Thursday, June 2, 2011

மலைகளின் ராணி - அழகிய காட்சிகள்என் மகன் சிறுவயதில் தன் தந்தையுடன் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு ரேஸ்கோர்ஸ் சென்ற போது மேட்டுப்பாளையம் சாலையைப் பார்த்து இந்த சாலை எங்கே போகும் அப்பா? என்று கேட்க, அவர் இப்படியே போனால் ஊட்டி வரும் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். வீட்டிலிருந்த எனக்கு போனில் அம்மா நாங்கள் இப்போது ஊட்டி தாசப்பிரகாஷ் ஹோட்டலின் முன் நிற்கிறோம். இன்னும் கடைகள் எதுவும் இங்கே திறக்கவில்லை. சாப்பிட்டுவிட்டு, சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறோம் எனக் கூற வியப்பு.


ஒரு வட இந்தியரின் ஆடம்பரத்திருமணம் ஊட்டியில் ந்டைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிரபல ரிசாட் முழுமையும் பதிவு செய்து தாண்டியா நடனம், தம்போலா விளையாட்டு, பிரல கலைஞர்களின் வாத்தியங்கள் மற்றும் பாட்டுகச்சேரி, பலவகை நடனங்கள் என்று மிகவும் அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். அறுசுவை விருந்துக் கொண்டாட்டத்தில் கவனத்தை ஈர்த்தது கம்பு தானியத்தால் செய்யப்பட்ட சாதம். தண்ணீர் ஊற்றி தயிர் கலந்து சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சியாம். அதே சாதத்தை சூடாக நெய் உருக்கி ஊற்றி சிறிது வெல்லம் கலந்து சாப்பிட்டால் அந்த குளிருக்கு ஏற்ற உண்வாகும் என்று கூறினார்கள். அந்த நவம்பர் மாத குளிரில் நடுங்கியபடியே ஐஸ்கிரீம் சாப்பிட்டது மற்க்கமுடியாத அனுபவமானது.

உலக பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரயில் அறிவிக்கப்பட்டதைஇதையடுத்து உலக சுற்றுலா வரைபடத்தில் ஊட்டி மலை ரயிலும் இடம் பெற்றது.
Train
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் அழகுக்கு அழகூட்டும் ஒரு அம்சம் மலை ரயில். நீண்டு நெளிந்து கிடக்கும் மலைகளின் ஊடாக, ஜிகுஜிகுவென மெல்ல மெல்ல அசைந்து போகும் மலை ரயிலில் பயணம் செய்யாவிட்டால் ஊட்டி பயணம் நிச்சயமாக நிறைவு பெறாது.

100 வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் பாதை அமைக்கப்பட்டது.

பின்னர் இந்த ரயில் பாதை ஊட்டி வரை நீடிக்கப்பட்டது. நீலகிரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் இந்த மலை ரயிலில் பயணம் செய்கிறார்கள். 
அரவங்காடு தொழிற்சாலை, மற்றும் குகைகள், திருப்பங்கள், என்று காரில் போகும் போது பார்க்கமுடியாத இயற்கைக்காட்சிகள் எழில்மிகுந்த மலர்கள், பச்சை சுடரும் வனங்கள் வன விலங்குகள் எல்லாம் காட்சிப்படுகின்றன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டு ருத்ராட்ச மரங்கள் 
அருமையாய் காட்சிப்பட்டன.
கோடை விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஊட்டியில் ரோஜாப்பூங்கா அருமையாய் பராமரிக்கப்படுகிறது. பழக்காட்சி, பூக்கண்காட்சி சிந்தைகவரும் வகையில் சிறப்பாக நடைபெறும்.
கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி. நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று.
 உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.
பச்சை பசலேன தோற்றமளிக்கும் பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம், 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை காணலாம். 
இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் இங்கு மே மாதம் மலர்க் கண்காட்சி நடைபெறும்.

 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில், எல்க் மலையில்  பூங்கா தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம். 

[meadow.jpg]

31 comments:

 1. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 2. நேரில் சென்று கண்டு களித்தது போன்று காட்சிகள் கண்ணைக் கவர்கின்றன.

  ReplyDelete
 3. @ DrPKandaswamyPhD said...
  நன்றாக இருக்கிறது.//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 4. @ FOOD said...
  நேரில் சென்று கண்டு களித்தது போன்று காட்சிகள் கண்ணைக் கவர்கின்றன.//

  கருத்தைக் கவரும் கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 5. நேரில் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது உங்கள் எழுத்து

  ReplyDelete
 6. குளுகுளு பதிவு!

  ReplyDelete
 7. @ Prabashkaran Welcomes said...
  நேரில் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது உங்கள் எழுத்து//

  Thank you sir.

  ReplyDelete
 8. @middleclassmadhavi said...
  குளுகுளு பதிவு!//

  Thank you.

  ReplyDelete
 9. கண்ணுக்குக்குளிர்ச்சியாக அனைத்தும் குளுகுளுவென இருந்தன. நேரில் போய் பார்த்ததுபோன்ற ஒரு மகிழ்ச்சி (ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மட்டுமே பாக்கி)

  பூக்களின் அழகு, அதை அவர்கள் பல்வேறு பறவைகளாகவும், விலங்குகளாகவும் மாற்றியிருப்பது கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

  பதிவுக்கு நன்றி. பிரியமுடன் vgk

  ReplyDelete
 10. @வை.கோபாலகிருஷ்ணன் said...

  பூக்களின் அழகு, அதை அவர்கள் பல்வேறு பறவைகளாகவும், விலங்குகளாகவும் மாற்றியிருப்பது கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.//
  நுட்பமான ரசனை கொண்ட கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 11. ஊட்டி நேரில் சென்றது போல் உள்ளது உங்கள் பதிவு...

  எத்தனை முறை சென்றாலும்... இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம்...

  ReplyDelete
 12. படங்களுடன் நிறைந்த அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. சூப்பர் பதிவு
  படங்கள் அதைவிட அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. @ சங்கவி said...
  ஊட்டி நேரில் சென்றது போல் உள்ளது உங்கள் பதிவு...

  எத்தனை முறை சென்றாலும்... இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம்...//

  ரசனையான கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 15. @ Rathnavel said...
  படங்களுடன் நிறைந்த அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 16. @ Ramani said...
  சூப்பர் பதிவு
  படங்கள் அதைவிட அருமை
  தொடர வாழ்த்துக்கள்//

  கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 17. குளிரான, பசுமையான பதிவு
  அந்த சேவலில் மனம் லயித்து போனேன்
  எங்கேயிருந்து இவ்வளவு விவரங்களை திரட்டுகிறிர்கள்
  வந்தனம் உங்கள் பதிவுக்கு

  ReplyDelete
 18. WoW!
  I enjoyed Rajeswari.
  We had been to OOty very many times when i was at Coimbatore with my parents and brother.
  But i have not seen some of the flower decorations like this.
  Feast to eyes.
  Today morning I had malarkalin anivakkuppu.
  Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 19. @A.R.ராஜகோபாலன் said...
  குளிரான, பசுமையான பதிவு
  அந்த சேவலில் மனம் லயித்து போனேன்
  எங்கேயிருந்து இவ்வளவு விவரங்களை திரட்டுகிறிர்கள்
  வந்தனம் உங்கள் பதிவுக்கு//

  வந்தனம் உங்கள் கருத்துக்கு. நன்றி.

  ReplyDelete
 20. @ viji said...//

  வாங்க விஜி. உங்களின் கருத்துக்களின் அணிவகுப்பு ஆனந்தம் அளிக்கிறது. நன்றி.

  ReplyDelete
 21. கண்ணுக்குக்குளிர்ச்சியாக அனைத்தும் குளுகுளுவென இருந்தன. நேரில் போய் பார்த்ததுபோன்ற ஒரு மகிழ்ச்சி படங்களுடன் நிறைந்த அருமையான பதிவு.

  ReplyDelete
 22. எத்தனை அழகு.எவ்வளவு நாட்கள் நேரமெடுத்துச் செய்திருப்பார்கள்.நன்றி தோழி !

  ReplyDelete
 23. @போளூர் தயாநிதி said...
  கண்ணுக்குக்குளிர்ச்சியாக அனைத்தும் குளுகுளுவென இருந்தன. நேரில் போய் பார்த்ததுபோன்ற ஒரு மகிழ்ச்சி படங்களுடன் நிறைந்த அருமையான பதிவு.//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @ ஹேமா said...
  எத்தனை அழகு.எவ்வளவு நாட்கள் நேரமெடுத்துச் செய்திருப்பார்கள்.நன்றி தோழி !//

  நன்றி தோழி ஹேமா!..

  ReplyDelete
 25. அலங்கரிக்கப்பட்ட பூக்கள் பார்க்கும்போதே அழகுதான். ஆனால், காட்டின் வழியில் போகும்போது பச்சை இலைகளுக்கு இடையில் தெரியும் ஒற்றை பூ மிக அழகாக தெரிகிறது. -live from munnar - நன்றி.

  ReplyDelete
 26. @சாகம்பரி said...
  அலங்கரிக்கப்பட்ட பூக்கள் பார்க்கும்போதே அழகுதான். ஆனால், காட்டின் வழியில் போகும்போது பச்சை இலைகளுக்கு இடையில் தெரியும் ஒற்றை பூ மிக அழகாக தெரிகிறது. -live from munnar - நன்றி.//

  அழகிய கருத்துக்கு நன்றி. இயற்கை என்றுமே அற்புதம்தான்.

  ReplyDelete