Sunday, June 8, 2014

மலைமகாராணி சூடும் மலர் மகுடம்..


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை

பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங்க் ரிங்க் ரிங்க்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே

காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே..

பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட ..ச ரி க ம ப த நி ச ரி..ஸ்..

பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்....
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே 
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

ஜப்பானில் உள்ள மலைப்பிரதேசத்தில் டேக்கினோயி பூங்காவில்
 மே மற்றும் ஜூன் மாதங்களில், எங்கு பார்த்தாலும், இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும்.

ஷிபாசகுரா எனும் இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்து, அந்த மலைப்பகுதி முழுவதும், கம்பளம் விரித்தது போன்று காணப்படும் அழகை கண்டு களிக்க, உலகின் பல பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

பூக்கள் பார்க்கும் போதே மனதை கொள்ளை கொள்ளும்.  பூக்கும் பூக்களை பார்க்கும் போது மனசெல்லாம், உற்சாகம் நிரம்பி வழியும் ..

பூமியே பூப்பூத்து சிரிக்கும் எழிலை எல்லாம் 
வார்த்தையால் வர்ணிக்கமுடியுமா என்ன...!

மலைமகாராணிக்கு மலர் மகுடம் சூட்டி 
மகிழ்ச்சிப்படுத்தும் பூப் பூக்கும் புன்னகைப்பூக்கள்..

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்....

தொடர்புடைய பதிவுகள்..
மலர்க்கடலில் மகாராணி நகரம்


enjoy eating plum blossoms, as this Wild Parrot

பூமரங்கள் வீசும் சாமரங்கள்...
க்


20 comments:

 1. கண் கொள்ளாக் காட்சியாக பூத்துக் கிடக்கும் மலர்கள்..
  அருமை.. அருமை!..

  ReplyDelete
 2. ஆஹா ! தலையில் ஒரு முடிபோல

  தலைப்பில் ஒரு பகுதி எப்போதோ பார்த்த/கேட்ட ஞாபகம் ;)

  >>>>>

  ReplyDelete
 3. மலர் மகுடம் சூடும் மலைமஹாராணி அழகு தான்.

  ஆமாம், ஏன் ராணியின் காலை இப்படி ஒடித்து முறித்து விட்டீர்கள். தங்களை விட அழகாக இருக்கிறாள் என்ற பொறாமையோ ! ;)

  >>>>> சிறிய இடைவேளைக்குப்பின் மீண்டும் தொடர்வேன் >>>>>

  ReplyDelete
  Replies
  1. நேற்று போலவே இன்றும் சொல்லாமல் கொள்ளாமல் ;( 12 மணி நேரங்களுக்கு மேல் எங்கேயோ போய் விட்டுவந்தும், வந்ததும் வராததுமாக ரணிக்குக் கால் வாங்கிய ராணிக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

   திரும்பத்திரும்ப இந்தப் பூப்பதிவினையே பார்த்துப் பார்த்து என் கண்ணெல்லாம் பூத்துப்போச்சு ...... தெரியுமா !

   ஒரே கவலையாப் போச்சுத் தெரியுமா ?

   உங்களுக்கு எது தான் தெரியப்போகிறது. இது தெரிய !

   Delete
  2. நெருங்கிய உறவினர் ஒருவர் இல்லத்தில் திருமணம் நிறைந்த அடுத்த நாளில் மற்றொரு உறவு விடைபெற்றுச் சென்றுவிட்டது...
   மனச்சோர்வில் தோன்றும் மயான வைராக்கியங்கள் ....!
   நிறைய சங்கல்பம் செய்து வந்தோம்..பார்க்கலாம் ..!!

   மீண்டும் உற்சாகத்திற்குத் திரும்ப எத்தனை நாட்களாகிறது என்று..!

   Delete
  3. கேட்கவே மனதுக்குச் சங்கடமாக உள்ளது. எதுவும் சாஸ்வதம் இல்லாத உலக வாழ்க்கையில் தான் நாமும் வாழ்ந்துகொண்டு வருகிறோம். என்ன செய்வது? காலம் மாறும். கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தீரும். பிறகு மனச்சோர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறையலாம். மீண்டும் புதிய உற்சாகம் ஏற்படலாம். என்னிடம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது நல்லது. யாரிடமாவது சொன்னால் தான், சற்றே மனதுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கக்கூடும். எப்போதும் அதை நினைத்தே அதிகம் கவலைப் படாதீங்கோ என கேட்டுக்கொள்கிறேன். பார்ப்போம்.

   Delete
 4. காணொளி அருமை.

  காட்சிகள் கற்கண்டாய் இனிமை.

  >>>>>

  ReplyDelete
 5. Replies
  1. பூப்பூக்கும் ஓசை ...... ஆசை :)

   பாடலுடன் ஆரம்பமே அசத்தல் ! :)

   Delete
 6. அத்தனைப்பாடல் வரிகளையும் ஆங்காங்கே இனிமையாய்க் கோர்த்துள்ள புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது ;)

  >>>>>

  ReplyDelete
 7. படங்கள் எல்லாமே அழகழகாய் அசத்தலாய் உள்ளன. ஜப்பானுக்கே போனீங்களா ? மகிழ்ச்சி.

  எங்களையும் பதிவின் மூலம் ஜப்பானுக்கு ஒரு ஓஸி ட்ரிப் அடிக்க உதவியதற்கு நன்றீங்க. ;)

  >>>>>

  ReplyDelete
 8. மொத்தத்தில் இதைப்பார்க்கும் அனைவருக்குமே இன்று அவர்கள் முகத்தில் ஓர் புன்னகைப்பூ பூக்கத்தானே செய்யும் !!

  >>>>>

  ReplyDelete
 9. தொடர்புடைய பதிவுக்கும் சென்று பார்த்து/படித்து வந்தேன். கரடியாகக் கத்தி பல கருத்துக்கள் கூறியும் பதில் ஒன்றையையும் அங்கு காணோம் ;(

  அழுத்தம். மஹா அழுத்தம் ... அன்று முதல் ...... இன்று வரை.

  ஆனாலும் அழுந்தச் சமத்தூஊஊஊஊ ! ;)

  >>>>>

  ReplyDelete
 10. மனதைக்கொள்ளை கொள்ளும் அழகிய அற்புதமான அசத்தலான பகிர்வுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 11. நாளை தாங்கள் தரப்போகும் தங்களின் வெற்றிகரமான 1300வது பதிவுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  வாழ்க வாழ்கவே !

  ;) 1299 ;)

  oo oo oo oo oo

  ReplyDelete
 12. http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_8.html இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு மனம் நிறைந்த மகிழ்ச்சிகளுடன் கூடிய பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள். ;)))))

  ReplyDelete
 13. அப்பப்பா , படங்கள் அனைத்தும் திரும்ப திரும்ப பார்ர்க வைக்கிறது. கொள்ளை அழகு.

  ReplyDelete
 14. கண்களை கொள்ளை கொண்டு போகும் அழகான மலர்கள். இங்கும் இப்போ எங்கும் பல வண்ண மலர்கள். பதிவில் இட்டிருக்கும் புகைப்படங்கள் ,பாடல் வரிகள் அருமை.நன்றி.

  ReplyDelete
 15. மலைப்பு..மாலைப்பூ கலைப்பூ...கணினிப்பூவென அனைத்து வகையறாக்களும் கொள்ளை அழகு சொந்தமே!!!!வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. மலர்மகாராணி அசத்துகிறாள்.

  ReplyDelete