Saturday, January 7, 2012

களிப்பூட்டும் களி
சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் குஞ்சித பாதம் குஞ்சித பாதம்

சிவாய நம என்றிருப்போர்க்கு அபாயம் ஒருகாலும் இல்லை 

திருவாசகத்திற்கு உருகார்  ஒரு வாசகத்துக்கும் உருகார்.. 
 ஈசன் அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகர் சொல்லச் சொல்லத் திருவாசகம் முழுதும் எழுதி முடித்துக் கடைசியில், "வாதவூரான் சொல்ல தில்லைச் சிற்றம்பலத்தான் எழுதியது" எனக் குறிப்பிட்டுக் கைச்சாத்து வைத்து அதைப் பொன்னம்பலப் படிகளில் வைத்திருந்தார். 

திருவாசகத்தின் பொருளை விளக்கும்படி தில்லை வாழ் அந்தணர்கள் கேட்டதுக்குச் சிற்றம்பலம் வந்து சொல்வதாய்ச் சொன்ன மணிவாசகர், சிற்றம்பலத்துக்கு வந்ததும், "திருவாசகத்தின் பொருள் இதுவே!' எனக்கூறி சிற்றம்பலத்தின் உள்ளே சென்று அனைவரும் காண ஈசனோடு ஐக்கியமான நிகழ்ச்சி நடைபெற்ற நாள் திருவாதிரைத் திருநாள் என்ற ஐதீகம். 

ஆகவே மார்கழி மாதம் முழுதும் மாணிக்க வாசகர் ஒவ்வொரு கால வழிபாட்டின் போதும் சிற்றம்பத்தில் எழுந்தருளுவார். 

மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உண்டு. 
மாணிக்கவாசகரின் பதிகங்கள் ஓதுவார்களால் பாடப்பெறும். 

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். 

சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். 

முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான்
 பின்னே செல்லலாயினார். 
இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினதுவே ஆருத்திரா தரிசனம் 
கோனேரி ராஜபுரம்  நடராஜர் 
வலது கால் ஆணவமாம் முயலகனை அழுத்தி அவரவர்கள் வினைக்கு ஏற்ப மறைத்தலைக் குறிப்பிடுகின்றது. 

குஞ்சித பாதம் என்னும் தூக்கிய திருவடி 
அருளலைக் (முக்திபேறு) குறிக்கின்றது

சிவபக்தர் சேந்தனார் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி திருவாதிரை திருநாளில் நடராஜப் பெருமான் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகி களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்
களி' என்ற சொல்லுக்கு, ஆனந்தம் என்று தானே பொருள். !

சிவபெருமான் ஆடும் நடனம் ஆனந்த நடனம் ..!! 
அவரை ஆனந்த நடராஜர் என்று வணங்குவர். 

உலகங்களையும், நவக்கிரகங்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சக்தி, 

"நான் ஆடிக் கொண்டு தான், அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்!'  என .ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்று அப்பர் பெருமான் பாடிய படி ,அகிலத்தை எல்லாம் ஆட்டுவிக்கிறார் அம்பலவாணர்..
"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"   
என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் 
ஆதிரை நாளை சிறப்பித்துள்ளார்.:

தூக்கிய துதிக்கையால் காத்திடும் கணபதியின் அம்மையப்பன் 
இடது காலைத் தூக்கி நடனமாடி அருளும் ஞான குஞ்சிதபாதனை 
திருவாதிரையில் வணங்கி நலம் பல பெறுவோம்.
32 comments:

 1. களிப்பூட்டும் களி! தலைப்புத் தேர்வு நேற்றைய பின்னூட்டத்திலிருந்தா?

  ReplyDelete
 2. களி களிப்பான இடுகை .நன்றி. வாழ்த்துகள்.-
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 3. வை.கோபாலகிருஷ்ணன் said...
  களிப்பூட்டும் களி! தலைப்புத் தேர்வு நேற்றைய பின்னூட்டத்திலிருந்தா?/

  தங்கள் இனிய ஆசிகள் ஐயா..

  ReplyDelete
 4. kavithai (kovaikkavi) said...
  களி களிப்பான இடுகை .நன்றி. வாழ்த்துகள்.-
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com/

  களி களிப்பான கருத்துரை..
  இனிய நன்றிகள்..

  ReplyDelete
 5. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி

  ReplyDelete
 6. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி

  ReplyDelete
 7. திருவாதிரைக் களி
  களிப்பாக இருந்தது சகோதரி.

  ReplyDelete
 8. நாளை திருவாதிரை... இன்றே களி... நல்லது....

  நல்ல பகிர்வு...

  ReplyDelete
 9. மற்றநாட்களில் செய்யும் களியைவிட திருவாதிரை அன்று ஒரு குழந்தை களி செய்தால்கூட மிகமிக ருசியாகவும் அருமையாகவும் இருக்கும் என்று கூறுவார்கள். அது உண்மையும்கூட.

  திருவாதிரைக்கு ஒருவாய் களிதான் கிடைக்கும் என்பார்கள். அவ்வளவு ருசியாய் இருப்பதால் அனைவரும் காலிபண்ணிடுவார்களாம்.

  நாளை எங்கள் வீட்டிலும் களியும் தாழைக்குழம்பும் . சாப்பிட வாருங்கள் அனைவரும்

  ReplyDelete
 10. அந்தக்காலத்தில், விருந்து உபசாரம் செய்தபின், தாகத்திற்கு குடிக்க குடிநீர் ஒரு சொம்பில் கொடுத்துவிட்டு, பின் தாம்பூலம் தரிக்கச்சொல்லி வெற்றிலை, பாக்கு, மூன்றாவது என்று ஒரு தட்டில் வைத்து தருவார்கள். விருந்துண்ட களிப்பில் தாம்பூலம் தரிப்பார்கள். அதில் உள்ள பாக்கு ’களிப்பாக்கு’ என்று பெயர்.

  அதாவது களிப்பு+ஆக்கு=களிப்பாக்கு.

  விருந்துண்டவர்களுக்கு இது மேலும் களிப்பு ஆக்குவதால் அதற்கு களிப்பாக்கு என்ற பெயர் வந்திருக்கும் என்பது என் ஆராய்ச்சியில் கண்டறிந்தது.

  இந்த களிப்பூட்டும் (இனிப்புக்) களிபோலவே, மற்றொன்று “மோர்க்களி” என்று பெயர்.

  அதை [என் அம்மா/என் பெரிய அக்கா/என் மேலிடம் போன்று] நன்கு செய்யத்தெரிந்தவர்கள் செய்யணும்! ;)

  அடடா, அது எவ்வளவு ஒரு டேஸ்ட் ஆக இருக்கும் தெரியுமா!

  வேகவைத்துக் கிளறும் போதே, கமகமவென்று வாசனை மூக்கைத் துளைக்குமே! அதில் குட்டிக்குட்டி சைஸ் மோர்மிளகாய்களையும் வறுத்துப் போட்டு விடுவார்கள். அதிக ருசியோ ருசிக்கு!

  நல்ல காரசாரமாக அதைச்செய்து, கண்ணைமூடிக்கொண்டு நல்ல தரமான ஒஸ்தியான எண்ணெயை விட்டு, தளதளவென்று ஒரு தட்டில் இட்டு, சுடச்சுட அதைத்தட்டி, ஒரு கெட்டி ஸ்பூனால் கேக் வெட்டுவதுபோல
  வெட்டி, ஒவ்வொரு துண்டாக வாயில் போட்டுக்கொண்டால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே தான்.

  அல்வா போல அவ்வளவு ருசியாக இருக்கும்.

  எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் இது.

  அதுவும் கடைசியில் அந்த இலுப்பைச்சட்டியில் ஒட்டல் என்று ஒன்று ஒட்டிக்கொண்டு இருக்கும்.

  அதை தோசைத்திருப்பியால் மெதுவாகக் கிளறி எடுத்து தனியாக சாப்பிட்டால், அது தேவாமிர்தமே தோத்துப்போகும் அளவுக்கு அவ்வளவு ருசியாக இருக்குமே! அடடா, எனக்கு இப்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறதே!

  களிப்பூட்டும் களி! மிக நல்ல தலைப்பு.

  ReplyDelete
 11. Lakshmi said...
  படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி

  கருத்துரைக்கு நன்றி அம்மா..

  ReplyDelete
 12. மகேந்திரன் said...
  திருவாதிரைக் களி
  களிப்பாக இருந்தது சகோதரி

  கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 13. வெங்கட் நாகராஜ் said...
  நாளை திருவாதிரை... இன்றே களி... நல்லது....

  நல்ல பகிர்வு...

  முன்று நாட்களாக களிப்புதான்..

  ReplyDelete
 14. கடம்பவன குயில் said...
  மற்றநாட்களில் செய்யும் களியைவிட திருவாதிரை அன்று ஒரு குழந்தை களி செய்தால்கூட மிகமிக ருசியாகவும் அருமையாகவும் இருக்கும் என்று கூறுவார்கள். அது உண்மையும்கூட.

  திருவாதிரைக்கு ஒருவாய் களிதான் கிடைக்கும் என்பார்கள். அவ்வளவு ருசியாய் இருப்பதால் அனைவரும் காலிபண்ணிடுவார்களாம்.

  நாளை எங்கள் வீட்டிலும் களியும் தாழைக்குழம்பும் . சாப்பிட வாருங்கள் அனைவரும்/

  களிப்பான அழைப்புடன்
  கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said.../

  காந்தல் ஒரு ருசி..
  கருப்பு ஒரு அழகு என்றொரு சொலவடை உண்டே..

  உள்ளத்தைக்
  களிப்பாக்கும்
  களிப்பாக்குப் பகிர்வுக்கும்
  இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 16. முதல் படத்தில் டான்ஸ் பாப்பா போல இரட்டை வேடத்தில் சிவ நடனம் OK

  ஸ்வீட் விநாயகர் (தொந்திப்பிள்ளையார்) வித்யாசமாக அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

  வழக்கம் போல கடைசியில் காட்டப்பட்டுள்ள இரண்டு தேர்களும் ஜோர்!

  ஒருவழியாக திருவாதரையை மூன்று நாட்களாகப் பிரித்து கொண்டாடி அசத்தி விட்டீர்கள். [இருப்பினும் இன்றைய படங்களில் அதிக Brightness இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது]

  ReplyDelete
 17. திருமாலின் திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றான மும்மூர்த்தி ஸ்தலமான உத்தமர்கோயிலில் (திருச்சி) உள்ள சிவபெருமான் பெயர் பிக்ஷாடணேஸ்வரர் தான். அவரின் அத்தகைய பெயரினால் உத்தமர்கோயில் அருகே அமைந்துள்ள அக்ரஹார கிராமத்திற்கும் பிக்ஷாண்டார்கோயில் என்றே பெயர்.

  அங்கும் ஓர் சிவன் கோயில் உள்ளது.
  அந்தக்கோயிலில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்க்கையம்மனுக்கும் எனக்கும் ஓர் மிகச்சிறந்த மறக்க முடியாத அனுபவம் உண்டு.

  அதைத் தனியாக பிறகு உங்களுக்குச் சொல்கிறேன். அல்லது இதிலேயே இன்னொரு பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன்.

  ReplyDelete
 18. மாணிக்கவாசகர் பதிகங்கள்

  திருஞான சம்பந்தர் தேவாரம்

  முக்திப்பேறு

  களி=ஆனந்தம்

  அகிலத்தையே ஆட்டிவரும் அம்பலவானர்!

  சிவாய நம என்றிருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை

  திருவாசகத்துக்கு உருகார்
  ஒருவாசகத்துக்கும் உருகார்!

  ஆருத்ரா தரிஸம் பற்றிய கதை புராண வரலாறுகள்.

  பிச்சாடனர் பற்றிய கதை

  மதயானைத்தோலை அணிந்தவர்

  முயலகன் மீது வலது காலை ஊன்றி
  இடது பாதம் தூக்கி ஆடியவர்

  என எவ்வளவு தகவல்களை அள்ளி அள்ளி வழங்கியுள்ளீர்கள்! ;)))

  ReplyDelete
 19. திருவாதரை வாழ்த்துகள்.

  கோவைத் திருவாதரை வாழ்த்துகள்.

  அழகான பதிவு. நல்லபல விஷயங்கள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  vgk

  ReplyDelete
 20. http://kovaikkavi.wordpress.com/2012/01/05/44-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%8b-5/

  ReplyDelete
 21. வை.கோபாலகிருஷ்ணன் said...
  திருவாதரை வாழ்த்துகள்.

  கோவைத் திருவாதரை வாழ்த்துகள்.

  அழகான பதிவு. நல்லபல விஷயங்கள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.


  கோவைத் திருவாதரை வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 22. கண்களை கவரும் அற்புதமான படங்களுடன் கூடிய அருமையான பதிவுக்கு நன்றி! கணபதிக்கு முந்தின படம் கண்ணுலையே நிக்கர்து!

  ReplyDelete
 23. வை.கோபாலகிருஷ்ணன் said...
  மாணிக்கவாசகர் பதிகங்கள்

  திருஞான சம்பந்தர் தேவாரம்

  முக்திப்பேறு

  களி=ஆனந்தம்

  அகிலத்தையே ஆட்டிவரும் அம்பலவானர்!

  சிவாய நம என்றிருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை

  திருவாசகத்துக்கு உருகார்
  ஒருவாசகத்துக்கும் உருகார்!

  ஆருத்ரா தரிஸம் பற்றிய கதை புராண வரலாறுகள்.

  பிச்சாடனர் பற்றிய கதை

  மதயானைத்தோலை அணிந்தவர்

  முயலகன் மீது வலது காலை ஊன்றி
  இடது பாதம் தூக்கி ஆடியவர்

  என எவ்வளவு தகவல்களை அள்ளி அள்ளி வழங்கியுள்ளீர்கள்! ;)))/

  ரசித்து அள்ளி வழங்கிய அருமையான விளக்கங்களான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 24. வை.கோபாலகிருஷ்ணன் said...
  திருமாலின் திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றான மும்மூர்த்தி ஸ்தலமான உத்தமர்கோயிலில் (திருச்சி) உள்ள சிவபெருமான் பெயர் பிக்ஷாடணேஸ்வரர் தான். அவரின் அத்தகைய பெயரினால் உத்தமர்கோயில் அருகே அமைந்துள்ள அக்ரஹார கிராமத்திற்கும் பிக்ஷாண்டார்கோயில் என்றே பெயர்.

  அங்கும் ஓர் சிவன் கோயில் உள்ளது.
  அந்தக்கோயிலில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்க்கையம்மனுக்கும் எனக்கும் ஓர் மிகச்சிறந்த மறக்க முடியாத அனுபவம் உண்டு.

  அதைத் தனியாக பிறகு உங்களுக்குச் சொல்கிறேன். அல்லது இதிலேயே இன்னொரு பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன்/

  அருமையான நெகிழ்ச்சியான
  அற்புத அனுபவத்தை பதிவாகவே தாருங்கள் ஐயா..

  பயனுள்ளதாக அமையும்..

  ReplyDelete
 25. வை.கோபாலகிருஷ்ணன் said...
  முதல் படத்தில் டான்ஸ் பாப்பா போல இரட்டை வேடத்தில் சிவ நடனம் OK

  ஸ்வீட் விநாயகர் (தொந்திப்பிள்ளையார்) வித்யாசமாக அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

  வழக்கம் போல கடைசியில் காட்டப்பட்டுள்ள இரண்டு தேர்களும் ஜோர்!

  ஒருவழியாக திருவாதரையை மூன்று நாட்களாகப் பிரித்து கொண்டாடி அசத்தி விட்டீர்கள். [இருப்பினும் இன்றைய படங்களில் அதிக Brightness இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது]/

  இனிப்பு திகட்டியதால் இருக்குமோ!

  ReplyDelete
 26. தக்குடு said...
  கண்களை கவரும் அற்புதமான படங்களுடன் கூடிய அருமையான பதிவுக்கு நன்றி! கணபதிக்கு முந்தின படம் கண்ணுலையே நிக்கர்து!/

  இனிய திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 27. திருவாதிரைக் களி(யாட்டம்) அருமை.
  வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 28. நன்றி..
  நமச்சிவாய வாழ்க
  நாதன் தாள் வாழ்க!!.....

  ReplyDelete
 29. இந்த களி இருக்கிறதே உண்மையில் எனக்கு மிகவும் விருப்பமான உணவு தலைப்பை பார்த்ததும் ஓடோடி வந்துவிட்டேன் சிறப்பு பாராட்டுகள்

  ReplyDelete
 30. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

  ReplyDelete
 31. 1947+7+1=1955 ;)))))

  மிகத்திருப்திகரமான ஆறு பதில்கள். நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete