ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
- வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவது..
1. பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி - என்னும் பன்னிரன்டு சக்திமிக்க மந்திர நாமங்களால் அழைக்கப்படுகிறாள் அன்னை வராஹி..
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக , உலகத்திற்கே தாயாக விளங்கும் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரியின் அங்குசத்திலிருந்து தோன்றி, ஸ்ரீலலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத் தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குபவள்
அன்னை வராஹி..
பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன் மற்றும் திருமாலின் மற்றொரு அம்சமாகத் தோன்றிய வராகம் ஆகிய தெய்வங்களின் சக்திகள் முறையே, பிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி மற்றும் வராகி என உருக்கொணடு, சப்தகன்னிகளாக மக்களுக்கு அல்லல் இழைத்து வந்த அசுரர்களை வதம் செய்வதற்காக தோன்றி, அவர்களை அழித்தனர் என சாக்த நூல்கள் சொல்லுகின்றன.
வராக அவதாரத்தின் அவதார சக்தியாக உருவான வராகி! பன்றி முகமும் பெண்ணின் உடலும் கொண்டவளாய் இருப்பாள்.
ஸ்ரீ வராகிக்கு ஞான சக்தியை வெளிப்படுத்துவதற்காக
மூன்றாவது கண் உண்டு.
எட்டு திருக்கரங்களில் எட்டு விதமான ஆயுதங்களுடன்
நீல நிறத்தில் காணப்படுவாள்.
ஸ்ரீ வராகி செந்நிற ஆடையுடுத்தி, நவரத்தின கிரீடம் சூட்டிக் கொண்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருள்வாள் .
கலப்பையும் உலக்கையும் இவளது தனிப்பட்ட ஆயுதங்கள்!
ஸ்ரீவித்யா: சக்தி வழிபாட்டு முறையில் ஸ்ரீ வித்யா வழிபாடு உயர்நிலையானது. இவளுக்கு நான்கு கைகள்! இவற்றில் ஒரு கையில் புஷ்பபாணம் கொண்டிருப்பாள்.
ஆனி மாதம் அமாவாசை கழிந்த பஞ்சமி திதியில் ஸ்ரீவித்யாவின் கையில் இருந்த புஷ்ப பாணங்கள் வராகியாக உருவாயின.
அம்பாளின் படைத் தலைவியாகவும், அதனை முன் நின்று செய்து முடிப்பவளாகவும், அம்பாளுக்கு முன்பாக, தவறுக்கு ஏற்ற தண்டனையை வழங்குபவளாகவும் அமைந்தவள் வராகி.
"தேவி மாகாத்மியம்' நூல், "மதுகைட பர்வத வதம், சும்ப நிசும்ப வதம், சண்ட -முண்டர் வதம், மகிஷாசுர வதம்' போன்றவற்றை முன்னின்று நடத்தி அம்பாளுக்கு வெற்றியைத் தேடித் தந்தவள் வராகி என்கிறது.
சோழ, சாளுக்கிய மன்னர்களுக்கு வராகி மீது நம்பிக்கை அதிகம். வெற்றியைத் தடங்கலின்றி தேடித்தரும் உன்னத தேவதை என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.
வராகி ஜெயசக்தியின் உருவமானதால் சும்ப நிசும்பர்களைக் கொன்ற நிசும்ப சூதனிக்கு, சோழப் பேரரசைத் தோற்றுவித்து நிறுவிய விஜயாலயன், எடுத்த தனி ஆலயம் இன்று வரையிலும் வழிபாட்டில் உள்ளது.
காந்தளூர், வேங்கை நாடு, கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பாடி,குடமலை நாடு, கொங்கு நாடு, கொல்லம், கலிங்கம், இரட்டைப்பாடி, ஏழரை இலக்கம் போன்ற பல சாம்ராஜ்ய மன்னர்களை வெற்றி கொண்ட சோழன். ஒவ்வொரு முறையும் போருக்குச் செல்லும் போதெல்லாம் வராகியை வணங்கி விட்டுத்தான் செல்வான். பெரும் வெற்றிகளையும் பெற்றான். அதனால் வராகி, சோழர்களுக்கு "வெற்றி தெய்வம்' ஆகியது.
வராகி காட்டிய வழி: வராகி என்னும் வெற்றி தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு பல இடங்களைத் தேர்வு செய்தும், இறைவனிடம் இருந்து உத்தரவு எதும் கிடைக்கப் படவில்லை.
ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது, ஓர் இடத்தில் ராஜராஜனுக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது. அதனைத் துரத்திச் சென்றபோது போக்குக் காட்டி பல இடங்களுக்குச் சென்று ஒரு பெரிய திடலில் சுற்றிச் சுற்றி வந்து படுத்துக் கொண்டது வியப்பளித்தது.
வராகமாக இருப்பதனால் அதனைக் கொல்லாமல் துரத்தியும் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியைத் தோண்டியது.
அரண்மனை திரும்பிய ராஜராஜன், அரச ஜோதிடரை அழைத்து விவரம் கேட்க. கோயில் கட்ட இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதைத் தெரிவித்தார் ஜோதிடர்.
அந்த இடத்தில் பெரிய கோயில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்ததொரு சந்நிதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு, பின்னர் பணியைத் துவக்கி தேவியின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோயிலை கட்டினார் ராஜராஜன்..
ராஜராஜன்கடைப்பிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியைத் துவங்குவதானாலும் முதலில், வராகி பூஜை செய்த பின்னரே, துவக்கும் வழக்கம் பெரிய கோயிலில் உள்ளது.
சக்தி வழிபாட்டிற்கும் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒன்பது இரவுகளில் சக்தி தேவி தனது அளப்பரிய கருணை மூலம் மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறாள்.
புரட்டாசி அமாவாசைத் தொடர்ந்து சாரதா நவராத்திரியும், தை அமாவாசையை அடுத்து சியாமளா நவராத்திரியும், பங்குனி அமாவாசைக்கு அடுத்து வசந்த நவராத்திரியும், ஆனி அமாவாசைக்கு அடுத்து, "ஆஷாட நவராத்திரி'யும் கொண்டாடப்படுகிறது.
வராஹி ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவி. அளப்பரிய சக்தி கொண்டவள். நியாயமாக வேண்டுவோருக்கு வேண்டியதை வேண்டியவாறே அருள்பவள்.
விவசாயமும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் அபிவிருத்தி அடையவும், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியையும் அருள்பவள். பூமித் தாய்க்காக பயிர்களை விளைவிப்பதும் பலன் தருவதும் தனது கடமைகளாகக் கொண்டவள்.
ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளிலும், எட்டாம் நாளிலும் வராகியைப் போற்றி வணங்கினால் விவசாயச் செழிப்பும், வெற்றிச் சிறப்பும் அடையலாம்.
தஞ்சை பெரியகோயிலில் ஆஷாட மாத சிறப்பு:நாளில் இருந்து தசமி முடிய 10 நாட்களும் தஞ்சை பெரிய கோயிலில் குடிகொண்டுள்ள ஸ்ரீ வராகி தேவிக்கு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
வராகி தேவிக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என, பூமியில் விளையும் பொருள்களைக் கொண்டே அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறான அலங்காரங்களில் வராகி தேவியைத் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டும்.
ஆஷாட நவராத்திரியில் வராகி தேவியை வழிபடுவோர் குடும்பப் பிரச்னைகள், கோர்ட் வழக்குகள், நிலத்தகராறு போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
திரு ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி - அகிலாண்டேஸ்வரி அம்மை- வராஹி ஸ்வரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.
நெல்லையப்பர் கோவில் வராஹி அதி அற்புதமாய் இருப்பாள்.
தொடர்புடைய பதிவுகள்
ஸ்ரீ வாராஹி மாலை
SWETA LAKSHMI VARAHI :: WARANGAL :: VARAHI MATA ::
VARAHI MATA TEMPLE IN TELANGANA
பெரிய கோயிலின் தகவலோடு அனைத்தும் சிறப்பு அம்மா... நன்றி...
ReplyDeleteதஞ்சை பெரியகோவிலின் சிறப்பான தகவல், ஸ்ரீவராஹி அம்மனின் அழகான படங்கள், காணொளி உட்பட நல்பகிர்வு. நன்றி
ReplyDeleteதிருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்களின் பக்திமயமான இன்னிசையுடன் முதல் காணொளி காட்சிகள் பார்க்கவும் கேட்கவும் வெகு அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
நேற்றைய தினமலர் பக்திமலர் அட்டையிலும் இதே வராஹி அம்மன் படம் இடம்பெற்று ‘வரமெல்லாம் தருவாள் வாராஹி’ என்ற தலைப்பில் முதல் மூன்று பக்கங்களுக்கு எழுதப்பட்டுள்ளன.
ReplyDeleteஅதில் அனைத்து இடங்களிலும் ’வாராஹி’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் பதிவினில் ’வராஹி’ மட்டுமே.
தங்கள் வாராஹிக்குக் கால் இல்லை.
ஒருக் கா ல், கால் இல்லாத தங்கள் வராஹியே கூட சரியான உச்சரிப்பாகவும் வார்த்தையாகவும்கூட இருக்கலாம்.
>>>>>
இரண்டாவது படமாக இருந்ததை இப்போ அதற்குள் ஆறாவது படமாக ஆக்கியுள்ளீர்கள் ....
ReplyDeleteஅம்பாள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அழகோ அழகு. கம்பீரமான தோற்றம். கருணையுடன் கூடிய கனிவான பார்வை. கரும்பாய் இனிக்கும் படம். கால் பாதங்கள் இரண்டையும் நன்கு தரிஸிக்கும்படி அந்தப்படம் அமைந்துள்ளது.
அம்பாளின் ஸ்ரீபாதங்களைப்பற்றிடவும், கண்களில் ஒத்துக்கொண்டு, சரணாகதி அடையவும் ஆசையும் பேரெழுச்சியும் ஏற்படுத்துகிறது.
>>>>>
//அம்பாளின் ஸ்ரீபாதங்களைப்பற்றிடவும், கண்களில் ஒத்துக்கொண்டு, சரணாகதி அடையவும் ஆசையும் பேரெழுச்சியும் ஏற்படுகிறது. //
Deleteஇதில் கண்களில் ’ஒத்திக்கொண்டு’ என்ற வார்த்தை தவறுதலாக கண்களில் ‘ஒத்துக்கொண்டு’ என விழுந்துள்ளது.
என் எழுத்துப்பிழைத் தவறினை ’ஒத்துக்கொண்டு’ இந்த விளக்கம் அளித்துள்ளேனாக்கும் !
ஸ்ரீ யந்திர பூஜை என்ற காணொளி காணமுடியாமல் உள்ளது. அதுவும் நன்மைக்கே என விட்டுவிட்டேன்.
ReplyDelete>>>>>
d-tv யின் ஸ்ரீ யந்திர பூஜை நிகழ்ச்சியின் காணொளி கண்டு களித்தேன். வெகு நேரம் ஓடியது. இப்போத்தான் அதை என்னால் காண முடிந்தது.
Deleteபொதுவாக பன்றி என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு உருவம். எனக்கும் அதை பார்க்கவே சுத்தமாகப் பிடிக்காது.
ReplyDelete’அதுபோலெல்லாம் சொல்லக்கூடாது. இறைவன் படைப்பினில் அதுவும் ஒரு உயிர். ஸ்வாமியே வராஹ அவதாரம் எடுத்துள்ளார், அம்பாளே வாராஹியாகத் தோன்றுகிறாள்’ எனச்சொல்லாமல் சொல்கின்றன தங்களின் பதிவுகள்.
பன்றி முகத்தினையும்கூட அழகழகான படங்களாகக் காட்டி, பக்தியுடன் போற்ற வைக்கும் தங்களின் ஆன்மிகப் பதிவுகள் என்னை மிகவும் அதிசயிக்கத்தான் வைக்கின்றன.
>>>>>
ஸ்ரீ ராஜராஜ சோழ மஹாராஜா, உலகப்புகழ் பெற்ற தஞ்சைப்பெரிய கோயிலை அந்தக் குறிப்பிட்ட இடத்தினில் கட்டியுள்ள வரலாற்றினை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
பொதுவாக தங்களின் இன்றைய பதிவு மிகவும் அருமையோ அருமையாக பல்வேறு செய்திகளைத்தாங்கி, பல்வேறு மிகச்சிறப்பான படங்களுடனும் விளக்கங்களுடனும் அமைந்துள்ளது.
ReplyDeleteவிடியவிடியத்தூங்காமல் அடுத்தடுத்து தினமும் ஒரு பதிவு வீதம் தந்துகொண்டே வரும் தங்களின் ஆற்றலையும், அறிவையும் நினைக்க நினைக்க எனக்கும் இரவெல்லாம் தூக்கமே வருவது இல்லை.
>>>>>
பொதுவாக தங்களின் இன்றைய பதிவு மிகவும் அருமையோ அருமையாக பல்வேறு செய்திகளைத்தாங்கி, பல்வேறு மிகச்சிறப்பான படங்களுடனும் விளக்கங்களுடனும் அமைந்துள்ளது.
ReplyDeleteவிடியவிடியத்தூங்காமல் அடுத்தடுத்து தினமும் ஒரு பதிவு வீதம் தந்துகொண்டே வரும் தங்களின் ஆற்றலையும், அறிவையும் நினைக்க நினைக்க எனக்கும் இரவெல்லாம் தூக்கமே வருவது இல்லை.
>>>>>
அடடா, இந்தப்பின்னூட்டம் ஒருமுறைக்கு இருமுறையாக எப்படி என்னால் அனுப்பப்பட்டுள்ளது ! ஆச்சர்யமாக உள்ளது !!
Deleteஇரவெல்லாம் தூங்காமல் கண் விழிப்பதனால் இருக்கலாமோ !!!
அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteஎன் கருத்துக்களுக்காக கோயில் மாட்டை வெளியே கட்டிப்போட்டு வைத்திருப்பீர்கள் ..... பாவம். ;(((((
இந்தமாதம் 10ம் தேதியே கூட மாட்டுக்கொட்டகைக்கே நேரில் போய் கருணையுடன் புண்ணாக்கு அளித்துவிட்டு வந்துள்ளீர்களே ! ;(((((
அது நெடுக மேய்ந்து சுற்றிச்சுற்றி வருவதுபோல இங்கும் வராமல் என்ன செய்யும்? ;(((((
;) 1318 ;)
oooo oooo
சற்று நேரம் முன்பு இரண்டாவது படமாகக் காட்டியிருந்த ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் இரு பொற்பாதங்களுடனும் அழகாகத் தெரிந்தாள். சும்மா ஜொலித்தாள்.
ReplyDeleteஅதைப்போய் நீக்கிவிட்டு ஒரேயொரு பாதம் மட்டும் தெரிவதுபோல ஆக்கி இப்போது அவளுக்கு ஆறாமிடம் அளித்துள்ளீர்கள்.
எப்போதும் எதிலும் என் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி முதலிடம் மட்டுமே வகிக்க வேண்டும்.
இப்போது நான்காம் படம் காட்சியளிக்கவே இல்லை. பதிவு வெளியிட்டபின், மாத்தி மாத்தி இதுபோல ஏதாவது செய்யாதீங்கோ, ப்ளீஸ்.
ஆஹா, சிறுகதை விமர்சனப்போட்டியின் ஒட்டுமொத்தப் பரிசு பெற்றோர்கள் பட்டியல் போலவே இங்கு இப்போது ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் இரு பொற்பாதங்களுடனும் மீண்டும் இரண்டாம் இடத்தில் காட்சி தருவதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !
Deleteமீண்டும் மீண்டும் அதிக பட்ச ஹாட்-ட்ரிக் பரிசு போல முதலிடத்திற்கு வந்தால் மேலும் மகிழ்ச்சியே ! ;)
இருப்பினும் அந்த இரண்டாவதாகக் காட்டியுள்ள ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளைவிட, மேலிருந்து கீழ் ஏழாமிடமாக இப்போது கொண்டுவரப்பட்டுள்ள அம்பாள் முகத்தில் தான் ஒரு தனி தேஜஸ் + வசீகரம் உள்ளது ....... கவனித்தீர்களா !
Deleteஅதுதான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப்புடிச்சிருக்கு ! ;)
சப்தகன்னிகைகள் கவர்ச்சியாக ஜோராக உள்ளனர்.
pictures of sri lalitha thiripurasundari amman is great
ReplyDeleteமுடிவுரையாக நான் அளித்த பழைய பின்னூட்டம் ஒன்றும், புதிய பின்னூட்டங்களில் ஒன்றும் வெளியிடப்படாமல் எங்கோ காணாமல் போய் உள்ளன.
ReplyDeleteமாடு மேயவோ ...... அல்லது ...... மாடு மேய்க்கவோ ...... அல்லது மாட்டுக்குப் புண்ணாக்கு வைக்கவோ அவைகள் போயிருக்கலாம் ;(
வரமருளும் வராகித்தாயின்
ReplyDeleteவரலாறும் படங்களும் அருமை!
வாழ்த்துக்கள் சகோதரி!
வெற்றி தெய்வமான வாராஹியைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
ReplyDeleteஆவ்வ்வ்வ் வாராஹி அம்மனுக்கு இத்தனை முகங்களோ.. இன்றுதான் எனக்கு தெரியும். சமீபத்தில்தான் வாராஹி அம்மன் என ஒரு அம்மன் இருப்பதையே அறிந்தேன். கூகிளில் தேடி மேலே இருந்து 3வதாக இருக்கும் அம்மந்தான் வாராஹி அம்மன் என கண்டு கொண்டேன். அன்றிலிருந்து அவவுக்கும் எனக்கும் இடையில் பயங்கர லவ் ஓடுகிறது.
ReplyDeleteஇப்போதான் பார்க்கிறேன் இவை எல்லாம் வாராஹி அம்மனின் வடிவங்கள் என. மிக்க மகிழ்ச்சி. எனக்குப் பிடித்த பதிவாகி விட்டது இன்றைய பதிவு.
வரங்கள் அருளும் வாராஹியின் படங்களும், பாடல்களும், செய்திகளும் மிக அருமை.
ReplyDeleteதஞ்சையில் முன்பு அடிக்கடி பார்ப்பேன் அன்னை வாராஹியை. இப்போது பார்த்து இரண்டு வருடம் ஆகி விட்டது.
இன்று உங்கள் பதிவில் மீண்டும் பார்த்து விட்டேன் மகிழ்ச்சி. நன்றி.
வாழ்த்துக்கள்.
தஞ்சை பெரிய கோவில் தகவல் புதிது. வழக்கம்போல் அருமையான படங்களுடன் பதிவு மிளிர்கிறது. அப்ப்ப்பா எத்தனை விஷயங்கள்.?எதெல்லாம் நினைவில் நிற்கும் தெரியவில்லை. பாராட்டுக்கள்
ReplyDeleteஅன்புள்ள
ReplyDeleteவணக்கம். உங்களின் பதிவைப் படிக்க வேண்டியதில்லை. படங்களைக் கண்கொட்டாமல் பார்த்தாலே போதும். மனம் அமைதிப்படுகிறது. ஒவ்வொரு பதிவும் அந்தந்த தொடர்புடைய கோயிலுக்குள் வந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. உங்களின் படங்களின் தேர்வு கடவுளின் அருள்தான்.
nice
ReplyDeleteWhere is ther temple?
ReplyDelete