Saturday, June 28, 2014

சயனத் திருக்கோல அனுமன்


குடும்ப ஒற்றுமை மேலோங்கவும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். 
ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரம்..

ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம் 
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம் 
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமனே போற்றி.

பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம் 
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம் 
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாய்ந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

மஹாராஷ்டிராவில் குல்தாபாத் என்ற ஊரில் உள்ள பத்ரமாருதி ஆலயம் இந்தியாவில்  அனுமனை சயனத்திருக்கோலத்தில் தரிசிக்கும் 
மூன்று ஆலயங்களில் ஒன்று
ஔரங்கசீப் காலத்தில் இப்பகுதி  சொர்க்கத்தின் நுழைவாயில் என்று
 [ குல்தா என்றால் சொர்க்கம் ] அழைக்கப்பட்டது. 

மூலிகை மலையில் அனுமன் இலங்கைக்குத் தூக்கிச் சென்றபோது வழியில் இங்குள்ள மலையில் தங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டதாக ஐதீகம். 


புராண காலத்தில் பத்ராவதி என்ற பெயரால் இத்தலம் அழைக்கப்பட்டது. 

இப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த பத்ரசேன மன்னன் ராமசந்திர மூர்த்தியின் தீவிர பக்தர். ராமரைப் பற்றிய பாடல்களைப் பாடுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். 


செல்வத்தின் மீதோ ஆட்சி அதிகாரத்தின் மீதோ பற்றற்று இருந்த மன்னனை மக்கள்  
ராஜரிஷி பத்ரசேனர் என்றே அழைத்தனர்

மன்னர் தன் இஷ்டதெய்வமான ராமரை பத்ரா என்றே அழைத்தார். 

ராமருக்கு ஒரு சிறிய ஆலயத்தை எழுப்பி அதன் அருகில் பத்ர குண்டம் என்ற தீர்த்தகுளத்தையும் நிர்மாணித்தார். 


ராமபிரானின் அருளால் அவருக்குப் பிறந்த பெண் குழந்தைக்கும் பத்ரா என்று பெயர் வைத்து மகிழ்ந்தார். 


ஒரு நாள் மன்னர் பத்ரசேனரின்  ராம நாம சங்கீர்த்தனத்தைக் கேட்ட அனுமன் தன்னை மறந்த நிலையில் படுத்து உறங்கிவிட்டார்
ராம சங்கீர்த்தனம் முடிந்ததும் தன் எதிரில் அனுமன் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்ட மன்னர் அனுமன் விழித்தெழுந்தபோது அவருடைய பக்தர்களுக்கு என்றென்றைக்கும் அருள்புரிகின்ற வகையில் அவர் அங்கேயே சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிக்க வேண்டும் என்றும் மணப்பருவத்தில் இருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமன் அருளால் எந்தத் தடையுமின்றி திருமணம் கைகூடவேண்டும் என்றும் 
அவரை வழிபடுவோருக்கு மன நிம்மதியும் அனைத்து நலங்களும் 
அருள வேண்டும் என்றும் வேண்டவே அனுமனும் மன்னரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தாராம்
கருவறையில் வெள்ளிக்கிரீடம் தரித்து வெள்ளி கதை ஏந்தி யோக நித்திரையில் ஆழ்ந்து, சிந்தூரம் தரித்து அபூர்வ காட்சி தருகிறார் பத்ரமாருதி 

பத்ரசேனன் மன்னனுக்குக் காட்சி தந்ததால் 

பத்ரமாருதி என்னும்  திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
ஆலயத்தில் நுழைந்தவுடன் முதலில் அனுமன் பாதத்தை தரிசித்துவிட்டு அவர் திருமுகத்தை தரிசிக்கலாம்

 சனிக் கிரகத்தின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்க 

சனி பகவானை தரிசிக்கிறார்கள். ஆலயச் சுவர்களில் மாருதி பற்றிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
அருகில் உள்ள சூலிபஞ்சன் தலத்தில் தத்தாத்ரேயரோடு ஜனார்த்தனர் மற்றும் ஏகனாத முனிவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.  

அனுமன் ஜெயந்தியின்போது அவுரங்காபாத்திலும் சுற்றிலும் உள்ள கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செய்து பத்ர மாருதியை தரிசிக்க வருகின்றனர். 


அதே போல் ஸ்ரீ ராம நவமியும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
குல்தாபாத் சயன் மாருதி ஆலயம் போன்றே உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் சயனக்கோலத்தில் பெரிய உருவில் அனுமன் காட்சி தருகிறார். 

இவரை படா ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர்.  


ராவண வதம் முடிந்து இப்பகுதி வழியாக ராமபிரானுடன் அயோத்திக்கு வந்து கொண்டிருந்த அனுமன் இங்கு தன் உடல் களைப்பு தீர நித்திரை கொள்ளத் துவங்கிவிட்டாராம். 

சீதா தேவிதான் அவரை எழுப்பினாராம்

அலகாபாத் ஆலயத்தின் முன்பாக பாய்ந்து வரும் கங்கை நதியின் நீர் அனுமனின் திருப்பாதங்களைத் தொட்டவாறு ஓடினால் சுபிட்சம்  ஏற்படும் என்றும் கங்கை நீர் அவ்வாறு பாதங்களை தொடாமல் விலகிச் சென்றால் நாட்டில் வறட்சியும் பஞ்சமும் ஏற்படும் என்றும்  நம்புகின்றனர்.

மத்திய பிரதேசம் சௌசார மாவட்டம் ஜம் சாவ்லி என்ற கிராமத்திலுள்ள அனுமன் சயன ஆஞ்ச நேயராகக் காட்சி தருகிறார். 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தவாடாவிலுள்ள ‘சாம்வலி’ எனும் ஊரில் பள்ளி கொண்ட அனுமன் கோயில் உள்ளது. 

நாக்பூரிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம்! உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை தொலைவிலிருந்தும் தெளிவாக தரிசிக்கலாம். 

பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் கதையுடன் அரைக்கண் மூடிய கோலத்தில், கால்மேல் கால் போட்டவாறு படுத்துறங்கும் நிலையில் அனுமன் அருள் புரிகிறார். 

ஸ்ரீராமாவதாரம் முடிந்த பிறகு ஆஞ்சநேயர் இங்கு பெரிய மரத்தடியில் படுத்து, ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது.

பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள ஓர் அரச மரத்தின் வேர்கள் 

மாருதி சயனித்திருப்பது போன்ற வளர்ந்துள்ளன. 

இதனைத்தான் சயன ஆஞ்ச நேயராக வழிபட்டு வருகின்றனர்.
 
பல ஆண்டுகளுக்கு முன்னால், இரு முறை அனுமனை நிற்க வைத்து கோயிலெழுப்ப முயற்சித்தபோது, அனுமன் நழுவி நழுவிப் படுத்துக் கொண்டுவிட்டாராம். 

எனவே, நிற்க வைக்கும் முயற்சியை அதோடு விட்டு விட்டனராம். 

மரவேரில் சுமார் ஆறடி நீளத்தில் சுயம்புவாக-உடல் முழுவதும் செந்தூர வர்ணம் பூசி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் அனுமன். 

முதல் சுற்றில் ஆண்கள் மட்டுமே செல்லலாம். பெண்கள் இரண்டாம் சுற்றில் மட்டுமே கால்புறமாக சென்று தரிசிக்கலாம். 

கோயில் நுழைவாயிலிலிருந்து உள் பக்கம் வரை, அனுமன் சாலீசா இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது. அருகில் பஜனைக் கூடம் உள்ளது. 
யாத்ரீகர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

மனநிலை சரியில்லாதவர்கள் இந்த மாருதியை வழிபட்டால் 
குணம் பெறலாம்!

தொடர்புடைய பதிவு
மணிராஜ்: உ‌ல்டா' ஹனும‌ன்'27 comments:

 1. சயன கோலத்தில் அனுமனை இதுவரை பார்த்ததில்லை.
  கேள்விப்பட்டதும் இல்லை.

  தகவல்களுக்குப் பல பல நன்றி.

  அனுமன் தரிசனம்
  அனுதினம் வேகமும்
  விவேகமும் தரும்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 2. அனுமனின் அருள் வெள்ளம் பாய்ந்தது. அருமையான படங்கள்.

  ReplyDelete
 3. ஹனுமன் பெருமை அருமை . நன்றி

  ReplyDelete
 4. ’சயனத் திருக்கோல அனுமன்’

  தலைப்பே ஆச்சர்யமாக உள்ளது.

  அனுமனுக்கும் தங்களுக்கும் சயனம் ஏது ?????

  அவருக்கு எப்போதுமே ராமநாம நினைவு மட்டுமே !

  தங்களுக்கு எப்போதுமே பதிவுலக நினைவு மட்டுமே !!

  உங்களால் எனக்கும் இப்போதெல்லாம் சயனமே இல்லை.

  அடுத்தடுத்து தங்களின் பதிவுகளைப்பார்க்க வேண்டும்.

  விமர்சனம் போல பல கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே.

  நிம்மதியாக சயனம் செய்ய எனக்கேது நேரம் !!!!!

  >>>>>

  ReplyDelete
 5. சனிக்கிழமைக்கு ஏற்ற பொருத்தமான பதிவு.

  அற்புதமான அனுமன் படங்களாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 6. சமய சஞ்சீவி போன்ற அழகான ஸ்லோகங்கள் கொடுத்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

  >>>>>

  ReplyDelete
 7. எத்தனை எத்தனை கோயில்கள்!

  எத்தனை எத்தனை விபரங்கள்!!

  எப்படித்தான் தகவல்கள் சேகரித்து, படங்களை சேகரித்து இப்படி அழகாக அனுதினமும் எனக்கு விருந்தாகப் பரிமாற முடிகிறதோ !!!

  ஒவ்வொன்றும் மணிமணியாய் ஜகமணியாய்த்தான் உள்ளன.

  என்னையும் தாங்கள் குல்தாவுக்கே [சொர்க்கத்துக்கே] அனுப்பிவிட்டது போல பிரமிப்பு ஏற்படுத்தியது. ஒரு நிமிடம் பயந்தே போய்ட்டேன். நானும் சொர்க்கத்திற்கு போய்விட்டால் தங்களின் அன்றாட பதிவுகளை எப்படி நான் பார்க்கவோ/படிக்கவோ முடியும்?

  >>>>>

  ReplyDelete
 8. பத்ரா ..... கதை அழகாக அருமையாக உள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் சயன கோலமா? கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது.

  ஆமாம். வடை எங்கே ? பிரஸாதமாக கொஞ்சம் தரக்கூடாதா?

  >>>>>

  ReplyDelete
 9. அலஹாபாத்தில் தாங்கள் சொல்லும் படா ஆஞ்சநேயரை பார்த்ததுபோல எனக்குக் கொஞ்சம் ஞாபகம் உள்ளது.

  படா படா பஹூத்படா விஷயங்களாக ஏதாவது சொல்லி தினமும் அசத்துகிறீர்கள். ! ;)

  உங்களுடையது அனைத்துமே எனக்கு எப்போதுமே தூத்பேடா போல இனிமையாகவும் சுவையாகவும் உள்ளன.

  >>>>>

  ReplyDelete
 10. ’சீதா தேவிதான் அவரை எழுப்பினாராம்’ என்ற சிகப்பு எழுத்துக்கீழே ஒரு சிகப்பு அனுமார் படம் உள்ளது அல்லவா, அதன் கீழே நீலநிற எழுத்துக்களுக்கு வாங்கோ ................... அதில் உள்ள இரண்டாவது வரியைப்பாருங்கோ

  அனுமனின் திருப்பாதங்களைத் தொட்டவாறு ஓடினால் சுபிட்சமா?

  அல்லது திருப்பாதங்கள் உள்ள தங்களைத் தொட்டுவிட்டு ஓடினாலே சுபிட்சமா?

  கங்கையாகிய நான் திருப்பாதங்களைத் தொட கோவைக்கு வர வேண்டுமா அல்லது அலஹாபாத்துக்குச் செல்ல வேண்டுமா ?

  அலஹாபாத் செல்வதைவிட கோவைக்கு வருவதில் தான் எனக்கு விரும்பமாக்கும். அதுதான் சுலபமாக்கும். உடனே எனக்கு என் சந்தேகத்தைத் தெளிவு படுத்துங்கோ.

  எழுத்துக்களுக்கு இடையே ஒருசின்ன இடைவெளியும் ஒரு எக்ஸ்ட்ரா ‘த’ வும் போட்டு என்னை இப்படி ஹிம்சிக்கிறீர்களே.

  [திருப்பாத தங்களைத் தொட்டவாறு ;))))) என்று உள்ளது]

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அடடா ! அந்த இடத்தை இப்போது மாற்றி, என்னைக் கோவைக்கு வரவேண்டாம்ன்னு தடுத்து விட்டீர்களே .......... நியாயமா?

   சரி பரவாயில்லை. தாங்களாவது திருச்சிக்கு எங்காத்துக்கு கட்டாயம் வாங்கோ. தங்கள் திருப்பாதங்கள் எங்கள் இல்லத்தில் பட்டு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.

   முன்கூட்டியே சொல்லிவிட்டு வரணுமாக்கும் ! ;))))) அப்போது தான் என்னால் தங்களுக்கு மிகவும் பலத்த வரவேற்பு அளித்து மகிழ + மகிழ்விக்க முடியுமாக்கும். ;)))))

   Delete
 11. அபூர்வமாக ஒரு இடத்தில் மட்டும் ’ஆ பூ ர் வ க் கா ட் சி’ தருகிறார் பத்ரமாருதி. ;)

  ஆ பூ ர் வ க் கா ட் சி = அபூர்வக்காட்சி

  பா ய ந் த வ ன் = பாய்ந்தவன்

  ந ல ங் க ளூ ம் = நலங்களும்

  வே ண் டு கோ ளூ க் கு = வேண்டுகோளுக்கு

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. என் வேண்டுகோளுக்கு இணங்க ‘வேண்டுகோளுக்கு’ என இப்போது மாற்றி விட்டீர்கள். சந்தோஷம்.

   பாய்ந்து ஓடிப்போய் ’பாய்ந்தவன்’ எனவும் மாற்றி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

   ’ஆபூர்வக்காட்சி’ + நலங்களூம்’ மட்டுமே பாக்கியுள்ளன.

   Delete
  2. ஆஹா, இப்போ அனுமனால் எல்லாமே சரிசெய்யப்பட்டுள்ளன. அனுமனுக்கு ஜே ஜே !!

   இந்த சிறுகதை விமர்சனப்போட்டி நடத்தி, பரிசு பெற்ற விமர்சனங்களை என் பதிவினில் வெளியிடும்போது, என் கண்களுக்குப்புலப்படும், எழுத்துப்பிழைகளை ஆங்காங்கே திருத்தித்திருத்தி, வரவர பிழைகள் மட்டுமே என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டன. ;(

   அதனால் தயவுசெய்து கோச்சுக்காதீங்கோ ! எல்லாமே இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் தானே !!

   பிறகு குறை தெரியாமல் நிறை மட்டுமே என் கண்களுக்குத் தெரியக்கூடும். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கோ, ப்ளீஸ்.

   Delete
 12. காலை எழுந்தவுடன் இன்று என்னை மஹாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேஷ், மத்யப் பிரதேஷ் என நெடுக இழுத்துப்போய் அலையவிட்டு, என் காலகளைக் கடுகடுக்க வைத்துவிட்டீர்கள்.

  ஆயிண்மெண்ட் தடவிக்கொண்டு இருக்கிறேனாக்கும். ஹூக்க்க்க்கும் !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. //என் காலகளைக் கடுகடுக்க வைத்துவிட்டீர்கள். //

   காலகளைக் = கால்களைக்

   [உங்கள் பதிவுகளையே பார்த்துப்பார்த்து எழுத்துப்பிழைகளை எடுத்துச்சொல்லப்போய் என் தப்பு எனக்கே தெரியாமல் போய் விட்டதே ! ;((((( ]

   Delete
 13. பதிவும், படங்களும், விளக்கங்களும் எல்லாமே ஜோர் ஜோர் !

  எப்படி ... எப்படி ... எப்படி முடிகிறது உங்களால் ! தனிப்பிறவி, தெய்வீகப்பிறவி ;)))))

  அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள். நீடூழி வாழ்க !

  சூடான சுவையான மிருதுவான முறுகலான வடைப் பிரஸாதம் தாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  ;) 1319 ;)

  ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
  ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
  ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
  ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
  ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
  ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்

  oo oo oo oo oo

  ReplyDelete
 14. ஆஞ்சநேயரும் சற்று ஓய்வெடுக்கட்டும்.
  சயனத்திருக்கோல மாருதியை எங்களுக்குத் தரிசனம் செய்வித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 15. அன்புடையீர்..
  இன்றைய வலைச்சரத்தில் தஞ்சையம்பதியின் அறிமுகம் கண்டு - அன்புடன் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 16. சயனத் திருக்கோல அனுமனை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 17. சயனக்கோல அனுமனை பற்றிய தகவல்கள் அற்புதம்! சிறப்பான படங்கள்! சிறப்பான பகிர்வு! தொடருங்கள்!

  ReplyDelete
 18. எவ்வளவு அழகழகான திருக்கோலத்தில் ஆஞனேயர் தரிசனம். சூப்பர் பதிவும் படங்கலும் கண்லயே நிக்குது

  ReplyDelete
 19. இங்கெல்லாம் எப்பொழுது சென்று பார்க்கப் போகிறோமோ என்கிற ஏக்கம் மனசில் நிரம்புகிறது. தரிசனம் செய்வித்தமைக்கு நன்றி.
  இதுவரை அறிந்திராத தகவல்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. இதுவரை கேள்விப்படாத சயனதிருக்கோல அனுமன். அத்தனை படங்களும் மிகமிக அழகாய் இருக்கு. ஆஞ்சநேயர் பற்றிய அத்தனை தகவல்களும் சிறப்பு. நன்றி.

  ReplyDelete
 21. பல தகவல்கள் அறியாதவை... நன்றி அம்மா...

  ReplyDelete
 22. சயனத்திருக்கோல அனுமன் பார்த்தது இல்லை.
  பகிர்வும் , படங்களும் மிக அருமை
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. அலஹாபாத் சயனத் திருக்கோலத்தில் இருக்கும் படா ஆஞ்சனேயர் தரிசித்ததுண்டு.....

  மற்ற இரண்டும் இதுவரை இல்லை..... தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete