நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
--- மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்!
விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குறுநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார்.
ஒரு சமயம் தொற்றுநோய் விஷகிருமிகளால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர்.
இரக்க குணமும் இறைபற்றும் மிக்க சதாசிவராயர் இதனைகண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார்.
பின்னர் தமது ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர் அந்தணரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயமாக தன்வந்திரி முறையில் சந்திரபாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த ஆறு அங்குலம் உயரம் கொண்ட சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார்.
தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற பாஷாண லிங்கம் பக்தர்களுக்கு அருள்விருந்தை வழங்கி மருத்துவ குணங்கள் மிகுந்த அபிஷேக தீர்த்தம் அருமருந்தாய் விளங்கியது!!.
அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது!.
ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும்
திமிரி கோட்டையும் பிடிபட்டது - இடிபட்டது !.
இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்துவைதனர்
திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானபணி ஒரு காலகட்டத்தில் தடைபட்டு நின்றது..அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட “பாஷாண லிங்கம்” பற்றி செய்தி வந்தது!.
அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் (முற்பிறவி கன்னிகாபரமேஸ்வரர்) .பெருமுயற்சிகொண்டு குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடி. 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நம்பிக்கையுடன் தேடிய
திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்களுக்கு குளத்தில் சுமார்
600 ஆண்டுகளாக புதையுண்டுகிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது!.
திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்களுக்கு குளத்தில் சுமார்
600 ஆண்டுகளாக புதையுண்டுகிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது!.
தர்மகர்மா யோகத்தால் பூர்வ ஜென்ம பலனாக தன்னிடம் கிடைத்த அந்த அபூர்வ திமிரி பாஷாண லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார்..
அதிசயம்மிக்க திமிரி பாஷாண லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
பாஷாணலிங்க அபிஷேக தீர்த்த நீரும் ,
அபிஷேகத் தேனும் தீராப் பிணி தீர்க்கவல்லவை!
உத்திரவு வழங்கிடும் பெருமானாக சோமநாதப் பெருமானும்,
காலம் வழிவிட பைரவரும், பிணிதீர்த்திட சரபேஸ்வரரும்,
பிணி தீர்க்க மாமருந்தாய் பாஷாண லிங்க அபிஷேக நீரும் தேனும் ,
பிணி நீங்கி சுப மங்கள நல் வாழ்வு வாழ்ந்திட ஸ்ரீவரதராஜப் பெருமானும் அருகருகே குடிகொண்டு அருள்மிகு தரிசனம் தருகின்றனர்!
பிணி நீங்கி சுப மங்கள நல் வாழ்வு வாழ்ந்திட ஸ்ரீவரதராஜப் பெருமானும் அருகருகே குடிகொண்டு அருள்மிகு தரிசனம் தருகின்றனர்!
அன்னபூரணி
ஆகமவிதிப்படி அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருகோயில் இந்தியாவில் உள்ள சைவத் திருத்தலங்களில் சிறந்து விளங்குகிறது..!.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று எல்லாம் வல்ல
அருள்மிகுஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரருக்கு
அபிஷேக ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது
அகத்திய மாமுனிவர்
பழனி நவபாஷாண முருகன் - போகர்..
சோமநாத பாஷான லிங்கேசுவரர் அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வழித்தடம் உட்பட அருமையான தகவல்களுடன் சிறப்பான படங்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteதிமிரி - ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய விவரங்கள் பரவசப்படுத்தின. மகிழ்ச்சி..
ReplyDeleteபுதிய தகவல் கண்ணாடி லிங்க வடிவிலான குடுவை. சிறப்பாக கோவில் தகவல்கள்,அழகான படங்கள். வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDelete600 ஆண்டுகாலம் நீரில் புதையுண்டிருந்த பாஷ்ஹ்ண சிவலிங்கம் மீட்டெடுக்கப்பட்ட கதை சுவாரசிய்ம்
ReplyDeleteபுகைப்படங்களில் கூச புதுமை நன்றாக இருக்கிறது அம்மா.
ReplyDeletewww.Killergee.blogspot.com
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ReplyDelete’ஆ’ வில் ஆரம்பித்து
‘ர்’ இல் முடியும் மிக
நீண்ண்ண்ண்ண்ண்ண்ணட
தலைப்பூஊஊஊஊஊஊ !
அதில் ஏதோ பாஷாணம் வேறு !! ;)
>>>>>
சிவன் படங்கள் அத்தனையும் அழகு !
ReplyDeleteபார்த்து விட்டு சிவனேன்னு இருக்க முடியவில்லை.
தி மி ரி ச்செல்லவும் முடியாமல் தங்களின் வலையில் நான் சிக்கியுள்ளேன்.
[அன்பு வலையில் ...
பிரியமான வலைத்தளத்தில்]
அதனால் தாமதமாக பின்னூட்டமிட நேர்ந்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் எனக்கு பல்வேறு சோதனைகள் காத்திருக்கின்றன.
>>>>>
அன்னபூரணி படம் தனி அழகாகத் தந்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
மாணிக்க வாசகர் பாடலுடன் ஆரம்பித்துள்ள இந்தப் பதிவு அருமை. அற்புதம்.
ReplyDelete>>>>>
ஓலைச்சுவடி கதைகளைப் படிக்கவும், நாக்கைத்துருத்தியுள்ள நந்தியைப் பார்க்கவும் சுவாரஸ்யமாக உள்ளன.
ReplyDelete>>>>>
இந்தத்தங்களின் வெற்றிகரமான 1300வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ReplyDelete>>>>>
இன்னும் பேச நிறைய விஷயங்கள் உள்ளன. இப்போது எனக்கு நேரம் இல்லை. அவை தனியாக பிறகு நேரம் கிடைக்கும்போது வேறு வழியில் வருகை தந்து பேசலாம் என நினைக்கிறேன்.
ReplyDeleteவாழ்க !
;) 1 3 0 0 ;)
ooo o ooo
பாஷான லிங்கம் பற்றிய செய்தி வியக்கத்தக்க வகையில் இருந்தது, மனதில் நிற்கும் புகைப்படங்களுடன்.
ReplyDeleteபாஷான லிங்கங்கள் பற்றி இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் தான் படித்திருக்கிறேன். இப்போது உண்மையில் அம்மாதிரியான லிங்கம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா.
ReplyDeleteஆரணிக்கு அருகில் இருக்கிறதா..... வழித்தடங்களும் பகிர்ந்து கொண்டது நல்ல விஷயம்.
ReplyDeleteநல்ல விஷயம். தகவல்களுக்கு நன்றி.