிதா கோவிந்தா

  For 05.05.2012

  111. இஹபர தாயக கோவிந்தா

  ReplyDelete