Sunday, December 22, 2013

அசைந்தாடும் அழகு மயில் ..http://upload.wikimedia.org/wikipedia/commons/4/4b/Peacock_Mating_Call.ogg
மயில் அகவல் கேட்கலாம்..!


மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் இன்னும் தெளியல ...
 


 ///  G.M Balasubramaniam said...
@ இராஜராஜேஸ்வரி
முதல் வருகைக்கு நன்றி . கவிதை, கவிதை தாருங்கள் மேடம்  .,,,//

என்ற ஐயாவின் கருத்துரைக்காக .....!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி ........!1
அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட
மதி வதனமாட மயக்கும் விழியாட
மலரணி களாட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என
மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - 
கிளி கொஞ்சிப் பேச, கருங்குயில் இசை விருந்து நல்க, வண்டுகள் நீண்ட ரீங்காரம் செய்து பாடச் சோலையில் அடியெடுத்து ஊன்றி உடல் புளகித்து ஆடும் ம்யில் நடனத்தால்  தென்றல் உலவும் சோலையே  சிலிர்க்கிறது.

மயில் தோகை புனையாச் சித்திர ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் ..

மயிலின் மனமகிழ்ச்சி - உள்ளக் களிப்பு என்னும் ஒளிக்கற்றையே 
அதன் உச்சியில் கொண்டையாய் அமைந்ததோ என்னவோ என வியக்கவைக்கும்.. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறதோ..!
ஆயிரம் ஆயிரம் பொற்காசுகள்! ஆயிரம் ஆயிரம் அழகிய பிறைநிலவுகள்! பச்சை மரகதக் கற்களை உருக்கி வார்த்த வண்ணத் தடாகம் மயில்உடல்! ஆடலே அதன் உயிர்! கறையொன் றில்லாக் கலாப மயில் எனவே தான் அதற்கு  நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள் இயற்கை அன்னை ..!

உன் கனக அழகில் தன்னைத் தொலைத்தான் கம்பன்
உன் தோகை விரிப்பில் தன் மீசை வழுக்கினான் பாரதி
உன் கொண்டை ஆட்டலில் கொள்ளை போனான் கவியரசு
மழை மேகம் கண்டு தோகை விரிக்கும் ஆண் மயிலே 
உன் நடனத்தால் சிலிர்க்கிறது தென்றல் உலவும் சோலையே. 

அள்ளித் தெளித்த ஆயிரம் பொற்காசுகள் 
உன் பச்சை மரகத மேனி.
உருக்கி வார்த்த வண்ணத் தடாகம் 
ஓவியனின் தூரிகையின் பல வண்ணக் கலவை 
குறையில்லாது ஒளிறும்  பொன் பட்டுத் தோகை.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி 
மயில் எழில் முருகனின் அழகு வாகனம்
மயிற்பீலி  ஏற்றமிகு கண்ணனின் திருமுடியில் 
மகிழ்ந்திருக்கும் ..!இந்திரிய ஜெயம் பெற்றதை அறிவிக்கத்தான்..!

மயில் வாகனம்  ஞான சரஸ்வதிக்கு 
மயில் உருவில் கற்பகமாய் பார்வதி 
மனம் நிறைந்து மகிழ்வாயுறைந்து  வரம் தரவே..!

மயிலாசனம் -ஷாஜகானின் விலை மதிப்பற்ற பொக்கிஷம்..!
மர்மமாய்  பறந்து போனது எங்கே ? யாரறிவார்..!!?/

மயூரா சனம்  யோகக் கலையில் அற்புத ஆசனம் ..!
மாயூரம் ஆகுமா ஆயிரம் ஆனாலும் ..!!

மயிலேறும் பெருமான் சாஸ்தா  மணத்தடை நீக்குவார்
மயில் மழை  வருவதை  அறிந்து தோகை விரிக்கும்
மயிலே மயிலே என்றால் இறகு போடுமா  மயில்? போடாது...!
மயிலுக்கு தமிழ் தெரியாது ..எனக்கு கவிதை எழுத தெரியாது...!
தேசியப் பறவை மட்டும் அல்ல மயில் என்பது ஆற்றல், கம்பீரம்,  எழில் நடனத்தைக் கண்முன் கொண்டுவரும் . படையும் நடுங்கும் .பாம்பையும் வெல்லும்  வீரமும் தைரியமும் கூட மயிலின் தனிச்சிறப்பாகும் ..!

விஷஜந்துக்களை அடக்கி அவற்றின் விஷத்தைத் தன் தோகையின் வண்ணமாக்கிக்கொள்ளுவதாக  நம்பிக்கை உண்டு..!

"பிரதோஷ் காலத்தில் சிவபெருமானுக்கு 'பிஞ்சகன்' என்று பெயர். பிஞ்சகன் என்றால் மயில் தோகையுடன் ஆடுபவன் என்று பொருள். 

சிவன் மயில்த்தோகையுடன் ஆடும் அந்த 
தாண்டவத்திற்க்குத்தான் பிரதோஷ தாண்டவம் என்று பெயர். 

மயில் தோகையில் விசிறும்போது உண்டாகும் 
காற்றுக்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு. 
எனவேதான் சிவன் மயில் தோகையுடன் 
பிரதோஷ தாண்டவம் ஆடுகிறார்.

மயிலாசனம் என்பது ராஜகம்பீரத்தின் அடையாளம்

மயில் தெய்வவடிவாக திகழ்கிறது. 

மயிலின் ஆட்டத்தை கர்வத்தின் பிரதிபலிப்பாகக் கருதுகிறார்கள். 

மயிலின் தோற்றம் பொலிவாக இருந்தாலும் அதன் கால்களும், குரலும் நளினத்தைப்பிரதிபலிக்கவில்லை. 

இதனாலோ என்னவோ ஐரோப்பியர்கள் மயிலின் குரலையும் 
அதன் இறகையும் தீயசகுனமாகக் கருதுகின்றனர். 
சைனாவிலும் ஜப்பானிலும் மயிலை, கருணை தெய்வமாகக் கருதுகிறார்கள். 
குன்றுதோராடும் மயிலை, குன்றக் குமரனாகிய முருகன் தனது வாகனமாக்கிக்கொண்டது பக்தி இலக்கியம் காட்டும் புது அறிவியல். 

அதிக வேகத்துடன் அதிக உயரத்தில் பறக்கவியலாத பறவை மயில். 

தந்தையிடமிருந்து மாங்கனிபெறும் போட்டியில் மயில்மீது ஏறி உலகைவலம் வந்து, பரிசை வேண்டுமென்றே தவறவிட்டு, திருவிளையாடல் புரிந்த முருகன் காட்டும் சகோதர வாஞ்சை வியக்கவைக்கிறது.
கண்ணனின் சக்தியே "ராதை' ..!. அவளைத் தலை மீது வைத்துத் தான் கொண்டாடுவதையே மயில் பீலி மூலமாக அறிவிக்கின்றான் மாதவன்.
தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் 
கொண்டவளாகப் போற்றுகின்றனர்.
வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. 
அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர்.  
அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. 
அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப்புடவை, 

கலைமகள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் 
இதையே உணர்த்துகின்றன.

சூரிய சின்னங்களில், மயில் என்பது ஆன்மாவைக்குறிக்கிறது. ஆன்மா எனும் ஆற்றல் அழியாத தன்மை உடையதாகவும் பலஜென்மங்களை எடுக்கும் தன்மை உடையதாகவும் இருக்கும் தன்மையை மயில் குறிப்பதாக நம்பிக்கை உண்டு..!
மயில் போல பொண்ணு ஒன்னு !


மயில் தோகையில் அமைந்திருக்கும் கண் போன்ற அமைப்பு அழகிற்கு மட்டுமே...பார்க்கும் திறன் கிடையாது..
மயிலுக்கு கூர்மையான பார்வைத்திறன் உண்டு ..


25 comments:

 1. படங்களும் பகிர்வும் பிரமாதம்... கண்களுக்கு விருந்தாக அமைந்தது...

  ReplyDelete
 2. மயிலைப் பற்றிய வண்ண தொகுப்பு. தமிழக மக்களை மனங்கவர்ந்த பாராதிராஜாவின் பதினாறு வயதிலே மயிலுவை விட்டு விட்டீர்களே!

  ReplyDelete
 3. மயில் கவிதை கேட்டார் ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார்.
  அதற்கு மயில் பாடல்கள், கவிதைகள, மயில் வரலாறுய் படைத்து விட்டீர்கள்.
  படங்கள் மிக அழகு.
  வாழ்த்துக்கள்.
  மயில் போல் பதிவு அழகு.

  ReplyDelete
 4. மயிலை பற்றி எவ்வளவு விடயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அனைத்தும் அறிந்திராதவை.
  படங்களும் பதிவும் அபாரம் நன்றாக ரசித்தேன்.

  நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

  ReplyDelete
 5. மயில் போலவே உங்கள் பகிர்வும் மிக அருமை.
  அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
 6. தோகை விரித்தாடும் மயில்கள் அழகோ அழகு...

  ReplyDelete
 7. மயில் கழுத்து கலர் என்பதெல்லாம் போக, வெள்ளை மயிலின் கொள்ளை அழகு கண்டு வியந்தேன்!! நன்றி

  ReplyDelete
 8. மீண்டும் பரவசப்படுத்தும் பகிர்வு அம்மா... நன்றி...

  ReplyDelete
 9. மயிலோட லேண்டிங் அழகு.

  நீண்ட தோகையைப் பார்க்கும்போது சவுரி முடியை இழுத்துச் சோதித்துப் பார்ப்பார்களே, அதுமாதிரி இழுத்துச் சோதிக்கலாமா என்று தோன்றுகிறது!

  மயில்மயப் பதிவு!

  ReplyDelete
 10. மேடம் என்னை சோதிக்கிறீர்களா? என் கருத்துரைக்காக என்று எதனை எடுத்துக் கொள்வது. மயில் பற்றின கவிதை ஒன்று உங்களது கேட்டேன். ஆனால் மயில் பற்றித் தெரிந்ததும் தெரியாததுமான விளக்கங்களும் பாட்டுக்களும் இணைத் துள்ளீர்கள். அசத்தி விட்டீர்கள் அலசிவிட்டீர்கள். நன்றி. .

  ReplyDelete
 11. ’அசைந்தாடும் அழகு மயில்’ மனதை மயக்கி வசீகரித்தது.

  >>>>>

  ReplyDelete
 12. அது சரி, மயிலைப்பற்றி இப்படி மைல் கணக்காகவா
  எழுதித்தள்ளுவது ? !!!!!!

  படங்களைப் பார்க்கப்பார்க்க அசந்து போனேன்.

  தகவல்களைப் படிக்கப்படிக்கக் களைத்துப்போனேன்.

  உங்களை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாகவும், மற்றொரு பக்கம் பொறாமையாகவும் உள்ளது. ;)

  >>>>>

  ReplyDelete

 13. //மயிலே மயிலே என்றால்
  இறகு போடுமா மயில் ? போடாது.

  மயிலுக்குத் தமிழ் தெரியாது ..
  எனக்குக் கவிதை எழுதத்தெரியாது...!//

  எந்த மடையன் இவ்வாறு சொன்னான்?

  எவனெவனோ கவிதை என்ற பெயரில்
  இன்று வாந்தியெடுத்து எழுதி வருகிறான் .

  முதலில் வாந்தி பேதியாகவே இருந்தாலும்
  பிறகு என்றாவது ஒருநாள் ஆரோக்யமான
  அழகான கவிதையைத் துப்பமாட்டானா என
  நினைத்து நாமும் விதியை நொந்து பின்னூட்டமிட்டு
  உற்சாகம் தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.

  வலையுலகம் இன்று இப்படியிருக்கும்போது, சகலகலாவல்லியான தாங்கள் தன்னடக்கம் காரணமாக, தங்களைத் தாழ்த்திக்கொண்டு எழுதியுள்ளதை, என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ;(

  >>>>>

  ReplyDelete

 14. தோகையைச் சிலிர்த்துக்கொண்டு ஆடும் வெள்ளை வெளேர் மயில் ஒன்றினை நேற்று G+ இல் பார்த்து வியந்தோம். இன்று தங்கள் பதிவினிலும் ஆங்காங்கே காட்டியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

  இருப்பினும் பல்வேறு கலர்கள் கொண்ட மயில் தானே மிக அழகாக உள்ளது ! அதுவும் அந்த மயில் கழுத்து .... அடடா ! இறைவன் படைப்பினில் அது எவ்வளவு ஒரு அதிசயம் + ஆச்சர்யம் !!!!!

  >>>>>

  ReplyDelete
 15. எதைப்பற்றி, எந்தவொரு பதிவாகினும் அதை தெய்வங்களோடு சம்பந்தப்படுத்திக் கூறிடும் தங்களின் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது.

  முருகன், சிவன், பிரதோஷம், கலைமகள், கண்ணனின் ராதை என எங்கெல்லாம் நுழைக்க முடியுமோ அங்கெல்லாம் நுழைத்துள்ளது தனிச்சிறப்பு தான்.

  >>>>>

  ReplyDelete
 16. அழிவற்ற ஆன்மாவைக்குறிப்பது மயில். மயில் பார்வையில் கூர்மை. விஷமுறிவுக்குச் சிறந்தது, கர்வமுடையது. அதன் கால்களும் குரலும் வெறுப்பளிப்பவை என ஒன்றுவிடாமல், மயில் தோகை போல எண்ணற்ற விஷயங்களை அள்ளித்தெளித்துள்ளீர்கள். சபாஷ்!

  >>>>>

  ReplyDelete
 17. வழக்கம்போல படங்கள் அத்தனையும் அழகோ அழகு தாங்க.

  மேலிருந்து கீழ் 8வது வரிசைப்படம் [ஒரு பெண் மயில் தோகையையே புடவைபோல அணிந்திருக்கும் படம்] என்னை மிகவும் கவர்ந்தது.

  அனைத்துக்கும் பாராட்டுக்கள், அன்பான நல்வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள். வாழ்க !

  o o o o o o o

  ReplyDelete
 18. மன விழிகளை வியக்க வைக்கும் அற்புதமான படைப்பு ...!!!!!
  மயிலைப் பற்றி எத்தனை எத்தனை தகவல்கள் !! உங்களின் இந்த
  ஆக்கத்திற்குத் தலை வணங்கி நிற்கின்றேன் தோழி .வாழ்த்துக்கள்
  வண்ண மயிலின் தோகை விரித்தாட வந்த சுகம் அத்தனையும்
  தங்கிட வேண்டும் தங்கள் வாழ்வினிலும் .மிக்க நன்றி தோழி
  பகிர்வுக்கு .

  ReplyDelete
 19. வண்ண வண்ண மயில்களின் மிக அருமை. படங்கள் அனைத்தும் பார்க்க பரவசமூட்டுகின்றன

  ReplyDelete
 20. மனதை கொள்ளை கொள்ளும் மயில் படங்கள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 21. மயிலைப் பற்றி அரிய தகவல்கள் அத்தனையும் வாரி வழங்கிய
  பதிவு. அழகான படங்களுடன் சிறப்பாக இருக்கின்றது.

  ReplyDelete
 22. அருமை,நெஞ்சை அள்ளும் படங்கள்.

  ReplyDelete
 23. முருகனும் கணபதியும் மயில் மீது ஆரோகணித்து செல்லும் படம் அருமை,,,,

  மயில் படங்கள் அனைத்தும் மனம் கவர்ந்தன..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 24. மயிற் பதிவு அருமை.
  இனிய நன்றி.
  வேதா. இலங்காதிவகம்.

  ReplyDelete