பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன்
அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி
வானவர் கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
- திருமூலர்
வாழ்வில் பற்றுகோடாய் ஒரு தெய்வத்தை
பெற விரும்பினால், சிவபெருமானைப் பற்றுங்கள்.
முழுமுதற் கடவுளாகிய அவனது அருளைப்
பெற்றுவிட்டால் எல்லாம் இனிதே நிறைவேறும்
வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமிதிதி, அதாவது - வைகாசி சுக்லபட்ச தசமி திதி பத்துவிதப் பாபங்களைப் போக்கும் "தசஹரதசமி' என்றும், "பாபஹர தசமி' என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
வைகாசி சுக்லபட்ச தசமி திதி நாளில்தான் ஸ்ரீராமபிரான், இலங்கை வேந்தன் ராவணனைக் சம்ஹரித்த பாபம் நீங்க, மணலில் லிங்கப் பிரதிஷ்டை செய்து சேதுக்கரையில் வழிபட்டார் என்பது ஐதீகம்..
அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோயிலுக்குள்ளிருக்கும் புனித நீர்நிலைகளிலும் நீராடினால் பாபங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்பது நம்பிக்கை...
மறுபிறப்பு இல்லாத நிலைபெறுவதற்கு பாப புண்ணியங்கள்
இல்லாமல் இருக்க வேண்டும்.
பாபம் செய்தால் நரகம்; புண்ணியம் செய்தால் சொர்க்கம்; இந்த இரண்டும் வீடுபேற்றுக்கு முட்டுக்கட்டைகள் என்று கூறப்படுவதால், "நல்லதை நினை; நல்லதைச் செய்; நல்லதே நடக்கும்' என்று கீதாசாரியன் கண்ணன் கூறியதுபோல் தீவினைகள் செய்யாமல். நம்மால் முடிந்த அளவு அனைவருக்கும் நல்லது செய்தாலே மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது.
இந்த காலகட்டத்தில் பூலோகத்தில் மானிடர்களாகப் பிறந்த ஜீவன்கள் துலாக்கோலின் சமநிலை போல வாழமுடியாது என்பதால்தான் இந்த வைகாசி சுக்லபட்ச தசமியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகளைப் போக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பினைத் தருகிறது. அதனால் தீவினைகள் அழியும் எனப்படுவதால் "பாபஹர தசமி' போற்றப்படுகிறது.
பத்துப் பாபங்கள் - வாக்கினால் செய்வது நான்கு; சரீரத்தால் செய்வது மூன்று; மனதால் இழைப்பது மூன்று. ஆக, இந்தப் பத்துப் பாபங்களையும் போக்கிக் கொள்ள இந்தப் "பாபஹர தசமி' உதவுகிறது.
வாக்கினால் செய்வது நான்கு! அவை,கடுஞ்சொல்; உண்மையில்லாத பேச்சு; அவதூறாகப் பேசுவது; அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.
சரீரத்தால் செய்வது மூன்று: அவை, நமக்குக் கொடுக்கப்படாத பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது; அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது; பிறர் மனைவி மீது ஆசைப்படுவது.
மனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று: அவை, மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது; மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல்; மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.
இந்தப் பத்து பாபங்களும் குறிப்பிட்ட புண்ணியகாலமான
வைகாசி அமாவாசைக்குப் பின்வரும் தசமி அன்று
சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.
ராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே, அந்தப் புண்ணிய காலத்தில் தங்கள் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ, குளத்திலோ நீராடலாம்.
நதியிலும் ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும், சிவபெருமானையும், திருமாலையும் மனதில் நினைத்து இனிமேல் பாபங்கள் செய்யமாட்டேன்' என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாபங்கள் நீங்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமிதிதியில் கங்காதேவி, தேவலோகத்திலிருந்து பகீரதன் முயற்சியால் பூலோகத்திற்கு இறங்கி வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்காதேவியை நினைத்து நீராடினாலும் பாபங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
வைகாசி அமாவாசைக்குப்பின், பிரதமையிலிருந்து தசமி வரை கங்கை நதியில் நீராடினால் பாபங்கள் நீங்குவதுடன், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்' என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
வைகாசி சுக்லபட்ச தசமி திதி நாளில் முன்னோர்களுக்குப் பின் பிதுர்பூஜை செய்வது, போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்பது நம்பிக்கை..!
தொடர்புடைய பதிவுகள்
JYOTHI UTHSAVAM --rameshwaram temple reflecting jyothi
கோவில் படங்கள் அருமை.
ReplyDeleteபுகைப்படங்களும், செய்திகளும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஓம் நமசிவாய.. புதியதொரு செய்திப் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஒவ்வொரு விளக்கங்களும் அருமை... படங்கள் பிரமாதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபாபஹர தசமி - பற்றிய விரிவான தகவல்களுடன் -
ReplyDeleteஸ்ரீராமேஸ்வர தரிசனம். இனிமை.. அருமை..
வாழ்க நலம்..
அறியாத செய்தி! அழகாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி! படங்கள் அருமை!
ReplyDeleteதஸஹர தஸமி / பாபஹர தஸமி
ReplyDeleteபற்றிய அரிய பல நல்ல செய்திகள்
அறியத்தந்து அசத்தியுள்ளீர்கள்.
>>>>>
இராமேஸ்வரம் - இராமநாத ஸ்வாமி வீடியோ பிறகு பொறுமையாகப்பார்த்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஇப்போது திறக்க மறுக்கிறது.
It is Blocked now by Sun Network என்று சொல்கிறது.
Watch on You Tube என்றும் சொல்கிறது.
>>>>>
7 Wonders of India - Rameswaram
Deleteஎன்ற தலைப்பில் ஓர் காணொளி புதிதாக இப்போது இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வருகை தந்துள்ள சாதாரணமானவனுக்கு ஒரு தகவல் கொடுக்கக்கூடாதோ ! ;(
நான் அதனை இப்போது பார்க்க நேர்ந்தது தான் எட்டாக்கனிகள் போல எட்டாவது அதிசயமாக எனக்குத் தோன்றுகிறது.
காணொளியைக் கண்டதும் அதில் நடந்து வரும் யானை போல என் உடலிலும் சிலிர்ப்பு ஏற்பட்டது. ;)
>>>>>
Rameswaran Temple India
Deleteஎன்ற காணொளி இப்போதும் திறக்க மறுக்கிறது.
An error occrred. Please try again later. Learn more
என ஏதேதோ சொல்லுது.
Learn More செய்ய எனக்கும் ஆசை தான்.
ஆனால் சொல்லிக்கொடுக்க டீச்சர் இல்லையே ! ;(
என்னவோ போங்கோ ! ஒன்றுமே சரியில்லை !!
+oo+
ஆஹா ! தங்களின் அருளால் NALANDA TV மூலம் இராமேஸ்வரத்தில் போய் ஒருவழியாக நான் இறங்கிவிட்டேன்.
Deleteஅபிராமி ஹோட்டலில் சூப்பராக டிபன் வாங்கிக்கொடுத்ததற்கு முதற்கண் என் நன்றிகள்.
விமானத்தில், கப்பலில், ரெயிலில், பஸ்ஸில், காரில், ஆட்டோவில், சைக்கிள் ரிக்ஷாவில் என இப்படி என்னை தாங்கள் அலைக்கழித்து விட்டாலும், நிம்மதியாக ஸ்வாமி தரிஸனம் செய்வித்ததில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி. ;)
+o+
மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டட்டும். ஒருவேளை மறுபிறவி உண்டென்றால் அப்போதாவது நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பாக்யம் எனக்குக் கிட்டட்டும்.
ReplyDeleteவாக்கு, சரீரம், மனம் [4+3+3= 10] பத்துவித ஆசைகளும் அழியட்டும்.
ஹைய்யோ ! படிக்கும்போதே பயம் அளிப்பதாக அவைகள் சொல்லப்பட்டு உள்ளன. ;(
என்னைப்போலவே நாக்கினை நாலு முழம் நீட்டியுள்ள நந்திப்படம் அழகாக உள்ளது. ;)
>>>>>
தொடர்புடைய பதிவுகளுடனும் இன்று மீண்டும் தொடர்பு கொண்டேன்.
ReplyDelete1]
ஜோதிர்லிங்க தரிஸனம் - சேது பீடம் - இராமேஸ்வரம்:
என் பன்னிரண்டு பின்னூட்டங்களையும், அதற்கு தாங்கள் கொடுத்துள்ள மிக நீண்ண்ண்ண்ண்ண்ட மூன்று பதில்களையும் இன்று மீண்டும் பார்த்துப் படித்து மகிழ்ந்தேன்.
அன்று என் ஒரு பேரன் அநிருத் மட்டும் வந்திருந்ததாக அதில் நான் எழுதியிருந்தேன்.
இன்று அவன் மட்டுமல்ல ..... அவன் தம்பி அங்கதன் ;))))) ஆதர்ஷும் வருகை தந்திருந்தான். வீடே ஒரே அமர்க்களமாக இருந்ததால் இங்கு வந்து கருத்தளிக்க சற்றே தாமதமாகி விட்டது. கோபித்துக்கொள்ளக்கூடாது.
>>>>>
2]
ReplyDeleteஅபய ஆஞ்சநேயர் [தங்களின் தங்கமான 575வது பதிவு]:
இதில் 11 பின்னூட்டங்கள் எழுதியிருந்தேன்.
அழகாக 2 பதில்கள் கொடுத்து மகிழ்வித்திருந்தீர்கள்.
அந்த இனிய நாட்கள் ...... திரும்ப இனி வருமா ?
கண்டிப்பாக வர வேண்டும்.
>>>>>
இன்றைய பதிவினிலும் படங்கள் அத்தனையும் அழகோ அழகு. விளக்கங்கள் மிகச்சிறப்பாக உள்ளன.
ReplyDeleteஇன்றைய வைகாசி தஸமிக்கு மிகப்பொருத்தமான பதிவாகக் கொடுத்துள்ளது வியக்க வைக்கிறது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்
;) 1298 ;)
ooo ooo
எது வேண்டுமானாலும் செய்துவிட்டு ஒரு நாள் நீராடினால் சரியாகும் என்பது நிரடவில்லையா.? இவ்வுலகமே சரியாக விளங்காதபோது அவ்வுலகான நரகம் சொர்க்கம் என்று பயமுறுத்துவதும் ஆசை காட்டுவதும் யார் புரிந்து கொள்கிறார்கள். படிக்கும்போது எழுந்த எண்ணங்கள் எழுத்தில் வந்து விட்டது. என்னதான் இருந்தாலும் பதிவில் படங்கள் கொள்ளை போகின்றன. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகழகான படங்கள். சுபிட்சம் அருளும் தசஹரதசமி பற்றி தெரியாத விடயங்கள் அறிந்துகொண்டேன். சிறப்பான தகவல்கள்.நல்லதொரு பகிர்வு.நன்றிகள்.
ReplyDeleteஇறைவனின் படங்கள் முழுதும் அருமை...தவல்களும்....இந்த அனைத்து தலங்களும் வாழ்னாளுக்குள் செல்ல ஆசை....ஒவ்வொன்றாகச் சென்று வந்து கொண்டிருக்கின்றோம்! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteபடங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி அம்மா.
ReplyDeleteதகவலுக்கும் படங்களுக்கும் நன்றி.
ReplyDelete