Showing posts with label ருத்ராட்சம். Show all posts
Showing posts with label ருத்ராட்சம். Show all posts

Thursday, December 13, 2012

சிவ சிம்மாசனம்







god shiva

கைலாசவாஸா கருணாவிலாஸா,
எந்தனை ஆளும் ஜோதிப்பிரகாசா
சம்போ சங்கர தாண்டவனே சிவ
மஹேஸ்வரனே சிவ மஹாதேவனே கைலாசவாஸா"

 25 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிவ சிம்மாசனத்தை வழிபட்டால் முன்னோர் சாபம், குலதெய்வ குறைபாடுகள், தெய்வக் குற்றங்கள், திருமணத் தடைகள் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம் பிக்கை.இந்த சிம்மாசனத்தில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் எந்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு, சிவ சிம்மாசனம் ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது...
அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேதகத்தில் நாகலிங்கம், பான, படிகலிங்கம் ஆகியவை கொண்டு, சிவ சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

தேக்கு மரத்தால் சிம்மாசனம் ஒன்றை உருவாக்கி , அதன்பின், ருத்ராட்ச மணிகளை சிம்மாசனத்தில் ஆணி கொண்டு பதித்து, ஒன்பது வகையான நவரத்தினங்கள், மரகதலிங்கம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்துள்ளது.. 

ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது..
 நாமக்கல் மாவட்டம் முத்துக்காளிப்பட்டி ஸ்ரீசிவசக்தி பீடத்தில் 
இருக்கும் சிவ சிம்மாசனம்

சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள். 

மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளது..

தட்சிணாமூர்த்திக்குரிய ஓலைச்சுவடிகள், சிவனுக்குரிய அனைத்து அம்சங்கள், கல்விக்காக சரஸ்வதியின் எந்திரம், நேபாளத்தில் இருந்து பிரத்தியங்கராதேவி எந்திரம், நாகதோஷத்தை நீக்கவல்ல கோமேதக நாகலிங்கம் ஆகியவற்றையும், சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்துள்ளது..

சிம்மாசனத்தை வணங்குவதால், முன்னோர் சாபம், பெண்கள் சாபம், குலதெய்வ குறைகள், திருமண தடைகள், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, சிறந்த கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பெற்று, மனம் நிம்மதி அடையும்.


சிவ சிம்மாசனத்தை சிதம்பரம், திருநள்ளாறு, காசி ஆகிய புண்ணிய தலங்களில் விசேஷ வழிபாடு  செய்யப்பட்டுள்ளது..

ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள். 

சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது. 

இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது. 

இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். 

ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது. 

ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.

ருத்ராட்சம் பற்றி இன்னொரு பதிவு ....
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_22.html

ருத்ராட்சத்தேரும் , ருத்ராட்சப்பந்தல்களும் 










"miracle beads".

rudraksha tree





















Friday, April 22, 2011

ருத்ராட்சத்தேரும்,ருத்ராட்சப் பந்தல்களும்..








படிமம்:RudrakshaTree.jpg
பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. 
உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். 
தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். 
பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராட்ச மணிகள் அணியப்பட்டு வந்தன
சேலம் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக நண்பர்கள் குழு சார்பில் எட்டு அடி உயரத்தில், மூன்றே கால் அடி அகலத்தில் அமைத்த மரத்தேரில், 75 ஆயிரம் ருத்ராட்சங்களை தாமிரக் கம்பியில் கோர்த்து அலங்கரித்து, ருத்ராட்ச தேர் தயார் செய்யப்பட்டு கோவிலுக்கு வழங்கப்பட்டது, 

தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு,  சோமஸ்கந்தருக்கு ருத்ராட்சத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமம், ருத்ர கலசாபிஷேக ஹோமம், குபேர ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள்,  தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்து புனித நீர் தெளிக்கப்பட்ட தேரில், ருத்ராட்ச கவசத்தில் சோமஸ்கந்தர் எழுந்தருளி பவனி வந்தார். சிறப்பு பூஜை நடத்தி கோவிலை வலம் வந்த பின், தேர் வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

உலகத்திலேயே முதன் முதலாக ருத்ராட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை கொண்டுள்ள கோவில் என்ற பெருமை சேலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கிடைத்துள்ளது.
 
பேரூர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பட்டீஸ்வரர் சிரசத்துக்கு மேல், ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


பள்ளியறை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், 5,000 ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட ருத்ராட்ச பந்தல் பொருத்தப்பட்டுள்ளது. " 3 அடி அகலத்தில், 4 அடி நீளத்தில் தேக்கு மரத்தால் செவ்வக வடிவத்தில், கம்பிகளின் உதவியால் 5,000 ருத்ராட்சங்கள் கோர்க்கப்பட்டு, இந்த ருத்ராட்ச பந்தல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பந்தலின் நான்குமுனைப் பகுதிகளிலும் மொத்தம் ஆறு ஸ்படிக மாலை கோர்க்கப்பட்டுள்ளன.


கோவில் மூலஸ்தானத்தில் பட்டீஸ்வரரின் சிரசத்தின் மேல் பகுதியில், இப்பந்தல் இரும்பு கம்பிகளால் மாட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சிவபெருமானுக்கு ருத்ராட்சம் மிகவும் சிறப்பு என்பதால் இது அமைக்கப்பட்டுள்ளது

ருத்ராட்ச சிவலிங்கம் -திருநெல்வேலி மாவட்டம் 
பாபநாசம் கோவிலில் உள்ள மூலவர்  ருத்ராட்சத்தால் ஆனவர்.

பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள .பாபநாசகோவில் மூலவரே உலகில் முதல் சிவலிங்கம் எனத தல புராணம் உரைக்கும்.


பங்குனி 22ம் தேதி முதல் சித்திரை முதல் தேதி வரை நடை பெறும் திருவிழாவில் அகத்தியர் பொதிகை மலையில் இமயத்தில் நடைபெற்ற சிவபார்வதி திருமணத்தைக் கண்ட நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் நடைபெறும்.

தேவேந்திரனே தனது பிரம்மஹத்தி தோஷம் தீர பாபநாசத்தில் வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.


ஈசனுக்கு முக்காளா-லிங்கர், பரஞ்சோதி-லிங்கர், பழமறை நாயகர், வைராச லிங்கர் பாபவிநாசேஸ்வரர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. 

தாமிர பரணி மஹாத்மியத்தில் இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும் படித்துறைக்கு பெயர் "இந்திர கீல தீர்த்தம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

சித்திரை மாதத்தில் இங்கு முறைப்படி நீராடுபவர்களுக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். 

தென் தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கான சூரியனார் கோவிலாகத் திகழ்கிறது இந்த க்ஷேத்திரம் .

இங்கு சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து சூரியனை வழிபட்டிருக்கிறார் ரோமசர். 

இந்த இடத்தில் விராட புருஷன் தவம் செய்து ஈசன் அருள் பெற்றான்  

பொதிகையின் புகழைக் கேள்விப்பட்ட நாரதரும் இங்கு வந்து, முக்களா விருக்ஷத்தின் கீழ் இருந்த சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. 
ருத்ராட்ச அம்மன்
கேரள மாநில எர்ணாகுளத்திலிருக்கும் சோட்டாணிக்கரையில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் சோட்டாணிகரை பகவதி என்றே அழைக்கப்படுகிறார்.

இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனவர் என்பதே தனிச் சிறப்பு காலைமதியம்,மாலை மூன்று வேளையும் துர்க்கா,லட்சுமி,சரஸ்வதியாக அருள் பாலிக்கும் அற்புதத் திருத்தலம்.
தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள்,மனநிலைபாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்து குணமடைகிறார்க்ள்.  

மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. 

ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. 

ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். 

ருத்திராட்ச மணிகளை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். 

சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. 

பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது. 

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மரத்துப் போகாமல் இருப்பதற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது


ருத்ராட்சங்களாலன பந்தல் போன்ற அமைப்பில் அஷ் மானகிரி அமைத்து மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சுந்தரேசுவரருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.. 

மதுரையில் உள்ள பழைய சொக்கநாதர், முக்தீஸ்வரர், திருவேடகம், தென்திருவாலவாயில் திருக்கோயில்களுக்கும் ருத்ராட்ச பந்தல் அமைக்கப்ப்ட்டுள்ளது.
 
திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் 
ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் ஆலயத்திலும் காணலாம்.
  விஞ்ஞானிகள் ருத்திராட்சங்களின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன் ,உண்மையான ருத்திராட்ச மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். 

 ருத்திராட்ச மணிகளை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். ருத்திராட்ச மணிகளை அணிவோரின் உள் ஒளியை மேலோங்கச் செய்கிறது. இது 

பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. 

குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.