Monday, December 23, 2013

வசீகர சிவ வடிவங்கள்..!விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
ஜ்ஞாநப்ரதாய கருணாம்ருத ஸாகராய/
கற்பூர குந்த தவலாய ஜடாதராய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

லோகோத்தராய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜதாநவ மர்தநாய/
கௌரீ ப்ரியாய சசிபால கலாதராய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

பாநுப்ரியாய பவஸாகர நாசநாய
காமாந்தகாய கமலாப்ரிய பூஜிதாய/
நேத்ரத்ரயாய சுபலக்ஷண ஸம்ஸ்திதாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

பக்தப்ரியாய பவரோக பயாவஹாய
திவ்யாத்ரி திவ்யபவநாய குணார்ணவாய/
தேஜோமயாய நிகிலாகம ஸம்ஸ்துதாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

சர்மாம்பராய சவபஸ்ம விலேபநாய
பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய/
மஞ்ஜீரபாத யுகலாய வ்ருஷத்வஜாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஸ்வர்காபவர்க பலதாய மகேஸ்வராய/
ஹேமாம்சுகாய புவநத்ரய வந்திதாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

முக்தாய யக்ஞபலதாய கணேஸ்வராய
கீதப்ரியாய வ்ருஷபேஸ்வர வாஹநாய/
மாதங்க சர்மவஸநாய மஹேஸ்வராய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
புண்யாய புண்யசரிதாய ஸுரேஸ்வராய/
நந்திப்ரியாய நகராஜ ஸுதாப்ரியாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//

பக்த்யாச துக்க தஹநாஷ்டக மீஸ்வரஸ்ய
ஸங்கீர்தயேத் புரத ரவ பிநாகபாணே/
யஸ்தஸ்ய ஸைலஸீதயா பரிரப்த தேஹோ
ருத்ரோ ததாத்யம்ருத மிஷ்ட மநந்தலக்ஷம்//

இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும் பெறுவதற்கும்,தீவினைகளை அகற்றி சகல நன்மைகளையும் அளிக்க வல்ல சிவபெருமானை ஸ்ரீசிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகத்தால் தினமும் வழிபட்டால் செல்வ வளம் சேரும்.

சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என 
ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். 
மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழந்து அந்த பஞ்ச வடிவ குண மூர்த்திகளை ரசிப்போம்.

ஆனந்த மூர்த்தி -
ஆனந்தம். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் உரியது. 
சிவன் தன்னுடைய ஆனந்தத்தினை வெளிபடுத்த நடனமாடும் 
வடிவம் நடராஜர். 

எல்லையில்லா பெருமைகளை உடைய நடராஜ வடிவத்தில், 
சிவ ஆனந்தத்தையும், சிவ தத்துவத்தையும் ஒரு சேர உணர முடியும்.
Photobucket
காலமூர்த்தி -
மக்களைக் காக்கும் பொறுப்பை நிறைவேற்ற ஈசன் எடுத்த வடிவமே 
கால பைரவர். அழகிய கோலத்துடன் காவலுக்கான மிருகம் 
நாயை வாகனமாகக் கொண்ட அற்புதக் கோலம். 
முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்று வாழ்த்தி வணங்குகிறோம்..!

வசீகர மூர்த்தி -
பிச்சாண்டவர் கோலம் வசீகரத்தின் சிகரம். 
தருகாவனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவம் அடக்க, 
அழகே உருவாய் முனி பத்தினிகளை  பித்து பிடிக்க வைத்த வடிவம். பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி,  பிச்சை தேவன் 
என்றெல்லாம் அழைக்கப்படும் வடிவம் வசீகர மூர்த்தி -


கருணா மூர்த்தி -
உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் 
காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி. 

இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், 
பாசமிக்க தந்தையாய் இருக்கும் உருவம். 

குடும்ப உறவுகளின் மேன்மையை உலகிற்கு 
உணர்த்துவதற்கான ஈசன் எடுத்த வடிவம்.

சாந்த மூர்த்தி -
தட்சணாமூர்த்தி வடிவத்தை குரு என்று வணங்குகிறோம்..
தென் திசையை நோக்கி ஞான வடிவினில் ஆலமரத்தின் 
கீழ் அமர்ந்திருப்பது  தட்சிணாமூர்த்தி  வடிவின் சிறப்பு. 
முனிவர்களுக்கும், மக்களுக்கும் ஞான அறிவை 
போதிக்கும் ஞானாசிரியராக சிவபெருமான் திகழ்கிறார்..!22 comments:

 1. ஆஹா அழகான திருவுருவ படங்களுடன் தந்த விபரங்களும் அருமை, இதை நேற்றைய தினம் பார்த்திருந்தால் அருமையான கவிதை வடித்திருக்க கூடும். இருந்தாலும் பரவாயில்லை இன்னும் ஒன்று எழுதினால் போயிற்று.சிவனின் கவிதை நேற்று வெளியிட்டு விட்டேன். முடிந்தால் பாருங்கள்.

  சிவனின் திருவடிகளை சேவித்து இன்பம் பெறுவோமாக....!
  நன்றி....! வாழ்க வளமுடன்....!

  ReplyDelete
 2. சிவனுக்கு மீசை உண்டா?

  ReplyDelete
 3. சிறப்பான பகிர்வு... அழகிய படங்கள்...

  ReplyDelete
 4. உண்மையிலேயே வசீகரம்தான்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 5. அற்புதமான படங்கள் அம்மா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. பல வடிவங்க்களில் ஈசனை தரிசித்து
  மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கு மிக்க நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. சாந்த மூர்த்தியில் முருகனின் ஜாடை தெரிகிறதே....!

  ReplyDelete
 8. பலவடிவங்களில் சிவனை தரிசிக்கவைத்து சிவபெருமானின் அழகியபடங்களையும் தந்திருக்கிறீர்கள் இப்பதிவில் நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அழகிய படங்களுடன்
  காலையில் அருமையான சிவதரிசனம்..

  ReplyDelete
 10. ஈசனின் பல வடிவங்களின் விபரங்களைஅளித்து அழகிய படங்களையும் பாடல்களையும் வழங்கியதற்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வசீகரிக்கும் வண்ணம் சிவபெருமானின் வடிவங்கள் அருமை..!

  ReplyDelete
 12. நற் பதிவுடன்
  அழகுப் படங்கள் மகிழ்வு தந்தது.
  இனிய வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. arputhamana slokam.
  indru somavaaram allavaa.
  sivanin arul pera paaduvom intha slokaththai ippozhuthe.
  thank u Madam.
  subbu thatha.

  ReplyDelete
 14. 'வசீகர சிவ வடிவங்கள்' யாவும் பார்க்க மிகவும் வசீகரமாகவே உள்ளன.

  >>>>>

  ReplyDelete
 15. அனிமேஷன் படங்கள் யாவும் அதி அற்புதம். அதுவும் மேலிருந்து கீழ் இரண்டாவது படம் படு ஜோர் ! ;)

  அதிலுள்ள ஸ்வாமி அம்பாள் கண்களை ஐந்து நிமிடம் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தால் என் கண்களும் சுழலுகிறதே!

  >>>>>

  ReplyDelete
 16. ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரி ஸ்லோகமும் கொடுத்து அதை தினமும் சொல்வதனால் ஏற்படும் பலன்களையும் வெகு அழகாகக் கூறியுள்ளீர்கள். ;)

  >>>>>

  ReplyDelete
 17. ஆனந்த மூர்த்தி, காலமூர்த்தி, வசீகர மூர்த்தி, கருணா மூர்த்தி, சாந்த மூர்த்தி என வகைப்படுத்திப் படம் காட்டி, விளக்கம் அளித்துள்ளது சூப்பர்.

  >>>>>

  ReplyDelete
 18. இன்றைய தங்களின் பதிவினில் எல்லாமே நன்னா இருக்கு. சந்தோஷம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  oo oo oo

  ReplyDelete
 19. தலைப்புக்கேற்றபடி, ஒவ்வொரு படமும் வசீகரிக்கச் செய்கிறது. படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை.

  ReplyDelete
 20. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பழமை மாறாத, அந்த முதற்படத்திற்கு ( சிவன் – பார்வதி குடும்பம் ) இணையான படம் இதுவரை வந்ததில்லை. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 21. அருமையான படங்கள்......

  பல படங்கள் சிறப்பாக இருந்தன. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 22. சிவ வடிவங்கள் யாவையும் போற்றத் தக்கனவாக இருந்தன. சிவாய நம.

  அஷ்வின்ஜி
  www.frutarians.blogspot.in
  www.vedantavaibhavam.blogspot.in

  ReplyDelete