Friday, October 28, 2011

அருளும் அழகாபுத்தூர் அழகன்.
அழகென்ற சொல்லுக்கு முருகா 
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா 
சுடராக வந்த வேல் முருகா 
கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா 
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா 
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா  
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா 
அன்பிற்கு எல்லையோ முருகா 
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா!!முருகா!!!
தவறை யார் வேண்டுமானாலும்சுட்டிக்காட்டலாம், ஆனால், தண்டிக்கும் அதிகாரத்தைஎடுத்துக்கொள்ளக் கூடாது, என்று அறிவுறுத்திய விசேஷமான தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நச்சியார்கோவில் செல்லும் வழித்தடத்தில் உள்ளது அரிசில் கரைப்புத்தூர் என்ற அழகாபுத்தூர் திருக்கோயில்.இறைவன் சொர்ணபுரீஸ்வரர். 
படிக்காசுநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவி சௌந்தரநாயகி. அழகாம்பிகை என்ற பெயரும் உண்டு. 
சமயக்குரவர் நால்வரில் மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம்  கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலம்.
[Gal1]
மூலவர் படிக்காசுநாதர்

கைலாயம் சென்ற பிரம்மாவிடம்,பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார் முருகன். அது தெரியாததால்,அவரைச் சிறையில் அடைத்தார்.
பின்னர் படைப்புத்தொழில் கருதி .அவரை விடுவித்தார்
[BRAHMASASTA_cute-pictures.blogspot.com.JPG]
வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்குரிய சாபத்தை அவர் பெற வேண்டி வந்தது. 

அதற்காக சிவனை வேண்டி தவமிருந்தார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, தவறை அறிவுறுத்தினார்.

அவர் எந்த இடத்தில் முருகனுக்கு காட்சி தந்தாரோ அந்த இடத்திலேயே லிங்கமாக எழுந்தருளினார். அவரை படிக்காசுநாதர் எனஅழைத்தனர்.
அம்பாள் இங்கே அழகம்மை என்ற பெயரில் அருள் செய்கிறாள்.
அம்மன் அழகம்மை
[Gal1]
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களைகாக்கும்படி சிவனிடம் வேண்டினர்.சிவன், அசுரர்களை அழிக்கமுருகனை அனுப்பினார்.

Photobucket
அப்போது திருமால் முருகனுக்கு தனது சங்கு,சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களைசம்ஹாரம் செய்தார்.
சங்கு சக்கரத்துடன் முருகன்

சங்கு, சக்ரதாரியாய் வைணவ திருக்கோலத்தில் முருகன்
மேற்கு நோக்கி அருளும் மூலவர்.
உண்மையானந்த முனிவரால் பூஜிக்கப்பட்ட திருக்கோயில்.
உலகில் வேறெங்கும் இல்லாதவாறு, சங்கு, சக்ரதரியாய் முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலம். 
தனது பன்னிரு கரங்களில் தனக்கே உரிய படைக்கலன்களை பத்து கைகளில் கொண்டு, இடப் பக்கம் முதலாவது திருக்கரத்தில் சங்கையும், வலப் பக்கம் முதலாவது திருக்கரத்தில் சக்கரத்தினையும் ஏந்திய வண்னம் காட்சியளிக்கின்றான் ஆறுமுகன். 
இவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷ ஜந்துக்களின் கடிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். 
 இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்திர மயில்மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
வள்ளி, தெய்வானை உடனிருக்கின்றனர்.
மகாலட்சுமிக்கும் சன்னதி இருக்கிறது
அவதாரதலம்: புகழ்த்துணை நாயனார் இத்தலத்தில் அவதரித்தவர்.[Gal1]
சிவபக்தரான இவர் வறுமையில் வாடினாலும், சிவபூஜையை தொடர்ந்துசெய்தார். ஒருசமயம் பசியால் உடல் தளர்ந்தபோது, கை தவறி தீர்த்தகுடத்தை லிங்கத்தின் மீது போட்டு மயக்கமுற்றார். அப்போது சிவன்அவரது கனவில் தோன்றினார். சிவபூஜை தடையின்றி நடக்க அருளும்படி வேண்டினார் புகழ்த்துணையார்.
சிவன் அவருக்கு தினமும் ஒருபடிக்காசு தருவதாகவும், அதை வைத்து பூஜை செய்யும்படியும் கூறினார். 

அதன்பின் புகழ்த் துணையார் பூஜையை தொடர்ந்தார்.

பலகாலம் இத்தலத்தில் சிவனுக்கு சேவை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். 
நாயன்மார்களில் ஒருவராகவும் இடம் பிடித்தார்.
சிறப்பம்சம்: சுந்தரர் தன் மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார்.
நவக்கிரக மண்டபத்தில் சூரியனும்,சந்திரனும் கிழக்கு திசை நோக்கி இருப்பர். இங்கு இருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எனவே இது அமாவாசை திதி கொடுக்க உகந்த தலமாக இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் செல்வவரம் அருளும், சொர்ணவிநாயகர் என்ற பெயரில் உள்ளார்.
சொர்ண விநாயகர்
[Gal1]
படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டி, ஒன்றைமட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.
இரட்டை பைரவர்  
[Gal1]
தட்சிணாமூர்த்தி

முருகன்,சிவனுக்கு குருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.
திருவிழா: மாசிமகம், சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் புகழ்த்துணை நாயனார் குருபூஜை.
இருப்பிடம்: கும்பகோணத்தில்
இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில்
இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.
நடை திறப்பு: காலை 7- 12.30 மணி, மாலை 4- 8மணி.
[Image1]
Goddess Lakshmi Ganesha Diwali Backgrounds

24 comments:

 1. இன்றும் காலையில் முருகன் தரிசனம்....

  நல்ல தரிசனம் காணக்கிடைத்தது. மிக்க நன்றி.

  ReplyDelete
 2. நல்ல தரிசனம்

  ReplyDelete
 3. படிக்காசு நாதர் என்று சிறு வயதில் படித்தது நினைவு வருகிறது. அருமை சகோதரி. இன்னும் பல தெரியாத விடயங்கள். நன்றி. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 4. மயில் மீது இருக்கும் முருகன் படத்தைத் தாண்டி மேல போகவே மனசு வரவில்லை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அழகென்ற சொல்லுக்கு முருகா
  உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
  சுடராக வந்த வேல் முருகா
  கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா ...

  மிக அழகான பாடலுடன், மிக மிக அழகான படங்களுடன், தெள்ளத் தெளிவானதொரு பதிவு.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்,
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  [நிறைய விஷயங்களை பற்றியும், ஒவ்வொரு படத்தைப் பற்றியும், நிறைய முறை நீண்ட பின்னூட்டங்கள் தர வேண்டும் என்று என் மனது விரும்பினாலும், அது போல செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளேன். அம்பாள் பொருத்தருள வேண்டும்.]

  அன்புடன் vgk

  ReplyDelete
 6. வழக்கம் போல பதிவு+படங்கள் சூப்பர்

  ReplyDelete
 7. கேட்காத ஒரு தல புராணம் இது. நன்றி

  ReplyDelete
 8. புதிய தகவல்களுக்கு நன்றி!!

  ReplyDelete
 9. படித்து ரசித்தேன்.

  ReplyDelete
 10. அருமையான பதிவு அழகான படங்களுடன் , தொடர்ந்து தாருங்கள் ராஜேஸ்வரி .........

  ReplyDelete
 11. முத்தமிழ் முதல்வன் தரிசனம் அருமை.

  ReplyDelete
 12. நல்லதொரு விஷயத்தை தெரிய வைத்தற்கு நன்றி

  ReplyDelete
 13. நான் பலமுறை நாச்சியார் கொவிலும் திருச்சேறை சென்று வந்திருந்தாலும் நான் பார்க்காத தலம், அடுத்த முறை நிச்சயம் தரிசிப்பேன்.

  ReplyDelete
 14. தொடர்பு கொள்ள தொலைபேசி உள்பட முழுமையான தகவல்கள்.படங்களும் நன்று.

  ReplyDelete
 15. முருக தரிசனம் மனதிற்கு திருப்தி.நன்றி தோழி !

  ReplyDelete
 16. அழகானவன் முருகனின்
  ஆனந்த அருள்பெற்றோம் சகோதரி.

  ReplyDelete
 17. அழகாபுத்தூர் அழகனின் அருள் பதிவின் மூலம் கிடைத்தது... நன்றி.

  ReplyDelete
 18. அருமையான தரிசனம்...

  ReplyDelete
 19. ;)
  ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
  ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி

  ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
  ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி

  ஆகமவேத கலாமய ரூபிணி
  அகில சராசர ஜனனி நாராயணி

  நாககங்கண நடராஜ மனோகரி
  ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி

  ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
  ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி

  ReplyDelete