Friday, October 14, 2011

சுந்தர வாழ்வருளும் சுந்தரமகாலட்சுமி




நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்க சக்ரகதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    
திருமகள் திருவருள் கிட்ட...இந்திரன் துதித்த லக்ஷ்மி ஸ்தோத்திரம்


செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு முறை ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் 
சேர்ந்திருந்ததால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம்.

நான்முகன் சாபவிமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்டபோது ‘‘மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உனக்கு சாப விமோசனம். உடனே பூலோகத்திற்குச் செல்வாயாக!” என்று முனிவர்கள். அருளியபடி மண்ணுலகம் வந்தார் நான்முகன். 

 நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று நாரணன் ஏற்கெனவே  தீர்மானித்திருந்ததனாலேயே  அரசர் கோயிலில் எழுந்தருளினார். 

அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுதும் சென்று கொண்டிருந்த  இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்த ஜனக மகாராஜா நாரணன் எழுந்தருளிய விஷயத்தைக் கேள்விப்பட்டு  பெருமாளை தரிசிக்க சென்றார். 

இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நான்முகன் கையில் கமண்டலத்துடன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி மாதவனின் ஆசியைப் பெற்றார். 

ஜனக மன்னனையும், பெருமாளையும் ஒரு சேர தரிசித்து சாபவிமோசனம் பெற்ற மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். 

தினமும் வந்து பெருமாளை தரிசிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார். 

ஒரு நாள் ஜனகர் வராததால் பெருமாள், ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே  புறப்பட்டு வந்தார். 

ந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை செய்துகொண்டார். 

பிறகு, ‘ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன’ என காவலாளிகளிடம் சொல்லி பெருமாள் புறப்பட்டார். 

ஒரு ராஜாங்க விஷயமாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் வினவ, நடந்ததை அறிந்து சிலிர்த்தார். 

நித்யகர்மாவிலிருந்து தவறிவிட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்து  தேவலோக விஸ்வகர்மாவினால் எழுப்பப்பட்ட ஆலயம் இது.
Arasar Koil Sundara Mahalakshmi (by Raju's Temple Visits)
நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால், பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள்.

பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம்; பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள் பிராட்டி.

பரமாத்மா, ‘‘இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை, கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன்.

இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’’

என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து, அவளை மகிழ்வித்தார்.  அவருக்கு உணவிட்டு, உபசரித்து, தாமரையில் வசிக்கும் தன் சார்பாக 
IMG_8462 (by Raju's Temple Visits)
எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். 

அதன்படியே பெருமாளும்  கமலவரதராஜப் பெருமாளாக கோயில் கொண்டார்.

ஆலய முகப்பை தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம். அடுத்து கருடாழ்வார் மண்டபம். அதற்கு நேரே பெருமாள். வலது புறம் தாயார் தனிக் கோயில் கொண்டருள்கிறாள்.

இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். 

கிழக்குப் பார்த்த சந்நதியில் அருளே வடிவாய் அழகே உருவாய் வீற்றிருக்கிறாள் பிராட்டி. பெயருக்கு ஏற்றாற்போல் சுந்தரியாக மனதை கொள்ளை கொள்கிறாள். 

மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய&வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்ரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள். 

கற்பூர ஆரத்தியின் போது தாயாரின் வலது பாதத்தை தரிசிக்க வைக்கிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கும் வலது பாதத்தில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல்.  இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். 


. தாயார் சந்நிதியில் காணப்படும் சடாரியின் மேல் பக்கமும் தாயாரின் வலது திருவடியில் ஆறு விரல்கள். 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது.
அச்சமயம் தேவியை வணங்குவோர்க்கு கல்வி, வியாபாரம், திருமணம் சிறக்கிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

குறிப்பாக வரலட்சுமி விரதத்தன்று இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. அவள் மண்டபத்தின் முன் ஒரு இசை மண்டபம் உள்ளது. அங்குள்ள ஒவ்வொரு தூணும், நம் விரலால் சுண்ட, ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. 
Musical Pillars (by Raju's Temple Visits)
நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது. 
Vinayagar at the entrance of the Mahalakshmi shrine (by Raju's Temple Visits)
 அட்சய கணபதி, வைணவ சம்பிரதாயப்படி 
தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் காட்டுகிறார். 

அனுமன் ஒரு முறை விநாயகரிடம் இந்த அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டாராம். 

அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாளாம். 

னவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார். 

இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம்.
IMG_8501 (by Raju's Temple Visits)
சுந்தரமகாலட்சுமியின் சந்நதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தரின் சிற்பம் உள்ளது.

இந்த சுந்தரமகாலட்சுமி தேவிக்கு பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்குப் படைப்பாராம்.

இன்றும் அபிஷேக சமயங்களில் அன்னையைப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.
Entrance to the Mahalakshmi shrine (by Raju's Temple Visits)
தாயாரின் கருவறையைச் சுற்றி யோகநரசிம்மமூர்த்தி, குபேரன், காளிங்கநர்த்தன கண்ணன், பரமபதநாதர், திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக வீற்றருள்புரியும் மூர்த்திகள், திருப்பணி செய்ய பூமியை தோண்டியபோது கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பெருமாள் தரிசனம். அவர் சந்நதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், தேசிகர் ஆகியோரும் உறைகின்றனர். 

பெருமாள் ஸ்ரீதேவி&பூதேவியோடு கமல வரதராஜராக 
நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். 
Entrance to the Perumal sanctum (by Raju's Temple Visits)
செங்கல்பட்டு&மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.
IMG_8465 (by Raju's Temple Visits)

Main mandapam (by Raju's Temple Visits)

On the walls of the Perumal sanctum (by Raju's Temple Visits)On the walls of the Perumal sanctum 1 (by Raju's Temple Visits)
Backside of the temple and the dismantled Perumal sanctum (by Raju's Temple Visits)
Dismantled Perumal sanctum (back side) (by Raju's Temple Visits)
IMG_0598Andal shrine (by Raju's Temple Visits)
Akshaya Tritiyai witness many other prosperity rituals including - a grand Homa for 
Goddess Sundara Mahalakshmi who controls 64 kinds of wealth energies; 
special Poojas for symbols of auspiciousness
Experience another side of Akshaya Tritiyai

Andal shrine, Perumal shrine and Mahalakshmi shrine (by Raju's Temple Visits)

39 comments:

  1. வெள்ளியன்று காலையிலே..மகாலட்சுமியின் அருளாசி கிடைக்க செய்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

    படித்தவுடன் நேரடியாய் கோவிலுக்கு சென்று வந்த உணர்வு

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. இறைவனின் மகிமை பற்றிய இரண்டு கட்டுரைகளை தங்களின் உதவியுடன் இன்றைய கலையில் படித்தேன் . தங்களுக்கு இறைவனின் அருளாசிகள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  3. சுந்தர வாழ்வருளும் சுந்தர மஹாலக்ஷ்மியை இன்று வெள்ளிக்கிழமை, தரிஸனம் செய்வித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    பத்மாஸனமாக மடித்து வைத்துள்ள அம்பாளின் வலது பாதத்தில், சுண்டிவிரலுக்கு அடுத்து அழகான அந்த ஆறாம் விரல், தகவல் களஞ்சியத்திடமிருந்து இன்று கிடைத்துள்ள அரிய தகவல் பொக்கிஷம்.

    பத்மம் / தாமரை / LOTUS அருமை பற்றி சொல்லவும் வேண்டுமோ!.

    அதிர்ஷ்டத்தையும், அருளையும் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    தூணைத்தட்டினால் ஸப்த ஸ்வர ஒலி எழும்புதல், ஓர் சிறிய துளையில் ஈர்க்கைச் சொருகினால், நான்கு வேதங்களாகப் பிளந்து மறு துளையில் வெளிவருதல், அருமையான தகவல்கள்.

    வழக்கம்போல அனைத்துப் படங்களும், தகவல்களும் அருமையோ அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  4. வழமைபோல படங்களும் பதிவும் அசத்தல்

    ReplyDelete
  5. உங்கபக்கம் வந்தாலே கோவில்களுக்கு சென்று வந்ததுபோல இருக்கு.

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சுந்தர வாழ்வருளும் சுந்தர மஹாலக்ஷ்மியை இன்று வெள்ளிக்கிழமை, தரிஸனம் செய்வித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    பத்மாஸனமாக மடித்து வைத்துள்ள அம்பாளின் வலது பாதத்தில், சுண்டிவிரலுக்கு அடுத்து அழகான அந்த ஆறாம் விரல், தகவல் களஞ்சியத்திடமிருந்து இன்று கிடைத்துள்ள அரிய தகவல் பொக்கிஷம்.

    பத்மம் / தாமரை / LOTUS அருமை பற்றி சொல்லவும் வேண்டுமோ!.

    அதிர்ஷ்டத்தையும், அருளையும் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    தூணைத்தட்டினால் ஸப்த ஸ்வர ஒலி எழும்புதல், ஓர் சிறிய துளையில் ஈர்க்கைச் சொருகினால், நான்கு வேதங்களாகப் பிளந்து மறு துளையில் வெளிவருதல், அருமையான தகவல்கள்.

    வழக்கம்போல அனைத்துப் படங்களும், தகவல்களும் அருமையோ அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk//


    அருமையான வாழ்த்துக்களுக்கும், ஆசியுரைகளுக்கும் , உற்சாகமளிக்கும்
    பாராட்டுதல்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  7. சம்பத்குமார் said...
    வெள்ளியன்று காலையிலே..மகாலட்சுமியின் அருளாசி கிடைக்க செய்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

    படித்தவுடன் நேரடியாய் கோவிலுக்கு சென்று வந்த உணர்வு

    நன்றியுடன்
    சம்பத்குமார்/

    அருளாசியுடன் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. Mahan.Thamesh said...
    இறைவனின் மகிமை பற்றிய இரண்டு கட்டுரைகளை தங்களின் உதவியுடன் இன்றைய கலையில் படித்தேன் . தங்களுக்கு இறைவனின் அருளாசிகள் கிடைக்கட்டும்./

    அருளாசியுடன் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. மதுரன் said...
    வழமைபோல படங்களும் பதிவும் அசத்தல்/

    அசத்தல் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  10. அழகாக மந்திரத்துடன் இன்றைய பதிவு அருமை மேடம்.

    படங்களும் ,பதிவில் உள்ள தகவல்களும் அருமை.

    ReplyDelete
  11. koodal bala said...
    லக்ஷ்மி அருள் ...

    கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. Lakshmi said...
    உங்கபக்கம் வந்தாலே கோவில்களுக்கு சென்று வந்ததுபோல இருக்கு./

    கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா,,

    ReplyDelete
  13. M.R said...
    அழகாக மந்திரத்துடன் இன்றைய பதிவு அருமை மேடம்.

    படங்களும் ,பதிவில் உள்ள தகவல்களும் அருமை./

    அருமையான அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  14. அருமையான ஸ்தல புராண விவரணை. நன்றிகள்

    ReplyDelete
  15. wow
    It is a great news for me dear.
    Let me visit the temple and prey Mahalakshmi.
    Thanks for sharing.
    Really you are great by giving such information. Keep doing Rajeswari
    viji

    ReplyDelete
  16. தல வரலாறு சிலிர்க்க வைக்கிறது.

    அழகிய படங்களுடன் அருமையான பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  17. அரிய தகவல்கள்.
    அற்புதமான படங்கள்.
    அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. படங்களுடன் பகிர்வும் பாந்தமாக அமைஞ்சிருக்கு.

    ReplyDelete
  19. ஆறு விரல் அம்மனின் அருள்..
    பழமையான கோவில் என்று தெரிகிறது. பழமை மாறா கோவில் படங்களைப் பார்க்கும்போது ஏதோ ஒரு சந்தோஷம். நீங்கள் போகாத கோவிலே இருக்காதா...எவ்வளவு தலபுராணப் புத்தகங்கள் வைத்திருப்பீர்கள்?

    ReplyDelete
  20. தாய் இரங்கா விடில் சேய் உயிர் வாழுமோ
    சகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ-அம்பா
    நீ இரங்காயெனில் புகல் ஏது?

    நன்றி

    ReplyDelete
  21. சுக்ரவாரத்தின் பூஜை வேளையில்
    பாக்யத லக்ஷ்மியின் தரிசனம் கிடைத்தது.

    ReplyDelete
  22. மகாலட்சுமியின் அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

    ReplyDelete
  23. முதலில் இருக்கும் மகாலட்சுமி படமே அற்புதம். உங்கள் உடன் நடந்து ஆலய தரிசனம் செய்த உணர்வு. தெளிவான படங்கள். ஒரு தலத்தை அறிந்து கொண்டதில் மகிழ்வு. இவ்வளவுக்கும் காரணமான தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  24. கோவில் படங்கள் அருமை
    கோவில் குறித்த தகவல்களையும் அருமையாக தொகுத்துத்
    தந்துள்ளீர்கள் .நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. சென்னை வந்தால் கண்டிப்பாக இந்த கோவிலை தரிசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  26. அற்புத தரிசனம் உங்களால் கிடைத்தது..கோடானு கோடி நன்றி

    ReplyDelete
  27. நேரில் சென்று புராணம் கேட்டு கோயிலை பார்த்த மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  28. வெள்ளிக்கிழமை மகாலக்ஷ்மியின் அருள் கிடைத்தது உங்களால்.

    ReplyDelete
  29. சுக்கிரவாரத்தில் மகாலக்ஷ்சுமியை ஹைதராபாத்திலிருந்தே தரிசித்துக் கொண்டேன். புண்ணியத்தில் பாதி உங்களுக்கு!

    ReplyDelete
  30. அழகான படங்களுடன் அபூர்வமான தகவல்கள் அடங்கிய உன்னதமான பதிவுக்கு வாழ்த்துக்கள்!! ஒன்னு மட்டும் நன்னா தெரியர்து, உம்மாசியாவே இருந்தாலும் தங்கமணி கிட்ட கொஞ்சம் பம்மிதான் போகனும்னு சொல்லாம சொல்றார். (ஹும்ம்ம்ம் தக்குடு! அவனவன் கவலை அவனவனுக்கு) :)

    ReplyDelete
  31. அன்பு சகோதரி
    சுந்தர மகாலட்சுமி முதல் படத்திலேயே
    அருள்பாலிக்கும் அழகு மனத்தைக் கவர்ந்தது.
    கடாட்சம் பெற்றோம் சகோதரி.

    ReplyDelete
  32. சுந்தர மகாலட்சுமியின் முதல் படமே மனதை கொள்ளைக்கொண்டது... பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  33. மஹா லக்ஷிமி துணை இருந்தால் உலகத்தில் எல்லாமே நம் வசம் ஆகி விடும் ஆலயத்தை வலம் வந்த நிறைவு உள்ளது நன்றி

    ReplyDelete
  34. மகாலட்சுமியின் அருள் இருந்தால் உலகத்தில் அனைத்தும் நம் வசமாகும்அதோடு ஆறு விரல் கொண்ட இந்த அம்பாளின் அருள் கிடைத்ததுபோல் உள்ளது ...............
    சுந்தர மகாலக்ஷ்மி அருளால் எல்லோரும் சகல செல்வங்களுடன் வாழ்வதற்கு அம்பாள அருள்புரிவாள்
    ஆலயத்தை சுற்றி வந்த மன நிறைவு கிடைத்தது நன்றி................

    ReplyDelete
  35. 1175+2+1=1178 ;)

    நீ....ண்....ட பின்னூட்டத்திற்கு பதில் அளித்துள்ளதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  36. Arasar கோயில் சுந்தர மகாலட்சுமி கோயில் சிலை தெய்வீக உள்ளது . இறைவி பற்றிய பகிர்ந்து நன்றி. தேவி புன்னகை முகத்துடன் மக்கள் அவரது நீண்ட நாள் பார்க்க செய்கிறது . https://www.ishtadevata.com/sundara-mahalakshmi-temple-arasar-koil-kanchipuram.html

    ReplyDelete