Wednesday, May 23, 2012

இறையனுபூதி - ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்File:Kolkatatemple.jpg
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்  ஆன்மிக குருவாக அருவ நிலையில் நின்று அருள்புரியும் பேராற்றல் கொண்ட இறை அவதாரமாக . திகழ்கிறார்..
 ஆன்மிக இந்தியாவின் தபஸ்வி   ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ..


.

சுவாமி விவேகானந்தர்  ராமகிருஷ்ணரைப் பற்றி 
வெளியுலகுக்கு பரவலாக அறியச்செய்தார்...


 கனவில் தோன்றிய மகாவிஷ்ணு,  பக்திக்கு மகிழ்ந்து மகனாக அவதாரம் செய்வதாக கூறினாராம்.

தந்தையோ,  பரம ஏழையான தன்னால்.சிறப்பாகப் பராமரிக்க இயலாதே...' என்றுவருந்த  பக்தியுடன் அளிக்கும் எளிய உணவே போதும்' என்று சொல்லி , திருமாலின் பெருங்கருணையை நினைத்து உள்ளம் பூரித்தார். 

சிவாலயத்துக்கு அன்னை வழிபடச் சென்றபோது,  சிவலிங்கத் திலிருந்து ஒரு பேரொளி தோன்றி அவளுக்குள் புகுந்ததாகவும்; அவள் நெடுநேரம்அங்கேயே மூர்ச்சித்துக் கிடந்ததாகவும்; பின்னர் கண்விழித்தபோது தான் கருவுற்றி ருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு நெகிழ்ந்து  ஆன்மிக ரகசியத்துடன் இறையருளால் அவதரித்தவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
ராமகிருஷ்ணர் சைதன்யரின் மறு அவதாரம்.  கல்வி பயிலாத ராமகிருஷ்ணர் பேசியது எல்லாமே வேதாந்தம், உபநிடதம். 
ராஜாஜி அவர்கள் ராமகிருஷ்ணரின் வாக்குகளை "ஸ்ரீராமகிருஷ்ண உபநிடதம்' என்று கூறியிருக்கிறார்.

radha krishna

பக்தி ஈடுபாட்டின் காரணமாக ராதாகிருஷ்ணன் பாகவதத்தில் புகுந்தார்; பாகவதம் ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. :

"பகவான், பாகவதம், பாகவதன் யாவும் ஒன்றே!' என்னும் 
அத்வைத தத்துவம்!

பவதாரிணி அன்னையின் கரத்திலிருந்த வாளையே எடுத்து தன் தலையை வெட்டப்போக, அன்னை அவருக்கு பிரத்தியட்சமாகக் காட்சி தந்தருளினாள்.

ராமகிருஷ்ணர், "அன்னையின் சந்நிதியில் வேறு நினைவா?' என்று அரசியின் கன்னத்தில் அறைய, அரசியோ, "தவறு என்மீதுதான்' என்றாளாம்.

பைரவிப் பிராம்மணி என்றொரு யோகினி. ராமகிருஷ்ணரின் நடை, பாவனை, முக லட்சணங்களைப் பார்த்ததுமே அவர் ஒரு அவதார புருஷர் என்பதைக் கண்டு கொண்டாள்.

ராமகிருஷ்ணர் எந்த குருவையும் தேடிச் சென்றதில்லை. 
குருமார்களே இவரைத் தேடிவந்து போதித்தனர்.

 சீதாராம தரிசனம் காண, பஞ்சவடியில் தன்னை அனுமனாக பாவித்து தவம் மேற்கொண்ட தீவிர உபாசனையில் அவரருகே ஒரு கருங்குரங்கு வந்து அமர்ந்ததாம்.


இந்த நிலையில் சீதை அவருக்கு தரிசனம் தந்து 
அவருள் மறைந்தாளாம். 
அதன்பின் ராமரும் தரிசனம் தந்து அவருள் மறைந்தாராம். 
எனவே, அனுமனைத் துதித்தால் சீதாராம தரிசனம் காணலாம் ...
கிருஷ்ண தரிசனம் காண, தன்னை ராதையாக பாவித்து 
தியானம் செய்தாராம். .
தீவிர மாதுர்ய பக்திரச சாதனையில், ராதா தேவி தரிசனம் தந்து அவருள் மறைய, அவளைத் தேடி வந்த கிருஷ்ணரும் காட்சி தந்து அவருள் மறைந்தாராம்.

சம்புசரண் மல்லிக் என்பவர் ஒரு ஆழ்ந்த கிறிஸ்துவ பக்தர்.
அவர் ஒருமுறை ராமகிருஷ்ணருக்கு பைபிளைப் படித்துக் காட்ட
ராமகிருஷ்ணருக்கு ஏசுமீது ஈடுபாட்டுடன் மேரியுடன் உள்ள குழந்தை ஏசுவை உன்னிப்பாக தியானித்தார் ராமகிருஷ்ணர்.

படம் உயிருடன் பிரகாசித்தது. அதிலிருந்து தோன்றிய ஒளி ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. ஏசுபக்தர் , ஏசுதான்  ராமகிருஷ்ணர் என்று பூஜித்து வணங்கினாராம்.

அல்லாமீதும் ஈடுபாடு இருந்தது. 
மசூதிக்கு நமாஸ் செய்யச் சென்றிருக்கிறார். 

இஸ்லாமியத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர், அவர்களைப்போலவே உடையணிந்து "அல்லா அல்லா' என்று ஆழ்ந்து துதித்து நமாஸும் செய்திருக்கிறார்.

பெரிய தாடியுடன் கூடிய- ஒளி மிகுந்த முகம்மது 
ராமகிருஷ்ணருள் புகுந்தாராம்.
 எண்ணற்ற தெய்வீக அனுபவங்களைக் கண்டவர் ராமகிருஷ்ணர்.
மகான் சதாசிவப்பிரம்மேந்திரருடன் தியானத்தில்
உரையாடியதாக குறிப்புகள் உண்டு..

இறையனுபூதி பெற்ற பல காலகட்டத்தைச் சேர்ந்த  மகான்களையும் ராமகிருஷ்ணர். தரிசித்து இருக்கிறார்..

காசியில் ராமகிருஷ்ணர் தரிசித்த ஞானிகளில் மகான் த்ரைலிங்க சுவாமிகள் ஒருவரே பிரம்ம ஞானியாக விளங்கியவர்.

இதனை சுவாமி விவேகானந்தரிடம், ’ஒரு மிகப் பெரிய மகானைச் சந்தித்தேன்’ என்று சொல்லி விளக்கிக் கூறியிருக்கிறார் பரமஹம்சர்.

மஹா அவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ ஸ்ரீ லாஹரி மஹா சாயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவராவார்.

அவரது வாழ்க்கை ரகசியம் ருசிக்க ருசிக்கத் திகட்டாத ஆன்மிகப் பேரமுதம்!
kali dressed as krishna
Some Monastic Disciples (L to R): Trigunatitananda, Shivananda, Vivekananda, 
Turiyananda, Brahmananda. Below Saradananda.
Shrine - Vivekananda Building

Marble Statue of Sri. Ramakrishna Paramahamsar - Mirror temple!  Malaysia.
pathurighata mullick's thakurdalan graced by ramakrishna paramahamsa
marble palace calcutta

23 comments:

 1. மிக அரிதான புகைப்படங்களும் தகவல்களும் அருமை!

  ReplyDelete
 2. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பற்றி இதுவரை அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன். ;) vgk

  ReplyDelete
 3. எல்லாப்படங்களும் மிகச்சிறப்பாகவே அளித்துள்ளீர்கள். ;)

  ReplyDelete
 4. //அதுபோல சுவாமி விவேகானந்தர் இல்லாவிடில் ராமகிருஷ்ணரைப் பற்றியும் வெளியுலகுக்கு பரவலாகத் தெரிந்திருக்காது//

  இதுபோன்று வெளியுல்குக்குத் தெரியாமல் வாழ்ந்த மஹான்களும் ஞானிகளும் ஏராளமாக நம் புண்யபூமியாம் பாரத நாட்டில் இருந்துள்ளனர். இன்னும் ஆங்காங்கே இருக்கின்றனர். அது தான் நம் நாட்டின் தனிச்சிறப்பு.

  ReplyDelete
 5. ஸ்ரீராமகிருஷ்ணரின் தாய் தந்தையர் பற்றியும், அவர்கள் செய்த புண்ணியத்தாலும், வாழ்ந்த சத்திய வாழ்க்கையாலும், இவர் அவர்கள் வயிற்றில் அவதரித்த விதம் கேட்க மெய்சிலிர்ப்பதாக உள்ளது.

  ReplyDelete
 6. "நீ பக்தியுடன் அளிக்கும் எளிய உணவே போதும்” - மஹாவிஷ்ணு.

  பக்தனின் பக்தியைத்தான் பஹவான் விரும்புகிறார். படையலை அல்ல என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  பக்தனின் பக்தியை பகவானாவது உணர்கிறாரே! அவரால் மட்டுமே தான் உணர முடிகிறது.

  மனுஷ்யாளுக்கு மனுஷ்யாள் பக்தி வைத்தாலும் அது அவர்களால் சரியான முறையில் ஏனோ உண்ரப்படுவதே இல்லை.

  ReplyDelete
 7. /ராமகிருஷ்ணரோ கல்வி பயிலாதவர். ஆனால் அவர் பேசியது எல்லாமே வேதாந்தம், உபநிடதம்/

  வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  /"”பகவான், பாகவதம், பாகவதன் யாவும் ஒன்றே!”” எத்தகைய அத்வைத தத்துவம்!/

  அருமையானது! ;)

  தன்னையே காளியின் வாளால் மாய்த்துக்கொள்ள துணிந்தபோது, காளி காட்சி கொடுத்தது;

  மஹாராணி அவர்களையே கன்னத்தில் அறைந்தது;

  /ராமகிருஷ்ணர் எந்த குருவையும் தேடிச் சென்றதில்லை. குருமார்களே இவரைத் தேடிவந்து போதித்தனர்/

  ஆஹா! எவ்வளவு அரிய தகவல்கள்!

  ReplyDelete
 8. சீதை, இராமர், ராதை, கிருஷ்ணர், யேசு, அல்லாஹ் முகமது என இவர் தீவிரமாக பக்திசெய்த அனைத்து தெய்வங்களும் இவர் உடம்பில் புகுந்தது என்பது கேட்கவே மெய்சிலிர்ப்பதாக உள்ளது.

  எப்படித்தான் இவ்வளவு தக்வல்கள் சேகரிக்கிறீர்களோ, கஷ்டப்பட்டு தினமும் ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறீர்களோ?

  இதுவும் மேலே சொன்னதுபோல எனக்கு மெய்சிலிர்க்க வைப்பதாகவே உள்ளது.

  உண்மையான ஞானிகள், மஹான்கள் போல உங்களிடமும் ஏராளமான தெய்வாம்சங்களும், தெய்வீக்த்தன்மைகளும் ஒளிந்துள்ளன.

  இல்லாவிட்டால் இவ்வளவு மிகச் சிறப்பாக ஒவ்வொன்றையும் பற்றி விளக்கி அருள முடியுமா என்ன?

  தங்களின் கடும் உழைப்பைக்கண்டு வியக்கிறேன்.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான வாழ்த்துகள்.

  நெஞ்சார்ந்த நன்றிகள்.

  தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மிகத் தொண்டுகள்.

  vgk

  ReplyDelete
 9. வணக்கம் சகோதரி

  நலமா?

  விடுமுறையில் இருந்ததால் கடந்த ஒரு மாதம்

  வலைப்பக்கம் வரவில்லை..

  வந்தவுடன் மகான் பரமஹம்சர் பற்றிய பதிவு எனை

  வரவேற்கிறது...

  கொல்கொத்தாவில் நான் பணியாற்றுகையில்

  தட்சிநேஸ்வரம் பேலூர்மத் காளிகட் ஆகிய

  இடங்களுக்கு சென்று தரிசித்திருக்கிறேன்...

  அழகு கொஞ்சும் ரம்மியமான பக்திமயமான

  இடங்கள்...

  படங்கள் மனதில் இசைபாடுகிறது சகோதரி...

  ReplyDelete
 10. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமையன படங்களுடன் கூடிய இராமகிருஷ்ண பரம ஹமசரைப் பற்றிய நல்லதொரு கட்டுரை. எத்தனை தகவல்கள். அல்லா, யேசு, கிருஷ்ண பரமாத்மா, இராமபிரான் என அத்தனை கட்வுள்களூம் அவரின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கின்றனர். அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. /காஞ்சி மகா பெரியவரும் பால் பிரண்டனும் சொல்லாமலிருந்தால், ரமண மகரிஷியை உலகம் பரவலாக அறிந்திருக்காது/

  சில மஹான்கள், தங்களிடம் எவ்வளவோ அபூர்வ சக்திகள் இருந்தும், தங்களைத் தாங்களே வெளி உலகுக்குக் காட்டிக்கொள்ளவே விரும்பாமல் இருந்திருக்கிறார்கள்.

  பால் பிரண்டன் காஞ்சி மஹா ஸ்வாமிகளை சந்தித்ததும், அவர் தன் சந்தேகங்களைக் கேட்டதும், அதன் பிறகு நடைபெற்ற எல்லாமே மிகவும் அற்புதமான நிகழ்வுகள்.

  பால்பிரண்டன் ஸ்ரீ மஹா ஸ்வாமிகளிடம் கேட்க வந்த கேள்வி: முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கும், இப்போது நாம் எடுத்துள்ள பிறவிக்கு சம்பந்தம் உண்டா? இல்லையா என்பதே.

  நேரிடையாக அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவரை ஒரு சில பிரஸவ ஆஸ்பத்தரிகளுக்கு அனுப்பி அன்று அங்கு பிறக்கும் குழந்தைகள் அனைவரைப்பற்றியும், ஆராய்ந்து வரச்சொல்லுகிறார் ஸ்ரீ மஹாஸ்வாமிகள்.

  அந்த ஆராய்ச்சியிலேயே அவருடைய கேள்விக்கான அனைத்து பதிலகளும் மிகத்தெளிவாக அவருக்குப் புரிந்து விடுகிறது.

  அன்றைய தினம் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருவிதமான குடும்பப் பின்னனியும், பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவும் உள்ளன.

  ஆண்,பெண் என்ற இனம், நிறம், உடல்வாகு, எடை, பெற்றோர்கள் படிப்பு, அறிவு, வசதி வாய்ப்புகள் அனைத்திலுமே எந்தவித ஒற்றுமைகளும் காணமுடியாமல் உள்ளன.

  ஒரு குழந்தை பிறந்ததை எக்கச்சக்கமாக இனிப்புகள் கொடுத்து கொண்டாடுகிறார்கள். குழந்தைக்கு தங்கம் வைரம் என நகைகளாகச் சொரியக் காத்திருக்கிறார்கள்.

  இன்னொரு குழந்தைக்குத் தாயார் இறந்து போய் இருக்கிறாள்.

  மற்றொரு குழந்தைக்கு தாயார் இருந்தும் தாய்ப்பால் சுரக்கவில்லை.

  ஒன்று எடை மிகக் குறைவாக இருப்பதாக எங்கோ இங்குபெட்டரில் வைக்க எடுத்துச் செல்கிறார்கள்.

  ஒன்று சுகப்பிரசவம்.

  ஒன்று மிகவும் சிக்கலான பிரசவம்.

  ஒன்று ஸ்பெஷல் வார்டு ஏ.ஸி. ரூமில் சகல வசதிகளுடன்.

  மற்றொன்று தர்ம ஆஸ்பத்தரியில், பெட் இல்லாமல், வெறும் தரையில்.

  உடல் ஊனமுற்ற குழந்தைகளாக சில என பல் வேறுபாடுகள்.

  ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்த அந்தக்குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் இந்த வேறுபாடு?

  அதுவே பூர்வ ஜன்ம பாவ புண்ணியங்களின் விளைவு என்பதை பால்பிரண்டன் புரிந்து கொள்கிறார்.

  ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவருக்குப் புரிய வைத்துள்ளார்.

  பிறகு பால்பிரண்டன் ஸ்ரீ மஹாஸ்வாமிகளிடம், இந்தியாவில் இன்னும் மிகச்சிறந்த ஞானிகள் யாரும் உண்டா? எங்கே இருக்கிறார்கள்? நான் போய் அவர்களை தரிஸிக்கலாமா என்று கேட்கிறார்.

  என்னைப் பொருத்தவரை இது போன்ற ஒரு கேள்வியை ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களிடம், அவர் கேட்டிருக்கவே கூடாது. ஏனென்றால் அவரைவிட [மஹாஸ்வாமிகளை விட] ஒரு ஞானி, நடமாடும் தெய்வம் வேறு யாருமே கிடையாது என்பதே பலராலும் உணரப்பட்ட உண்மை.

  இருப்பினும், திருவண்ணாமலையில் ஸ்ரீ ரமணமகரிஷி என்று ஓர் பெரிய ஞானி இருக்கிறார். நீ போய் அவரை சந்திக்கலாம் என்று சொல்கிறார்கள் ஸ்ரீ மஹாஸ்வாமிகள்.

  மறுநாள் போய் சந்திக்கலாம் என திட்டமிட்டு, தன் அறையில் அன்றிரவு தங்குகிறார், பால்பிரிண்டன்.

  இரவு அவர் தூங்கமுடியாமல் பல் MIRACLES நடைபெறுகிறது. ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வேறு ஸ்ரீ இரமண மகரிஷி வேறு அல்ல என்பதை உணர்ந்து கொள்கிறார். உணர வைக்கிறார் ஸ்ரீ மஹாஸ்வாமிகள்.

  இதுபோன்ற மிகச்சிறந்த தபோ வலிமையுள்ள மஹான்கள், தங்களுக்கு எல்லாவிதமான, ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டக் கூடிய அபூர்வ சக்திகள் இருப்பினும், எந்தவிதமான சித்து வேலைகளும் செய்யவே மாட்டார்கள்.

  பால்பிரண்டன் மஹாஸ்வாமிகள் இருந்த இடத்தில் ரமணரையும், ரமணர் இருந்த இடத்தில் மஹாஸ்வாமிகளையும் கண்டதாகவும் சொல்லுகிறார்கள்.

  உண்மையான மஹான்களை, உண்மையான மஹான்களால் மட்டுமே அறிய முடியும்.

  சாதாரண மக்களால் ஓரளவு உணர மட்டுமே முடியும்.

  அவ்வாறு ஓரளவு உணர்வதற்கோ, தரிஸிப்பதற்கோ, அவர்களின் கடாக்ஷம் நம் மீது விழுவதற்கோ மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  ஏதோ இதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று எனக்குத் தோனறியது. அதனால் சொல்லியுள்ளேன்.

  ReplyDelete
 12. படங்கள் அள்ளிட்டுப்போகுது,..

  இன்னும் எத்தனை ஞானிகள் வெளியுலகத்துக்குத் தெரிய வராமல் இருக்காங்களோ..

  ReplyDelete
 13. Anonymous has left a new comment on your post "ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்":

  ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் பற்றி இதுவரை அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
 14. ராமகிருஷ்னரின் அவதார மகிமை நல்லா சொல்லி இருக்கீங்க படங்களும் நல்லா இருக்கு. வாழ்த்துகள். நன்றி

  ReplyDelete
 15. magangalai patriya maga unnadhamana padhivu nanri amma

  ReplyDelete
 16. அறியாத நல்ல பல தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 17. apoorva thagavalgalukku nandri

  ReplyDelete
 18. ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் பற்றி அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 19. மிகவும் அற்புதம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய பகிர்வு நன்றி அக்கா...

  ReplyDelete
 20. அடடா என்னொரு கண்கொள்ள காட்சி. புகைப்படங்கள் மிகவும் அருமை அக்கா. மறுபடி மறுபடி பார்க்கவைக்கும் காட்சி.
  வாழ்த்துக்கள் அக்கா....

  ReplyDelete
 21. ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றிய அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 22. JAI HANUMAN ! ;)

  VGK

  ReplyDelete