Monday, May 28, 2012

அம்பாள்புரி கூத்தனூர்




Saraswathi Puja (Animated)

Hindu Goddess Sarawati Photos Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!   



மாமன்னன் இரண்டாம் ராஜராஜன் தனது அவையில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கிய ஊர்.... அதனால் கூத்தன் + ஊர் கூத்தனூர் எனப்பட்டது. 

ஒட்டக்கூத்தர் தனக்கு கவிபாடும் திறன் வேண்டி நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தாராம்! கூத்தரின் பக்தியில் மகிழ்ந்த நாமகள் அவருக்கு அருளி அவரை வரகவியாக்கினாளாம்.

இந்த அம்பாள்புரி எனப்படும் கூத்தனூரை- வேதமாதாவான சரஸ்வதி தேவி தனக்குரிய இடமாகத் தேர்ந் தெடுத்து தவம் செய்யக் கருதினாளாம். 


 இங்கு தேவி அமைதி சொரூபமாக வெள்ளையாடை தரித்து, வெண்தாமரை யில் பத்மாசனத்தில் அமர்ந்து, இடது கீழ்க்கையில் புத்தகமும், வலது கீழ்க்கையில் சின்முத்திரையும் காட்டி, வலமேல் கையில் அட்ச மாலை, இடமேல் கையில் அமிர்த கலசம் ஏந்தி, சடாமுடியுடன்- கருணைபுரியும் இரு விழிகளுடன்- "ஞானசஷஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணுடன் புன்னகை தவழ கிழக்கு திசை நோக்கி அருளாட்சி புரிகிறாள். 






ஆலயக் கருவறையின் மேலே ஐந்து கலசங்களுடன் விமானம் அமைந்துள்ள இந்த கோவிலில், ராஜகோபுரங்கள் ஏதும் தனியாக இல்லை. 

இங்குள்ள நடராஜர் சிலையில் முயலகன் பக்கவாட்டில் இல்லாமல் நேர்முகமாகக் காணப் படுகிறான். அவன் முதுகின்மீது பெருமான் தாண்டவமாடுகிறார். 


மகாமண்டபத்தின் இடப்பக்கம் நான்கு திருமுகங்களுடன் கைகூப்பிய பிரம்மா நிற்கும் சிலை உள்ளது. 


வெளியே இடது பக்கம் ஒட்டக்கூத்தரின் சிலை உள்ளது. 


ஆலயத்துக்குள் நுழையும்போது பலிபீடத்தின்முன் அம்பாளின் வாகனமான அன்னம் அன்னையை நோக்கிய வண்ணம் உள்ளது. பெரிய மதில்களுடன் ஆலயம் அமைந்துள்ளது.



இத்தகைய அருள்மிகு ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தைக் காண கண்கள் ஆயிரம் வேண்டும் என்று, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரர் கூறுகிறார். 

இந்த அம்பிகையின் எழில் அழகைக் கண்டு களிக்க முன்ஜென்ம புண்ணியமும் வேண்டும் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது. 

கூத்தனூரில் குடிகொண்டிருக்கும் அம்பிகையின் தோற்றம் சௌந்தரிய லஹரியில் 15-ஆம் பாடலில் கூறப் பட்டுள்ளது.


கம்பர் சரஸ்வதி அந்தாதியில் வாக் தேவதையைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். 


குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையும், ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது என்ற நூலையும் பாடியுள்ளனர். 


இது தவிர சரஸ்வதி தியான சுலோகங்கள் "கூத்தனூர் கலைமகள்' என்ற தலைப்பில், சௌந்திரா கைலாசம் அவர்கள் தமிழில் இயற்றியுள்ளார். 


 சரஸ்வதி அஷ்டோத்திரம், ஸ்ரீசரஸ்வதி காயத்ரி, சரஸ்வதி அந்தாதி, சரஸ்வதி தியான சுலோகங்களும் புகழ்ந்து பாடப்பட்டுள்ளன.


வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. சாரதா நவராத்திரி 12 நாட்களும்; அதன்  பின்வரும் பத்து நாட்கள் ஊஞ்சல் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரங்கள்  என பல்வேறு அலங் காரங்களில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். 


சரஸ்வதி பூஜையன்று ஒருநாள் மட்டும், நியமத்துடன் இருந்து அம்பிகையின் பாதங்களில் பக்தர்களே மலரிட்டு அர்ச்சிக்கலாம். 
[300px-Dp-sarasvati.jpg]
அர்த்த மண்டபத்தில் அம்பிகையின் பாதம் இருக்கும்படி அலங்காரம் செய்கின்றனர். 


ஒரு விஜய தசமி நாளன்று புருஷோத்தம பாரதி என்ற வாய் பேசமுடியாத பக்தர் ஒருவருக்கு அம்பிகையின் அருள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. 
Maa Saraswati Pooja
அதனால் இன்றும் அந்த நாளில் ஆலயத்திற்கு வந்து வித்யாப்யாசம் செய்து பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கின்றனர். 

அன்று காலை மஹன்யாச ருத்ராபிஷேகமும், மாலை அன்ன வாகனத்தில் தேவி வீதியுலா எழுந்தருளும் காட்சியும் நடைபெறுகிறது. 


சித்திரை 1-ஆம் நாளில் தொடங்கி 45 நாட்கள் லட்சார்ச்சனைகள் நடைபெறுகின்றன. 


இந்நாட்களில் ஏறக்குறைய ஏழு லட்சம் அர்ச்சனைகள் நடைபெறுகின்றனவாம்! 


இசைக் கலைஞர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து  இசைக் கருவிகளுக்கு பூஜை செய்து வாசித்த பிறகே பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். 

இசை, நாட்டிய அரங்கேற்றங்களும் உண்டு. மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும்முன் எழுதுகோல்களை அம்பிகையின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து எடுத்துச் செல்வதும்; பள்ளி திறந்தவுடன் புத்தகங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் சென்றும் அருளாசி பெறுகின்றனர்


இந்தக் கலைமகள்     காளிதாசன் "சம்பூர்ண இராமாயணம்' பாட அருள் செய்தவள்- கம்பனுக்காக கிழங்கு விற்றவள்- ஆதிசங்கரரின் பெருமைகளை வெளிப்படுத்த சரஸவாணியாய் அவதரித்தவள்- தமயந்தி நளனைத் தேர்ந்தெடுக்க உதவியவள் என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.


திருவாரூர் மாவட்டம், (நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் அஞ்சல்) திருவாரூர்- மயிலாடுதுறை மார்க்கத்தில், பூந்தோட்டம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் சரஸ்வதிதேவிக்கு தனி ஆலயம் அமைந்திருப்பது  அருள்மிகு கூத்தனூர் மகாசரஸ்வதி அம்மன் ஆலயம். ..
Koothanur Gopuram
கூத்தனூரில் உள்ள ஸ்ரீகமலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஹரிநாதேஸ்வரர் ஆலயத்தில் கல்யாண துர்க்கையும்; லட்சுமி யும் மடியில் வைத்துக் காட்சி தரும் லட்சுமி நாராயணப் பெருமாள் ஆலயத்தில் மகாலட்சுமியும்; தனக்கென தனி ஆலயத்தில் மகாசரஸ்வதியும் கோவில் கொண்டிருப்பதால் இந்த ஊர் அம்பாள்புரி என்றும் அழைக்கப் படுகிறது. ஹரி நாதேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இங்கு நவகிரகங்கள் இல்லை.

Dakshnamoorthy Temple



Consecration on at the Maha Saraswathi temple.

Sarawati Indian Goddesses Images Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs

27 comments:

  1. அம்பாள்புரி கூத்தனூர் அழகினைக் கண்டேன்.

    ReplyDelete
  2. முதல் படத்தில் ஜொலிக்கும் கலைவாணி வீணையுடனும் மயிலுடனும், அழகிய அன்னப்பறவையுடனும் புஸ்தகத்தின் மேல் எழுந்தருளி நிற்பது ஜோர்!

    ReplyDelete
  3. மேலிருந்து ஒன்பதாவது படத்தில்....
    ஆஹா மோத முழங்க .............
    கருணைப் பார்வையுடன் ...........

    எங்கேயோ எதிலோ பார்த்த ஞாபகம்! ;))))))

    ReplyDelete
  4. /இத்தகைய அருள்மிகு ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தைக் காண கண்கள் ஆயிரம் வேண்டும் என்று, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரர் கூறுகிறார்/

    மிகச்சரியாகத்தான் கூறியுள்ளார்.

    /இந்த அம்பிகையின் எழில் அழகைக் கண்டு களிக்க முன்ஜென்ம புண்ணியமும் வேண்டும் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது/

    உங்கள் புண்ணியத்தால் நாங்களும் இன்று கண்குளிர பார்க்க முடிந்தது.

    ஏற்கனவே வெகு நாட்களுக்கு முன்பு உங்கள் பதிவினிலேயே பார்த்தது. இன்று மீண்டும் தரிஸிக்கும் பாக்யம் தந்துள்ளீர்கள்.

    மிகவும் அழகானதொரு படம்.

    அந்தக்கண்களும், கண் இமைகளும், இமை முடிகளும், நாஸியும், கொவ்வைப்பழ நிறத்தில் வாய் இதழ்களும் ........ பிரமிக்கத்தான் வைக்கிறது.

    மோதமுழங்க உள்ளவை தான் எனக்கு எப்போதுமே பிடிக்கும்.

    ReplyDelete
  5. /சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!

    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!//

    மிகவும் அழகான அற்புதமான ஸ்லோகம் ! ;)))))

    ReplyDelete
  6. சரஸ்வதியால் வரகவியாக்கப்பட்ட ஒட்டக்கூத்தரைப் பற்றிய செய்திகளும், ஊரின் பெயர் காரணமும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  7. த்கோயிலின் இருப்பிடமும், செல்வதற்காக வழிகளும், அங்கு செல்லும் கலைஞர்களுக்கும், பள்ளிச்சிறுவர்களுக்கும் எவ்வாறு வித்தையில் சிறந்து விளங்க அருளப்படுகிறது என்பது பற்றியும் மிக அழகாகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  8. /சித்திரை 1-ஆம் நாளில் தொடங்கி 45 நாட்கள் லட்சார்ச்சனைகள் நடைபெறுகின்றன.

    இந்நாட்களில் ஏறக்குறைய ஏழு லட்சம் அர்ச்சனைகள் நடைபெறுகின்றனவாம்!/

    ஆச்சர்யமான தகவல்கள்.

    /இசைக் கலைஞர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து இசைக்கருவிகளுக்கு பூஜை செய்து வாசித்த பிறகே பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்/

    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!

    கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  9. தனிக்கோயில் கொண்டுள்ள சரஸ்வதி தேவியைப்பற்றி, அக்குவேறு ஆணிபேறாக அலசி ஆராய்ந்து ஜூஸ் ஆகப்பிழிந்து பருகக்கொடுத்து விட்டீர்கள் அதுவும் பலவித அழகான படங்களுடன்.

    சுவையோ சுவை தான்!

    கலைவாணி அருள் பெற்ற தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  10. சரஸ்வதிதேவி கோவிலும் அந்த ஊரின் பெருமையும் பற்றி தெரிந்துகொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
    நன்றி அக்கா...

    ReplyDelete
  11. நெஞ்சில் பக்திமணத்தை ஏற்படுத்தும் அழகான தெளிவான புகைப்படங்கள் ..!

    ReplyDelete
  12. இந்திராMay 28, 2012 at 8:42 PM

    தெரிந்த தகவல்ஆனாலும் தாங்கள் மேலும் மெருகூட்டி வியக்க வைக்கின்றீர்கள் சரஸ்வதிதேவியின் பரிபூரணகடாக்ஷம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் அற்புதம் அம்மா

    ReplyDelete
  13. கூத்தனூர்...ஒட்டக்கூத்தர் பற்றி ஆக்கம் எனது வலையில் உண்டு. பார்க்காத படங்கள் மிக அழகு. தகவல்கள் பயனானவை. நன்றி . நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. அழகான சரஸ்வதி படங்கள்.தானாகவே பக்தி வந்துவிடும்போல இருக்கு !

    ReplyDelete
  15. இரண்டாவது படத்தில் சரஸ்வதி தேவியைச்சுற்றிக் காட்டப்பட்டுள்ள மலர்களின் டிசைன் ரொம்ப நல்லாயிருக்குங்கோ!

    அதுபோல மூன்றாவது படத்தில் தேவியைச்சுற்றி வட்டமாக வரைந்து காட்டப்பட்டுள்ள மயில்தோகைகள் நல்ல அழகு தான்.

    நாலாவது படத்தின் கோபுர தரிஸனம் .. கோடி புண்ணியம் ... ;)

    ReplyDelete
  16. படம் எட்டில் வெண்பட்டு உடுத்திய அம்மன், முரட்டு மாலையுடனும், [மோதமுழங்க] முரட்டு வீணையுடனும் அமர்ந்திருப்பதும் அழகு.

    புடவைத்தலைப்பு ஜரிகையின் விசிறி மடிப்பும் ஜோர் ஜோர்.

    ReplyDelete
  17. படம் பன்னிரண்டில், வீணையின் தந்திகளும், மயிலின் கழுத்தும் கொண்டையும், அன்ன பக்ஷியின் மூக்கும், அம்பாளின் வஸ்திரத்தில் உள்ள புட்டாக்களும், புடவைத்தலைப்பு ஜரிகை பார்டர்களும், கழுத்து மாலையும் பார்த்தீர்களா?

    சும்மா ஜொ லி க் கு தி ல் லே!
    ;)))))

    ReplyDelete
  18. என்ன இருந்தாலும்,
    பத்தாவது படத்திலும்,
    கடைசி படத்திலும்
    காட்டப்பட்டுள்ள
    சரஸ்வதி தேவியின்
    முகங்களில் மட்டும் தான்

    ஒருவித அமைதியும்
    தனி அழகும்
    வாத்சல்யமும்
    காணமுடிகிறது.

    -oOo-

    ReplyDelete
  19. இந்த அம்மனை தரிசனம் செய்யும் வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு முன் கிடைத்தது.

    ReplyDelete
  20. veetel irrunthapadiye Ambal Saraswathiyai Darishikka mudienthathu....
    Thanks for the post Rajeswari.
    viji

    ReplyDelete
  21. அழகான பதிவு; வைத்த கண் பார்வையை எடுத்து வேறொரு இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு
    அவ்வளவு அழகு!

    கலைத்தாயின் கருணை குவிந்து வரிவரியாய் தோற்றமளித்த உணர்வு எனக்கு.

    'பூவனம்' வலைப்பூவின் 'இசைப்பாடல்கள்' பகுதியில் இருக்கும் பாடலை இங்கு கொடுத்திருக்கிறேன். இசைவாணர்கள் இசைக்கூட்டி இசைக்கட்டும்! அவர்தம் மனம் மகிழட்டும்!

    எடுப்பு

    நீயே எல்லாம் அல்லவோ--என்
    நெஞ்சில் இசையின் நிலை நீயல்லவோ?--தாயே

    (நீயே எல்லாம்)

    தொடுப்பு

    கூத்தனூரில் கோயில் கொண்டவள் அல்லவோ?
    கூத்தனுக்கு வரம் கொடுத்தவள் அல்லவோ?
    தக்கயாகப் பரணி தலைவி அல்லவோ?
    தஷிண திரிவேணி தெய்வம் அல்லவோ?

    விஜயதசமி தரிசனம் தவப்பயன் அல்லவோ?
    ஜெயமுண்டு பயமில்லை நினது கருணை அல்லவோ?
    அட்சரமாலை அமிர்த கலசம் அழகல்லவோ?
    அன்னை சரஸ்வதி அறிவுக் கடவுள் அல்லவோ?

    (நீயே எல்லாம்)

    முடிப்பு

    கலைமகள் தாயே கலைகளுக்குத் தாயே
    நிலைகுலைந்த மனதுக்கு நிம்மதி தந்தாயே
    சகலகலாவல்லி சதுர்முகதேவி
    சகலவித்யாமயி ஞானத்தவச்செல்வி

    (நீயே எல்லாம்)

    ReplyDelete
  22. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. படங்களும் தகவல்களும் நல்லா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. ஞான ரூபிணியின்
    தரிசனம் கிடைக்கப் பெற்றேன் சகோதரி..

    ReplyDelete
  25. சுட்டிக்கு மிக்க நன்றி. அருமையான படங்களுடன் நிறைய்ய தகவல்கள்.

    நன்றி

    ReplyDelete