Tuesday, June 21, 2011

குலம் காக்கும் குமாரநல்லூர் பகவதி அம்மன்

வவலைச்ச்ரத்திற்கு வந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

குலம் காக்கும் குமாரநல்லூர் பகவதி அம்மன் மிகுந்த சக்திவாய்ந்த அனுபூதி கொண்ட தெய்வம். தரிசிக்கலாம் வாங்க.


மதுரை மீனாட்சி அம்மனே  கேரளா, குமாரநல்லூரில் பகவதி என்னும் திருநாமம் தாங்கி கோயில் கொண்டிருக்கிறாள். 

General India news in detail

தல வரலாறு: சகல சக்தியும் நிறைந்த பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி பரசுராமர் ஒரு சிலை வடித்தார். இதை ஜலவாசத்தில் வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

கோயில் நுழைவுவாயில்
[Gal1]

கேரளாவை ஆண்ட சேரமான் மன்னன், குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான்.

கொடிமரம்

அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோயிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை. 

"அதை 41 நாட்களுக்குள் கண்டுபிடிக்காவிட்டால் சிரச்சேதம் செய்யப்படுவீர்" என பூஜாரி சாந்தி துவிஜனுக்கு மன்னன் உத்தரவிட்டான். 

 41 நாள் ஆனபின்னும் கிடைக்காததால், மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார். 

அப்போது அசரீரி தோன்றி, 'உடனடியாக கிளம்பு' என்றது. 

கண்விழித்த பூஜாரியின் முன்னால் ஒரு ஒளி செல்ல, மீனாட்சியின் திருநாமத்தை உச்சரித்தபடி தொடர்ந்து சென்றார். 

அந்த ஒளி குமாரநல்லூரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில் கர்ப்பகிரகத்தில் ஐக்கியமானது. 

பழி நீங்கிய பூஜாரி அந்த ஊரில் தங்கி விட்டார். 

அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டைக்குரிய பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.  

பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில், "குமரன் அல்ல ஊரில்'' (ஊரில் குமரன் இல்லை) என்று அசரீரி ஒலித்தது. 

வருத்தமடைந்த மன்னன், முதலில் வைக்கத்தில் பகவதி சிலை பிரதிஷ்டையை முடித்து விட்டு அதன் பின் இங்கு முருகனை பிரதிஷ்டை செய்யலாம் என நினைத்து வைக்கம் சென்றான். 

வைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது. 

முடிவாக குமாரநல்லூரில் பிரதிஷ்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும், வைக்கத்தில் அமைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது.  

பரசுராமரால் வேதகிரி மலையில் ஜலவாசம் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டு வரப்பட்டது. 
குமாரநல்லூர் பகவதி அம்மன்
[Gal1]
பிரதிஷ்டை செய்யும் நேரத்தில், ஒரு சன்னியாசி கர்ப்பக்கிரகத்தில் நுழைந்தார். பகவதி சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு மாயமானார். இவர் "பரசுராமர"' என தல புராணம் கூறுகிறது. 

மதுரையிலிருந்து வந்த சாந்தி துவிஜன் கோயில் பூஜாரியானார். இவரது வாரிசுகளே தற்போது பூஜை செய்து வருகின்றனர். 

இவர்கள் தங்கியுள்ள வீடு 'மதுர மனா' எனப்படுகிறது.


தல சிறப்பு: 'குமரன் இல்லாத ஊர்' என்ற பெயரே, 'குமாரநல்லூர்' என மருவியது. 

2400 ஆண்டுகள் பழமையானதும், 108 துர்க்கை தலங்களில் ஒன்றும் ஆகும். இந்தக் கோயில் அருகில் அற்புத நாராயணன் கோயில், மகாதேவர் கோயில், மள்ளியூர் மகா கணபதி கோயில், கடுத்துருத்தி சிவன் கோயில், சுப்ரமணியர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. 

அர்த்த மண்டபம்
[Gal1]

திருவிழா: கார்த்திகையில் 10 நாள் விழா நடக்கிறது. 

ஒன்பதாம் நாளான கார்த்திகையன்று ஆறாட்டு பூஜை நடக்கிறது. 
அன்று 36 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். 

பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் பயன் படுத்தப்படும்.  

 நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். 

மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு. 

யானை மீது அம்மன் பவனி
பிரார்த்தனை: திருமணத்தடைஉள்ளவர்கள் 'சுயம்வர புஷ்பாஞ்சலி' பூஜை நடத்தினால் திருமணம் நடக்கும். 

அம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால் 'மஞ்சள் நீராட்டு' முக்கிய வழிபாடு. 

குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. 

குடும்ப ஒற்றுமைக்காக கோயில் நடையில் விளக்கேற்றுகின்றனர்.

கோயில் மூலஸ்தான மண்டபம்
[Gal1]

மூலவர் விமானம்

பத்ரகாளி சன்னதி
[Gal1]

இருப்பிடம்: கோட்டயத்திலிருந்து 6 கி.மீ. தூரம். பஸ் வசதி உண்டு.
திறக்கும் நேரம்: காலை 4- 11.30 மணி, மாலை 5- இரவு 7.45 மணி.
போன்: 0481-231 2737. 

17 comments:

 1. குலம் காக்கும்
  ’குமாரநல்லூர் பகவதி அம்மன்’

  ஆஹா ’குலம் காக்கும்’ என்ற தலைப்பே மனதுக்கு நிம்மதி தருகிறது.

  மதுரை மீனாக்ஷியும், கேரளா குமாரநல்லூர் பகவ்தியும் ஒன்றே என்பது பற்றிய சரித்திர வரலாற்றுச் செய்திகள் புதியனவாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளன.

  படங்கள் எல்லாமே வழக்கம் போல அருமை. அழகிய முக அலங்காரங்களுடன் கூடிய பெண் யானைகளின் அணிவகுப்பு, அடடா சூப்பரோ சூப்பர். (ஆனால் யானைகளில் மட்டும் ஆண்கள் கூட அழகுதாங்க!)

  //அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோயிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை.//

  அந்த விலையுயர்ந்த வைர மூக்குத்தி கடைசியில் என்னாச்சு என்பது கடைசி வரை தங்களால் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.

  என் ”மூக்குத்தி” சிறுகதை போலவே நல்ல சஸ்பென்ஸ்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 2. நீங்கள் இப்படி தெளிவாகஅருமையாக
  விளக்கம் சொல்லாவிட்டால் அந்த ஊரின் பெயர்கள்
  பூசாரிகளின் வீடுகள் எல்லாம் மலையாளம் போலத்தான்
  புரிந்து கொண்டிருப்போம்
  படங்களும் பதிவும் அருமை

  ReplyDelete
 3. கோவில் கட்டுமானத்தில் கேரளக் கலை தெரிகிறது. இருப்பிடம், திறக்கும் நேரம், தொலைபேசி எண் எல்லாம் தந்திருப்பது சிறப்பு.

  ReplyDelete
 4. @
  வை.கோபாலகிருஷ்ணன் sai//

  (ஆனால் யானைகளில் மட்டும் ஆண்கள் கூட அழகுதாங்க!)//


  மயில், சிங்கம், சேவல், யானை என்று எந்த விலங்கிலும் ஆண்க்ள் தான் அழகு.

  ReplyDelete
 5. @ Ramani said...//

  அருமையான கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 6. @ஸ்ரீராம். said...//

  கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 7. பதிவின் படங்களுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு தனி அருமைதான் சகோதரி.

  தொடருட்டும் உங்கள் படைப்புக்கள் உங்கள் பாதையில்.

  ReplyDelete
 8. மகாதேவன்-V.K said...//

  கருத்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 9. நல்ல விளக்கங்கள் ./..
  பயணிக்கும் பொது மிகவும் உதவியாக இருக்கும் உங்களின் பதிவு ..

  ReplyDelete
 10. வலைச்சர பணிகளுக்கிடையேயும் உங்களின் ஆன்மீகப்பணி அதிசயக்க வைக்கிறது

  இந்த ஸ்தலத்தை பற்றிய அறிய பல தகவல்கள் அறியாத ஒன்று, நன்றி பகிர்ந்தமைக்கு

  ReplyDelete
 11. மிகவும் சிரமம் எடுத்து இரண்டிலும் கஷ்டப்பட்டு பதிவுகள் போடுகீறீர்கள்...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. //மயில், சிங்கம், சேவல், யானை என்று எந்த விலங்கிலும் ஆண்க்ள் தான் அழகு.//

  இவை போன்ற விலங்குகளில் மட்டும் தான் ஆண்கள் அழகு என்பதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.

  [மனிதப்பிறவியில் அது போல இல்லையே, என்பது தான் நான் சொல்ல வந்தது OK யா...]

  ReplyDelete
 13. அப்பாடி....எத்தனை விதமான கோயில்கள் !

  ReplyDelete
 14. கேரளா'குமாரநல்லூர் பகவதி அம்மன்’ தர்சனம் கிடைத்தது.

  யானையில் உலா வரும் அம்மன் கண்நிறைந்த காட்சி.

  ReplyDelete
 15. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete