Friday, June 20, 2014

சக்ரவர்த்தி திருமகன் முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர்









1 .இரகுவரா! அளவிடற்கரியனே! என்னைக் காப்பாய் 
இரகு குலக் கடலின் மதியே, இராமா! பேணுவாய்;  
சூரியகுலத் தாமரையின் வண்டே! இசையிற் களிப்போனே! 
இரகுவரா! அளவிடற்கரியனே! என்னைக் காப்பாய்

2 .பகலவன் குலத் தலைவா! பதம், இலயை முதலானவற்றின்
ஏற்றத்தாழ்வுகளில் திளைக்கும் நாரதரால் போற்றப் பெற்றோனே!
(அல்லது) பதம், இலயை, (இராகங்களின்) ஏற்றத்தாழ்வுகள், 
முதலானவற்றில் திளைக்கும் நாரதரால் போற்றப் பெற்றோனே! 
இரகுவரா! அளவிடற்கரியனே! என்னைக் காப்பாய்

3. பரிதி குலக் குன்றின் விளக்கே! 
உயர் பாகவதர்களால் போற்றப் பெற்ற திருவடியோனே!
இரகுவரா! அளவிடற்கரியனே! என்னைக் காப்பாய்

4. சீதைக் கேள்வா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! 
வாயு மைந்தனுக்கினியோனே! நற்குணங்களை யணிவோனே! 
இரகுவரா! அளவிடற்கரியனே! என்னைக் காப்பாய்
 .
முடிகொண்டான் -சக்ரவர்த்தி திருமகன்..திருமதி .எம்.எஸ் .சுப்புலக்ஷ்மி பாடல் -கேட்கவும் பார்க்கவும் சுட்டவும்...!

ஒருசமயம் பரத்வாஜ மகரிஷி ஸ்ரீராமபிரானை தன் ஆசிரமத்திற்கு விருந்துண்ண அழைக்க, ""இராவணவதம் முடிந்து திரும்பும்போது வருகிறேன்'' என்றார். அப்படியே இராவணவதம் முடிந்ததும் பரத்வாஜர் ஆசிரமத்திற்கு ராமர் வந்தார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் மகுடவர் தனபுரி என்று சொல்லப்படும் முடிகொண்டான் கிராமத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கே பரத்வாஜர் ஆசிரமம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன
பரத்வாஜர் ஸ்ரீராமபிரானை வரவேற்று உணவுண்ணுமாறு கூற, ""நான் தினமும் ஸ்ரீரங்கநாதருக்கு பூஜைகள் செய்து வணங்கிவிட்டுதான் உணவுண்பது வழக்கம்'' என்று சொன்னார் ராமபிரான். 
அப்போது ஸ்ரீரங்கநாதர் அங்கே நின்றநிலையில் தோன்றி காட்சியளித்தார். 

பரத்வாஜரும் ஸ்ரீராமபிரானும் ஸ்ரீரங்கநாதரை வணங்கினர்.

அப்போது பரத்வாஜர், ""நின்ற நிலையில் காட்சிதரும் தாங்கள் என் ஆசிரமத்தில் பள்ளிகொண்ட ரங்கநாதராக கோவில்கொள்ள வேண்டும்'' என்று வேண்ட, அப்படியே ஸ்ரீரங்கநாதரும் பரத்வாஜரின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

அதனால் இந்த முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் இன்றும் தினமும் ஸ்ரீரங்கநாதருக்கே முதல் நிவேதனம். பின்புதான் ஸ்ரீகோதண்டராமருக்கு நிவேதனம் நடைபெறுகிறது..

பரத்வாஜர் ஸ்ரீகோதண்டராமரின் முடியை முதலில் கண்டதால், 
இந்த இடம், "முடியைக் கண்டான்' என்று பெயர்பெற்று, 
பிற்காலத்தில் முடிகொண்டான் என்றாயிற்று. 
முடிகொண்டான்கோவிலில் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, 
அனுமன் ஆகியோரின் மூலவர் சிலைகளும், 
உற்சவ விக்ரகங்களும் வெகுஅழகாகக் காட்சியளிக்கின்றன. 
[Image001.jpg]


ஸ்ரீராமநவமியின்போது பத்து நாள் உற்சவம் உண்டு. வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பும், உற்சவர்கள் வீதிப்புறப்பாடும் உண்டு. 

ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீராமபிரானுக்கும் மற்றவர்களுக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெறும். 

மயிலாடுதுறை- திருவாரூர் வழியில், மயிலாடுதுறையிலிருந்து 
18 கிலோமீட்டர் தூரத்தில் முடிகொண்டான் தலம் உள்ளது.


Sri Ramar Temple, Ayodhya

Devotees offering prayers to a statue of Lord Ram at a temple in Ayodhya. 
Lord Rama knew the taste of sovereignty and was one who could grant the desires to the desirous...........

Mudikondan Ramesh Veena performance -

21 comments:

  1. சிறப்பான கோயிலின் தகவல்களுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  2. சக்கரவர்த்தித் திருமகன் பற்றிய படங்கள் காணக் கண் கொள்ளாக் காட்சி.முடி கொண்டான் தலம் பற்றிய விவரங்கள் அறிந்து கொண்டேன்..

    ReplyDelete
  3. ஸ்ரீராமஜெயம்! தியாகரஜர் கீர்த்தனை அருமை!

    ReplyDelete
  4. சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. படங்களும் பதிவும் ஜோர். ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம்.

    ReplyDelete
  6. வணக்கம் !
    அன்பின் இராஜராஜேஸ்வரி இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் .

    ReplyDelete
  7. சிறப்பான தகவல்கள்.கண்ணுக்கு விருந்தாகப்படங்கள்...
    மனதுக்கு நிறைவான பகிர்வு...
    நன்றி

    ReplyDelete
  8. ஸ்ரீராமனுக்கென்று தமிழகத்தில் உள்ள மிக சிறப்பான தலங்களில் -
    முடி கொண்டான் திருத்தலமும் ஒன்று..
    இனிய பதிவு. மகிழ்ச்சி..

    ReplyDelete
  9. சக்ரவர்த்தித் திருமகன் முடிகொண்டான் ஸ்ரீ கோதண்ட ராமருக்கு அடியேனின் அன்பு நமஸ்காரங்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. பதிவினில் அத்தனையும் மிக அருமையான படங்கள்

    >>>>>

    ReplyDelete
  11. கொடுத்துள்ள ஒவ்வொன்றும் அற்புதமான தகவல்கள்.

    >>>>>

    ReplyDelete
  12. கீர்த்தனை காணொளி, Ms. எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி அவர்களின் இனிய பாடல் காணொளி, அயோத்யா ராமர் கோயில் காணொளி, வீணைக்காணொளி என ஏராளமான காணொளிகளை இணைத்து அசத்தியுள்ளது சிறப்பாக உள்ளது.

    எதைக்காண்பது .... எதை விடுவது ?

    >>>>>

    ReplyDelete
  13. GRANT THE DESIRES TO THE DESIROUS.......

    ராமா ! எனக்கும் நீ இதுபோல GRANT செய்வாயோ ?

    ஆனால் என் DESIRES ரொம்பவும் ஜாஸ்தியாச்சேப்பா !

    >>>>>

    ReplyDelete
  14. முடியைக்கண்டான் >>>>> முடிகொண்டான்

    காரணப்பெயர் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  15. என் புனர்பூச நக்ஷத்திரத்திற்கு அவ்வளவு விசேஷமோ !

    மிகவும் சந்தோஷம்.

    ஸ்ரீ இராமனின் நக்ஷத்திரமல்லவோ !!

    >>>>>

    ReplyDelete
  16. இப்போதைக்கு காட்டியுள்ள கீழிருந்து ஏழாவது படம் [கோபுரம்] மிகவும் பிடித்துள்ளது.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  17. இன்று அதிகாலை [நான் தூங்கச்செல்லும் முன்பு] மிகச்சரியாக ஐந்து மணி முதல் 5.30 வரை மீண்டும் மீண்டும் நான் முயற்சித்தும், தங்களின் இந்த இன்றையப்பதிவு வெளியிடப்படவே இல்லை. நேற்றைய தக்ஷிணாமூர்த்தியே எனக்குக் காட்சியளித்து வந்தார்.

    அதன்பிறகு சிலமணி நேரங்கள் மட்டுமே நான் தூங்கி எழுந்தபின் அடுத்தடுத்து எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் இன்று கணினி பக்கம் அதிகமாக என்னால் வர முடியாமல் போய் விட்டது. அதனால் இவ்வளவு தாமதமாகிவிட்டது.

    ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமியும் அம்பாளும் என்னை மன்னிப்பார்களாக !

    ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
    ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
    ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
    ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
    ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்
    ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம் ஸ்ரீராமஜயம்

    ;) 1311 ;)

    ooo ooo ooo

    ReplyDelete
  18. ஸ்ரீகோதண்ட இராமன்அறிந்தேன்
    சிறப்பான பதிவு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  19. முடிகொண்டான் ராமபிரான் பற்றிய பகிர்வு அருமை
    ராமபிரான் நம்முடைய பிறவிகளுக்கு முடிவு அளிக்கட்டும்

    ReplyDelete
  20. முடிகொண்டான் ராமபிரான் பற்றிய தகவல்கள்,படங்கள் நன்றாக இருக்கு.
    எம்.எஸ்.சுப்புலஷ்மி அம்மாவின் பாடல் மனத்துக்கு இதம்.நன்றிகள்.

    ReplyDelete