Thursday, June 5, 2014

உலக சுற்றுப்புற சூழல் தினம்

























உலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் 
ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. 

சாதகமான சுற்றுப்புற சூழல் மேம்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகளினால் கொண்டாடப்படும் மிகப் பெரிய கொண்டாட்டம் ஆகும்.

இயற்கையின் எல்லா பிரிவுகளோடும் மனிதர்கள் ஏதோ  
ஒருவகையில் சம்பந்தப்ப்டிருக்கிறார்கள்..

தான் வாழும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு எல்லா தனி மனிதர்களுக்கும் உண்டு. 


சிறு சிறு அலட்சியங்களால் மாசுபடுத்தப்படும் சுற்றுப்புறம் 
இன்று பூமிக்கே பெரும் அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கிறது. 

சுற்றுப்புறச் சூழல் மாசு உருவாக்கியிருக்கும் மிகப்பெரிய சவால் உலக வெப்பம் அதிகரிப்பு என்று உலக நாடுகள் உணர்ந்து கொண்டிருக்கின்றன. 

பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பது என்பது ஏதோ ஒரு 
காலநிலைச் செய்தி போல வாசித்து கடந்து போக வேண்டியதல்ல. 

 மிகப்பெரிய மாற்றங்களை பூமியில் ஏற்படுத்தி மனித 
குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாய் உருமாறிவிடும்.

நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு பூமியில் அதிகரித்திருப்பது பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். 

காடுகளை அழிப்பதும், எரிபொருட்களின் வெப்பமும் பூமியின் 
வெப்ப நிலை ஏற்றத்துக்கு இன்னும் சில காரணங்கள்.

உலக வெம்மை அதிகரிப்பினால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதனால் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு. 

பங்களாதேஷ், நெதர்லாந்து, இங்கிலாந்தின் சில பகுதிகள் தாழ்வாக இருப்பதனால் முதல் பாதிப்பு அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். 

வெப்பம் சீராக இல்லாமல் அதிகரிப்பது இயல்பாய் நடந்து கொண்டிருக்கும் காலநிலையை முற்றிலும் சிதைத்து விடுகிறது. 

வெள்ளப் பெருக்கு, வெப்ப அலைகள் பூமியில் வீசுதல், சூறாவளி போன்ற 
பல இயற்கைச் சீற்றங்களுக்கும் இது காரணமாகி விடுகிறது.

ஒழுங்கற்ற மழையும், கோடையில் அதிக வெப்பமும், பனிக்காலத்தில் கடும் பனியும் இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும். 

தற்போதைய வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலையுடன் அறிவித்திருக்கிறது..

மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த 
வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.

நான்கு இலட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கார்பண்டை ஆக்ஸைடு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த கரியமில வாயு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வளையத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப் பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.


மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும்போது நோய்களின் கூடாரத்தைச் சென்றடைகிறான். நாடு என்பது வீடுகளின் கூட்டம். வீடும் அதைச் சுற்றிய இடங்களும் தூய்மைகாக இருக்கும்போது ஒட்டுமொத்த நாடும் தூய்மையாகிறது.


பேருந்திலிருந்து கொண்டே மிச்ச உணவை வீசுவதும், சந்துகளையெல்லாம் கழிப்பிடங்களாக்குவதும், குப்பைத் தொட்டியைத் தூய்மையாய் வைத்துவிட்டு சுற்றுப்புறத்தை குப்பை மேடாக்குவதும் சிறு சிறு தவறுகளின் கூட்டம். இவையே பிழைகளின் பேரணியாய் சமுதாயத்தை உலுக்கும் பிரச்சனையாய் உருமாறுகிறது.

அமெரிக்காவில் ஓடும் வாகனத்திலிருந்து எதையேனும் வெளியே எறிந்தால் அபராதம் செலுத்த வேண்டும்
எனவே அங்கே யாரும் பொதுஇடங்களை அசுத்தமாக்குவதில்லை. 

அமெரிக்காவில் இருக்கும்போது சுற்றுப் புறத்தை சுத்தமாய் வைத்திருக்கும் இந்தியர்கள் கூட, இந்தியா வந்ததும் அதை மறந்து விடுவது தான் வேதனை.

மரங்கள் நடுவது பரவலாக செயலாக்கத்தில் இருக்கும் ஒரு வழிமுறை. இது ஒளிச்சேர்க்கைக்காக கரியமில வாயுவை அதிக அளவில் உள்ளிழுப்பதால் பூமியின் கரியமில வாயு அளவு குறைகிறது. 

இது பூமியின் வெப்ப அளவை சற்று குறைக்கிறது.

தென் துருவப் பகுயில் வானில் விழுந்துள்ள ஓசோன் ஓட்டை  மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. 

காற்றில் ஏற்படும் மாசு (குளோரோபுளூரோகார்பன்) இதன் முக்கிய காரணியாக விளங்கும் அதே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி, பிரிட்ஜ், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாயுவும் இந்த ஓசோன் ஓட்டைக்கு குறிப்பிடத்தக்க காரணமாக விளங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் வலுவிழப்பதால் தோல் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதனுக்கு வருகின்றன. 

கடலின் மேற்பரப்பில் வாழும் மீன்கள் அழிகின்றன. புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் இறந்து போகும் மீன்களை உண்ணும் பெரிய மீன்களும் அதனால் பாதிக்கப்பட்டு இயற்கைக்கே அது அச்சுறுத்தலாகி விடுகிறது. 

தொடர்ந்து ஓசோன் படலம் வலுவிழந்தால் பூமியில் மனிதர்கள் உட்பட உயிரினங்களே அழிந்து போகும் என்பது அதிர்ச்சித் தகவல்.

உணர்ந்து நடந்து பூமியைக் காக்மனைவரும் முன் வரவேண்டும்ம்









15 comments:

  1. நினைவூட்டியதற்கு நன்றி. இன்றைக்காவது சற்று குறைவாக கவனமாக தண்ணீரை பயன்படுத்துகிறேன்.

    ReplyDelete
  2. இன்று சுற்றுச் சூழல் தினம் என்று உங்கள் பதிவைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  4. சுற்றுப்புற சூழலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதிவு!..
    சுற்றுச் சூழலைப் பாதுகாத்து உலகைப் பேணுவோம்!..
    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  5. சிறப்பான தகவல்களை அழகான படங்களுடன்,விழிப்புணர்வு பதிவாக்கி யமை அருமை. நன்றிகள்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. வழக்கம்போல் அழகான படங்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. விழிப்புணர்வு தரும் அருமையான விளக்கங்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. சுற்றுப்புறத்தைக் காப்போம்.
    நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
  10. WORLD ENVIRONMENT DAY க்காகவே வடிவமைத்துள்ள படமாகிய நீரை நோக்கிய மரப்பகுதி பசுமையான இலைகளுடனும், பாலைவனத்தை நோக்கிய அதே மரத்தின் மறுபகுதி காய்ந்த மொட்டை மரமாகவும் காட்டியுள்ளது கருத்தைக் கவர்வதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. ஓடும் மேகங்களுடன், நீர்வீழ்ச்சிபோல கொட்டும் கடல் நீர் உள்ள படம் மிக அழகான நல்ல தேர்வாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. கடைசி மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டே இருந்தால் அவை என் கண்களைக் கவர்வதாக உள்ளன. இருப்பினும் சுழன்று சுழன்று கண் பார்வையை என்னவோ செய்வதுபோல உள்ளது. [ஏற்கனவே கண்ணில் கொஞ்சம் ரிப்பேர் ஆகி இப்போது தான் சிலரின் விசேஷப் பிரார்த்தனைகளால் ஒருவழியாகத் தேவலாம். ;) ]

    உலக சுற்றுப்புற சூழல் தின நல்வாழ்த்துகள்.

    இன்று வியாழன் வெள்ளி கூடும் வேளையாக இருப்பதால் வருகையில் சற்றே தாமதம் ஆகிவிட்டது.

    ;) 1296 ;)

    o o o o o

    ReplyDelete
  13. நல்ல விழிப்புணர்வுப் பதிவு அம்மா!

    ReplyDelete
  14. தெரியாத தகவல். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா,
    படங்கள் கண்ணுக்கு பசுமை;

    ReplyDelete
  15. நல்ல விழிப்புணர்வு பதிவு..

    உலக சுற்றுப்புறச் சூழல் கொண்டாட்டம் நடைபெறும் என்று ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருக்கிறார்கள் தில்லியில் - அதன் மூலம் வரும் தொல்லை தெரியாமல்! :(

    ReplyDelete