Showing posts with label உலக தினங்கள். Show all posts
Showing posts with label உலக தினங்கள். Show all posts

Saturday, September 27, 2014

கருணைதெய்வம் திருவேங்கடமுடையான் -உலக சுற்றுலா தினம்


திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம் (திரு)

வரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம்
வாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம்  (திரு)

மன்னுபுகழ் கோசலைக்கு மைந்தனான...தெய்வம்
மண்மகளும் மலர்மகளும் மருவுகின்ற...தெய்வம்

தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கடதெய்வம்
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்

கொண்டாடும் அன்பர் நெஞ்சில் கோவில் கொண்ட தெய்வம்
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் - தெய்வம்

சந்தமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற...தெய்வம்
சாரங்கபாணியென்ற பார்புகழும் தெய்வம்
வேங்கடேஸோ வாஸீதேவ வாரி ஜாஸன - வந்தித 
ஸ்வாமி - புஷ்கரிணீ - வாஸ  ஸங்க - சக்ர  - கதாதர 
பீதம்பர - தரோ தேவ: கருடாரூட - ஸோபித 
விஸ்வாத்மா விஸ்வ- ஸோகேஸ:  விஜயோ வேங்கடேஸ்வர 
ஏதத் த்வாதஸ நாமானி  த்ரிஸந்த்யம்ய: படேந்நர: 
ஸர்வபாப- வினிர் முக்தோ  விஷ்ணோஸ்ஸாயுஜ்யம் ஆப்னுயாத். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவேங்கடேச சுவாமியின் சன்னதியில்  காலையிலும், மாலையிலும் இந்த மந்திரசுலோகத்தை  ஜபித்து அருள் பெறுகிறார்கள்..

இல்லத்தில்  இருந்தபடியே இந்த ஸ்லோகத்தை ஜபித்து  
திருப்பதி ஏழுமலையானின்  அருளைப் பெறலாம்
திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்
ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக. 

(புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் துதியை பாராயணம் செய்து வந்தால்  விருப்பங்களையெல்லாம் வேங்கடவன் நிறைவேற்றித் தருவார்.
திருப்பதி புகைப்படங்கள் - திருமலா வெங்கடேஸ்வரர் கோயில் - இராமர் விக்ரகம்
கருணையே உருவான தெய்வம் திருவேங்கடமுடையான் கருணையாக நோக்கி, லேசாகச் சிரிக்கும் கண்களில் கருணை பொங்கிப் பிரவகிக்கும் அற்புதத்தை   உணர   முடியும்..

கலியுகவரதனாக எல்லையற்ற கருணைவெள்ளம் கண்கள் வழியே கார்மேகம் போல் அமுதாய் வர்ஷிக்க  கருணை வள்ளலாகத் திகழ்வர் திருமலைதெயவம்..

 கருணை வர்ஷிக்கும் . திருமாலின் பெருமை பன்னிரண்டு ஆழ்வார்களது திகட்டாத தெள்ளமுதாக  திவ்விய பிரபந்தத்திலும்  பிரவஹிக்கிறது.  



மிகவும் போற்றுதலுக்குரிய காப்பதில்காட்டிய  வேகத்துடன்  

கருணையின் வெளிப்பாடு கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தது. 
திரௌபதியின் மானம் காக்க ஆடை கொடுத்தது. 
[Draupadi.jpg]
ஒவ்வொரு முறையும் சிவன் கொடுத்த வரத்தினால் மக்களைத் துன்புறுத்திய அரக்கர்களையும் அழித்து, அந்த அரக்கர்களுக்கும் உலகுள்ள அளவிற்கு அழியா புகழையும் கொடுத்தது.

நாமஜபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுத்தாலும் அப்படியே பயன்படுவதில்லை. 

கலைநுட்பம் மிக்க கலைஞரின் கையில் பட்டு ஆபரணமாக மாறினால் தான், அதன் மதிப்பும் மெருகும் கூடுகிறது. 

ஊரும், பேருமில்லாமல் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரே நமக்காக வடிவம் தாங்கி ராமர், கிருஷ்ணர் என்ற திருநாமம் கொண்டு அவதரிக்கிறார். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் .. ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை  சொல்லி,  எளிதாகச் சேமிக்கலாம்.
[acharya_vamsa_viruksham.jpg]



திருப்பதி புகைப்படங்கள் - திருமலா வெங்கடேஸ்வரர் கோயில் - தங்க கோபுரம்
தனது திருமணத்திற்காக குபேரனிடம் பொருள் பெற்று, அந்தக் கடனை நிவர்த்தி செய்ய வராஹ க்ஷேத்திரமான திருப்பதியில் ஸ்வயம்புவாகக் குடியேறி, - குபேரனுக்கே செல்வம் தரும் ஸ்ரீதேவி தன் மார்பில் இருக்கும்போது, ஒரு க்ஷணத்திலேயே அத்தனை கடனையும் அடைக்கும் செல்வ இலக்குமி தன்னிடம்  இருந்தாலும்,  கருணை கொண்டுதன்னை நாடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கும்- வினை தீர்க்கும் பெருமாளின் விளையாட்டை போற்றுகிறோம்..


புரட்டாசி சனிக்கிழமை அன்று  சனி பகவான் வீரியம் குறைந்திருக்கும் சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. சனியின் பாதிப்பு இல்லாதவர்கள் புரட்டாசி புதன்கிழமையிலும் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிக்கலாம்.






   உலக சுற்றுலா தினம் 


சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டில் ஐ.நா. சபை அங்கீகரித்து அறிவித்தது. அன்று முதல் சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களை காண்பதால்  மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எனவேதான், உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் வெவ்வேறு முறைகளில் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன.

சுற்றுலா செல்வது என்றாலே, கொண்டாட்டம் தான். சுற்றுலா என்பது லட்சக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரம். சுற்றுலா மூலம் தான், பல்வேறு கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உலகை ஒருங்கிணைக்கவும் முடிகிறது. 
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொருளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27ம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
"சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம்' என்பது போன்ற  மையக்கருத்துகளை வலியுறுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது..! 
கல்வி சுற்றுலா, இன்ப சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. 
ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங்களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி அடையும் வகையில் மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், பீச் என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன. 

சுற்றுலா மனிதனுக்கு பல்வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொள்ள வழிவகுக்கிறது. 


இந்தியாவில் பழங்காலம் முதலே தீர்த்த யாத்திரை என்ற பெயரில் புனித யாத்திரைகள் செல்வது இருந்துள்ளது. 

இமயம் தொடங்கி குமரி வரை கடல், மலை, நதி, கோயில் போன்றவற்றை பார்ப்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் சுற்றி வந்துள்ளனர். - 

சுற்றுலா மூலமாகவே பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு தொழில்கள் வளர்ந்து வந்துள்ளன. 

 பல நாடுகளில் உணவு தொழில் செழித்து வளர சுற்றுலா துறையும் ஒரு காரணம் . 

   சுற்றுசூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என சுற்றுலா பல்வேறு வகைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது. 
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன.  

இதே செப்டம்பர் 27ம் தேதியை, சர்வதேச நீர் பகிர்வு தினமாகவும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது.




Sunday, June 15, 2014

தரணி புகழும் தந்தையர் தினம்..








தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு

பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
தந்தையும்  தாயும் கடவுளும் ஒன்று



அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என  தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்கி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என ராமபிரான் வாழ்ந்து காட்டிய தேசம் நம் நாடு

ஆயுள் வரை நெஞ்சில் சுமக்கும் தந்தை,  பாசத்தை வெளிக்காட்டத் தெரியாத, முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய் நினைக்க, நினைக்க நெஞ்சுக்குள் சந்தோஷமும், பெருமையும் தருபவர். வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை. 


தான் பட்ட கஷ்டம்', தன் பிள்ளையும் படக்கூடாது என்று வாயாற பேசி, மனமார உழைக்கும் அந்த அன்பு... "கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல', நம்மை அரவணைத்து காக்கும். தந்தையின் பெருமைகளை மனதால் உணரும் போதுதான், அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும்.

தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்க வேண்டும். தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது


"விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் 
அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். 

ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.
 வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். 

மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம். 

முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம்

ஒவ்வொருவரும் தங்களது தந்தைக்கு, நேரிலோ, போனிலோ 
வாழ்த்து தெரிவித்துக்கொள்ளும் உன்னத நாள்...

பாசத்துக்கு எப்போதும் அன்னை  உதாரணம். 
தந்தை ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். 
தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது.  
தந்தை தன் தலைக்கு மேல் குழந்தையைத்தூக்கி தன் தோள் மேல் அமரவைத்து - தான் பார்க்கும் உயரத்தை விட அதிக உயரம் தன் குழந்தை பார்க்குமாறு வசதி செய்துகொடுக்கிறார்..

தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும். 

மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்... தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? 

அப்பாவின் அன்பை, ஆசைகளை, அறிவுரைகளை ஆனந்தமாக வெளிப்படுத்தும் தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day). 

தந்தையின் அன்பு ,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தி. தந்தையை கௌரவிப்பதற்காக மட்டுமல்லாது தந்தை மீது அன்பு செலுத்தவும், தந்தையைப்  பேணிப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக  உலகம் முழுவதும் நன்றிப் பெருக்குடன் கொண்டாடப்படுகிறது   


ஆடைகள், வாழ்த்து அட்டைகள், மலர்கொத்துகள், நடைப் பயிற்சிக்குப்  பயன்படும் கம்புகள், இனிப்பு வகைகள் போன்றவற்றை  தந்தைக்கு வழங்கி வணங்கி ஆசிபெற்று . தற்போது தந்தையர் தினமும் குழந்தைகளால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது
தாய்-தந்தையைச் சுற்றி வந்த கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.

தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒருபக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிக்கவில்லை ..  ‘தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாகக் கூறியபோது, இறைவனே மனமயங்கினான்  என்றும் நாம் படிக்கிறோம்.

அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் 
எவருக்கும் எதிர்காலம் உண்டு.
தொடர்புடைய பதிவுகள்
 தந்தையர் தினம்..