Thursday, October 13, 2011

அருளும் குருவும் திருவும்

300வது பதிவு
Waterfall Animated Rocks Scenery




குருபார்க்க கோடி நன்மை -
வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் 
புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் 
என்பவை அருமையான அனுபவ மொழிகள்,

குருவும் திருவும் அருட்கடாட்சத்தால் குறைவிலா வாழ்க்கை அருளும் 
குருவித்துறை சித்திரவல்லபப் பெருமாள் கோவில் என்னும் எழில்மிகு  குருவருட்தலம் மதுரை சோழவந்தான் தென்கரையில் உள்ளது.


குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர்.

குரு (வியாழன்) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.
Mahavishnu
குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர நாளில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். 

இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் 
என அழைக்கப்படுகிறார்.

பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்
உற்சவர்
[Gal1]
குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். 
எனவே தான்  சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது
தாயார் செண்பகவல்லி

மூலவர்: சித்திர ரதவல்லபப் பெருமாள் சுமார் 10அடி உயரம். அதற்கேற்ற ஆஜானுபாகனாக, சங்கு சக்கரதாரியாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காண்போர் வியக்கும் வண்ணம் காட்சியளித்து அருள்பாலிப்பது விசேஷமான அம்சம். . 

வர் சந்தன மரத்தாலான திருமேனி, அபிஷேகம் கிடையாது. 
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தைலக்காப்பு சாத்துகிறார்கள். 
இங்கு இவரை வணங்கினால், குருபகவானின் அருள் தானே வந்து சேரும். புத்திர பாக்யமும், சகல சௌபாக்யமும் வந்து சேரும் என்பது  நம்பிக்கை.
மூலவர் சித்திரரத வல்லப பெருமாள்
[Gal1]
உற்சவர்: நித்ய ஸ்ரீனிவாசப் பெருமாள். நாச்சியார்களுடன்
 அருள் பாலிக்கிறார். 
சக்கரத்தாழ்வார், சேனைமுதலியார், கருடாழ்வார் அருள்பாலிக்கின்றனர்
[Gal1]
தாயார்: செண்பகவல்லி. தன் திருக்கரங்களில் மலர் ஏந்தியும், அபயஹஸ்தம், வரதஹஸ்தம் காட்டி ஈர்த்தும், மனத்தைக் குளிர வைக்கும் தன்மை கொண்டவள். 

பிராகாரத்தில் யோக நரசிம்மரும், பன்னிரு ஆழ்வார்களும் 
கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்கள்.

ஒரு பெரிய வேப்ப மரமும் உள்ளது.

குழந்தைப்பேறு வேண்டுவோர்,  மரத்தின் கிளையில்தொட்டில் கட்டிவிட்டால், அவர்கள் விரைவில் தாய்மை அடைவார்கள் என்பது, இன்றும் நடந்துவரும் .அசைக்க முடியாத நம்பிக்கை.
Lord Vishnu Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
 நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.

நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் 
சென்று முறையிடுவோம். 

அந்த . குருபகவானும் பாதிக்கப்பட்ட  தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான்
குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலாகும்.

உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான்..

அசுர்களின் குரு சுக்ராசாரியார் ‘மிருத சஞ்சீவினி’ என்னும் மந்திரம் கற்றவர். அசுரர்கள் போரில் மாண்டால், இந்த மந்திரத்தின் மூலம் உயிர்பெற்று எழச்செய்து அசுரர்கள் கூட்டம் மிகவும் பெருகியது.
[Gal1]
தங்களின் பலத்தைப் பெருக்கவும், அசுரர்களின் கூட்டத்தைக் குறைக்கவும், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை தேவர்களும் அறிய விரும்பி. இந்த மந்திரத்தைக் கற்றுவர தேவர்களின் குருவான குருபகவானின் மகனும், யாவரும் கண்டு வியக்கும் அழகுடைய இளைஞனுமான கசனை அனுப்பிவைத்தனர்.

கசன் சுக்ராசாரியாரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றபோது, எதிர்பாராமல் அவர் மகளான தேவயானியைச் சந்தித்தான். அவர் மூலம் சுக்ராசாரியாரைச் சந்தித்து, அவர் அன்பையும், நம்பிக்கையையும் பெற்று அவரிடமிருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசம் பெற்றான்.

இதை அறிந்த அசுரர்கள், கசன் உயிருடன் இருந்தால் தங்கள் குலத்துக்கு அழிவுகாலம் ஏற்படும் என்பதால், குருவுக்கும் (சுக்ராசாரியார்) தெரியாமல் அவனைக் கொன்று அவன் உடலைக் கொளுத்தி குரு அறியாவண்ணம் அந்தச் சாம்பலை சுக்ராசாரியார் அருந்தும் பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

இந்த விவரம் அறியாத சுக்ராசாரியார் பானத்தைக் குடித்துவிட்டார்.

 கசன் பலதினங்களாக வராமலிருக்கவே தேவயானி கலக்கமுற்று
 தன் தந்தையிடம் கசன் இருக்கும் இடத்தைப் பற்றி அறிந்து சொல்லும்படி வேண்டினாள்.

தன் ஞான திருஷ்டி மூலம் கசன் தன் வயிற்றில் இருக்கிற விவரம் அறிந்து அதிர்ச்சி யடைந்தார். 

இதை தேவயானியிடம் சொல்லவே தேவயானி மிகவும் வேதனை அடைந்து, அழுதும் புலம்பியும் நின்றதைக் காண இயலாத சுக்ராசாரியார் தன் மகளுக்காக, மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து கசனை வெளிக் (உயிருடன்) கொணர்ந்தார்.

அந்த மந்திரத்தை கசன் பிரயோகிக்க சுக்ராசாரியாரும் உயிர் பிழைத்தார்.

கசனைக் கண்டதும் தேவயானிக்கு அளவற்ற ஆனந்தமும், அன்பும் ஏற்பட்டது. தன் தந்தையிடம் கசனுக்குத் தன்னை மணம் செய்து வைக்க வேண்டினாள்.

 கசனோ, தான் சுக்ராசாரியாரின் வயிற்றிலிருந்து உயிர் பெற்று வந்ததால் அவர் தனக்குத் தந்தை முறையாகும் என்றும் தேவயானி சகோதரி முறையாகும் என்றும் அவள் கோரிக்கையை ஏற்க முடியாதென்று கூறி தன்னை மன்னிக்கும்படி கோரினான்.

 தேவயானி மிகவும் வெகுண்டு, ஆத்திரம் மேலிட கசனின் கை, கால்களை செயலிழந்து போகும்படி சாபமிட்டாள்.

இந்த விவரம் அனைத்தும் அறிந்த கசனின் தந்தை வியாழபகவான் (குருபகவான்) நாரத முனிவரின் ஆலோசனைப்படி, பூலோகத்துக்கு வந்து வைகையாற்றின் கரையில் அமர்ந்து திருமாலைக் குறித்து தவம் மேற்கொண்டார்.

திருமால் குருவின் தவத்துக்கு மெச்சி, அவரின் வேண்டுகோளின்படி தரிசனம் அளித்தும் கசனின் கால்களில் ஏற்பட்ட நோயை, தன் சுதர்சன சக்கரம் மூலம் நன்முறையில் குணப்படுத்தினார்.

குருவின் வேண்டுகோளின்படி குரு தரிசித்த திருமால் கோவில் கொண்டு பூவுலக மக்களுக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார்.

அன்று முதல் சுதர்சன ஆழ்வாரும், குருபகவானும் தன் எதிரே குடிகொண்டுள்ள பெருமாளைச் சேவித்தவாறு அமர்ந்துள்ளனர்.
சக்கரத்தாழ்வார்-குருபகவான்
[Gal1]
இந்த ஆலயத்திற்கு எதிரே பெருமாளின் அருளுக்கும், கருணைக்கும் பாத்திரமான குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இவர்களை வழிபட்டால் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.

குரு சன்னதி

 குரு தவம் செய்த இடம். குரு வீற்றிருந்த துறை என இருந்தது.
தற்போது இது மருவி குருவித்துறை ஆயிற்று.

ஒவ்வோர் ஆண்டும் குரு பெயர்ச்சியின் போது கடல் அலைபோல் மக்கள் கூடி வழிபடுகிறார்கள் என்பது அந்த “குருவின்” மகிமையை மேன்மைப்படுத்துகிறது. 

நித்திய பூஜைகளும், மற்ற விழாக்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. இவ்வாறு குருவும் திருவும் அருள்புரியும் அற்புதத்தலம்.

இது மதுரையிலிருந்து சுமார் 32கி.மீ தொலைவில் உள்ளது.

இங்கு வியாழக்கிழமை மிகவும் விசேஷம்.
அன்று திருவிழாக் கோலம் போல் பக்தர்களைக் காணலாம்.

இது ஒரு பிரார்த்தனைத் தலம். குருவையும், சக்கரத்தாழ்வாரையும், தலத்து எம்பிரானையும் வணங்கினால் சகல நன்மைகளும், புத்திரப்பேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.











Stream near KuruvithuraStream near Kuruvithurai


59 comments:

  1. குரு பார்க்க கோடி நன்மை. வியாழன் காலை குரு தரிசனம். நன்று. வாழ்க!

    ReplyDelete
  2. மனைவியார் சித்திரை நட்சத்திரம்! உபயோகமான பதிவு! நன்றீ!

    ReplyDelete
  3. 300க்கு வாழ்த்துக்கள். பதிவை இன்னும் படிக்கலை. படித்து கமெண்ட் இடறேன்.

    ReplyDelete
  4. குருவாரமாகிய இன்று குரு அருளால் வெற்றிகரமாக 300 ஆவது பதிவினை வெளியிட்டுள்ள தங்களுக்கு, என் மனமார்ந்த ஆசிகள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    மேலும் தொடர்ந்து இதுபோல் பல்வேறு வெற்றிகளை எட்டிட வேண்டும் என்பதே என் ஆவல்.

    vgk

    ReplyDelete
  5. வை.கோபாலகிருஷ்ணன் said...
    குருவாரமாகிய இன்று குரு அருளால் வெற்றிகரமாக 300 ஆவது பதிவினை வெளியிட்டுள்ள தங்களுக்கு, என் மனமார்ந்த ஆசிகள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    மேலும் தொடர்ந்து இதுபோல் பல்வேறு வெற்றிகளை எட்டிட வேண்டும் என்பதே என் ஆவல்.

    vgk//

    மனமார்ந்த ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் பராட்டுக்க்ளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா,

    ReplyDelete
  6. சந்திர வம்சம் said...
    குரு பார்க்க கோடி நன்மை. வியாழன் காலை குரு தரிசனம். நன்று. வாழ்க!/

    தாமரை மதுரையின் வாழ்த்துக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  7. ரமேஷ் வெங்கடபதி said...
    மனைவியார் சித்திரை நட்சத்திரம்! உபயோகமான பதிவு! நன்றீ!//

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  8. புதுகைத் தென்றல் said...
    300க்கு வாழ்த்துக்கள். பதிவை இன்னும் படிக்கலை. படித்து கமெண்ட் இடறேன்./

    வாழ்த்துக்களுக்கு இனிய நன்றிகள்.
    தென்றலின் இனிய வருகைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. 300 வது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இன்றைய பதிவில் சொல்லியுள்ள
    அனைத்து தகவல்களும் அபூர்வத் தகவலகள்
    இதனை அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. 300-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். எப்போதும் போல இந்த பதிவிலும் படங்கள் மிக அருமை.

    ReplyDelete
  11. குரு அருளை குருவாரத்தில் படிக்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!! 300 மூனு லட்சமாக வளர குருவருள் செய்யட்டும்!!

    ReplyDelete
  12. 300வது பதிவிற்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகரமாகத் தொடரட்டும், இறை ஆசி கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  13. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    அருமையான இடுகை - தல வரலாறும் - குருஸ்தலம் என்னும் குருவித்துறையில் உள்ள சித்திர வல்லபப் பெருமாள் கோவிலும் - பெருமாளைச் சேவிக்கும் குருவும் பற்றிய விளக்கமும் புகைப்படங்களூம் - அத்தனையும் அருமை. ஒரு கோவிலுக்குச் சென்றால் எவ்வளவு ஈடுபாட்டுடன் தகவல்கள் சேகரித்து, படங்கள் எடுத்து, இடுகை இடுவதென்பது ஒரு அரிய செயல். பாராட்டுகள். அக்டோபர் முதல் நாள் சனிக்கிழமை குருவித்துறை சென்றிருந்தேன். திவ்ய தரிசனம் - பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வந்தேன்.

    பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - சொல்ல மறந்துட்டேனே - 300 க்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. குரு பார்க்க கோடி நன்மை... நான் குருவை இங்கு பார்த்து கோடி நன்மை பெறுகிறேன்...

    பதிவிற்கும் தகவலுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  16. 300- வது பதிவு சூப்பரா வந்திருக்கு. வாழ்த்துக்கள். குரு பார்க்க கோடி நன்மை

    ReplyDelete
  17. படங்கள் சூப்பருங்கோ....!!!

    ReplyDelete
  18. நல்ல பதிவு. ரசித்தேன்.

    ReplyDelete
  19. தங்களது 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவு.

    ReplyDelete
  20. அறிய பல தகவல்கள், பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  21. 300க்கு வாழ்த்துகள். கோயிலும் தகவலும் அருமை.படங்கள் எல்லாமே அழகு.

    ReplyDelete
  22. தங்களின் 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. தகவல்களும், படங்களும் சிறப்பாக உள்ளது. பகிர்விற்கு நன்றிங்க.

    300-க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.ஸ்தல புராணமும்,படங்களும் நன்று.

    ReplyDelete
  25. கிழமைக்குச் சரியான பதிவு.300க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்

    வழக்கம் போல் படங்களும் ,பதிவும் அருமை

    ReplyDelete
  27. 300-kum 400-podavum vazhththukal

    inraiya vilakkamum padangkaludan super

    ReplyDelete
  28. முன்னூறாவது இடுகைக்கு பாராட்டுகள். தல வரலாறுகளாக பதிவிடுவது எளிதான காரியமில்லை. இந்தப் பதிவிலும் படங்கள் கவர்கின்றன. பல விவரங்கள் அளிக்கிறீர்கள்.

    ReplyDelete
  29. Ramani said...
    300 வது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இன்றைய பதிவில் சொல்லியுள்ள
    அனைத்து தகவல்களும் அபூர்வத் தகவலகள்
    இதனை அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள/

    அபூர்வமான அருமையான கருத்துரைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  30. வேங்கட ஸ்ரீனிவாசன் said...
    300-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். எப்போதும் போல இந்த பதிவிலும் படங்கள் மிக அருமை./

    அருமையான கருத்துரைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  31. தக்குடு said...
    குரு அருளை குருவாரத்தில் படிக்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!! 300 மூனு லட்சமாக வளர குருவருள் செய்யட்டும்!!/

    மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கும் குருவருள் வேண்டிய வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  32. 300 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் ... குருவின் கடாட்சம் உங்களுக்கு எப்போதும் உண்டு ...

    ReplyDelete
  33. kavithai (kovaikkavi) said...
    300வது பதிவிற்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகரமாகத் தொடரட்டும், இறை ஆசி கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்../

    வாழ்த்துக்களுக்கும் இறைஆசிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  34. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    அருமையான இடுகை - தல வரலாறும் - குருஸ்தலம் என்னும் குருவித்துறையில் உள்ள சித்திர வல்லபப் பெருமாள் கோவிலும் - பெருமாளைச் சேவிக்கும் குருவும் பற்றிய விளக்கமும் புகைப்படங்களூம் - அத்தனையும் அருமை. ஒரு கோவிலுக்குச் சென்றால் எவ்வளவு ஈடுபாட்டுடன் தகவல்கள் சேகரித்து, படங்கள் எடுத்து, இடுகை இடுவதென்பது ஒரு அரிய செயல். பாராட்டுகள். அக்டோபர் முதல் நாள் சனிக்கிழமை குருவித்துறை சென்றிருந்தேன். திவ்ய தரிசனம் - பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வந்தேன்.

    பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

    ஈடுபாட்டுடன் அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  35. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி - சொல்ல மறந்துட்டேனே - 300 க்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    நல்வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  36. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
    குரு பார்க்க கோடி நன்மை... நான் குருவை இங்கு பார்த்து கோடி நன்மை பெறுகிறேன்...

    பதிவிற்கும் தகவலுக்கு வாழ்த்துகள்.../

    கோடி நன்மை பெறும் அருமையான கருத்துரைகளுக்கும்,வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  37. Lakshmi said...
    300- வது பதிவு சூப்பரா வந்திருக்கு. வாழ்த்துக்கள். குரு பார்க்க கோடி நன்மை/

    கோடி நன்மை பெறும் அருமையான கருத்துரைகளுக்கும்,வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  38. MANO நாஞ்சில் மனோ said...
    படங்கள் சூப்பருங்கோ....!!!/

    நன்றிங்க.

    ReplyDelete
  39. DrPKandaswamyPhD said...
    நல்ல பதிவு. ரசித்தேன்./

    கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  40. Rathnavel said...
    தங்களது 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவு./

    அருமையான வாழ்த்துக்களுக்கும்,கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  41. வேடந்தாங்கல் - கருன் *! said...
    அறிய பல தகவல்கள், பகிர்வுக்கு நன்றிகள்../

    அரிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  42. கோவை2தில்லி said...
    300க்கு வாழ்த்துகள். கோயிலும் தகவலும் அருமை.படங்கள் எல்லாமே அழகு./

    வாழ்த்துக்களுக்கும் அழகான் அருமையான கருத்துரைகளுக்கும்,மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  43. சந்திர வம்சம் said...
    தங்களின் 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  44. சத்ரியன் said...
    தகவல்களும், படங்களும் சிறப்பாக உள்ளது. பகிர்விற்கு நன்றிங்க.

    300-க்கு வாழ்த்துக்கள்.

    சிறப்பான வாழ்த்துக்களுக்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  45. shanmugavel said...
    முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.ஸ்தல புராணமும்,படங்களும் நன்று.

    வாழ்த்துக்களுக்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  46. சென்னை பித்தன் said...
    கிழமைக்குச் சரியான பதிவு.300க்கு வாழ்த்துகள்./

    வாழ்த்துக்களுக்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  47. வைரை சதிஷ் said...
    300-kum 400-podavum vazhththukal

    inraiya vilakkamum padangkaludan super/

    வாழ்த்துக்களுக்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  48. ஸ்ரீராம். said...
    முன்னூறாவது இடுகைக்கு பாராட்டுகள். தல வரலாறுகளாக பதிவிடுவது எளிதான காரியமில்லை. இந்தப் பதிவிலும் படங்கள் கவர்கின்றன. பல விவரங்கள் அளிக்கிறீர்கள்.

    சிறப்பான வாழ்த்துக்களுக்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  49. ananthu said...
    300 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் ... குருவின் கடாட்சம் உங்களுக்கு எப்போதும் உண்டு .../

    வாழ்த்துக்களுக்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  50. 300வது பதிவிற்க்கு நல்வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி பாராட்டுக்கள்.. தொடர்ந்து கலக்குங்க... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. 300 வது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    மாதவனின் திருவுருவங்கள்
    அனைத்தும் கண்டு களித்தேன்
    நன்றி சகோதரி.

    ReplyDelete
  52. குரு பார்க்க கோடி நன்மை.
    கசனின் வரலாறு,அழகான படங்கள்.பதிவு அமர்க்களமாக இருக்கு.

    300 வது பதிவுக்கு ம்வாழ்த்துக்கள், மேடம்.

    ReplyDelete
  53. குருவருளால் 300வது பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், எங்கள் பகுதி கோவில் பற்றி எழுதியதில் மகிழ்ச்சி, தொடர்ந்து 11 வாரங்கள் சென்று வழிபட்டு தொழிலும்,திருமணமும், புத்திர பாக்கியமும் கைகூடி வந்ததாக சொன்ன நண்பர்கள் உறவினர்கள் பலர் உண்டு, வெகு தொலைவில் இருந்து வர முடியாதவர்கள், முதல் வாரமும் கடைசி வாரமும் இங்கு வந்து தரிசித்து விட்டு, இடைப்பட்ட வாரங்களில் அருகிலுள்ள சிவாலய தட்சிணா மூர்த்தியையோ, நவகிரக குருவையோ வழி பட்டு அதே பலனை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது, (மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 68 ம் எண் பேருந்து 1 மணி நேரத்திற்கு ஒரு முறை இருக்கிறது, வியாழக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன.)

    ReplyDelete
  55. ;)
    ஸ்ரீ ராம ராம ராமேதி
    ரமே ராமே மநோரமே!

    ஸஹஸ்ரநாம தத்துல்யம்
    ராமநாம வராநநே!!

    ReplyDelete
  56. 1172+2+1=1175 ;)

    வெற்றிகரமான 300வது பதிவு. பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வை.கோ - அதென்ன 1172 + 2 + 1 = 1175 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
    2. அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

      நான் இவர்களின் பதிவுகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்க திட்டமிட்டுள்ளேன் ஐயா.

      அதற்கான ஒருசில ஆராய்ச்சிக்குறிப்புகள் தானய்யா, இந்த நம்பர்கள். இதைப்பற்றி தாங்கள் ஏதும் இப்போது இடைக்கால ஆராய்ச்சி மேற்கொள்ளாதீர்கள், ஐயா.

      நானே பிறகு தங்களுக்கு விபரமாகச் சொல்லுகிறேன், ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  57. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமையான பதிவு சென்ற ஆண்டு குருவித்துறை சென்று வந்து மறு மொழி இட்டிருந்தேன். இந்த ஆண்டும் 28/09/2013 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையன்று தம்பதி சமேதராகச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தோம். திவ்ய தரிசனம். தங்கள் பதிவுகளைப் படித்ததனால் எங்களூக்கும் கொஞ்சம் புண்ணீயம் கிடைக்கும். ஆன்மீக தரிசனம் - அடிக்கடி எங்காவது கோவிலுக்குச் சென்று வருகிறோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete