Thursday, October 6, 2011

வல்லமைதரும் வெற்றித்திருநாள்






தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே.
- அபிராமி அந்தாதி
அம்பிகையைச் சரணடைந்தால் அதிகவரம் பெறலாம் 

லோக மாதாவாகிய ஆதிபராசக்தி, கிரியாசக்தி,இச்சாசக்தி, ஞானாசக்தி என மூன்றுவித தேவிகளாக, துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி எனும் நாமங்கள் பூண்டு பிரபஞ்சம் முழுவதற்கும் அருள்பாலிக்கிறாள்.

மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள்.

தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.
விஜயதசமி தினத்தில் ஆரம்பிக்கப்படும் எந்தச்செயலும்,தெய்வசக்திகளின் அருளால் இனிது விருத்தி அடையும்  வெற்றிநடை போடும் என்பது நம் பாரம்பரியம். 
சங்கீதம், நடனம், வாத்தியக்கலைகள் முதலிய கலைகள் பயில ஆரம்பிக்கப்படும்.   

Navratri Puja Thali
சிறார்களுக்கு ஏடுதொடக்குதல் அல்லது வித்தியாரம்பம் எனப்படும் அரிச்சுவடி எழுத தொடக்கி வைக்கப்படுதலும் பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும்.

அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.
*Sri Maa*   (Durga Maa) ~ A God with 108 names
அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். 

அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. 

மைசூர் தசரா பண்டிகையை போன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த பண்ணடிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். 

நவராத்திரியின் போது வடநாட்டில் ராமரின் லீலைகளை நாடகமாக நடத்துகின்றனர். 
ராமர் பட்டாபிஷேகத்தன்று ராவணனின் உருவத்தை 100 அடி உயரத்தில் காகிதம், மூங்கில் முதலியவற்றால் உருவாக்கி அதில் வெடிகள் வைத்து எரித்து விடுகின்றனர். அதை வாணவேடிக்கையாக பார்த்து மகிழ்கின்றனர்
மகிஷன் என்ற அசுரன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தது குறித்து மும்மூர்திகளிடம் தேவர்கள் முறையிட்டனர்.

மகிஷனின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுசர சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர்முடிவு செய்தனர். 

மும்மூர்த்திகளின் முகங்களில் இருந்து வெளிப்பட்ட ஒளி, நெருப்பைப்போல் வெளிவந்தது.

அது ஒரு பெண் வடிவம் கொண்டது. அந்த பெண் துர்க்கா தேவி என அழைக்கப்பட்டார்.

ஒன்பது நாள் விரதம் இருந்து ஆயுதபூஜை செய்து பத்தாம் நாள் வளையலணிந்த கைகளில் வாள்பிடித்து போய் மகிஷனை கொன்று மகிஷாசுரமர்த்தினியாக திரும்பி வந்தாள்.
 Maa Durga Goddess
தேவி விரதம் இருந்த தினங்களை நவராத்திரி என்கிறார்கள்.

அசுரனை ஜெயித்த தினம் .விஜயதசமி வடநாட்டில் துர்க்கா பூஜை
 9 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.. 

http://www.dollsofindia.com/dollsofindiaimages/goddess-pictures/nava-durga-nine-forms-of-goddess-durga-poster-with-AT25_l.jpg



வல்லமை மின் இதழில் நேற்று வெளியான முதல் படைப்பு இது!


இதோ தங்களின் படைப்பு!

43 comments:

  1. படங்களே பக்தியை அதிகரிக்க செய்கிறது... ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோதரி. மகிஷாசுரமர்த்தனி சிறப்போ சிறப்பு. வட்டத்தில் நைவேத்தியங்கள் உள்ள படம் எனக்குப் புதிசாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. அனைத்தும் அருமை. நன்றி வல்லமைக்கு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  3. படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. வலைப்பூவில்.....
    மூன்றாம் கோணத்தில்....
    வல்லமையில்....

    ஆஹா!

    எங்கெங்கும் திரும்பினும் சக்தியடா என்பது போல ”சர்வ வல்லமை” பொருந்திய தாங்கள் இன்று ’வல்லமை’யிலும் காட்சி தருவதில் வியப்பொன்றும் எனக்கில்லை.

    வாழ்த்துக்கள். மீண்டும் பிற்பகல் சந்திப்போம். vgk

    ReplyDelete
  5. மிக அழகான பக்திப் பரவசமூட்டும் படங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. மிக மிக அருமையான பதிவு
    வெற்றித்திரு நாள் அனைவருக்குமாக
    மிக அழகாக பதிவிட்டமைக்கு
    மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வித்யாரம்பம் விளக்கம் + படங்கள் அழ்காயிருக்கு.

    ReplyDelete
  8. மிக அழகான படங்கள். தேவையான விளக்கங்கள். நன்றி. வல்லமையுடன் இன்னும் பல பதிவுகள் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மாய உலகம் said...
    படங்களே பக்தியை அதிகரிக்க செய்கிறது... ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்//

    ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

    Thank you for comment.

    ReplyDelete
  10. kavithai (kovaikkavi) said...
    வாழ்த்துகள் சகோதரி. மகிஷாசுரமர்த்தனி சிறப்போ சிறப்பு. வட்டத்தில் நைவேத்தியங்கள் உள்ள படம் எனக்குப் புதிசாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. அனைத்தும் அருமை. நன்றி வல்லமைக்கு வாழ்த்துகள்./

    Thank you for comment.

    ReplyDelete
  11. N.Ganeshan said...
    மிக அழகான பக்திப் பரவசமூட்டும் படங்கள். பாராட்டுக்கள்./

    Welcome Sir. Thank you.

    ReplyDelete
  12. Ramani said...
    மிக மிக அருமையான பதிவு
    வெற்றித்திரு நாள் அனைவருக்குமாக
    மிக அழகாக பதிவிட்டமைக்கு
    மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.

    Thank you very much sir.

    ReplyDelete
  13. FOOD said...
    வித்யாரம்பம் விளக்கம் + படங்கள் அழ்காயிருக்கு./

    Thank you very much sir.

    ReplyDelete
  14. சாகம்பரி said...
    மிக அழகான படங்கள். தேவையான விளக்கங்கள். நன்றி. வல்லமையுடன் இன்னும் பல பதிவுகள் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்./



    Thank you very much ..

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வலைப்பூவில்.....
    மூன்றாம் கோணத்தில்....
    வல்லமையில்....

    ஆஹா!

    எங்கெங்கும் திரும்பினும் சக்தியடா என்பது போல ”சர்வ வல்லமை” பொருந்திய தாங்கள் இன்று ’வல்லமை’யிலும் காட்சி தருவதில் வியப்பொன்றும் எனக்கில்லை.

    வாழ்த்துக்கள். மீண்டும் பிற்பகல் சந்திப்போம். vgk//

    Thank you very much sir. waiting for comments.

    ReplyDelete
  16. Lakshmi said...
    படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு.//


    Thank you very much Lakshmi amma..

    ReplyDelete
  17. முக்கியமான வரிகள்.பகிர்வுக்கு நன்றி.படங்களும் பகிர்வும் அருமை.அசுரனை ஜெயித்த தினம் விஜயதரமி என்று உள்ளது.

    ReplyDelete
  18. As usual i enjoyed much Rajeswari.
    I am happy like me so many guys will be enjoying your pictures, writings from the other site also.
    Keep doing dear.
    all the best.
    viji

    ReplyDelete
  19. படங்களும் பதிவும் அருமை !..தங்களுக்கு ஆயுத பூஜை
    நல்வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    ReplyDelete
  20. கடைசியில் காட்டப்பட்டுள்ள வண்ணக்கோலம் நல்ல அழகு. கோலத்தின் நடுவே நம் தொந்திப் பிள்ளையார் வேறு, ஹெல்மெட் ஏதும் போடாமல்.

    யார் வரைந்த கோலமோ அவருக்கும், காட்டி மகிழ்வித்த உங்களுக்கும் சபாஷ்.

    ReplyDelete
  21. கைகளில் வீணையுடன், ஜபமாலையுடன், ஓலைச்சுவடியுடன், வெண்பட்டு வஸ்திரத்தில், வெண் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி [கலைமகள்] க்கு முதலிடம் கொடுத்திருப்பது மிகப்பொருத்தம் தான்.

    ReplyDelete
  22. //அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்.//

    சரணடைந்து விட்டேனே!
    ஓரளவு வரம் தந்து வருகிறாள்.
    அதிக வரம் பெற்று விட ஆசை தான்.

    போகப்போகப் பார்ப்போம்.

    கடைக்கண் பார்வை பட்டாலே போதும்.

    ReplyDelete
  23. //விஜயதஸமி தினத்தில் ஆரம்பிக்கப்படும் எந்த செயலும், தெய்வ சக்திகளின் அருளால், இனிது விருத்தி அடையும், வெற்றி நடை போடும் என்பது, நமது பாரம்பர்யம்.//

    சந்தோஷம். இனிய நவராத்திரி நேரம் விஜயதஸமியையொட்டி நன்கு மலர்ந்து விரிந்துள்ள செந்தாமரை போன்ற நம் நட்பும் அதுபோலவே வெற்றி நடை போடட்டும், விருத்தி அடையட்டும், அதில் என்றும் தொடர்ந்து நறுமணம் கமழட்டும்.

    அம்பாள் அதற்கு அருள் புரியட்டும்.

    ReplyDelete
  24. shanmugavel said...
    முக்கியமான வரிகள்.பகிர்வுக்கு நன்றி.படங்களும் பகிர்வும் அருமை.அசுரனை ஜெயித்த தினம் விஜயதரமி என்று உள்ளது./

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  25. viji said...
    As usual i enjoyed much Rajeswari.
    I am happy like me so many guys will be enjoying your pictures, writings from the other site also.
    Keep doing dear.
    all the best.
    viji/

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  26. அம்பாளடியாள் said...
    படங்களும் பதிவும் அருமை !..தங்களுக்கு ஆயுத பூஜை
    நல்வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு ..../

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    தங்களுக்கும் இனிய ஆயுத பூஜை
    நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக சகோதரி

    ReplyDelete
  27. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசியில் காட்டப்பட்டுள்ள வண்ணக்கோலம் நல்ல அழகு. கோலத்தின் நடுவே நம் தொந்திப் பிள்ளையார் வேறு, ஹெல்மெட் ஏதும் போடாமல்.

    யார் வரைந்த கோலமோ அவருக்கும், காட்டி மகிழ்வித்த உங்களுக்கும் சபாஷ்./

    கோலத்தை ரசித்து அளித்த கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  28. .வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்.//

    சரணடைந்து விட்டேனே!
    ஓரளவு வரம் தந்து வருகிறாள்.
    அதிக வரம் பெற்று விட ஆசை தான்.

    போகப்போகப் பார்ப்போம்.

    கடைக்கண் பார்வை பட்டாலே போதும்./

    அம்பிகையைப் பிரார்த்திக்கலாம்.

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  29. ஷோகேஸ், அருகே புத்தம் புதிய டபுள் டோர் ஃபிரிட்ஜ், அதன் அருகே வாழை மரக்கன்றுகளுடன் பூஜை ஏற்பாடுகள், படங்கள், நீலக்கலரில் ஒரு ரெட்டு விரிப்பு, கல்யாணி, தீபதூபக்கால்கள், மணி, பிரஸாத வகையறாக்கள், உடைத்த தேங்காய் மூடிகள் (நாளிகீர கண்டத்வயம்) இரண்டு புறமும் அழகாக எரியும் பஞ்சமுக குத்துவிளக்குகள், மெருன் கலர் தரை, வலதுபுறத்தில் உள்பக்கம் தாளிட்ட புதுப்பெயிண்ட் அடித்த கதவு, இதர பூஜா த்ரவ்யங்கள் என அனைத்தையும் பார்க்கையில் அங்கு நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்ட ஒரு திருப்தி ஏற்பட்டது. கற்பனையில் சாப்பிட்ட பிரஸாதமும் மிகவும் ருசியாகவே இருந்தது.

    ReplyDelete
  30. தொந்திப்பிள்ளையார் அருமையாக வீணை வாசிக்க, அந்த எலியார் அவரின் இடது காலில் ஒய்யாரமாகச் சாய்ந்து கால்மேல் கால்போட்டு,ஈஸிச்சேரில் அமர்ந்ததுபோல அமர்ந்துகொண்டு, வீணாகானத்தை ரசிப்பதை கவனித்தீர்களா? மேடம்.

    அது என் கலைக்கண்களுக்கு மிகவும் சூப்பராகத் தெரிகிறது.

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஷோகேஸ், அருகே புத்தம் புதிய டபுள் டோர் ஃபிரிட்ஜ், அதன் அருகே வாழை மரக்கன்றுகளுடன் பூஜை ஏற்பாடுகள், படங்கள், நீலக்கலரில் ஒரு ரெட்டு விரிப்பு, கல்யாணி, தீபதூபக்கால்கள், மணி, பிரஸாத வகையறாக்கள், உடைத்த தேங்காய் மூடிகள் (நாளிகீர கண்டத்வயம்) இரண்டு புறமும் அழகாக எரியும் பஞ்சமுக குத்துவிளக்குகள், மெருன் கலர் தரை, வலதுபுறத்தில் உள்பக்கம் தாளிட்ட புதுப்பெயிண்ட் அடித்த கதவு, இதர பூஜா த்ரவ்யங்கள் என அனைத்தையும் பார்க்கையில் அங்கு நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்ட ஒரு திருப்தி ஏற்பட்டது. கற்பனையில் சாப்பிட்ட பிரஸாதமும் மிகவும் ருசியாகவே இருந்தது./

    தங்களின் அத்தனைகருத்துரைகளும் மீண்டும் ஒருமுறை பதிவை பார்க்கவும், படிக்கவும் வைத்தன் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  32. இன்று அம்பு போட்டு அசுரனை வீழ்த்தும் நிகழ்ச்சி, இங்குள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதஸ்வாமி கோயில், வாசலில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருஷமும் கட்டாயம் போய் பார்ப்பதுண்டு.

    ReplyDelete
  33. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தொந்திப்பிள்ளையார் அருமையாக வீணை வாசிக்க, அந்த எலியார் அவரின் இடது காலில் ஒய்யாரமாகச் சாய்ந்து கால்மேல் கால்போட்டு,ஈஸிச்சேரில் அமர்ந்ததுபோல அமர்ந்துகொண்டு, வீணாகானத்தை ரசிப்பதை கவனித்தீர்களா? மேடம்.

    அது என் கலைக்கண்களுக்கு மிகவும் சூப்பராகத் தெரிகிறது./

    மிகவும் ரசிக்கவைத்த படம்தான.

    எததனையோ அசைபடங்களும் வண்ணப்படங்களும் இருக்க என் கருத்தைக்கவர்ந்தவரும் தொந்திப்பிள்ளையார் தான் ..

    ReplyDelete
  34. தேவியின் திரு உருவங்களைக் காட்டியுள்ள அனைத்து படங்களுமே அருமையாக உள்ளன.

    தங்களின் இடைவிடாத கடும் உழைப்பு பளிச்செனத் தெரிகிறது.

    நீடூழி வாழ்க என மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.
    vgk

    ReplyDelete
  35. படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  36. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. மேலிருந்து கீழ் மூன்றாவது படமும்

    கீழிருந்து மேல் இரண்டாவது படமும்
    நேரில் ஆள் நிற்பது போல் உள்ளது

    அருமை மேடம்

    ReplyDelete
  38. படங்கள் நல்லா இருக்கு :)

    ReplyDelete
  39. புதிய பக்திப் பாடலுடன் உங்கள் அம்பாளடியாள் அவள் தளத்தில் இன்று முடிந்தால் வாருங்கள் சகோதரி .

    ReplyDelete
  40. அபிராமி அந்தாதியை தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. முக்கியமாக கடக ராசி அன்பர்கள் அபிராமி அம்மனை நினைத்து சொல்ல வேண்டியது.... நன்றி

    ReplyDelete
  41. ;)
    ஸ்ரீ ராம ராம ராமேதி
    ரமே ராமே மநோரமே!

    ஸஹஸ்ரநாம தத்துல்யம்
    ராமநாம வராநநே!!

    ReplyDelete
  42. 1134+10+1=1145 ;)))))

    தங்களின் பல்வேறு பதில்கள் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளன. மிகவும் சந்தோஷம். நன்றிகள்.

    ReplyDelete