Thursday, June 26, 2014

ராஜ யோகம் அருளும் ராஜ குரு



நாராயணன் தன்னெடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணவொன் னுனிடம்
ஆரணங் கொண்டு பூசுரர்கள் வந்தடி தொழச்
சீரணங்கும்புகழ்த் தென்குடித் திட்டையே
குணமிகு வியாழ குருபகவானே
மனமுள்ள வாழ்வு மகிழ்வுடன் தருவாய்
பிரகஸ்பதி வியாழப் பரம குரு நேசா
கிரஹ தோஷமின்றி கடாட்சித் தருள்வாய்


















திட்டையில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவான் குடிகொண்டுள்ள  திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் ஆச்சர்யங்கள் நிரம்பிய அதிசயங்கள் பல கொண்டது..

 மகாப்பிரளய காலத்தில். பிரளய முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை  கொட்டி.  உயிரினங்கள் அழிந்தன. ஆனால், அவ்வளவு வெள்ளப் பெருக்கிலும், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம், அங்கு  இறையருள் இருந்தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை என்ற திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.
பரம்பொருள் ஒன்றே பலவல்ல... சத்தியம் ஒன்றே இரண்டல்ல... 
என்பது வேதவாக்கு அந்தப் பரம்பொருள் தன்னிலிருந்து ஒரு பகுதியை சக்தியைப் பிரித்து  உமாதேவியைப் படைத்தார். 

திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்
அம்மன் சன்னதிக்கு  மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளன. 

அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்ற அம்மனைப் பிரார்த்திக்கும் போது அம்மன் அவர்கள் தோஷம் நீங்க அருளுகிறார்.

பெண்களுக்கு ஏற்படும் திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க
 இந்த அம்மன்  அருள்வதால் மங்களாம்பிகை எனப் புகழப்படும் உலகநாயகி அதிசயம்.
பிரளய முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உமையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப் பரிபாலனம் செய்ய  மும்மூர்த்திகளையும் படைத்தனர். 

ஆனால் மாயைவயப்பட்டிருந்த மும்மூர்த்திகளும் பெருவெள்ளத்தால் 
மூடி பேரிருள் சூழ்ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக்  கண்டு பயந்தனர். 

அலைந்து திரிந்து பெரு வெள்ளத்தின் நடுவில் பெருந்திரளாக இருந்த திட்டையை அடைந்து மாயை நீங்க வேண்டி இறைவனைத்  தொழுதனர். 

இறைவன் அவர்கள் அச்சத்தைப் போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்து தோன்றிய மந்திர ஒலிகள் மும்மூர்த்திகளையும் அமைதியடைச்  செய்தது. பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறைவன் அவர்களுக்கு காட்சி தந்தார். 
மும்மூர்த்திகளின் மாயையை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த  சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்ய உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார். மும்மூர்த்திகளும்  வழிபட்டு வரம் பெற்றது  அதிசயம்.
மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரக்காந்தக்கல், சூரியகாந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. 

மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து  அழியும் சாபம் பெற்ற சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த சந்திர பகவான், திங்களூர் வந்து கைலாசநாதரை, வணங்கி தவம் இருந்தார்.  

கைலாசநாதரும், சந்திரனின் சாபம் நீக்கி மூன்றாம் பிறையாக 
தன் சிரசில் சந்திரனை அணிந்து கொண்டார். 

திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவபெருமானுக்கு  திட்டையிலே தன் நன்றிக் கடனை செலுத்துகிறார்.

 இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து  ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.

24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர்  விழுவதை இன்றும் காணலாம்.

உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத ஆலயத்தில் அமைந்துள்ளஅற்புதம்  அதிசயம் இது.

Photo: குரு பெயர்ச்சி பொதுப் பலன் 19-6-2014 முதல் 14-7-2015 வரை  

மேஷம் முதல் கன்னி வரை -  http://bit.ly/1s7A7Pc
துலாம் முதல் மீனம் வரை - http://bit.ly/1oWA5nD
நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தும்
அற்புத வடிவம் லிங்க உருவம். 

திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலய நான்கு மூலைகளிலும்
நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. 
5வது லிங்கமாக மூலவராக ராமனின் குல குருவான
வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார். 

எனவே, இது  பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்ச பூதங்களு க்கும் தனித்தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து  லிங்கங்கள் அமைந்திருப்பது  அதிசயம்.

எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர்த்தியே பெரிதும் வழிபடப்பட்டு வரந்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம். 

ஆனால் திட்டைத் தலத்தில்  சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய அறுவரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழிபடப்பட்டு தனித்தனி சன்னதிகளில்  அருள் பாலிக்கிறார்கள்
எனவே, பரிவார தேவதைகளைப் போல அல்லாமல் மூலவர்களைப் போலவே, அருள்பாலிப்பது அதிசயம்.
பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினால் உருவாக்கப்பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப் பட்டிருக்கும். ஆனால் இங்கு  கொடி மரம்,விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய  அமைப்பு இருப்பதாக தெரியவில்லை. இதுஅதிசயம் 

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கும் சென்று தோஷம் நீங்கப் பெறாமையால் திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரை ஒரு  மாதம் வரை வழிபட்டு வந்தார்
வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் 
தோஷம் இன்றுடன் முடிந்து விட்டது. நீ திட்டைத் திருத்தலத்தின்  
கால பைரவனாக எழுந்தருளி உன்னை வழிபடுவோருக்கு 
அருள் செய்வாய் என்று கூறினான். 
அதுமுதல் இத்தலம் பைரவ ஷேத்திரமாக விளங்கி வருகிறது.  

ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட சனியால்  ஏற்பட்ட தோஷங்கள் விலகும். இங்கு எழுந்தருளி உள்ள பைரவர் அதிசயம்.


















நவகிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர் குருபகவான் ஒருவரே உலகம் முழுவதும் உள்ள தனதான்ய, பணபொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி,  

தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். 

 ராகு, கேது, சனி, செவ்வாய்,  புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குருபகவான். 

எனவே குரு பார்க்க  கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. 

இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும்  இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். 

இவருக்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவும், இதையொட்டி  லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடை பெற்று வருகின்றன. இங்கு எழுந்தருளி உள்ள ராஜ குருபகவான்  அதிசயம்.

தஞ்சையில் இருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில்சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திட்டை கிராமத்தில் உள்ளது வசிஷ்டேஸ்வரர் கோயில். . . 


.























.











திருச்செந்தூர் முருகன் குரு அம்சமானவர். வாழ்க்கையில் 
உயர்வினை  அடைய உச்சகுருவை வழிபட வேண்டும்..

தொர்புடைய பதிவுகள்

திருவருள் குருவருள்

வசிஸ்டேஸ்வரர் திருக்கோயிலில் ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னிதியில் குரு பகவான் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார்.  

மற்ற குரு ஸ்தலங்களில் தட்சினாமூர்த்திக்கே குருபெயர்ச்சி நடத்தப்படும். 

இங்கு மட்டும்தான் குருவுக்கு பெயர்ச்சிவிழா கொண்டாடப்படுகிறது.

திட்டையில் வழிபட்டு எமன் தன் தாய் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற்று தென் திசைக்குத் தலைவன் ஆனான். 

சனி நவக்கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்று சிறப்பிடம் பெற்றார்... 

அசுவினி தேவர்கள் அழகான உருவமும் சிறந்த குணங்களையும் பெற்றுத் தேவ வைத்யர்கள் ஆனார்கள்.

வசிஷ்டர் பிரமஞானிகளுள் தலை சிறந்தவராக ஆனார். வசிஷ்டர் தான் செய்துவரும் நித்யாக்னி ஹோத்ரம் முதலிய நற்சடங்குகளுக்கு உதவும் வகையில் தெய்வப் பசுவாகிய நந்தினியைப் பெற்றார்

மனுமன்னன் மகளான `இலா' ஆண் வடிவம் பெற்றாள்.

ஜெய சோழமன்னன் ஒரேயொரு `ருத்ர பாசுபத' யாகத்தைச் செய்து
100 அஸ்வமேத யாக பலனான தேவேந்திர பதவியைப் பெற்றான்.

கார்த்த வீரியார்ச்சுன மன்னன் ஆயிரம் தோள்களும் நூறாயிர யானை வலிமையும் நினைத்த உருவம் எடுக்கும் திறமையும் எவராலும் போரில் வெல்லப்படாத வெற்றியும் பெற்றான்.

நந்தினி, கமலினி என்ற இரு தெய்வப் பசுக்களும் தங்கள் தாயாகிய காமதேனுவைப் போலவே சிருஷ்டி, திதி, சம்ஹார சக்தியையும் எவ்வுலகத்துக்கும் செல்லும் ஆற்றலையும், தீய அரக்கர்களால் வெல்ல முடியாத சக்திகளையும் பெற்றன.

. ஜமதக்னி முனிவர் கமலினி என்னும் தெய்வப் பசுவையும் நினைத்ததை வாரி வழங்கும் வல்லமையையும் பெற்றார்.

பரசுராமர் தன் அன்னை ரேணுகாதேவியின் ஆணைப்படி இத்தலத்து இறைவனை வழிபட்டு (பரசு) கோடரியைப் பெற்றுப் பரசுராமர் ஆனார்.

நாகராஜனாகிய சேஷன் பூவுலகைத் தாங்கும் திறத்தையும் ஆயிரம் படங்கள் கொண்டதலைகளையும் பெற்று ஆதிசேஷன் ஆனான்.

சுக்ராசாரியாரால் ஏவப் பெற்ற ராகுவின் மகன் சுமாலி (அசுரகுல அரசன்) சூரயினின் தேருக்கு நிகரான, வானில் விருப்பப்படியே செல்லும் ஆற்றலுள்ள ரதத்தைப் பெற்றான்.

சிவபக்தனான சுமாலியைக் கொன்றதால் பயந்த சூரியன் திட்டை தலத்து இறைவனை வணங்கி, `கிரகாதிபத்யம்' என்னும் வாழ்வையும், உலகங்களை ஒளியால் பிரகாசப்படுத்தும் சக்தியயும், காலத்துக்குத் தலைவனாக அமைந்து காலத்தை நடத்தும் அதிபதியாம் தன்மையையும் பெற்றான்.

திருமால் மதுகைடபர்களை வெல்லும் ஆற்றல் பெற்றார். 

அலர்க்க மாமன்னன் சப்த த்வீபாதிபதியாக, தானதருமங்கள் பல வழங்கி, முடிவில் தன் சரீரத்தோடு சிவசாயுச்சியம் அடந்தான்.

படைக்கும் ஆற்றலை பறிகொடுத்த பிரம்மன் மீண்டும் 
சர்வ சக்தி பெற்றான்.

விஷ்ணு சோழமன்னன் குஷ்டரோகம் நீங்கி, அழகிய தோற்றம் பெற்று, ஆயிரம் ஆண்டுகள் மாமன்னனாக ஆட்சி செய்து, முடிவில் சிவசாரூபம் பெற்றான். 

சிவ சாபத்தினால் பாம்பு உருவடைந்த கந்தன் முன்போன்று அழகிய தோற்றம் பெற்றுத் தேவசேனாபதியானான்.
திட்டை குருவை வணங்குபவர் வாழ்வில் ஏற்றம்  காணலாம்..






 

17 comments:

  1. வியக்க வைக்கும் நிகழ்வுடன் விளக்கங்கள் வெகு அருமை... நன்றி அம்மா... படங்கள் அற்புதம்...

    ReplyDelete
  2. வியாழக்கிழமை அதுவுமாய் - இனிய தரிசனம்..

    ReplyDelete
  3. நிறைய குட்டிக்கதைகள். கந்தன் பாம்பான கதை விவரம் தெரிந்தால் சொல்லுங்களேன்..

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா
    சிந்தனைக்கு அறிவான கதை சொல்லி பதிவை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அதிசயம் நிறைந்த,அற்புத கோவில் திட்டை வசிஸ்டேஸ்வரர். அழகான படங்கள், தகவல்கள்,கோவில் சிறப்புகள் அருமை.நன்றி.

    ReplyDelete
  6. அருமையான படங்களுடனும் இவ்வளவு தெளிவான விளக்கங்களுடனும், தொடர்பான கிளைக் கதைகளுடன் தங்களை தவிர வேறு யாராலும் பதிவு செய்ய முடியாது என்றே நினைக்கிறேன் தங்கள் இறை பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா

    ReplyDelete
  7. குருப் பார்க்க கோடி நன்மை காரணம் மிக அருமை.
    குரு தரிசனம் கிடைத்து விட்டது. நன்றி.
    வாழ்த்துக்கள்.
    ஊருக்கு போய்விட்டால் உங்கள் பதிவுகளை தினம் பார்க்க முடியாமல் போய் விடுகிறது.
    பழைய படிக்காத பதிவுகளை பார்க்க வேண்டும் தினம் அடுத்து ஊருக்கு போவதற்குள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. குருஅருள் கண்டு குளமான கண்கள்!
    திருவருள் தேடும் தினம்!

    அற்புதங்கள் வரலாறுகள் படங்கள் என அருமையான
    பதிவு இன்று தந்தீர்கள்!

    இங்கெலாம் நேரில் சென்று தரிசிக்க
    அதற்கும் திருவருள் கிட்டவேண்டுமே...

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  9. ராஜ யோகம் அருளும் ராஜ குரு !

    ஆஹா, வியாக்கிழமைக்கு ஏற்ற பகிர்வு.

    குருவாரம் + அமாவாசை நிறைந்த நல்ல நாளில் பார்க்கவும் படிக்கவும் கிடைத்துள்ள பயனுள்ள பகிர்வு.

    >>>>>

    ReplyDelete
  10. நீரில் மூழ்காமல் திட்டாக நின்றதால் திட்டை !

    காரசாரமான ருசியான கரகரப்பான மெல்லிய தட்டை [எள்ளடை] சாப்பிட்டதுபோல உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. மங்களாம்பிகை ...... உலக நாயகி ..... எல்லாமே எங்களுக்கு
    பிரத்யக்ஷ தெய்வமான நீங்கதானாக்கும்.

    >>>>>

    ReplyDelete
  12. அழகழகான படங்களுடன், கருங்கல் போல உறுதியாகவும், சந்திர காந்தக்கல் போலக் குளுமையாகவும் பல தகவல்கள். சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  13. ஆங்காங்கே ஒருசில படங்கள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளன. திறந்து காட்டப்பட்டுள்ளவை எல்லாமே சூப்பரோ சூப்பராகத்தான் உள்ளன. ;)

    >>>>>

    ReplyDelete
  14. ’தொடர்புடைய’ பதிவுகள் என்பதில் எழுத்துப்பிழை உள்ளது.

    ’தொயர்புடைய’ பதிவுகள் என்று எழுதியுள்ளதால் ..... தொடர்பு ஏதும் சரியில்லாமல் ..... துயர் கொடுப்பதுபோல உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இப்போது எல்லாம் சரியாக உள்ளது, எரிச்சல் ஊட்டிடும் ஒன்றே ஒன்றைத்தவிர ;(

      நெடுக மேயும் கோயில் மாட்டைத்தான் சொல்கிறேன். கோயில் காளை அடித்து விரட்டப்பட வேண்டியதாக்கும். ;(((((

      Delete
  15. அப்புறம் அதுபோல HIGHLIGHT செய்து எழுதியுள்ள ராகு, கேது, சனி, செவ்வாய் ...........

    என்பதில் ’செவ் வாய்’ என ’செவ்’ க்கும் ’வாய்’க்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதாவது செவ்வாயில் [சிவந்த வாயில்] வாய் கொஞ்சம் பிளந்துள்ளது.

    அது என்னவோ கால்வாய் அல்லது வாய்க்கால் போல இடைவெளியுடன் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  16. பொதுவாக இன்றைய தங்களின் பதிவு வழக்கம்போல பிரமாதம்.

    இன்று அமாவாசை தர்ப்பண தினமானதால் என் வருகையில் சற்றே தாமதம் ஆகிவிட்டது.

    அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ;) 1317 ;)

    oooo oooo

    ReplyDelete