Monday, July 22, 2013

குரு பூர்ணிமா

"ஓம் கணா னாம் த்வா கணபதி ஹவாமஹே 
கவிம் கவீனாமுய ஸ்வரஸ்தம் 
ஜ்யேஸ்ட்ட ராஜம் ப்ருஹ்மணா,  ப்ருமணஸ்பத ஆனஹ 
ஸ்ரண்வன்னூதிபிஹி ஸீத ஸாதனம்"

வேதங்களில் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக
கணாதிபதி எனும் ஏரகச்செல்வனாக ஸ்ரீ மஹாகணபதி விளங்குகிறார்.

ஆடி மாதப் பௌர்ணமி குரு பூர்ணிமா-
வியாச பௌர்ணமி என்று போற்றப்படுகிறது.
Happy Guru Purnima

ஓம்... ஓம்... ஓம்...
அஸத்தோமா ஸத்கமய தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி

எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக.

வியாசர் என்றால் வேதங்களைப் பகுத்து விளக்கமளிப்பவர் 
என்று பொருள்படும்.

 வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்து கொள்ளும்
வகையில் விளக்கமாக எடுத்துச் சொல்பவரை வியாசர் என்றார்கள்.

 முழு நிலவு பொழியும் ஆடி மாதப் பௌர்ணமி திருநாளில்
முழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர அனைத்து உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா ".


குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள்.

குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனதுகுருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கட்டியம் கூறுகிறது .
சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளான குருபூர்ணிமா என்னும் ஆனந்த சூழ்நிலையைச் சாதகமாக்கிகொண்டு குருவின் துணையோடு யோகசாதனையைத் தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.

யோகப்பண்பாட்டில்  குரு பூர்ணிமா.திருநாள் ஆனந்தமான  நாளாகக் கொண்டாடப் படுகிறது.

குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால், தாங்கள் பெற்ற கல்விச் செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் 

ஆடி மாதப் பௌர்ணமி -"ஆஷாட சுத்த பௌர்ணமி' நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொண்டு வியாச பூஜை செய்வார்கள்.
மகாபாரதத்தை இயற்றிய வியாசர் சப்தரிஷிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். வியாசர் மகாவிஷ்ணுவின் அருள் பெற்றவர்.
பராசரரின் மகன்.
கிளிமுகம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷியின் தந்தை ..


வேதங்களைத் தொகுத்துத் தந்ததால்- வேத வேதாந்த சூத்திரம் எழுதியதால்- தான் உருவாக்கிய மகாபாரதத்தை விநாயகப் பெருமானைக் கொண்டு மேரு மலையில் எழுதச் செய்ததால்- பதினெட்டுப் புராணங்களைத் தொகுத்துத் தந்ததால் வேதவியாசருக்கென்று சிறப்பான ஒரு இடம் உண்டு.

நான்கு வேதங்களைப் படைத்த பிரம்ம புத்திரரான வேதவியாசருக்கு வடமொழியிலிருந்து தமிழில் சுருக்கமாகவும் ,பொருள் விளக்கமாகவும் மகாபாரதம் எழுதி தர்மம் தழைக்க மனதில் எல்லாம் வல்ல விநாயகரை நினைத்தார்.

முதலில் நினைத்தால் முன்நிற்பவன் விக்கினம் வராதுகாப்பவன், விக்கினேஸ்வரன் விநாயகர் வியாசர் முன் தோன்றினார்.

எண்ணம் நிறைவேற ஆசியளித்து விநாயகர் எழுத்தாணியும் ஏடும் கையுமாக உட்கார்ந்தார்.

வியாசரும் அவர் தாள்பணிந்து ஓம் கணேசாய நமஹ, என்று வணங்கினார்.

வியாசர் மகாபாரதத்தைச் சொல்லத்தொடங்கும் முன் ஏகதந்தன் ஒரு கட்டளை இட்டார். தொடங்கிவிட்டால் நிறுத்தாது சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்றார்.

விநாயகர் தமிழில் எழுதும் வேகத்திற்கு ஈடுகொடுக்கமாட்டாதவராய் கடினமான சொற்பதங்களை கூறி விநாயகர் பொருள்விளங்கி எழுதுவதற்குள் அடுத்த அடுத்த வரிகளைதயார் பண்ணிவிடுவாராம், வியாசர்..!

விக்கினேஸ்வரப் பெருமானும் பரம்பொருளாயிற்றே, அவர் வேதவித்தகர். அவரின் வேகத்திற்கு எழுத்தாணியால் ஈடுகொடுக்க முடியாமல் உடைந்து விட்டது. ஒரு நல்லகாரியம் தடைப்படாதிருக்க விநாயகர் தனது ஒருகொம்பை முறித்து எழுத்தாணியாக்கி மிகுதி பாரதத்தை எழுதி முடித்தார்.

தம்மிடம் இருப்பதை அடுத்தவர்க்கு பயன் பட வேண்டும் எனும் நோக்கில் ஒற்றைக்கொம்பனாக ஏகதந்தனாக  காட்சி கொடுக்கும் விநாயகர் சிறப்பு வாய்ந்தவர் ...!



18 comments:

  1. சிறந்த நாளில் அருமையான படங்களுடன் சிறப்பான பதிவு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Mika serantha writings dear.
    viji

    ReplyDelete
  3. இவ்வளவு விளக்கமாக படங்களுடன் சொல்லும் நீங்களும் வியாசர்தான்

    ReplyDelete
  4. மிகமிகப் பொருத்தமான நல்ல பதிவு!

    அழகிய படங்களும் அற்புதப் பதிவும்!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  5. சிறந்து தத்துவ விளக்கங்கள். பல கருத்துகள் மகிழ்வு தந்தன.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. //ஆடி மாதப் பௌர்ணமி குரு பூர்ணிமா - வியாச பௌர்ணமி என்று போற்றப்படுகிறது.//

    ஆம் இதே நாளில் துறவிகள் [ஓரிரு மாதங்களுக்கு மேல் ஒரே இடத்தில் தங்கி] வியாஸ பூஜை செய்து, சாதுர்மாஸ்ய விரதம் என்று அனுஷ்டிப்பார்கள்.

    >>>>>

    ReplyDelete
  7. /ஆடி மாதப் பௌர்ணமி -"ஆஷாட சுத்த பௌர்ணமி' நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொண்டு வியாச பூஜை செய்வார்கள்.//

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இதுபோல செய்த வியாஸ பூஜைகளை, என் தாயார் உள்பட குடும்பத்துடன், பல ஊர்களில் சென்று தரிஸிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.

    காஞ்சீபுரம் [பலமுறை], கர்னூல் [இரு முறை], பண்டரீபுரம், குண்டக்கல் அருகே உள்ள ஹகரி என்ற சிற்றூர் ஆகிய இடங்களில் நடந்த வியாஸபூஜைகளில் கலந்து கொண்டு, பாதபூஜையும், சமஷ்டி பிக்ஷாவந்தனமும் செய்து வந்தது பசுமையான நினைவலைகளாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  8. //வியாசர் என்றால் வேதங்களைப் பகுத்து விளக்கமளிப்பவர் என்று பொருள்படும். வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்துச் சொல்பவரை வியாசர் என்றார்கள்.//

    ஆன்மிக விஷயங்கள் பலவற்றை தினமும் அள்ளி அள்ளித்தரும் பதிவுலக வியாஸராகிய உங்களுக்கு எந்தன் வந்தனங்கள்.

    >>>>>>>

    ReplyDelete

  9. //மகாபாரதத்தை இயற்றிய வியாசர் சப்தரிஷிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். வியாசர் மகாவிஷ்ணுவின் அருள் பெற்றவர்.
    பராசரரின் மகன். கிளிமுகம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷியின் தந்தை ..//

    ஆன்மிகக் கிளியிடமிருந்து இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ள கிளி கொஞ்சும் தகவல்கள் ;))))) மிகுந்த மகிழ்சியளிக்கின்றன.

    பாகவத ஸப்தாகம் சொன்ன சுகப்பிரம்ம ரிஷியின் பரம்பரையில் உதித்துள்ளவரோ தாங்கள் என நான் அடிக்கடி நினைத்து என் மனதில் ஆச்சர்யப்பட்டுக்கொள்வேன்.

    இப்போதும் நினைத்துப்பார்க்கிறேன் ......... மனதில் மகிழ்ச்சிப் பிரவாகமாக உள்ளது.

    http://gopu1949.blogspot.in/2011/11/4-5.html

    நீ முன்னாலே போனா ...... நா ... பின்னாலே வாரேன் !

    >>>>>

    ReplyDelete
  10. இன்றைய படங்களும் அனைத்து விளக்கங்களும் அருமையோ அருமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 978 ooooo

    ReplyDelete
  11. குருபெளர்மணி நாள் சிறப்பு பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  13. ஆஆஆஆ மறந்துட்டேன். படங்கள் எல்லாமே அழகோ அழகு.

    முக்கியமாக பல்வேறு வாத்யங்கள் இசைக்கும் தொந்திப்பிள்ளையார்கள், ஒற்றைக்கொம்பை உடைத்து பாகவதம் எழுதும் கொம்பேறி மூக்கனான பிள்ளையார், ஒய்யாரமாக சாய்ந்துள்ள கரிய நிற கணபதி, இலைப்பிள்ளையார், மணிப்பிள்ளையார், முதலில் காட்டியுள்ள ஜொலிக்கும் பிள்ளையார் என அனைத்துமே அருமையாக உள்ளன.

    பிள்ளையாருக்கும் உங்களுக்கும் நல்லதொரு தொடர்பு உள்ளது. ;)))))

    கிளித்தலையுடன் காட்டியுள்ள சுகப்பிரும்மம் சூப்பர்.

    கடைசியாகக் காட்டியுள்ள ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்களும் பாத மலர்களும் A1.

    ReplyDelete
  14. படங்களும் விளக்கமும் அருமை...

    ReplyDelete
  15. குரு பூர்ணிமா பற்றிய தகவல்கள் சிறப்பு.

    ReplyDelete
  16. குரு பூர்ணிமா தகவல்கள் படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  17. வணக்கம்
    அம்மா

    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete