Wednesday, June 25, 2014

ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் நவநீத நாட்டியம்


SRI KRISHNA ASHTOTHRAM AND POTRI!!! - Saranathan
ஆவீர் பவத் வநிப்ருதா பரணம் புரஸ்தாத்
ஆகுஞ்சிதைக சரணம் நிப்ருதாந்ய பாதம்
தத்நா நிமந்த முகரேண நிபத்த தாலம்
நாதச்ய நந்தபவநே நவநீத நாட்யம்

"ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர் அனுமன்..தினம்  
21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்

விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். 
அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். 
. .
தஞ்சையை அடுத்த . திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற  நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில்   காரியசித்தி ஆஞ்சநேயர் 
மிகவும் விசேஷமாக போற்றப்படுகிறார்

நவநீத கிருஷ்ணன் திருக்கோவில், நாம் சிவன் கோவிலுக்கு செல்லும் முன்பே வலது புறம் சாலையில் பிரிந்து செல்கிறது. 

சிறிய அழகான கோவில். மனைவியரோடு நவநீதகிருஷ்ணன் திருக்காட்சி தருவதை பார்த்தாலே பரவச­ட்டும். 
Sri Navaneetha Krishnan
கூப்பிய கரங்களுடன் பக்தர்களின் குறை தீர்க்கிறார் இங்கு ஆஞ்சநேயர். அனுமன் சன்னிதியில் மட்டைத் தேங்காயுடன்  பிரார்த்தனைகளை ஒரு சீட்டில் எழுதி ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டு அவர் சன்னிதியில் முன் கட்டித் தொங்கவிட வேண்டும்.
வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு 
அருட்காட்சி அளிக்கின்றார் "ஸ்ரீராம பக்த காரிய சித்தி அனுமன். 

மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு இச் சந்நதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள் இனிதே நிறைவேறும். 

இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் 
செந்தூர நிறத்திற்கு மாறுவதையும் காணலாம்

கோவிலில் நுழையும்போதே ,  சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் ,  வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்திவிடுகிறார்.  காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.

இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு - நீண்ட நாட்களாக , எட்டாக் கனியாக இருந்து வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது... . 

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு - உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.. !

பஞ்ச முக அனுமன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை தந்து வாழ்வை வளமாக்கிடும். நெடு நாட்களாக தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்திடும். 

வினைகளால் ஏற்பட்ட ரோகங்களை போக்கிடும். 

ஜோதி சொரூபமான இவரை வழிபட்டால் குடும்பத்தில் 
நிலவும் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பார் 

அனுமனை பூஜித்தால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். 

பணக் கஷ்டங்கள் விலகும். ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு 
ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். 

இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில் அமர்ந்து 
அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம். 
அனுமனுக்கு இஷ்ட நாமமான ராம நாமம் பாராயணம் செய்யலாம்.

ஹனுமான் அருள் பெற ஸ்ரீ ராம ஜெயம் - என்று பேப்பரில்  - 1008 , அல்லது 10008 ,அல்லது 100008 முறை - எழுதி , அதை மாலையாக தொடுத்து , ஆஞ்சநேயருக்கு ‘அணிவிக்கலாம்....

குழந்தைகளுக்கு நல்ல கல்வி, மதிப்பெண் பெற வேண்டுவோர் , உயர் கல்வி வேண்டுவோர் ,  ஸ்ரீ ராம ஜெய மாலை அணிவித்தல் மிக நல்ல பலன்களைத் தரும். 
குழந்தையாக இருக்கும்போது , அருகில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு மாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டு , குழந்தை வளர்ந்து எழுத படித்தவுடன் , அதன் கையாலேயே எழுதி நேர்த்திக்கடன் செலுத்துவது நல்லது.


 பிரார்த்தனைகளை ஒரு சில நாட்களிலிலே நிறைவேற்றித் தருகிறார் இந்த மாருதி.

பின்னர் திருக்கோவிலுக்கு வந்து
ஆஞ்சநேயருக்கும் நவநீத கிருஷ்ணருக்கும் அபிஷேக அர்ச்சனைகள் செய்து  நன்றி தெரிவித்துச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சன்னிதியில் இப்படி நூற்றுக்கணக்கான மட்டைத் தேங்காய்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது.. 

தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோவில் 
கோவில்பட்டிக்கு மிக அருகில் உள்ள K.சரவணபுரம். அருள்மிகு 
ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் ஆலயம்:
[Gal1]
Sri Danvantri Arogya Peedam The sweet face of baby Krishna
Kumbakonam Sri Navaneetha Krishnan Temple Sri Jayanthi Utsavam
Sri Ahobila Muth Portal - Sri Navaneetha Krishnar (USA)
pattapathu navaneetha krishnan kovil (Ayiraperi)
Navaneethakrishnan temple, Melasevel. - Sri Navaneetha krishnan Viravanallur
Sri Navaneetha Krishnan, Sri Chakkarathalvar Temple in Chinna Chokkikulam, Madurai-2

18 comments:

  1. நவநீதி நாட்டியம் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை அம்மா... முக்கியமாக அனுமனின் சிறப்பு...

    ReplyDelete
  3. அனுமன் கோவில் நான் சென்று இருக்கிறேன்.

    வெகு பிரசித்தம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. தஞ்சை ஓவியமாக நவநீத கிருஷ்ணன் திருக்கோலம் அருமை. அழகு. இனிய பதிவு.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. அற்புதம் நிறைந்த ஆஞ்சநேயர் பற்றிய தகவல்கள்,கோவிலின் சிறப்புகள்
    படங்கள் அனைத்தும் அருமை.நன்றி

    ReplyDelete
  6. இன்றைய தங்களின் பதிவு நவநீதமாக ருசியோ ருசியாக உள்ளது.

    சும்மா சொல்லக்கூடாது .... ஊத்துக்குளி வெண்ணெய் தான் போங்கோ !

    >>>>>

    ReplyDelete
  7. வெண்ணெய் உருகியதுபோல நானும் படித்துப் பரவஸமாகி அப்படியே உருகிப்போனேன் .... நெய்யாக !

    என் மனம் பூராவும் நெய் மணத்துடன் ஒரே ஹிதமாக !

    >>>>>

    ReplyDelete
  8. நாட்டியமாடிடும் தங்கமான தலைப்புக்கு தங்களுக்கு ஒரு ஷொட்டு

    >>>>>

    ReplyDelete
  9. 1008, 10008, 100008 என்று வரும் பத்தியில் [பாராவில்] கடைசியில் ’அணியலாம்’ என்று உள்ளது.

    அது ‘அணிவிக்கலாம்’ என்று இருந்தால் தாங்கள் சொல்வது போல ஹனுமனுக்குச் செய்ய நினைப்பவர்களுக்கு குழப்பமேதும் இல்லாமல் இருக்குமே.

    இல்லாவிட்டால், தாங்கள் எழுதியுள்ள இந்தப்பதிவை, என்னைப்போன்ற முட்டாள்களில் சிலர், தவறாகப் புரிந்துகொண்டு, கஷ்டப்பட்டு அவ்வாறு எழுதிய ’ஸ்ரீராமஜயம்’ காகிதங்களை மாலையாக்கி தாங்களே அணிந்துகொண்டுவிடும் ஆபத்தும் உள்ளதல்லவா !

    மேலே ஒரு ’ஷொட்டு’ இங்கே கீழே ஒரு சின்ன ’குட்டு’ என நினைக்காதீங்கோ. முறைக்காதீங்கோ. ;)

    நான் எழுதியுள்ள இதை பாஸிடிவ் ஆக தாங்கள் அணுகலாம். அதன்பிறகு .......

    ‘அணியலாம்’ அல்லது ’அணிவிக்கலாம்’ எல்லாம் தங்கள் இஷ்டப்படி மட்டுமேவாக்கும் ..... ஹூக்க்க்க்க்கும் !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ’அணிவிக்கலாம்’ என்பதை அன்புடன் இப்போது தங்கள் திருக்கரங்களால் அணிவித்துள்ளதற்கும்.....

      நானே சற்றும் எதிர்பார்க்காமல் இருந்தும், என் இன்றைய அனைத்துப்பின்னூட்டங்களையும் வெளியிட்டு மகிழ்வித்துள்ளதற்கும் ........

      என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk

      Delete
  10. திட்டை சிவன் கோயிலுக்கு முன்பே வலதுபுறம் திரும்பும் சாலையில் பிரிந்து செல்லும் ......

    நவநீத கிருஷ்ணன் கோயில்

    தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்

    கோவில்பட்டி அருகே K சரவணபுரத்தில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயில்

    கும்பகோனம் நவநீத கிருஷ்ணன் கோயில்

    அமெரிக்க அகோபில மட நவநீத கிருஷ்ணன் கோயில்

    ஆரியப்பட்டி பட்டப்பத்து நவநீத கிருஷ்ணன் கோயில்

    மேலவாசல் நவநீத கிருஷ்ணன் கோயில்

    வீரவநல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்

    மதுரை சின்ன சொக்கிக்குளம் நவநீத கிருஷ்ணன் கோயில்

    ந. முத்துலிங்காபுரம் நவநீத கிருஷ்ணன் கோயில்

    என பல ஊர்களுக்கு என்னைத் தரதரவென்று இழுத்துச் சென்று தரிஸனம் அளித்து மகிழ்வித்துள்ளீர்கள்.

    என் காலெல்லாம் ரொம்ப ரொம்ப வலிக்குது தெரியுமா !

    இப்படியா மிகப்பெரிய தேர் போன்ற என்னைத் தரதரவென்று ஸ்பீடாக இழுத்துச்செல்வது ? கொஞ்சமும் நியாயமே இல்லையாக்கும் !

    >>>>>

    ReplyDelete
  11. கண்ணடிக்கும் கண்ணன் + The sweet face of Baby Krishna at ஸ்ரீ தந்வந்தரி ஆரோக்ய பீடம் உள்பட அனைத்துப்படங்களும் அருமையோ அருமையாய் உள்ளன.

    முதல் படம் முத்தான முத்தல்லவோ ! ;)))))

    >>>>>

    ReplyDelete
  12. அனைத்துக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மிக அழகிய பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றியோ நன்றிகள். வாழ்க !

    ;) 1316 ;)

    ooo o ooo

    ReplyDelete
  13. ?????

    தாங்கள் தரதரவென்று இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்து, கோயில் குளம் என கூடவே வந்துள்ள தங்களின் அன்புக்கணவர் திரு. ஜகமணி அவர்கள்

    ’என்னபாடு பட்டிருப்பாரோ’ அல்லது ’இன்னும் பட்டு வருகிறாரோ’

    எனவும் நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டேன்.

    ?????

    ReplyDelete
  14. இத்தனை கிருஷணன் கோவில்களா? அதுவும் ஒரே பதிவில் போட்டு மனம் குளிர கிருஷ்ண தரிசனம் கிடைத்தது . நன்றி.

    ReplyDelete
  15. அழகிய படங்களுடன் பகிர்வு அருமை அம்மா...

    ReplyDelete
  16. thanks for providing pictures of lord krishna

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி.

    நவநீத கிருஷ்ணனை பார்க்கும்போதே மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும்.

    ReplyDelete