Friday, October 21, 2011

ஸ்ரீலட்சுமி குபேர பூஜை.


தீபாவளி அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை. செல்வம் பெருக வழி வகுக்கும் அருமையான எளிமையான பூஜையாகும்.
குறையாத செல்வம் தரும் குபேர காயத்ரி
 ஓம் யக்ஷராஜாய வித்மஹ
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடையும் போது மந்தார மலை மத்தாக பயன்படுத்தப்பட்டது. அதை நிறுத்த ஆதாரமாக மகாவிஷ்ணு கூர்மஅவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மலையை தாங்கி பிடித்துக் கொண்டார்.

அப்போது பூமா தேவிக்கும், மகாவிஷ்ணுவுக்கும் மகனாக பிறந்தவன்தான் நரகாசுரன். பூமா தேவி சத்யாபாமாவாக உருவெடுத்து கிருஷ்ணாவதாரத்தின்போது கிருஷ்ணனை மணந்து கொண்டார். 
இதனால் சத்யபாமாவுக்கு பூமாதேவியின் அம்சம் உண்டு.

கிருஷ்ணாவதாரத்தில் கம்சனை சம்ஹாரம் செய்தபின் துவாரகையில் ருக்மணியை மணம் புரிந்து கொண்டார் கிருஷ்ணர். 
அதன் பின் சத்யபாமாவை மணம் புரிந்துகொண்டார்.

இந் நிலையில் தேவேந்திரன் நரகாசுரனின் கொடுமைகள் குறித்து கூறியதும் பாமாவுடன் நராகசுரனை சம்ஹாரம் செய்ய கிளம்பினார் கிருஷ்ணர்.

நரகாசுரனின் தாய் பூமாதேவியான சத்யபாமா. தந்தை கிருஷ்ணரான 
மகா விஷ்ணு.

தந்தை மகனை கொல்ல துணியலாம். ஆனால், தாய் துணிவாரா? மனம் வருமா? வரும். மகன் அசுரானாகி துன்பம் தருவதால் அவனை கொல்ல தாயும்தயங்கமாட்டாள் என்று உணர்த்தத்தான் பாமாவுடன் சென்று நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கிருஷ்ணர்.

பிராக்ஜோதிடபுரத்தின் அரசனாக இருந்த நரகாசுரனைக் கொன்ற பின் அவனது மகனான பகதத்தனை அரசனாக நியமித்தார் கிருஷ்ணர்.

அவனும் தன் தந்தையை கிருஷ்ணர் கொன்றதில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று காட்டும் விதமாக கிருஷ்ணர் வரும் போதெல்லாம் வெடிகள்,மத்தாப்புகள் கொளுத்தி அவரை வரவேற்றான்.

ஆண்டு தோறும் கிருஷ்ணர் வரும் போது பட்டாசு வெடித்து தீப ஆளி (தீப வரிசை) வைத்து நகரை அலங்கரித்ததால் நரகாசுரன் இறந்த நாள் தீபாவளி என்றுபெயர் பெற்றதாக ஒரு வரலாறு கூறுகிறது.


குபேர பூஜை:
நரகாசுரனைக் கொன்ற கிருஷ்ணராகிய மகாவிஷ்ணுவின் மார்பில் குடி கொண்டிருப்பவள் லட்சுமி. நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தன்று விஷ்ணுவையும் அவர்மனைவியான லட்சுமியையும் பணத்திற்கு அதிபதியான குபேனையும் பூஜித்தால் பஞ்சமில்லாமல் பணம் பெருகும் என்பது ஐதீகம்.

லட்சுமி படத்தையும், குபேர யந்திரத்தையும் வைத்து பூக்களுடன் பணம், காசுகளையும் போட்டு பூஜை செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு முன் பூஜை துவங்கப்படவேண்டும்.
ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், 
பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், 
இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், 
அரசர்களிடம் ராஜ லட்சமியாகவும், 
வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், 
குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், 
பசுக்களில் கோமாதாவாகவும், 
யாகங்களில் தட்சிணையாகவும், 
தாமரையில் கமலையாகவும், 
அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்

குத்துவிளக்கின் 5 முகங்களும் ஏற்றப்பட்டு பூஜை செய்ய வேண்டும்.

நமது வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அகலவும், காரியத்தடைகள் நீங்கவும், கடன் பிரச்னைகளிலிருந்து மீளவும், இல்லத்தில் வளம் கொழிக்கவும், செல்வம் செழிக்கவும் லட்சுமி குபேரன் ஆசி தருவான்!Om Maha Lakshmiye Namaha!
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள 
சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!21 comments:

 1. வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற பதிவு

  படங்கள் அத்தனையும் அருமை

  ReplyDelete
 2. நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி:
  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மிம்யை
  கமல ஹாரின்னைய சிம்ஹவாஹின்யை
  தனகரிஷ்ன்யை ஸ்வாஹா.

  செல்வவள லக்ஷ்மி மந்திரம்:
  ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
  மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
  மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.

  ReplyDelete
 3. மேடம் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்...படங்களுடன் பகிர்ந்ததுக்கு நன்றிகள்!

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 5. தீபாவளி களை கட்டி விட்டது!
  நன்றி.

  ReplyDelete
 6. தீபாவளி அன்று செய்ய வேண்டியவை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 7. பூஜை முறைகள் குறித்து விளக்கியதற்கு நன்றி!

  ReplyDelete
 8. அருமையான லட்சுமி குபேர பூஜை படங்களுடன்.. குபேர காயத்ரி மந்திரம்..விளக்கங்களுடன் அருமையான ஆன்மீக பகிர்வு.. பாராட்டுக்களுடன் நன்றி.

  ReplyDelete
 9. சத்தம் இல்லாத தீபாவளியை எதிர்பார்த்து

  ReplyDelete
 10. பதிவே லெட்சுமிகரமாக உள்ளது
  படங்களும் விளக்கியுள்ள விதமும்
  மிக மிக அருமை
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 11. லட்சுமி கடாட்சம்,
  தீபவொளி விளக்கமும்
  படங்களும் அற்புதம் சகோதரி.

  ReplyDelete
 12. படங்களும் , செய்திகளும் அற்புதம்.அருமை.

  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. லக்‌ஷ்மி குபேர பூஜை விளக்கம் அருமை.
  அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு.
  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை பற்றிய பதிவு அருமை. எல்லாப் படங்களிலும், விளக்கங்களிலும் லக்ஷ்மி கடாக்ஷம் தெரிகிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. அருமையான படங்களுடன் பக்தி பதிவு .

  ReplyDelete
 16. வட இந்தியாவில் தீபாவளியன்று லட்சுமி பூஜையும் மறுனாள்தான் தீபாவளி என மூன்று நாட்கள் கொண்டாட்டம் இருக்கும். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 17. 'யாம் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்' என்றிருக்கும் த‌ங்க‌ள் சேவை எங்க‌ளுக்குத் தேவை!

  ReplyDelete
 18. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. மங்களகரமாய் இருக்கிறது, படிக்க, பார்க்க பரவசம். வாழ்க நீர் பல்லாண்டு வளமுடன்

  ReplyDelete
 20. ;)
  ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
  ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி

  ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
  ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி

  ஆகமவேத கலாமய ரூபிணி
  அகில சராசர ஜனனி நாராயணி

  நாககங்கண நடராஜ மனோகரி
  ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி

  ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
  ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி

  ReplyDelete