Sunday, December 15, 2013

அருளும் ஆனந்த நடனம் - ஆருத்ரா தரிசனம்ஆனந்தக் கூத் தாடினான் தில்லையில் நடராஜன் 
கால் மாற்றி மாறி ஆடினான் வேகமாக சிற்சபையிலே 

அண்டம் அதிர கால் சலங்கைகள் குலுங்க ஆடினான் 
கங்கை துளி சிதற அடியார்கள் எல்லாம் கொண்டாட 

ஆடினான் தாண்டவம் வெகு நாகரிமாக வெள்ளி அம்பலத்திலே 
காணக் கண் கோடி வேண்டும் திரு நடனத்தைக் களி ப்புடன் நோக்க 

பரவசமாக கரைந்த்துருகி நெகிழ்ந்தது கணகள் துடிக்க 
கண்ட காட்சியை என் சொல்லி விளக்குவேனோ . 

"மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் திருவாதிரையாகவும் சிறப்பாக போற்றப்படும் திருநாளில்  சிவாலயங்களில் திருவாதிரை விழா நடைபெறுகிறது. 

 திருவாதிரை நன்னாளில் ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. 
சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. எனவே ""ஆதிரை நாள் உகந்தான்'' ""ஆதிரை நன்னாளான்'' என்று திருமுறைகள் போற்றுகின்றன.
தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி இறைவன் ஆடிய நடனம் ஆனந்த நடனம். 

பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி தாருகாவனத்தில் அன்று ஆடிய நடனத்தை தில்லையில் மீண்டும் ஆதிரை நன்னாளில் சிவபெருமான்
ஆடியநன்னாளில் நடைபெறும் தரிசனத்தை ""ஆருத்ரா தரிசனம்'' எனச் சிறப்பித்து அழைக்கிறோம். 
சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறும் "ஆருத்ரா தரிசன காட்சி'' மிகவும் சிறப்பானது. 
அன்று இறைவனுக்கு படைக்கப்படும் "திருவாதிரை களியும்' சுவையானது.
சென்னை-திருத்தணி செல்லும் பாதைக்கு அருகே திருவாலங்காடு அமைந்துள்ளது. அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். வடாரண்யம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் உவந்து ஆடிய அம்பலம் இது. உலகம் உய்ய இறைவன் இங்கு ஆடிய ""ஊர்த்துவ தாண்டவமே'' முதன்மையான தாண்டவம்.
இறைவனின் ஐந்து செயல்களில் "அருளல்' என்னும் செயலை இந்தத் தாண்டவம் குறிக்கிறது. 
காளியின் செருக்கைப் போக்குவதற்காக ஆடிய திருநடனம் இது. 
மிக வேகமாக சுழன்று ஆடியதால் "சண்ட தாண்டவம்' என்றும், "அணுக்கிரக தாண்டவம்" என்றும் அழைக்கப்படுகின்றன. 

""ஆடினார் காளி காண ஆலங்காட்டடிகளாரே'' என நாவுக்கரசர் பெருமான் போற்றுகின்றார். 

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் போற்றப்பட்ட சிறப்பு மிகு தலம் இது. 
ஊர்த்துவதாண்டவத்தை பெருங்கூத்து எனவும் செய்கரிய நடனம் என்றும் போற்றுகின்றனர்.

காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு ஆடவல்லான் பெருமானிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இறைவன் ஆடும் கூத்தின் சிறப்பினை அம்மையாரின் திருப்பதிகங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. திருமூலர் பெருமானும் ஊர்த்துவதாண்டவத்தின் பெருமையை அழகாக விளக்குகிறார்.

திருவாலங்காடு திருக்கோயிலில் வழிபடப்பெறும் ஊர்த்துவதாண்டவ மூர்த்திக்கு மார்கழி திருவாதிரை நாளில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
 அன்று கோபுர தரிசனமும், பழையனூர் சென்று வந்து நடராஜப் பெருமான் காட்சி அளிக்கும் தரிசன நிகழ்ச்சியும் சிறப்பாகும்..!

மார்கழி மாதத்தில் திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான 
நடராஜப் பெருமான் வழிபாட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் கிடைக்கும் ..

44 comments:

 1. Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   இனிய காலை வணக்கங்கள்..!

   Delete
 2. இந்த 2013ம்
  ஆண்டின்
  வெற்றிகரமான
  3 5 0 ஆவது
  பதிவுக்குப்
  பாராட்டுக்கள்,
  வாழ்த்துகள். ;)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   பாராட்டுகளுக்கும் , வாழ்த்துரைகளுக்கும்
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 3. நாளைய பதிவான
  1125க்கும் அட்வான்ஸ்
  நல்வாழ்த்துகள். ;))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   நல்வாழ்த்துகளுக்கும்
   நலமான இனிய நன்றிகள்..!

   Delete

 4. பொறுமையாக
  மீண்டும் ....
  பிறகும்
  வருவேனாக்கும் !

  ஹுக்க்க்க்கும் !! ;)

  >>>>>

  ReplyDelete
 5. ஆருத்ரா தரிசணம் கண்டேன் நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   அருமையான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 6. சென்னையில் இருந்தாலும் அருகில் உள்ள திருவாலங்காடு ஆலயத்திற்கு சென்றதில்லை. ஒரு முற போக வேண்டும். ஆனந்தக் கூத்தாடும் படங்களும் ஆருத்ரா தரிசன சிறப்பும் பதிவு செய்த விதமும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   சிறப்பான அருமையான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 7. காலை எழுந்த உடன் முதல் தரிசனம்... மனதிற்கு இனிய ஆடல் வல்லானின் ஆருத்ரா தரிசன காட்சி.. மிக்க மகிழ்ச்சி. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 8. கடைசியில் காட்டியுள்ள நடராஜர் சிலை:

  பழையனூர் சென்று வந்தாலும், அது நல்ல தீர்க்கமாக பளிச்சுன்னு உள்ளது ..... ஷோரூமிலிருந்து நேராக எடுத்து வந்த தங்கள் வீட்டு புத்தம்புது BMW கார் போல ;)

  >>>>>

  ReplyDelete
 9. அத்தனைப்படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல இந்த ஆண்டும் சூப்பரான துவக்கமே ! ;)

  இப்போதே எனக்குக் குளிர ஆரம்பித்து விட்டது. ;)

  >>>>>

  ReplyDelete
 10. மார்கழி பிறக்கும் பின்னே !
  [நாளை]
  பதிவுகள் பிறக்கும் முன்னே !!
  [இன்றே]

  திருவாதரை களிபோல இனிக்க ஆரம்பித்து விட்டது இப்போதே !!!

  ”களிப்பூட்டும் களி !” [எங்கேயோ கேட்ட ஞாபகம் வருகிறதா?]

  >>>>>

  ReplyDelete
 11. ”அருளும்
  ஆனந்த
  நடனம் -
  ஆருத்ரா
  தரிஸனம்”

  இந்த ஆட்டம் [நடனம்] மேலும் 10 நாட்களுக்குக் குறையாது என நினைக்கிறேன். ;) சந்தோஷம். ;))

  ஆடட்டும் ...... ஆடட்டும் ...... ஆனந்த நடனம் ஆடட்டும் !

  ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ! ;)

  வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   ஆனந்தமான கருத்துரைகளுக்கும்
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 12. நானும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்களிடம் களி கேட்டு அலுத்து விட்டேன்.

  படத்தில் மட்டுமே காட்டிடுவீர்கள். ;(

  நேரில் வரவழைத்து களிகொடுத்து களிப்பேற்றினால் என்னவாம்? ;)

  தீபாவளிக்கே அழைக்கவில்லை. ;(((((

  திருவாதரைக்குத்தான் அழைக்கப்போகிறீர்களா என்ன?

  என்னவோ போங்க !

  நாளும் பொழுதும் தான் ஓடிக்கொண்டே இருக்குது.

  ooo ooo ooo

  ReplyDelete
 13. இன்றைய [15.12.2013] வலைச்சர அறிமுகத்திற்கு என் வாழ்த்துகள். ;)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   தகவலுக்கும் அருமையான கருத்துரைகளுக்கும்
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 14. தில்லை அமபலத்தாரின்
  ஆனந்த நடனம் கண்டு
  உள்ளம் பூரித்தது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   பூரிப்பான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 15. அற்புதமான படங்கள்+தகவல்கள்... நன்றி அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. அவன்
  ஆடினான்
  ஆனந்தமாக ஆடினான்
  நடனம் ஆடினான்.

  நானும் அவனுடன்
  பாடினேன் பாடினேன்

  அவன் கால்கள் கடுக்காது ஆடினான்.
  நானோ வாய் என் வாய் ஓயும்வரை
  அவன் புகழ்
  பாடினேன்.

  உங்கள் கானத்தை பாடி பாடி
  இன்புற்றேன்.

  நன்றி.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   இனிய பாடல் பகிர்வுகளுக்கும் ,
   அருமையான கருத்துரைகளுக்கும்
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 17. திருவாதிரைக் களியை நினைவு படுத்தி விட்டீர்கள். 'ஆனந்த நடனம் ஆடினார்' பாடலையும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   ஆனந்தமான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 18. பதிவும் படங்களும் வழக்கம்போலவே அழகு, மார்கழி என்றாலே மனதில் வரும் உவகைக்கு திருவாதிரையும் ஒரு காரணம் தானே.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   உவகையான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 19. ஆருத்ரா தரிசனம் பற்றிய சிறப்பான பதிவு..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   சிறப்பான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 20. ஆஹா காலையிலேயே சிறப்பு தரிசனம்...நன்றிம்மா!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   சிறப்பான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 21. படங்கள் எல்லாம் அழகு!.. திருவாதிரை தரிசனம் அருமை!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   அழகான , அருமையான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 22. வணக்கம் அம்மா.
  ஆருத்ரா தரிசனம் பற்றிய தகவல்களையும் தில்லைக்கூத்தன் ஆடிய நடனங்களை விளக்கியதோடு மட்டுமல்லாமல் காண காட்சியாய் தந்த விதமும் மிகவும் அழகானது. உள்ளம் உவகை கொள்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க அம்மா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   அழகான இனிய கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 23. திருவாதிரை தரிசனம் இன்றே கிடைத்தது மகிழ்ச்சி .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

   மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 24. சிறப்பானதொரு பகிர்வு!

  ReplyDelete
 25. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

  சிறப்பான கருத்துரைகளுக்கு
  மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

  ReplyDelete
 26. வணக்கம் ..வாழ்க வளமுடன்..!

  தகவலுக்கும் அற்புதமான கருத்துரைகளுக்கும்
  மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

  ReplyDelete
 27. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி படிக்கும்போது, திருவாலங்காடு என்று வரு, ஆனால் அது பற்றி அதிகம் தெரியாது. இன்று தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  ReplyDelete