Tuesday, April 10, 2012

திருவாரூர் அழகுத் தேர்
மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண்
இடந்து இடுதலுமே, மலி வான் கோலச் 
சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை; தும்பி
உரி போர்த்தானை; தோழன் விட்ட 
அடல் ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை அரு
வரைக்கீழ் அடர்த்தானை; அருள் ஆர் கருணைக்- 
கடலானை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை;
கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!. திருத்தாண்டகம்
திருவாரூரில் ஆழித் தேரில் இவர்ந்து வந்து ஆட்கொள்ளுதலில் வல்லுநரான இறைவரின்
கோயிலுள்சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் தியாகராஜர் ...  
ஆழித்தேரில் வீற்றிருந்து இல்லங்கள் தோறும் எழுந்தருளிக் பொங்கு மலர்ப் பாதம் தந்தருளும் சேவகனாய்ப் பெருமான் இருந்தனர் என்பதால், `ஆழித்தேர் வித்தகர்,,, 
கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும். ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள்திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம் கமலாம்பாள் சமேத தியாகராஜர் சுவாமி, ஆழித் தேருக்குச் செல்ல ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, பூஜைகள் நடைபெறும்... ஆழித் தேர் 90 அடி உயரம், 60 அடி அகலம், 300 டன் எடை கொண்டது. ஆசியாவின் மிகப் பெரிய தேர்களில் ஒன்று 
ஆழித்தேர் நான்கு நிலைகளை கொண்டது. முதல் நிலை 6 மீட்டர்களும், இரண்டாவது நிலை 1.2 மீட்டர்கள் உயரமும் கொண்டது. மூன்று மட்டும் நான்காவது நிலைகள 1.6 மீட்டர் உயரம் கொண்ட பீட வடிவமைப்பு கொண்டது. 
இந்த நிலைகளில் தான் தியாகேசப் பெருமான், அம்மையுடன் வீற்றிருப்பார்.
ஆழித் தேரின் சிறப்பம்சம், வளைவுகளில் திரும்புவது.

ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக் காட்சி.

தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்து, நின்ற நிலையிலேயே (முன் நகராமல்) தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள்
 
ஊர் கூடித் தேரிழுப்போம’ -ஊர் கூடினால் தேர் ஓடும் --

திருவாரூர் தேரோட்டம் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு உதாரணம்  இக்கோயின் தேரை இழுப்பதில் பல்லாயிரக்கணக்காண மக்கள் மட்டுமி்ன்றி, ஒரு காலகட்டம் வரை யானைகளும் பங்கேற்றுள்ளன. 

ஒரு தெருவில் இருந்து மற்றொருத் தெருவிற்குத் தேரைத் திருப்ப யானைகளை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நவீன காலத்தில் யானைகளின் இடத்தில் டிராக்டர்களும், புல்டோசர்களும் பயன்படுத்தப்படுகின்றன. 

திருவாரூர் தேர் ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவை நோக்கி திருப்பபடும் காட்சி ஆச்சரியப்படத்தக்கது 

"ஆரூரா...தியாகேசா...' என விண்ணை முட்டும் கோஷம் எழுப்பி, வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்வார்கள்...
”அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம். 
தியாகேசர், ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால், தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார்.

அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார். 
பிறக்க முத்தி திருவாரூர் " என்று புகழப்படும் சிறப்பினது; 
மூலாதாரத் தலம்.
' அழகு;ஆழித் தேர்-திருவாரூர்த் தேர் '
பஞ்சபூத தலங்களுள் பிருதிவித்தலம்.

பஞ்சமுக வாத்யம் சிறப்பானது - ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று ஸ்வஸ்தி வடிவிலும், ஒன்று தாமரைப்பூப் போலவும், ஒன்று எவ்வித அடையாளமும் இல்லாமலும், நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும்; மான் தோலால கட்டப்பட்டது. இது ஒவ்வொரு முகத்திலும் தனித் தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும்; ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். 

இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் - மிகப் பெரியது.
எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரட்சை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம், 
சுந்தரர், திருத்தொணட்த் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. 

பரவையார் அவதரித்த பதி. 
'கமலை' என்னும் பராசக்தி தவம் செய்யுமிடம். 

திருமகள் இராமர் மன்மதன் முதலியோர் வழிபட்ட பதி, 
முசுகுந்ததோழன் ஆட்சி செய்த சீர்மையுடையது. 
தியாகராஜா பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம்...

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் "குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்" என்று தம் வாக்கால் புக்ழந்து பாடுகின்றார்.


File:Tiruvarur temple, tank, car.jpg

File:Tiruvarur temple car festival 2010.jpg
File:Thiruvarur-Temple-Inside.jpg
File:Thiruvarur-Temple-Kodimaram.jpg

26 comments:

 1. திருவாரூர் தேரழகு என்று முன்னோர்கள் சொல்லிவைத்துப் போயிருக்கிறார்கள்.

  ReplyDelete
 2. ஆஹா... இன்னிக்கு திருவாரூர் தேரா? நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 3. திருவாரூர் அழகுத்தேரினை பலரூபங்களில் வெகு அழகாக, மிகவும் திவ்யமாக இன்று தரிஸிக்க முடிந்தது.

  ReplyDelete
 4. திருவாரூர் தேர் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது.
  உன்று உங்கள் பதிவில் பார்த்து பரவசம் ஆனேன்.
  நன்றி.

  ReplyDelete
 5. //கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும். வாய் பேச முடியாதவர்கள் கூட வியாழனுக்கு குருவாவார்கள்//

  மெய்சிலிர்க்க வைக்கும் தகவல் இது.

  ReplyDelete
 6. ஆழித்தேரின் உயரம் 90 அடி.
  அகலம் 60 அடி, எடை 300 டன்.

  அடேங்கப்பா!

  ஆழித்தேர் நான்கு நிலைகள் கொண்டது.

  இத்தகைய அபூர்வமான ஆச்சர்யமான
  வியப்பளிக்கும் தகவல்களைத் தருவது தங்கள் பதிவுகளின் தனிச் சிறப்பு.

  ReplyDelete
 7. எங்கள் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் திருவாரூர் தேரைப்பற்றி இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.திருவாரூர் தேர் அழகுதான்.ஆனால் தியாகராஜர் கோயிலின் உட்புறம் சரியான பராமரிப்பின்றி கேவலாமாக உள்ளது.சமீபத்தில் அங்கு சென்றபோது உட்புறத்தைப் பார்த்து நொந்தே போய்விட்டேன்.

  ReplyDelete
 8. //நின்ற நிலையிலேயே முன்நகராமல், ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்குத் திருப்புவதைக் காண்பது கண்கொள்ளாக்காட்சியாகும். வெளிநாட்டவர்கள் கண்டு வியந்து போவார்கள். //

  1969 வரை பல்லாண்டுகள் பழுதடைந்து ஓடாமலேயே இருந்த இந்தத் திருவாரூர் தேரை, பலவித தொழில்நுட்பங்களுடனும், புது ஹைட்ராலிக் ப்ரேக் சக்கரங்களுடனும் ஓட வைத்த பெருமை திருச்சி BHEL தொழில் நுட்ப வல்லுனர்களையும், அதன் அன்றைய தலைவர் திரு. V. கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் சாரும்.

  1970 இல் மீண்டும் முதன் முதலாக இந்தத்தேரை ஓடவைத்தபோது, திரு. V. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பொன்னாடை போத்தி, அவர்கையாலேயே தேர்வடத்தை முதன் முதலாகப் பிடித்து இழுக்க வைத்து, பெருமை செய்தது, அந்தக் கோயில் நிர்வாகம்.

  அந்த காலக்கட்டத்தில் தான் நான் BHEL இல் புதிதாகச் சேர்ந்திருந்தேன்.
  BHEL House Journal ஆன Boiler Plant & You வில் அழகழகான கலர் போட்டோக்களுடன், இந்த செய்திகள் 1971 இல் வெளியிடப்பட்டிருந்தன்.

  ReplyDelete
 9. வை.கோபாலகிருஷ்ணன் said../

  மலரும் நினைவுகளாய் மனத்தேர் அசைந்த வந்து கருத்துகள் மகிழ்ச்சியளித்தன..

  நிறைவான இனிய நன்றிகள் ஐயா கருத்துரைக்கு...

  ReplyDelete
 10. வை.கோபாலகிருஷ்ணன் said../

  மலரும் நினைவுகளாய் மனத்தேர் அசைந்த வந்து கருத்துகள் மகிழ்ச்சியளித்தன..

  நிறைவான இனிய நன்றிகள் ஐயா கருத்துரைக்கு...

  ReplyDelete
 11. அங்கு பிறப்பதனாலேயே முக்தி தருவது திருவாரூர்!

  அருமை.

  பஞ்ச பூதங்களில் பிருதிவித்தலம்!!

  பெருமை.

  இங்கு வாசிக்கப்படும் மங்கல வாத்யமான நாதஸ்வரம்-மிகப்பெரியது,

  தங்களின் பதிவுகள் போலவே!!!

  ReplyDelete
 12. இன்னும் ஆறே ஆறு தான் பாக்கியுள்ளன.

  கரவருடம் முடிய மூன்றே மூன்று நாட்கள் தான் முழுசாக உள்ளன.
  திட்டப்படியும் என் எதிர்பார்ப்புகள் படியும் மிகச்சரியாகவே இருக்கும்.

  பஞ்சபூத ஸ்தலங்களைப் பற்றி கூட ஓர் தனிப்பதிவு தரலாமோ?

  அனைத்துக்கும், அழகான படங்களுக்கும், அரிய பெரிய அற்புத விளக்கங்களுக்கும் நன்றியோ நன்றிகள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. மனதிற்கு நிறைவான பதிவு. நன்றிகள் பல. நான் சிறு வயதில் வளர்ந்த இடம்.ஆரூர் தேரை சிறு வயதில் கண்ணால் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.இன்று தங்களது இந்த பதிவைப் பார்த்ததும் நினைவுகள் கிளர்ந்தெழுகிறது.பகிர்விற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 14. raji said...
  மனதிற்கு நிறைவான பதிவு. நன்றிகள் பல. நான் சிறு வயதில் வளர்ந்த இடம்.ஆரூர் தேரை சிறு வயதில் கண்ணால் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.இன்று தங்களது இந்த பதிவைப் பார்த்ததும் நினைவுகள் கிளர்ந்தெழுகிறது.பகிர்விற்கு மிக்க நன்றி//

  ஆரூரில் பிற்ந்தார் அடியார்க்கும் அடியேன் பதிகம் மனதில் இனிக்கிறது தோழி !

  ReplyDelete
 15. raji said...
  மனதிற்கு நிறைவான பதிவு. நன்றிகள் பல. நான் சிறு வயதில் வளர்ந்த இடம்.ஆரூர் தேரை சிறு வயதில் கண்ணால் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.இன்று தங்களது இந்த பதிவைப் பார்த்ததும் நினைவுகள் கிளர்ந்தெழுகிறது.பகிர்விற்கு மிக்க நன்றி//

  ஆரூரில் பிற்ந்தார் அடியார்க்கும் அடியேன் பதிகம் மனதில் இனிக்கிறது தோழி !

  ReplyDelete
 16. raji said...
  மனதிற்கு நிறைவான பதிவு. நன்றிகள் பல. நான் சிறு வயதில் வளர்ந்த இடம்.ஆரூர் தேரை சிறு வயதில் கண்ணால் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.இன்று தங்களது இந்த பதிவைப் பார்த்ததும் நினைவுகள் கிளர்ந்தெழுகிறது.பகிர்விற்கு மிக்க நன்றி//

  ஆரூரில் பிற்ந்தார் அடியார்க்கும் அடியேன் பதிகம் மனதில் இனிக்கிறது தோழி !

  ReplyDelete
 17. raji said...
  மனதிற்கு நிறைவான பதிவு. நன்றிகள் பல. நான் சிறு வயதில் வளர்ந்த இடம்.ஆரூர் தேரை சிறு வயதில் கண்ணால் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.இன்று தங்களது இந்த பதிவைப் பார்த்ததும் நினைவுகள் கிளர்ந்தெழுகிறது.பகிர்விற்கு மிக்க நன்றி//

  ஆரூரில் பிற்ந்தார் அடியார்க்கும் அடியேன் பதிகம் மனதில் இனிக்கிறது தோழி !

  ReplyDelete
 18. திருவாரூர் தேர் பற்றி பாடல்களில் கேட்டிருக்கிறேன். உங்க பதிவின் மூலம்தான் படங்களில் தேரை பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 19. திருவாரூரின் தேரழகை காண செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 20. நாங்கள் முதல் முறையாக திருவாரூர் சென்றபோது தியாகேசனைத் தரிசிக்க முடிய வில்லை.யாரோ இறந்து விட்டார் என்று நடை சாத்தியே இருந்தது. அடுத்தமுறை முயன்றபோது சாலை மராமத்து என்று சுற்று வட்டாரத்தையே வெட்டிப் போட்டிருந்தார்கள். மூன்றாம் முறை ஈசனை தரிசிக்க முடிந்தது.பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை BHEL நிறுவனம் சரிசெய்து ஓடவைத்தது பெருமையாக இருந்தது. கடந்த ஆண்டு என்று நினைக்கிறேன்,தேரின் சுவடே இல்லாமல் உடைக்கப்பட்டோ பிரிக்கப் பட்டோ இருந்தது. இதில் காணும் படங்கள் இப்போதையதா, முன்பு எடுக்கப் பட்டதா.? இப்போது தேர் ஓடுகிறதா.?கல்பாத்தி தேரையும் சாலையில் திருப்ப இன்னமும் யானையை உபயோகிக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 21. திருவாரூர் தேர்போல அசைந்து வருகிறார் என்பார்கள்.

  அழகிய காட்சிகள் மயங்க வைக்கின்றன.

  ReplyDelete
 22. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. பஞ்சபூத தலங்கள் பற்றிய குறிப்புகள் தர புதிய பிளாக் ஆரம்பிக்கலாம்.

  திருவாரூர்

  ReplyDelete
 24. பஞ்சபூத தலங்கள் பற்றிய குறிப்புகள் தர புதிய பிளாக் ஆரம்பிக்கலாம்.

  திருவாரூர்

  ReplyDelete
 25. 2703+7+1=2711 ;) ஓர் பதில் சந்தோஷமளிக்கிறது.

  ReplyDelete