Monday, June 30, 2014

வளமான வாழ்வருளும் ஸ்ரீவில்லீஸ்வரர்


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
Photobucket
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! - (திருமூலர் அருளிய சிவ மந்திரம்)

அருள்மிகு ஸ்ரீவேதநாயகி ஸமேத ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில். காலத்தினாலும், அமைப்பினாலும், பாரம்பரியத்தாலும் மிகுந்த சிறப்பு பெற்ற சுமார் 1400 வருடங்கள் பழமை வாய்ந்த தலம்..

இருகரை பெருமான்: சைவ சமயம் தழைத்தோங்குவதற்காக
தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சோழ மன்னர்களில் சிறந்தவரான
கரிகால சோழனால் கட்டப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில்.
கரிகால் சோழன்
வில்வ மரங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டதாலும், வில்லை ஆயுதமாகக் கொண்ட வேட்டை சமுதாயத்து மக்கள் வழிபட்டதாலும் "வில்லீஸ்வரர்' என்ற பெயர் வந்திருக்கலாம் ...
இதற்கு "இருகரை' என்ற மற்றொரு பெயரும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள குருடிமலை, பாலமலை, பொன்னனூத்து மலை ஆகியவற்றில் பெய்யும் மழை நீர் இந்த ஊரின் இருபக்கமும் ஓடி, கோயில்பாளையத்தைக் கடந்து நொய்யல் ஆற்றில் கலப்பதால் இது "இருகரை' எனப்பட்டது..
""குருடிமலை மிசை மீதினிலே
பெருகியே வரும் பருகமா நதிக்கரைதனில்
வீற்றிருக்கும் இருகரை எனும்
துறையூர் பெருமானே!'' என்கிற பாடலும் அதை உறுதிப்படுத்துகிறது
ல்லணையைக் கட்டிய கரிகாலன் நிறைந்த செல்வத்தைப் பெற்றிருந்தாலும் குடும்பத்தில் நிலவிய பிரச்னைகளின் காரணமாக மனதளவில் துயருற்றிருந்தான். 

மன்னனின் வாட்டத்தைப் போக்க விரும்பிய அமைச்சர் பெருமக்கள் குறி சொல்வதில் கைதேர்ந்த பெண்ணை வரவழைத்துக் குறி கேட்டனர். ""கொங்கு நாட்டில் மக்களைக் குடியமர்த்தி, கோயில் கட்டிக் குளமும் வெட்டினால் மன்னனின் குறைகள் விலகும்'' என்று அந்தப் பெண் சொல்ல, கொங்கு நாட்டில் முப்பத்தாறு பெரிய ஆலயங்களையும், முன்னூற்று அறுபது சிறு ஆலயங்களையும், முப்பத்து இரண்டு அணைகளையும் கட்டினான் கரிகாலன். 
இவ்வாறு கட்டப்பட்ட பெரிய திருக்கோயில்களில் இருபத்தொன்பதாவதாக இடம் பெற்றுள்ளது 
ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில்.

இதனைக் கட்டுவதற்காக இருகூரைக் கடந்து, இருண்ட வனத்தில், நகர் அமைக்க இடம் தேடிக் கொண்டிருந்தான் சோழமன்னன். 

அப்போது இப்பகுதியை ஆண்ட சேரமன்னன், காட்டின் காவல் தெய்வமாக இருந்த வில்லி துர்க்கை பத்ரகாளி தன்னிடம் பலி கேட்டதாகக் கூறினான். 
இதையடுத்து சோழனும், காட்டை அழித்து ஊராக்கிய பின்னர் கோயில் கட்டி பலி கொடுப்பதாக உறுதியளித்தான். 

அவ்வாறு காட்டை அழிக்கும் போது ஒரு சிவலிங்கம் கிடைத்தது. இதனை வைத்துதான் வில்லீஸ்வரர் கோயிலை எழுப்பினான் கரிகாலசோழன். 

கோயில்களின் சுவரில் உள்ள கற்களில் கல்வெட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. 
சிறந்த கலை விற்பன்னர்களின் கை நுணுக்கத்தால் கட்டப்பட்டது என்பதை இக்கோயிலின் அமைப்பே உணர்த்துகிறது. 

சோழன் சேர மன்னனுக்கு அளித்த வாக்குப்படியே இடிகரையின் எல்லையில் துர்க்கைக்கு கோயில் எழுப்பி அங்கு ஆடு, பன்றி, கோழி எனும் முப்பலியையும் கொடுத்தான். அதுவே தற்போது உள்ள எல்லை ஸ்ரீமாகாளியம்மன் கோயில் என நம்பப்படுகிறது.

 ஸ்ரீவில்லீஸ்வரருக்கு அடுத்து ஸ்ரீவேதநாயகி அம்மன் சந்நிதி உள்ளது. நான்கு கைகளுடன், இரண்டு கைகளில் தாமரை மலர்கள் ஏந்தியும், மற்ற இரு கைகளில் வர, அபய முத்திரை காட்டியும் வீற்றிருக்கிறாள் அம்மன்.

அருகே சுப்பிரமணியருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. 

சிவன், அம்மன், சுப்பிரமணியர் மூவரும் ஒரே வரிசையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி வடிவம் என்பர். இந்த அமைப்பு அபூர்வமான ஒன்று.
. சோமாஸ்கந்த அமைப்பில்  உள்ளதால் நீண்ட காலத் திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது
 தல விருட்சம் வில்வ மரம்..


மூலவர் மண்ணில் கிடைத்தவராக நெற்றியில் 
மூன்று நேர்கோடுகளுடன் காட்சிதருகிறார்

வழக்கு போன்ற பிரச்னைகளில் கஷ்டப்படுபவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற இங்குள்ள சிவனை அபிஷேகம் செய்து வழிபட்டால் மூன்று மாதங்களுக்குள் பிரச்னை தீரும்
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 14,15,16 ஆகிய தினங்களில் வில்லீஸ்வரருக்கு சூரியன் தன் கிரணங்களால் காலை நேரத்தில் பூஜை செய்வது கண்கொள்ளாக் காட்சி.
மூலவர் வில்லீஸ்வரர்
 நவக்கிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது
காகிதத்தில் குறைகளை எழுதி வைக்க அக்குறை முப்பது நாட்களில் தீரும் அதிசயம் நடப்பதாக ஐதீகம்.. 
மிகவும் புராதனமான கோவிலில், இதுவரையிலும் அதிகளவில் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருத்தலத்தின் பெருமைகள் அனைத்தும் 26 கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மன்னர்கள், பொதுமக்கள் மனமுவந்து கோயிலுக்கு அளித்த கொடைகள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது
கல்வெட்டுக்கள்
விநாயகர் சாந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

  
ஸ்ரீராமர் தனது வனவாசத்தின் போது இங்கு வந்து சிவபெருமானிடம் 
வில் வாங்கிச் சென்றுள்ளார். இதனால், இத்தலத்தில் அருள்புரியும் சிவனுக்கு வில்லீஸ்வரர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. 

ஸ்ரீராமர் இங்கு வந்ததன் அடையாளமாக இத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு அருகேயுள்ள கோவிந்தநாயக்கன்பாளையத்தில் கோதண்டராமர் கோயில் தற்போதும் அமைந்துள்ளது. 

வில்வவனத்தில் இருந்து கிடைத்த சிவலிங்கம் என்பதாலும், வில்லை ஆயுதமாகக் கொண்ட வேட்டை சமுதாய மக்களால் வணங்கப்பட்ட சிவன் என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாம் ..

வில்லீஸ்வரர் ஆலயமும், அருகே உள்ள 
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் மற்றும் 
வடமதுரை விருந்தீஸ்வரர் ஆலயங்களும் 
ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன

இந்த மூன்று ஆலயங்களின் இடையே ஆதியில் 
சுரங்கப்பாதையும் இருந்துள்ளது.

போர் நடக்கும் காலங்களில், இம்மூன்று ஆலயங்களுக்கும் இடையே உள்ள சுரங்கப்பாதை வழியாக மன்னர் சென்று சிவனை வழிபட்டாராம்.
 காலப்போக்கில்  பராமரிக்கப்படாமையால் அழிந்து போன ஆலயத்தை
 கொங்கு மன்னர்களுள் ஒருவரான விக்கிரமசோழன்  புதுப்பித்தான்..

1974ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டு தொடர்ந்து மாதாந்திர கிருத்திகை, பிரதோஷம், சதுர்த்தி மற்றும் சிவனுக்கு முக்கிய நாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன...
[Image1]
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள துடியலூர் கிழக்கே என்.ஜி.ஜி. காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடிகரை. பகுதியில்  அமைந்துள்ளது ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில்..
Sri Sri Villeeswarar Temple temple
[Gal1][Image1]

14 comments:

 1. வில்லீசுவரர் அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே
  படங்க்ள் அழகோ அழகு

  ReplyDelete
 2. சிறப்பான தலத்தின் வரலாறு அறிந்தேன் அம்மா... நன்றி...

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஒரே நேர் கோட்டில் மூன்றுதலங்கள் சிறப்பான தகவல்.ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோவிலின் வரலாறு,சிறப்புகள், அறிந்துகொண்டேன்.நன்றி.

  ReplyDelete
 4. தொகுதி மக்களாகிய எங்களை நேரில் சந்திக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் திருச்சி-ஸ்ரீரங்கம் வருகையால், இங்கு என் வருகையில் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது. ;) !

  அதனால் அம்மா மன்னிக்கணும் ... முறைக்காதீங்கோ !

  >>>>>

  ReplyDelete
 5. வளமான வாழ்வருளும் ஸ்ரீ வில்லீஸ்வரர் !

  அழகான தலைப்பு !

  >>>>>

  ReplyDelete
 6. படங்கள் எல்லாமே அற்புதமான உள்ளன.

  திருமூலர் அருளிய சிவ மந்திரத்துடன் நல்ல ஆரம்பம்

  >>>>>

  ReplyDelete
 7. 1400 வருட பழமை வாய்ந்தது.

  கரிகால சோழனால் கட்டப்பட்டது.

  ஆஹா ! அருமையான தகவல்கள்.

  பெயர் காரணங்களும் கச்சிதம்.

  >>>>>

  ReplyDelete
 8. தொந்திப் பிள்ளையாரப்பா ....

  சாந்த விநாயகருக்கு என் வந்தனங்கள்.

  >>>>>

  ReplyDelete
 9. துடியலூர் பற்றி இப்போது தான் போன வாரம் சொன்னீர்கள்.

  மீண்டுமா !!!!!

  எனினும் மீண்டும் நினைவூட்டியுள்ளதற்கு நன்றிகள்.

  அங்கு வந்து தரிஸிக்க எனக்கும் ஒரே துடிப்பாகத்தான் உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 10. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ;) 1321 ;)

  ooo o ooo

  ReplyDelete
 11. ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய விவரமான தகவல்களுடன் இனிய பதிவு.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 12. மேலும் ஒரு கோவில் பற்றிய தகவல்கள் இன்றைக்கு தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 13. புதிய கோயிலைப் பற்றி அறிந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. அருமையான தகவல்கள். அழகான விளக்கங்கள். உங்கள் பதிவின் மூலம் அறிந்திராத ஒரு திருக்கோயில் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete