ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
ஓம் நமோ நாராயணா என்ற மந்திர உபதேசம் பெற்றவுடன், கோவில் கோபுரம் மீதேறி ஊரிலுள்ள அனைவருக்கும் கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிய ஆன்மிகப் புரட்சியாளர் ராமானுஜர் பெயரில் அமைந்துள்ள யோகவனத்தில் சர்வ மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்து
மன அமைதி பெற்றுச் செல்ல பிரதானமாக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிந்த உபாசகர், ஸ்வாமி ஸீதாராம ஸ்வாமிகள் தனது குருவான காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பெயரில் சைவ வைணவ பேதம் பார்க்கக் கூடாது. ஆத்ம சரணாகதியை முன்னிறுத்திச் செய்ய வேண்டும் என்று அம்ருதபுரி இராமாநுஜ யோகவனத்தை அமைத்துள்ளாராம்..
நவகிரகங்களைப் பூஜித்த பலன் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இதனை மெய்ப்பிப்பது போல பிரம்மாண்ட விநாயகரின் உடலில் தெளிவாகத் தெரியும் வண்ணம் வேழ முகத்தோன் ஆன ஆனைமுகத்தான் சன்னதியில் நவக்கிரக நாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தனித் தனியே வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டுள்ளது. விநாயகரின் திருவுருவில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன
சுமார் 12 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானை, அவரது திருமேனியில் முன்புறம் அமைந்துள்ள நவக்கிரகங்களுடன் தரிசனம் செய்யலாம். விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மரை சேவிக்கலாம். இந்த நவக்கிரக விநாயகர் தரிசனம், அனைத்துவிதமான தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நலன்கள் தரவல்லது
கணபதி காயத்ரி
.ஸ்ரீராமானுஜர் இவ்விடத்தில் தங்கி யோகத்தில் ஆழ்ந்தார் எனக் கூறப்படுவதால் இது ராமானுஜர் யோகவனம் எனப்பெயர்பெற்றது..
சைவ வைணவ பேதம் நீங்க வேண்டும் என்பதற்காகவே விநாயகரை முன்னாலும் அவருக்குப் பின்புறம் யோக நரசிம்மரையும் கொண்டு சிலாரூபம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
விநாயகர் சாந்த சொரூபி, அவருடன் நரசிம்மர் ஒத்துப் போனால் தான் கஜகேசரி யோகம் கிடைக்கும்.
பொதுவாக ஜாதகத்தில் லட்சத்தில் ஒருவருக்குத்தான் கஜகேசரி யோகம் அமையும்.
அனைவரும் தம் வாழ்நாளில் கஜகேசரி யோகம் பெற, நரசிம்மருடன் கூடிய இந்த விநாயகரை வணங்கலாம்.
கஜம் என்றால் யானை; கேசரி என்றால் சிங்கம். யானை பொறுமைக்கும் பலத்துக்கும் உதாரணம். சிங்கம் அஞ்சாமையின் அடையாளம். பொறுமை, பலம், வீரம் இருந்தால் அதுவே கஜகேசரி யோகம் என்பார்கள். இதனைப் பெற இந்த நவகிரக விநாயகரை, நரசிம்மர் மற்றும் நாகருடன் வழிபடலாம் ...
ஒரு லட்சம் அகல் தீபம் ஏற்றி தீப வழிபாடும் நடை பெறுகிறது.
வெவ்வேறு திசையில் திரும்பிக்கொண்டிருக்கும் நிலை இல்லாமல் கிழக்கு திசை நோக்கியே அருள்பாலிப்பது அபூர்வமாக இருக்கிறது.
ராமானுஜ யோகவனம் என்பதன் தத்துவமே பேதமற்ற சரணாகதி என்பதுதான்
ஆதிசேஷன் அம்சமாக லட்மணன், ராமானுஜரைச் சொல்வது போல் பதஞ்சலி முனிவரும் அவரது அம்சம் என்று சொல்கிறார்கள்.
பதஞ்சலி முனிவர் உட்பட பதினெண் சித்தர்களும் ஸ்ரீ அம்ருதபுரி
ஸ்ரீ ராமானுஜ யோகவன தியான மண்டபம் எனும் வேதாந்த, சித்தாந்த, ஸர்வ சமய சமரச சன்மார்க்க சமுதாயக் கூடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள்.
சித்தர்கள் மண்டபத்தை வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. ஜாதக ரீதியான பரிகாரங்கள் எடுபடாதபோதும், தீராத நோய் தீருவதற்காகவும் பிரதான பதினெண் சித்தர்களை நம்பிக்கையுடன் வணங்குகிறார்கள்.
செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபத்தில் அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக்கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நாகர் சன்னதி..
நேரடியாகப் பேசுவது போலவே அமைந்துள்ள திருமுக மண்டலம் திகழ கன்னம் ஜொலிக்கச் புன்னகைக்கும் ஸ்ரீநிவாச பெருமாள்
பேசும் பெருமாள் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
திருப்பதியில் மூலவருக்கு ஆராதனை செய்வது போலவே
பூஜைகள் செய்யப்படுகின்றன.
தாயார் மற்றும் பெருமாள் பெயர் மதுரவல்லி நாயிகா சமேத ஸ்ரீநிவாச பெருமாள். உற்சவர் வைகுந்த ராமர் சீதா லட்சுமண ஆஞ்சனேயர் சமேதராகக் காட்சி அளிக்கிறார்.
சன்னதிகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது
மிக நீளமான பிராகாரக் கற்சுவர் மேல் 1008 அனுமார் சிலாரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன..
அமிருதபுரி என்றால் உலக காரியங்களில் தடை நீக்குதல் மட்டுமல்ல அவ்வுலக வாழ்வையும் சிறப்புறப் பெறுதல்தான்.
ஸ்ரீராமரின் வில் போலவே ஹோம குண்டம் அமைத்து ஹோமம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும்.
சன்னதியில் 108 சாளக்கிராமம் இருக்கிறது. இவற்றை வணங்கினால் 108 திவ்விய தேசப் பெருமாளை ஒரே நேரத்தில் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு ஏகாதசியன்றும் இந்த சாளக்கிராமங்களுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அருகிலேயே ஸ்ரீமதுரவல்லித் தாயார் சன்னதி. கார்த்திகைப் பஞ்சமி தாயாரின் அவதார திருநட்சத்திரம். அன்றைய தினம்
ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் கோசாலையில் உள்ள உப்பிலியப்பன் பெருமாள் ஆகியோர் சீர்வரிசை எடுத்துக்கொண்டு வருவார்கள்.
ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று, தாயார் ஊஞ்சலில் வீற்றிருக்க, உலக நன்மையை முன்னிட்டு 1008 விளக்கு பூஜை தமிழகம் (அமிர்தபுரி), கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சுமார் இருபது இடங்களில் நடைபெற்றுவருகிறது.
இதனால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம், வாழ்வாதாரம் ஏற்ப்படும் என்பது நம்பிக்கை.
இந்த தாயார் அருகிலேயே ஸ்ரீமகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெருமாள் சன்னதியை ஒட்டியே உள்ளது பதினெண் சித்தர் சன்னதி.
அன்னபூரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று லட்டுத்தேர் அமைத்து அதில் மஹாதேவரை எழுந்தருளச் செய்வது வழக்கம்.
ஒரே கல்லில் முன்னும் பின்னுமாக அமைந்துள்ள ஆஞ்சனேய, கருட சிலாரூபம் அற்புதமாக அமைந்துள்ளது
பறவைகள் சரணாலயம் அருகே உள்ள இந்த பக்தர்கள் சரணாலயத்திற்கு எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த பக்தர்கள் வந்துபோகிறார்கள்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அனைத்தும் சிறப்பு....வாழ்த்துக்கள்
very very nice.
ReplyDeleteவிக்னங்களைத் தீர்க்கும் விநாயக தரிசனம். அருமையான படங்கள். கோவில் கொஞ்சம் நவீனமாக உள்ளது. கணபதியே சரணம்.
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteநலந்தரும் நவக்ரக விநாயகர் பற்றிய அரிய தகவல்களை அறிந்து மகிழ்ச்சி.. வாழ்க நலம்..
ReplyDeleteசிறப்பான தரிசனம்... நன்றி அம்மா...
ReplyDeleteநவக்ரக விநாயகர் பற்றிய தகவல்கள்,படங்கள் சிறப்பான பகிர்வு. நன்றிகள்.
ReplyDeleteநலம் நல்கும் ஸ்ரீ நவக்ரஹ விநாயகருக்கு நமஸ்தே !
ReplyDelete>>>>>
படங்கள் எத்தனை முறை மீண்டும் மீண்டும் காட்டினாலும் பார்த்தாலும் அலுக்காத அற்புதமான ருசியானவை.
ReplyDeleteநீண்ட இடைவேளைக்குப்பின் பிள்ளையாரப்பாவைப் பார்ப்பதில் ஓர் புதிய புத்துணர்ச்சி கிட்டுகிறதே !
>>>>>
விநாயகரின் திரு உருவில் நவக்கிரஹங்களும் அமைந்துள்ளது கேட்க / பார்க்க சந்தோஷமாக உள்ளது.
ReplyDelete>>>>>
விநாயகர் சாந்த ஸ்வரூபி. நரசிம்ஹர் அப்படி அல்ல.
ReplyDeleteஇந்த இருவரும் ஒத்துப்போனால் ......
போனால் என்ன - ஒத்துப்போகலாம் தானே !
எப்படியோ கஜகேசரி யோகம் கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சியே !
நெய் மணத்துடன், முந்திரி ருசியுடன், ஏலக்காய் நெடியுடன், சுடச்சுட கேஸரி, பஜ்ஜி + கெட்டிச்சட்னி, சுவையான ஃபில்டர் காஃபி சாப்பிட்ட திருப்தியல்லவா ஏற்படும் ;)))))
>>>>>
ராமனுஜ யோகவனம் என்பதன் தத்துவத்தை விளக்கியுள்ளதால் நானும் சரணாகதி அடையத்தான் அடிக்கடி விரும்பி வருகிறேன்.
ReplyDeleteஆனாலும் இது சிலருக்கு சுத்தமாகப் புரிவதே இல்லை ;(
>>>>>
ஆஹா ! இன்னும் பிரதிஷ்டை செய்யப்படாமல், தயார் நிலையில் உள்ள 18 சித்தர்களின் சிலைகளை அதற்குள் காட்டி அசத்தியுள்ளது பாராட்டத்தக்கது.
ReplyDelete>>>>>
திருவோண தீப உற்சவ மஹிமையை காணொளியில் கண்டதும், அதன் மஹிமையை அவரின் குரலில் நேர்முக வர்ணனைகளாகக் கேட்டதும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete>>>>>
வேடந்தாங்கல் .... அமிர்தபுரிக்கே நேரில் [பறவை போல பறந்தபடி] அழைத்துச்சென்று, மதுரவல்லி நாயகி ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப்பெருமாளையும், இதர பல தெய்வங்களையும் 1008 ஆஞ்சநேயர்களையும், குறிப்பாக கஜகேசரி யோகம் தரும் நவக்கிரஹ விநாயகரையும் மதுரமாக .... அதிமதுரமாக .... தரிஸிக்கத்தந்த மதுரவல்லி ரங்கநாயகிக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ReplyDelete>>>>>
நீள அகல ஆழம் நிறைந்த கருத்துக்கள் உள்ள, அழகான மிக அற்புதமான பகிர்வுக்கும், பதிவுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDelete;) 1294 ;)
ooo ooo ooo
கும்பகோணத்தில் என் நண்பர் வீட்டருகே (பிள்ளையார் தெரு என்று நினைவு ) ஒரு கோவிலில் இருந்த பெரிய நவக்கிரக விநாயகரின் படத்திலிருந்து சிறிய பிரதி ஒன்றை என் மனைவி வைத்திருக்கிறாள் படங்களும் பதிவும் மனம் கவர்ந்தது.
ReplyDeleteநவக்கிரக விநாயகர் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி அம்மா.
ReplyDeleteவணக்கம் அம்மா, முதல்படம் அருமை.
ReplyDeletewww.killergee.blogspot.com
அறியாத கோயில்! அழகான படங்களுடன் சிறப்பான தகவல்! நன்றி!
ReplyDeleteHow is 13th,june guru peyarchi ?
ReplyDeleteYour webside very nice
Pleace send or publish 13th june Guru peyarchi 2014
ReplyDeleteWith song.
Your webside is very nice
நவகிரக விநாயகர் கோவில் புதுமையாக இருக்கிறது. வேதாரண்யம் அருகில் இருக்கிறது என்பதால் அங்கே சென்றால் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது......
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி.