Tuesday, October 11, 2011

நலம் நல்கும் நங்கவள்ளி நரசிம்மர்நரசிம்மர் சுயம்புவாக அமைந்துள்ள தனிசிறப்பு வாய்ந்த சிவாலயம் நங்கவள்ளியில் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் மூலவராக வேண்டும் வரம் தரும் சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான திருத்தலம். 

கோவிலில் 75 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. திருக்கோவில் இராஜகோபுரத்தின் மரக்கதவுகளின் சிற்ப வேலைப்பாடே அழகாக செதுக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும்.
ராஜகோபுர வாயிலில் நுழைந்து சென்றால் இருபக்கமும் பெரியதிருவடி, சிறிய திருவடிகளான கருடாழ்வார், அனுமன் நம்மை வரவேற்க முழுமுதற்கடவுளான வன்னிமர வினாயகரும் ,அரசமர விநாயகரும் ஒன்றாய் அமர்ந்து நமக்கு அருள்புரிகின்றனர். 
 அரசமர விநாயகர்
கோவிலுக்கு முன் கொடிமரம் வணங்கி அருகே துளசிமாடம் மற்றும் அஷ்டலட்சுமி மாடத்தில் 8 லட்சுமிகள் அருள்தர வணங்கி உள் பிரகாரத்தில் விஸ்வக்கேனர் சன்னதி, அஹாபில லட்சுமி நரசிம்மர் தேவஸ்தானம் ,
கருடாழ்வார் தரிசித்து உள்ளே மூலவரான லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து வந்தால் திருமணதடை, நல்வாழ்வு, நன்மக்கள் பேறு கிடைக்கும் என்பது திண்ணம். 


பிரசாதமாக துளசி,குங்குமம், சந்தனம், கற்கண்டு ..
சபாமண்டபத்தின் வெளியே மேல் பகுதியில் லட்சுமி நரசிம்மர்ண, பிரகலாதன், சிவன், பிரம்மா, விஷ்ணு, முனிவர்களின் சுதைச் சிற்பங்களும் சபாமண்டபத்தின் உட்புறம் மேல் பகுதிகளில் சத்யநாராயணர், ஸ்ரீநிவாச கல்யாணம், ராதா  கிருஷ்ணன் ருக்மணி, மகாவிஷ்ணு, நாரதர், அனந்தசயனம், பரதன் பாதுகை பெறுதல், ராமர் பட்டாபிஷேகம், அஷ்டலட்சுமி மற்றும் சிவன், பிரம்மா, விநாயகர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் உட்பட பல சுதைச் சிற்பங்கள் காட்சி மேடை உள்ளது.

16 கால் (கல்தூண்) நவராத்திரி மண்டப கல்தூண்களில், தச அவதாரமும், நாகர், விநாயகர், கருடர், ஆஞ்சநேயர், சுப்ரமண்யர், சிவலிங்கம், ஆழ்வார்கள், ஆமை,மான், சிங்கம், அன்னம், கிளி, குதிரை, வேடன், கண்ணப்பர் சிவலிங்கத்திற்கு கண்களைத் தருதல், காளிங்கப்பாம்பின் மீது கண்ணன் நடனம் ஆடுதல், அனுமன் மரத்திலும் கீழே சீதையும், பூமாதேவி தாங்குதல், கருடாழ்வார். சங்கு, சக்கரம், நாமம், துவார பாலகர்கள், கூனி உட்பட பல சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அம்மன் சவுந்தரவல்லி
[Gal1]
தீராத நோய்கள், திருமணத்தடை, அனைத்து வித பிரச்னைகளும் தீர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நரசிம்மர்
தொழில் வேலை வாய்ப்பு. நிலம், வீடு, வாகனம் வாங்க போன்ற காரியங்கள் ஈடேற இங்கு ராம வாக்கு (துளசி வாக்கு) கேட்டு அதன்படி செய்தால் காரியங்கள் வெற்றி அடைகின்றன என்று நம்பப்படுகிறது. புதிய வாகனங்களை இங்கு பூஜை செய்து எடுத்துச் செல்வதும் வழக்கம்.

பல சமுதாய மக்களுக்கு குலதெய்வ கோயிலாக விளங்குகிறது.
மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சிலைக்கு அக்காலத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டி, அடுத்து தயிர் அபிஷேகம் செய்வதற்குள் ஒரு அடி உயரத்திற்கு சாமி சிலைகளை புற்று மண் மூடி இருக்குமாம் ! புற்று மண்ணை அகற்றி விட்டு மீண்டும் அடுத்த அபிஷேகம் செய்வார்களாம். அதற்குள் சிலைகளைச் சுற்றி புற்றுமண் மூடிக்கொண்டே வருமாம். புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் புற்று நிரம்புவதில்லை. தற்போது, மூலஸ்தானத்தில் சாமிக்குப் பக்கத்தில் உள்ள பாம்புப் புற்று, தட்டு வைத்து மூடிவைக்கப்பட்டு இருக்கிறது. அமாவாசை, பௌர்ணமி காலங்களில் புற்றின் மேல் உள்ள தட்டு கீழே தள்ளப்பட்டுக் கிடக்கும். இந்தச் சமயங்களில் கோவிலுக்கு பாம்பு வந்து செல்கின்றது என்கிறார்கள்.

 பௌர்ணமி தோறும் சத்ய நாராயண பூஜையும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் ராகு காலத்தில் துர்க்கை பூஜையும், செவ்வாய் வெள்ளி நாட்களில் மாலை நேரத்தில் அஷ்டலட்சுமி (துளமி மடம்) பூஜையும், கருடாழ்வார், ஆண்டாள், விஷ்வக் சேனர், மற்றும் அரச மரத்து விநாயகருக்கு அபிஷேக வழிபாடும், திருவிளக்கு பூஜையும் 1008 சங்கு பூஜையும் (அபிஷேகம்) சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலைப் பூஜையும் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களில் சிறப்பு பூஜையும், உண்டு. பங்குனியில் தேர்த் திருவிழாவும் உண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் "தொட்டிநங்கை' என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது.

இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள்.

அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள் வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது என கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் லட்சுமிவடிவ கல்லை கண்டனர்.
 கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்தனர். பெரிய கோயிலாக கட்டப்பட்டது.


அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ஆலயம் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம்
சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் வனவாசி அருகில் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்த ஓர் பழங்கால திருக்கோவிலாகும். 


31 comments:

 1. சேலம் பக்கத்தில் நங்கவள்ளி... நல்ல தகவல்... படங்கள் அருமை...

  ReplyDelete
 2. அருமையான பதிவு. நாங்க சென்றபோது கோவில் புதுப்பிக்க வில்லை. வேலை நடந்துகொண்டு இருந்தது.

  ReplyDelete
 3. பாம்பும் அநுமானின் (நரசிம்மன்)படம் பார்க்கவே பயமாக உள்ளது. சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான தலம். நல்ல தகவல் . வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 4. படங்களும் பதிவும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. நல்ல பதிவு..
  முதலாவது படம் அருமை

  ReplyDelete
 6. சம்ஹாரம் முதல் சாந்தம் வரை!-அருமை!

  ReplyDelete
 7. முதல் அனிமேசன் படம் அமேசிங்....

  ReplyDelete
 8. நரசிம்ம படங்கள் அனைத்தும் பக்தி பரவசமூட்டுகிறது... பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. இந்த ஆலயத்தின் கருவறை சென்று வந்திருக்கேன்... எனது நண்பரின் குடும்பத்தினர்தான் கோவில் பணிகளை கவனித்து வருகின்றார்கள்...

  இங்கு மீண்டும் ஆலயத்தை பார்க்க மனதிற்கு மிகவும் இனிமையாய்...

  நன்றி பதிவிற்கு....

  ReplyDelete
 10. ஸ்ரீநிவாசன் பாலாஜி : உங்கள் பதிவிற்கு நன்றி.எனது தந்தைதான் இத்திருக்கோவில் அர்ச்சகர்.மேலும் தகவலுக்கு.. 9790404324.

  ReplyDelete
  Replies
  1. hi I live in Toronto, Canada. wanted to nice pooja and archchana for Narasimmer swami. any idea how i can do it.

   please he^lp

   thanks
   kala guru

   Delete
 11. எங்கெல்லாமோ இருக்கிற கோவில்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறீர்கள்.நன்றி.

  ReplyDelete
 12. படங்கள் அருமை

  அனுமன் படம் அருமை

  ReplyDelete
 13. படங்கள் அருமை

  அனுமன் படம் அருமை

  ReplyDelete
 14. ”நலம் நல்கும் நங்கவள்ளி நரசிம்மர்” தரிஸனம் கிடைக்கப்பெற்றோம். மிக்க மகிழ்ச்சி.

  வழக்கம்போல் படங்களும், விளக்கங்களும் வெகு அருமையாகவே உள்ளன.

  ஸ்வாமி பெருமாள் மிகவும் உக்ரஹமானவராக இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.vgk

  ReplyDelete
 15. அழகான படங்களுடன் நங்கவள்ளி நரசிம்மர் பற்றிய பதிவு அருமை.
  முதலில் உள்ள அந்த அனிமேடட் படம் மிக அற்புதம்.

  ReplyDelete
 16. பஞ்சமுக ஆஞ்சநேயரும் , லட்சுமி நரசிம்மர் படமும் மனதில் இனித்தது....

  ReplyDelete
 17. உங்களின் சிறந்த இடுகைகளை பார்த்து படங்களைப் பார்த்து நானும் எங்கே பக்தனாக மாறிவிடுவேனோ என அச்சப் படுகிறேன் பாராட்டுகள்

  ReplyDelete
 18. படங்களுடன் நல்ல பகிர்வு. புற்று மண் செய்தி ஆச்சரியமளிக்கிறது.

  ReplyDelete
 19. பதிவு பிரமாதம்!படங்கள் ப்ரமிக்க வைக்கின்றன!!!நன்றி.

  ReplyDelete
 20. வழக்கம்போல் அருமையான பகிர்வு!

  ஒரு வேண்டுகோள். உங்கள் பதிவுகளில் வேண்டிய திருத்தலங்களை/ இடங்களைப் பற்றித் தேடும்படியாக அமைத்தால் (search), அந்தந்த ஊர் செல்பவர்கள் தேவையான விவரங்களை அறியலாம் அல்லவா?!

  ReplyDelete
 21. Pothiyathai orru Koil pattri arinthukonden.
  Mikka makilchi dear.
  Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 22. நரசிம்மர் ஆலயம் இன்றுதான் பார்க்கின்றேன். புதிதாக இருக்கின்றது.

  ReplyDelete
 23. படங்களும் தகவல்களும் அருமை

  ReplyDelete
 24. அனிமேடட் படஙகள் நன்றாக உள்ளது.
  நரச்சிம்மர் ஆலயம் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்.அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.
  நன்றி.

  ReplyDelete
 25. ;)
  ஸ்ரீ ராம ராம ராமேதி
  ரமே ராமே மநோரமே!

  ஸஹஸ்ரநாம தத்துல்யம்
  ராமநாம வராநநே!!

  ReplyDelete
 26. எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள திருக்கோவில் , நேரில் சென்று பார்த்திருந்த போதிலும் இங்கே பார்ப்பதும் , படிப்பதும் மனதுக்கு நிறைவாக உள்ளது. மிகவும் நன்றி , வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

  ReplyDelete
 27. எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள திருக்கோவில் , நேரில் சென்று பார்த்திருந்த போதிலும் கூட இங்கே பார்க்கும் போது , ஆனந்தமாகவும் , அற்புதமாகவும் இருக்கின்றது , நன்றிகள் . வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

  ReplyDelete
 28. படங்களை ரசித்தேன். பதிவைப் படித்தேன்.

  ReplyDelete