Sunday, April 1, 2012

எத்தனை எத்தனை ராமன் !


  File:Rama in Tirumala.jpg


ரகுபதி ராகவ ராஜாராம் !,பதீத பாவன சீதாராம் !
சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !
ரகுபதி ராகவ ராஜா ராம் ! பதீத பாவன சீதாராம் !
ராம ராம ஜெய ராஜா ராம் ! ராம ராம ஜெய சீதா ராம் !

 புகழ் பெற்ற ரகுபதி ராகவ பாடலை இயற்றியவர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமர்த் ராம்தாஸ்.

ராமன் எத்தனை ராமனடி - அவன் நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!! 

 ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் !

வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் 
பொய்யோஎனும் இடையாள்ஓடும் இளையான்ஓடும் போனான் 
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான்.


புண்ணிய பூமியாம் காசியில் அருளாட்சி புரியும் விஸ்வ நாதருக்கு 
தினமும் இரவு 7.45- 8.30 வரை சப்தரிஷி பூஜை நடக்கும்.

சப்தரிஷிகளான அத்ரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு பேரும் வானமண்டலத்தில் சனி உலகத்திற்கு வடக்கே உள்ள சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை இவர்கள் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், கருவறையில் ஏழு அந்தணர்கள்(7 பண்டாக்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர்.

ஏழு மகரிஷிகளால் இயற்றப் பெற்றதால் சப்தரிஷி ராமாயணம் என பெயர் பெற்ற சப்தரிஷி ராமாயணம் சுருக்கமானது..
காஷ்யப மகரிஷியின் பால காண்டம் 

வாரிசு வேண்டுமென தசரதர் வேண்டினார் 
சூர்ய குலத்தில் ஸ்ரீ ராமர் தோன்றினார் 
விஸ்வாமித்திரரிடம் வித்தைகள் கற்றார் 
அஸ்திரங்கள் பல அன்போடு பெற்றார் 
கன்னி யுத்தத்தில் தாடகையை கொன்றார் 
கௌசிகன் வேள்விக்கு காவலாய் நின்றார் 
சுபாகு மாரீசன் இருவரையும் வென்றார் 
அகலிகா கல்லின் மேல் அவர் பாதம் பட்டது 
பெண்ணாகி நின்றாள் பெற்ற சாபம் விட்டது 
ஜனகர் ஆளும் மிதிலை புகுந்தார் 
சிவபெருமானின் வில்லை வகுந்தார் 
மண்ணின் மகளாம் சீதையை மணந்தார் 
ஜானகி ராமனாய் ஊர்வலம் நடந்தார் 
வழியில் பரசுராமருக்கு பணிவை தந்தார் 
அயோத்தி திரும்பினார் நலமாக 
பல்லாண்டு வாழ்ந்தார் வளமாக 

அத்ரி மகரிஷியின் அயோத்யா காண்டம் 

ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக வேளையில் 
சூழ்ச்சி தோன்றியது கூனியின் மூளையில் 
அதை கைகேயி புத்திக்குள் திணித்தாள் 
இரண்டு வரங்களை கேட்கும்படி பணித்தாள் 
கைகேயி ஆசையால் ராமர் பாசத்தை மறந்தாள் 
மன்னனிடம் இரண்டு வரங்களையும் இரந்தால் 
உன் ராமன் காடாள வேண்டும் 
என் பரதன் நாடாள வேண்டும் 
இதை கேட்டதும் தசரதர் கலங்கினார் 
துக்கத்தால் தரையில் விழுந்து மயங்கினார் 
Ayodhya Kanda, Ramayana
பரத்வாஜ மகரிஷியின் ஆரண்ய காண்டம் 

தந்தை சொல் காக்க மனம் உகந்தார் 
சீதா லக்ஷ்மண சமேத ராமர் வனம் புகுந்தார் 
பாவம் போக்கிடும் கங்கையை கடந்தார் 
வேடன் குகனின் நட்பை அடைந்தார் 
மரவுரி சடை முனி போல தரித்தார் 
சித்ரகூடத்தில் சில நாள் வசித்தார் 
காண வந்த பரதனை அணைத்தார் 
தந்தைக்கான ஈமக்கடன் முடித்தார் 
வனத்தில் வசித்தோர்க்கு நன்மை செய்தார் 
பின் அகஸ்திய முனிவரின் ஆசிரமம் எய்தார் 
முனிவரிடம் பெற்றார் இனிதான அருளும் 
அக்ஷ்யவில் எனும் அரிதான பொருளும் 

விஸ்வாமித்திர மகரிஷியின் கிஷ்கிந்தா காண்டம் 

அகஸ்தியர் சொல்படி பஞ்சவடி சென்றார் 
பஞ்சவடியின் முனிவர்களிடம் அபயம் என்றார் 
சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் சிதைத்தார் 
திறம் மிக்க கர தூஷணர்களை வதைத்தார் 
மாயம் செய்த பொன்மானை அதம் செய்தார் 
வானர தலைவன் வாலியை வதம் செய்தார் 
வன ராஜ்யத்தை குண தாரையோடு சுக்ரீவனுக்கு வழங்கினார் 
ஆபத்தில் உதவும் நண்பனாக விளங்கினார் 
கௌதம மகரிஷியின் சுந்தர காண்டம் 

ஆஞ்சநேயர் விளையாட்டாக கடல் தாண்டி குதித்தார் 
அசோகவனத்தில் அன்னையை கண்டு துதித்தார் 
ஸ்ரீ ராமர் தந்த மோதிரத்தை எடுத்தார் 
ஜனகன் மகள் ஜானகியிடம் கொடுத்தார் 
அக்ஷன் முதலான அரக்கரை ஒழித்தார் 
இலங்கையை நெருப்பால் எரித்தார் 
பின் ஸ்ரீ ராமரிடம் வேகமாக பறந்தார் 
கண்டேன் சீதையை என மகிழ்ச்சியோடு பகர்ந்தார் 
ஜமதக்னி மகரிஷியின் யுத்த காண்டம் 

ஸ்ரீ ராமர் நளன் மூலமாக சேது அணை செய்வித்தார் 
வீரம் மிக்க வானரருடன் இலங்கை சென்று கர்ஜித்தார் 
கும்பகர்ணன் முதலான அசுரருக்கு எமனாக நின்றார் 
ராவணன் அழிந்த அப்பெரும்போரில் வென்றார் 
இலங்கை அரசை விபீஷணன் தலையில் முடிந்தார் 
ஜெய ராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் பறந்தார் 
அயோத்யாவின் சிம்மாசனத்தில் மன்னனாய் அமர்ந்தார் 


வசிஷ்ட மகரிஷியின் உத்தர காண்டம் 

சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமர் மன்னனாய் சிறந்தார் 
லக்ஷ்மண பரத சத்ருக்கனரோடு நல்லாட்சி புரிந்தார் 
அவர் ஆட்சியில் அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடந்தன 
மக்கள் மட்டுமல்ல அணில் போன்ற ஜீவன்கள் கூட மகிழ்ந்தன 
ஊரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பிழைக்கச் செய்தார் 
உயிர்களின் தலைவனான் ஸ்ரீ ராமர் தர்மத்தை தழைக்கச் செய்தார் 
பல்லாண்டுகளுக்குப் பின் தம் ராஜ்யத்தை இரண்டாக்கினார் 
தம் புதல்வரான லவ குசரை அவற்றுக்கு அரசனக்கினார் 
தன்னை நேசித்த மக்களோடு சரயு நதியில் இறங்கினார் 
மீண்டும் பரம பதம் சென்று மீண்டும் மஹாவிஷ்ணுவாக விளங்கினார் 

பாராயண பலன் 
அமுதம் நிகரான ராம காதை ஜபித்தவர் 
செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்தவர் 
அறம் பொருள் இன்பம் மூன்றையும் வெல்வர் 
தேவர்கள் விஷ்ணுவை துதிக்கும் வைகுண்டம் செல்வர்

நிறைந்த நன்றிகள் : SHRI RAMESH SADASIVAM
http://iamhanuman.blogspot.in/2008/06/blog-post_6385.
Hanuman Brings Sanjeevani Buti, Yuddha Kanda, RamayanaFile:Rameshvaram lingam.jpg27 comments:

 1. எத்தனை எத்தனை ராமனாக இருந்தால் என்ன!

  அத்தனை அத்தனை ராமன்களும்
  அழகோ அழகு தானே !!

  ReplyDelete
 2. //புகழ் பெற்ற ரகுபதி ராகவ .... பாடலைப் இயற்றியவர் சமர்த்த ராமதாஸ்//

  ராமரைப்பற்றி சொல்பவர், எழுதுபவர், படிப்பவர், கேட்பவர், பதிவிடுபவர் அனைவருமே சமர்த்தோ சமர்த்து தான்.

  புகழ்பெற்றவர்கள்,
  தொடர்ந்து புகழ் பெற்றுக்கொண்டே இருப்பவர்கள்,
  மேலும் மேலும் புகழ் பெறப்போகிறவர்கள்.

  தங்க நாண்யமாக எப்போதும் பிறருக்கு பளபளப்பாக ஜொலிப்பவர்களே, தான்.

  ReplyDelete
 3. பொருத்தமான சினிமா பாடல்களை ஆங்காங்கே காட்டியிருப்பது சிறப்போ சிறப்பு.

  ReplyDelete
 4. ஸப்தரிஷிகள் ஒவ்வொருவராலும் சொல்லப்பட்ட ஏழு காண்டங்களைப் பற்றி எழுதியிருப்பதற்கு .... சபாஷ்!

  தகவல் களஞ்சியம் தந்த தங்கமான செய்திகள் தான் இவையாவும்.

  ;)))))

  ReplyDelete
 5. ஸ்ரீராமஜயம் எழுதிய ஓலைச்சுவடிகளை மாலையாகக் கோர்த்து காட்டப்பட்டிருக்கும் படம் வித்யாசமான சிறப்பாக உள்ளது.

  ”ஸ்ரீராமஜயம்“

  என்றே எழுதப்பட வேண்டும். அதுவே சரியானது.

  அநேகமாக பலரும் “ஜ” க்கு பதில்
  ”ஜெ” என்று போட்டு தவறாக எழுதுகிறார்கள். இதைப்படிக்கும் ஒரு சிலராவது திருத்திக்கொள்ளட்டும் என்பதற்காக இங்கு இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

  ReplyDelete
 6. மொத்த ராமாயணத்தையும் மிக நேர்த்தியாய்
  சுருக்கமாய் படங்களுடன் பகிர்ந்த விதம்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 7. அந்தக்காலச் சித்திரச் சிறப்பான கடைசியில் காட்டப்பட்டுள்ள படம் இன்று முதல் ரேங்க் பெறுகிறது.

  முதன் முதலில் காட்டப்பட்டுள்ள படம் இன்று இரண்டாவது ரேங்க் பெறுகிறது.

  தங்க நாணயம் போல ஜொலிப்பதைப் பார்க்கும் போது முதல் படத்திற்கே முதல் ரேங்க் கொடுக்கணும் போலத் தோன்றியது.

  ஜொலிப்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால், இரண்டாவது ரேங்க் தரப்பட்டுள்ளது.

  கடைசியில் காட்டப்பட்டுள்ள படம் பண்புக்கு எடுத்துக்காட்டாகவும், முதலில் காட்டப்பட்டுள்ள படம் பகட்டுக்கு எடுத்துக்காட்டாகவும் கருதி என்னால் [ரேங்க்] தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.

  பகட்டைவிட பண்பு தானே சிறந்தது!

  ReplyDelete
 8. இராமாயணம் டி.வி. தொடர் முழுவதும் யூட்யூப்பிலிருந்து டவுன்லோடு பண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  என்னுடைய சந்தேகம் நாத்திகத் தொடர்பு மாதிரி தெரிந்தால் மன்னிக்கவும். ஸ்ரீராமனைக் கல்யாணம் செய்துகொண்டு சீதை என்ன சுகம் அனுபவித்தாள்?

  ReplyDelete
  Replies
  1. இராமாயணம் என்பது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று பகவான் வாழ்ந்து காட்டியது. இதில் ராமர் ஒரு அரசன் தன் குடிமக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை வழங்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது. அதே சமயம் ராமர் தான் இங்கு பகவான் சீதை என்பவர் பக்தை . பக்தையின் பிரதானம் பகவானை அடைவது தான். தியாகமும், பக்தியும் பாக வானை அடையும் ஒரே வழி. சீதை தன் மாசற்ற பக்தியால் அனைத்து நேரமும் பகவானையே நினைத்து உருகியிருந்தார் (ராவணன் இடத்திலும்).தியாகம் என்பது வனவாசம் (இருமுறை) மற்றும் சுய பரிட்சை (அக்னி பிரவேசம்) . பக்தனுக்கு பகவானை நினைப்பது, துதிப்பது மற்றும் பகவானுடன் இருப்பது இதுவே மிகப் பெரிய சுகம். இதைவிட வேறு என்ன வேண்டும்.
   ஸ்ரீராம ராம ராமா!!!

   Delete
 9. அழகழகான படங்களுடனும், அற்புதமான பல விளங்கங்களுடனும், இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி மஹோத்ஸவத்தை தங்கள் பதிவுகளின் மூலமே அனைவரையும் கொண்டாட வைத்து அசத்தி விட்டீர்கள்.

  ஸ்ரீராமரைப் பற்றியும், ஸ்ரீமத் ராமாயணத்தைப் பற்றியும் எவ்வளவு தினங்கள், எவ்வளவு முறை, யார் யார் வாய்க் கேட்பினும், அதில் அலுப்பே இருக்காது. ருசியோ ருசி கூடிக்கொண்டே தான் போகும்.

  365 நாட்களும் ஸ்ரீ ராமனைப்பற்றியும், ஸ்ரீ ஹனுமனைப்பற்றியும் கூறிக்கொண்டே இருக்க மாட்டீர்களா எனவே எண்ணத் தோன்றுகிறது.

  இதுவரை கூறிய செய்திகளும், காட்டிய படங்களும், நிறைந்த வயிற்றுக்கு நீர்மோர், பானகம் சாப்பிட்ட திருப்தியை அளித்தது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  2
  =
  ஸ்ரீராமஜயம்

  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

  -oOo-

  ReplyDelete
 10. ராமன் எத்தனை ராமனாக இருந்தால் என்ன? அவன் ஆசி நமக்கு இருந்தால் போடதுமே. படங்கள் வெகு அருமை

  ReplyDelete
 11. தலையைச் சாய்த்துள்ள ராமரிலிருந்து ஒவ்வொரு படமும் அழகு!

  ReplyDelete
 12. அருமையான ராம தரிசனம். இணையத்தில் ஆன்மிகம் பரப்பும் உங்கள் பதிவுகள் மதிப்பிற்குரியவை. அன்பும் பாராட்டும்..

  ReplyDelete
 13. நேர்த்தியான படங்களின் தேர்வுக்கு தனி பாராட்டுகள்..

  ReplyDelete
 14. ஸப்த ரிஷி ராமாயணத்திற்கு நன்றி.
  இதை விட அது பிரமாதம் அதை விட இது அற்புதம் என நினைக்கும் படியாக அத்தனை படங்களும் ஒவ்வொரு வகையில் பிரமிக்க வைக்கின்றன.
  பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 15. அத்தனை ராமன்களும்
  அழகு

  படங்கள் வெகு அருமை

  ReplyDelete
 16. "கல்லிலே கலைவண்ணம் கண்டாள்
  சொல்லிலே கவிதை கண்டாள்
  காட்சியிலே புதுமை கணடாள்
  காணும் பதிவிற்கு அழகு சேர்த்தாள்”

  ராமனின் புகழ்பாடி நெஞ்சு நிறைத்த
  எம் தோழியின் புகழ்பாடி நின்றேன்
  எம் தமிழ்மொழியினிலே
  அழகு கவிபாடி நின்றேன்

  கண்ணனின் அருளால், அனைத்தும் பெற்று வாழ்வாஙுகு வாழ௦
  வாழ்த்து கின்றேன்/ நன்றி /
  ஓம் ராம் ஓம் ராம் ஓம் ராம்

  ReplyDelete
 17. ராமன் எத்தனை ராமன்!

  இறுதியில் உள்ள படம் காணக்கிடைக்காதது.

  ReplyDelete
 18. ராமனின் படங்கள் அழகு ..சப்தரிஷி எழுதியதன் தகவல் பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 19. அருமை... ராமர் படங்கள்...பாடல்கள்...தகவல்...எல்லாம் A -1 !!!

  ReplyDelete
 20. ரொம்ப பிரமாதமாய் இருந்தது.......

  ReplyDelete
 21. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. அத்தனை ராமன்களும்
  அழகோ அழகு அருமையான பதிவு.
  வாழ்த்துகள்

  ReplyDelete
 23. 69. கோவிந்தா ஹரி கோவிந்தா

  ReplyDelete
 24. நிறைய பேருக்கு சப்தரிஷி ராமாயணத்தை கொண்டு சென்றுள்ளீர்கள். நன்றி! ஸ்ரீராமஜெயம். (இத்தனை நாள் நான் இதை கவனிக்கவில்லை...)

  ReplyDelete