Monday, April 16, 2012

தேனீஸ்வரர்மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு தென்னஞ்சோலைகள் சூழ்ந்த சோலைவனத்தின் தேனிக்களால் தேனாபிஷேகம் செய்யப்படும் தெனாடுடைய சிவன் சுயம்பு மூர்த்தமாக அருள் பொழியும் , கோவையின் தென் கிழக்கில் அமைந்துள்ள வெள்ளலூர் தேனீஸ்வரர் ஆலயத்திற்கு சித்திரை முதல்நாள் ஆதவன் தன் பொற் கதிர்களால் இறைவனை வணங்கும் அதிசய நாளில் சென்றிருந்தோம்...கல்லணை கட்டிய கரிகால சோழமன்னனால் கட்டப்பட்ட பழமையான ஆலயம்..


அஷ்டமி சந்த்ர விப்ராஜ

லலிதா ஸஹஸ்ரநாமம் கூறும் – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ... என்ற நாமத்தின் படி,அம்பிகையின் நெற்றி - எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. 

 -- அதாவது 8 + 8 = 16 – பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை ....


அந்த அஷ்டமி திதியின் அழகிய காட்சியோடு சிவாலயதரிசனம் சிறப்பாக அமைந்தது.. 

காஞ்சிமா நதியென்று சிறப்பிக்கப்படும் நொய்யல் ஆற்றின் தென் கரையில் இயற்கை எழில் கொஞ்ச கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது..
தேனீக்கள் தேனபிஷேகம் செய்ததால் தேனீஸ்வரர் எனப் பெயர் கொண்டு அழைப்படுகிறார்..

சிவனுக்கு இடப்புறம் இரண்டு கரங்கள் கொண்ட அபூர்வ அமைப்பில் சிவகாம சுந்தரி திகழ்கிறாள்..
ஓம்கார வடிவத்துடன் அபூர்வமான வெங்ச்சங்கல் என்னும் வெள்ளை நிறக்கல்லால் உளி கொண்டு செதுக்காமல் சுயம்புவான 
ஆனை முகனின் அற்புதக் கோலத்தைத் தரிசிக்கலாம்..
அருமையான தட்சிணாமூர்த்தி, வெங்கற்களால் ஆன பஞ்சலிங்க மூர்த்திகள், சிவனின் தீர்த்தத் தொட்டிக்கருகில் அமைந்துள்ள சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம்..
சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசை, வெள்ளிக்கிழமைகள் ,சஷ்டி, ஆகிவைகள் சிறப்பாக ஆராதிக்கப்படுகின்றன..

ஆலயத்திற்குச் செல்லும் வழியில் நிறைய காரம்பசுக்களைக் காணமுடிந்தது மகிழ்ச்சியளித்தது.. 
அவற்றிற்குபூஜை செய்து கொண்டிருந்தார்கள்.. 
நாங்களும்  பசுக்களுக்கு உணவளித்து வணங்கினோம்...


பேரூர் திருக்கோவில் -ஆருத்ரா தரிசனம்அருகில் கட்டப்பட்டுவரும் கள்ளழகர் ஆலயம்..

greatful honey bee lillac


27 comments:

 1. ஆஹா, இவ்வளவு பக்கத்திலுள்ள கோவிலை இவ்வளவு நாளும் பார்க்காமலிருந்து விட்டேனே? உடனே பார்த்துவிடுகிறேன்.

  தேனை சுவைக்காமல் விடலாமா?

  ReplyDelete
  Replies
  1. தேனை சுவைக்காமல் விடலாமா?
   அற்புதமாய் கூரினீர்கள்... திகட்டாத தேன்னல்லவோ அவனின் தேன், மயக்கும் மதுவல்லவோ அவனே தேன்... சிவாயநம...

   Delete
 2. I never had seen this temple dear. Shall you kindly give the exact location to reach this temple?
  I am not able to see some pictures over here.
  Really a I learned about a new temple by your post. Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 3. பழனி.கந்தசாமி said...
  ஆஹா, இவ்வளவு பக்கத்திலுள்ள கோவிலை இவ்வளவு நாளும் பார்க்காமலிருந்து விட்டேனே? உடனே பார்த்துவிடுகிறேன்.

  தேனை சுவைக்காமல் விடலாமா?//

  கருத்துரைக்கு நன்றி ஐயா,,

  கோவை வெள்ளியங்கிரி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்குச்சென்றாலும் அவர்கள் ஆதங்கத்துடன் சொல்வது கோயம்புத்தூரிலிருந்து மிகக் குறைவாகவே பக்தர்கள் வருகிறார்கள் என்பதுதான்...

  வெளியூர்க்காரர்கள் வெகுதொலைவிலிருந்து வந்து தரிசிப்பவர்களே அதிகமாம்,..

  நாங்கள் சென்ற சமயம் கூட மாதம் ஒருதடவை தவறாமல் வ்ருகைதரும் வெளியூர் பெண்மணிகளை சந்தித்து வியப்படைந்தேன்...

  ReplyDelete
 4. அழ்கான படங்களுடன் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. தேனீஸ்வரர் ஆலயம் பற்றிய பதிவு
  தேனாய் மனதில் இனிக்கிறது...

  ReplyDelete
 6. அழகான விளக்கங்கள்

  ReplyDelete
 7. நேரிலேயே தரிசித்த உணர்வை கொடுத்தது உங்களுடைய பதிவு.
  எல்லா முக்கிய தகவல்களையும் தந்து உள்ளீர்கள்.
  படங்களோ மிகவும் நேர்த்தியாக உள்ளன.சில படங்கள் திறக்கவில்லை.குறையாக படவில்லை..
  என்னுடைய தமிழ் ப்ளாகிற்கு வந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 8. viji said...
  I never had seen this temple dear. Shall you kindly give the exact location to reach this temple?
  I am not able to see some pictures over here.
  Really a I learned about a new temple by your post. Thanks Rajeswari.
  viji //

  வெள்ளலூர் பஸ் நிலையத்திலிருந்து நடக்கும் தூரம்தான்.. யாரிடம் கேட்டாலும் வழி சொல்கிறார்கள்..

  ReplyDelete
 9. தேனீஸ்வசரர் இதுவரை கேள்விப்படாத சாமிப் பேரா இருக்கே. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. அடுத்தமுறை கோவை போகும் போது கண்டிப்பாய் போய் வரவேண்டும் என் கணவரிடன் சொல்லி விட்டேன்.
  எல்லா படங்களையும் பார்க்க முடியவில்லை. பார்த்த படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 11. தேனீஸ்வரர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு. நன்றிகள் :)

  ReplyDelete
 13. இருபது வருடங்கள் கோவையில் இருந்திருந்தாலும் நானும் இந்த கோவிலுக்கு சென்றதில்லை. புது தகவலை தெரிந்து கொண்டேன்.

  தேனுபுரீஸ்வரர்னு எங்கேயோ படித்தேன். அது இந்த கோவிலில் உள்ள சுவாமியின் பெயர் தானா?

  ReplyDelete
 14. அழ்கான படங்களுடன்பார்த்த படங்கள் எல்லாம்... நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. கோவை2தில்லி said...
  இருபது வருடங்கள் கோவையில் இருந்திருந்தாலும் நானும் இந்த கோவிலுக்கு சென்றதில்லை. புது தகவலை தெரிந்து கொண்டேன்.

  தேனுபுரீஸ்வரர்னு எங்கேயோ படித்தேன். அது இந்த கோவிலில் உள்ள சுவாமியின் பெயர் தானா?/

  தேனு என்றால் காம தேனு...

  தேவலோகப் பசுவான காமதேனு பால் பொழிந்து வழிபட்ட சிவலிங்கம்..

  தேனீஸ்வரர் தேனீகளால் தேன் சொட்டி வழிபட்ட லிங்கம்..

  காம்தேனுவின் அழகிய கன்றான பட்டி என்னும் நந்தினிப்பசு வழிபட்ட திருத்தலம் பேரூர் பட்டீஸ்வரர்..

  ReplyDelete
 16. தேனீஸ்வரர்..முதல் முறையா கேள்விப்படுறேன்.இவ்வளவு செய்தி எப்படி கலக்ட் பண்றீங்க? ஆச்சர்யமா இருக்கு..

  ReplyDelete
 17. Manimaran said...
  தேனீஸ்வரர்..முதல் முறையா கேள்விப்படுறேன்.இவ்வளவு செய்தி எப்படி கலக்ட் பண்றீங்க? ஆச்சர்யமா இருக்கு..//

  நேரிலே பார்த்து கேட்டு உணர்ந்தவைகள்......

  ReplyDelete
 18. ;) தேனீஸ்வரர் பற்றிய மிக அழகான பதிவுக்கு நன்றிகள்.

  வை. கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 19. //லலிதா ஸஹஸ்ரநாமம் கூறும் – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ... என்ற நாமத்தின் படி,அம்பிகையின் நெற்றி - எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. -- அதாவது 8 + 8 = 16 பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை ....

  அந்த அஷ்டமி திதியின் அழகிய காட்சியோடு சிவாலயதரிசனம் சிறப்பாக அமைந்தது.. //

  அந்தப்பெளர்ணமி நிலாவைவிட மேலும் அழகான தகவல் ;)))))

  - வை. கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 20. //ஆலயத்திற்குச் செல்லும் வழியில் நிறைய காரம்பசுக்களைக் காணமுடிந்தது மகிழ்ச்சியளித்தது.. அவற்றிற்குபூஜை செய்து கொண்டிருந்தார்கள்..//

  ஆஹா! தரிஸிக்க அருமையாகவே இருந்திருக்கும்.

  //நாங்களும் பசுக்களுக்கு உணவளித்து வணங்கினோம்...//

  அடடா! காராம்பசுவாகப் பிறக்காமல்
  கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே என்பாள் நான் எழுதிய [உண்மை சற்றே வெண்மை] ஒரு சிறுகதையில் வந்த கதாநாயகி.

  எனக்கும் இப்போது அதுபோலவே தோன்ற வைத்து விட்டீர்களே!

  வை. கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 21. தேனீஸ்வரர் திருத்தலமும் அதன் படங்களும் வெகு சிறப்பு...

  ReplyDelete
 22. எல்லாப்படங்களும் அழகோ அழகு.

  முதலில் காட்டியுள்ள வெள்ளிக்கவசம் போட்ட சிவபெருமான் ஜோர்!

  என் ப்ளாக்கரில் வழக்கம் போல நேற்று இரவு முதல் பலவித பிரச்சனைகள்.

  என் பதிவையும், பிறர் பதிவுகளையும் படிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக தங்கள் அண்ணா அவர்களின் மெயில் விலாசத்திற்கு மெயில் அனுப்பியுள்ளேன். அதை தயவுசெய்து சென்று பார்க்கவும்.

  டேஷ் போர்டு மட்டும் வேறு ஒரு ரூட்டில் போய் பார்க்க முடிகிறது. புதிய பதிவுகள் எழுத முடிகிறது. எழுதியதை பதிவாக வெளியிடவும் முடிகிறது.

  ஆனால் வெளியிட்ட அதை பார்க்க மட்டும் முடியாமல் பாடாய்ப் படுத்துகிறது.

  எப்போது அதுவாகவே சரியாகுமோ தெரியவில்லை.

  அதனால் வேறு ஒரு இடத்திற்குப்போய் வேறு ஒரு மார்க்கத்தில் தங்களுக்கு மட்டும் [தங்கள் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்ற நோக்கத்தில்] ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் கொடுத்துள்ளேன்.

  அதுவும் ANONYMOUS என்ற பெயரில் தான் வெளிவருகிறது. என்னைக் கடைசியில் இப்படி anonymous ஆக ஆக்கிவிட்டீர்களே! நியாயமா?

  பதிவு அருமையாக உள்ளது.
  மனமார்ந்த பாராட்டுக்கள்.
  அன்பான வாழ்த்துகள்.
  நன்றியோ நன்றிகள்.

  என்னுடைய ஆதிசங்கரர் பாகம்-1 + பாகம்-2 இரண்டையும் நானே இன்னும் பார்க்க முடியாமல் உள்ளது.

  என்ன கொடுமை இது.

  அம்பாள் மனமிறங்கி அருள் புரிந்தால் தான் அனைத்தும் பழையபடி சரியாகும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்!

  vgk

  ReplyDelete
 23. இன்னும் எத்தனை கோயில்களும் சாமிகளும்.முடிவில்லாத ஆன்மீகம் !

  ReplyDelete
 24. அருமையான பதிவு.
  அரிய தகவல்கள்.
  நன்றி.

  ReplyDelete
 25. 90. சிவகேஸவமூர்த்தி கோவிந்தா

  ReplyDelete