Friday, June 6, 2014

சௌபாக்யம் அருளும் ஸ்ரீ சௌடேஸ்வரிஅம்மன்




பாலிலே அபிஷேகம் பழத்திலே அபிஷேகம்தேனிலே அபிஷேகம்  தேவர்களுக்குஎள்ளிலே அபிஷேகம் எண்ணாயிரம்  காணிக்கை -சௌடேஸ்வரிக்கு ஜெய மங்களம் நித்திய சுப மங்களம் 

சரஸ்வதிக்கும் பார்வதிக்கும் சம பூமி லட்சுமிக்கும் அனுதினமும்
துதி செய்ய அருள் ஜோதிக்கு மகாலட்சுமி வாரார்னு
மங்களம் பாடவே சௌடேஸ்வரிக்கு ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்
File:Chowdeshwari.JPG
File:Chowdeshwari Devi 6.JPG
பல ஆண்டுகளுக்கு முன்  கர்நாடகாவில் உள்ள ரெய்ச்சூர் மாவட்டத்தில் துங்கா நதிக்கரையில் அமைந்திருந்த நந்தவரா  தேசத்தின் அரசர்  
சக்தியை வழிபட்டு பல சித்துகளை அடைந்தவர்..

உபாசனா சக்தியின் வலிமையால் ஒவ்வொருநாளும்  அதிகாலை நான்குமணிக்கு பச்சைக்கிளியின் உருவம் எடுத்து காசிக்குச் சென்று கங்கையில் குளித்து பூஜைகள் செய்தபின் தன் நகரத்திற்குத் திரும்பும் மந்திர சக்தி பெற்றிருந்தார்..!





அரசரின் மனைவி ஒருநாள் கணவர் இல்லாததை கண்டுபிடித்து சந்தேகத்துடன் காரணம் கேட்க- அரசர் தன் மந்திர சக்தியின் மகிமையை மனைவிக்குக் கூற நேரிட்டது..!
அரசி தன்னையும் அழைத்துச்செல்லுமாறு கட்டாயப்படுத்த வேறுவழியின்றி மந்திரப்பிரயோகத்தால் ராணியையும் காசிக்கு அழைத்துச்சென்றார் அரசர்..!
காசியில் இருவரும் தங்கியிருந்தபோது அரசியால் அரசரது மந்திர சக்தியும் பாதிக்கப்பட்டு திரும்பவும் தன் நாட்டுக்குச்செல்லமுடியாத கவலையால் அமைதி இழந்து கங்கைக்கரை ஓரத்தில் அலைந்தார் மன்னர்..!
ஒரு பிராமணர் குழு சண்டி யாகம் நடத்திக்கொண்டிருக்கும் 
இடத்தை அடைந்தார்கள்.. 

 பிராமணர்கள் தங்கள் ஞான திருஷ்ட்டியால் மன்னனின் துன்பத்தை அறிந்து அதை நிவர்த்திக்க தாங்கள் யாகத்தில் பெற்ற சக்தியில் கால் பங்கை மன்னனுக்கு சூரிய பகவானை சாட்சியாகவைத்து - நீர்வார்த்து தத்தம் செய்து கொடுத்தார்கள்..!

அதற்குக் கைம்மாறாக  அந்த பிராமணர்கள் தன்னிடம் எந்தநேரத்தில் என்ன கேட்டாலும் கொடுப்பதாகவும் தன் ராஜ்ஜியத்தின் ஒருபகுதியை அளிப்பதாகவும்  சத்தியம் செய்து கொடுத்தார்..!

பிராமணர்களிடம் பெற்ற  மந்திரசக்தியின் மூலம் தன் நாடு திரும்பிய மன்னனுக்கு மீண்டும் அந்த சக்தியைப் பயன்மடுத்தும் மந்திரம் மறந்துபோய்விட்டது..!

பல ஆண்டுகளுக்குப் பின் காசி நகரத்தில் 
கடுமையான பஞ்சம் ஏற்பட்டது..!

அரசனின் நினைவு வந்த பிராமணர்கள் 
நந்தவரம் சென்று உதவி கோரினர்..

அரசன் அந்த நினைவை மற்ந்துவிட்டிருந்ததால் பிராமணர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அவமானப்படுத்தி அனுப்பிவைத்தார்..

மனம் வருந்திய அவர்கள் அன்னை சௌடேஸ்வரியை 
தியானித்து அரசனைத் தண்டிக்க சபித்தனர்.. 

மன்னர் தன் தேசத்தை இழந்து நோயுற்று நலிந்தார்..
தன் தவறை உணர்ந்து பிராமணர்கள் கோரிக்கைகளை
நிறைவேற்றி  ஆசி பெற்றான்..

சௌடேஸ்வரி அம்மனை தன் குலதெய்வமாக கொண்டாடினார் அரசர்..!
ஜஸ்வந்தராயர் என்னும் பாளையக்காரர் சௌடேஸ்வரி அன்னையை தான் படை நடத்திச்சென்று தன் ராஜ்ஜியத்தை விரிவடுத்த விரும்புவதால் தனக்குப்பாதுகாவலாக செல்லும் இடங்களுக்கெல்லாம் அன்னை உடன் வரவேண்டும் என்று வரம் கேட்டார்..
அவ்வாறு சென்ற போது மலைகள் சூழ்ந்த நதிகரையின் இயற்கை எழில் மிக்க இடத்தில் தான் கோவில் கொண்டு அருள்வதாக அன்னை தெரிவிக்க நந்தவர நதிக்கரையில் ஆகம விதிப்படி அன்னைக்கு அழகிய ஆலயம் பாளையக்காரர் அமைத்த இடமே தசாரிகாட்டா ..!
ஆலயத்தில்  பிரம்மாண்டமான் புற்று இருக்கிறது..

 அபூர்வமாக இந்த பிரதேசத்தில் எங்கும் காணப்படாத ஒற்றை காட்டுஈச்சை மரம் ஆலயத்தின் முன் பகுதியில் ஸ்தல விருட்சமாக்  ஆலயத்திற்கு அழகு சேர்க்கிறது..!

சௌடேஸ்வரி அன்னை தன் அருள்பார்வையின் மூலம் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றிவைத்து எளியாருக்கு எளியாராக தோளோடு தோள் நின்று தோன்றாத்துணையாக அனைத்து நல்ல என்ணங்களையும் ஈடேற்றிவைப்பதாக பக்தர்கள்..நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்..!

கர்நாடகா மாநிலத்தின் தசாரிகாட்டா  [Dasarighatta] என்னும் சிறிய கிராமத்தில்உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் . 
பொது மக்களுக்கு தங்களின் குடும்பத்தை பற்றிய கேள்விகளுக்கு அம்மன்அருளால் பதில்கள் அரிசி மாவு பரப்பப் பட்ட ஒரு பலகையில் எழுதி காண்பிக்கபடுகிறதாம்..!. 
எழுதக்கூடிய அம்மனின் சப்பரத்தை பிடித்து கொண்டிருக்கும் இருவருக்கும் எழுத படிக்க தெரியாதாம் ..!

வீடியோ பதிவுகள்..


கர்நாடகா மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள திப்தூர் என்ற ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தசாரிகட்டா என்ற கிராமம்.

திப்தூரிலிருந்து தாசரிகட்டா செல்வதற்கு பஸ் கிடையாது, 
கார் அல்லது ஆட்டோவில் மட்டுமே செல்ல முடியும்.

பெங்ளூரிலிருந்து பஸ் மூலம்  கோவிலை அடைய 
மூன்று மணி நேரம் ஆகிறது.

File:Chowdeshwari Temple Entrance1.JPG


Sowdeswari Amman Temple, dedicated to the Green Parrot God. 
Cubbon Park in central Bangalore

18 comments:

  1. வணக்கம்
    அம்மா
    சிறப்பான கதை சொல்லி பதிவை பகிர்ந்துள்ளீர்கள் படங்கள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வெள்ளி காலை. சௌடேஸ்வரி அம்மன் தரிசனம். இன்றைய காரியங்கள் அனைத்துக்கும் அம்மா துணை நிற்கட்டும். எழுதிக் காண்பிக்கப்படும் விவரம் ஆச்சர்யம் தருகிறது. இதற்காகவாவது ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்! அழகிய படங்கள்.

    ReplyDelete
  3. சௌடேஸ்வரி அம்மனின் சிறப்புகள் அனைத்தும் அருமை... எங்கள் வீட்டில் எதிரிலும் சௌடேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது... படங்கள் அற்புதம்... நன்றி அம்மா...

    ReplyDelete
  4. செளடேஸ்வரி அம்மனின் அற்புத தகவல்கள். எழுதிக்காண்பிக்கப்படும் குடும்ப பதில்கள் விபரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அழகான படங்கள். ஐறப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  5. மனதிற்கு மகிழ்வு தரும் தெய்வீகப் பகிர்விற்கு என் நன்றி கலந்த
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  6. செளபாக்யம் அருளும் ஸ்ரீ செளடேஸ்வரிக்கு அம்பாளுக்கு அடியேனின் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  7. வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிக அற்புதமான பதிவு.

    >>>>>

    ReplyDelete
  8. ஆரம்பத்திலேயே ‘ஜய மங்களம் நித்ய சுபமங்களம்' பாடல் இனிமை. பாலாக பழமாக தேனாக இனிக்கின்றது.

    >>>>>

    ReplyDelete
  9. உபாசனா சக்தி .... பச்சைக்கிளி உருவம் .... தான் பறந்து சென்றது .... பிறகு தன் மனைவியுடன் பறந்து சென்றது .... மனைவியோடு குஜாலாக இருந்ததால் மந்திர சக்தியை இழந்தது ..... என இங்கு தாங்கள் சொல்லியுள்ள கதைகள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. சாரிகாட்டாவுக்கே அழைத்துச்சென்று அசத்தி விட்டீர்கள்.

    அரிசிமாவுப் பலகையில் அம்மன் அருளால், கேட்கும் கேள்விகளுக்கு பதில் எழுதிக்காட்டுவது ஆச்சர்யமான தகவலாக உள்ளது.

    படத்திலே பார்க்கவும் அழகாக உள்ளது. தாங்கள் என்ன கேள்வி கேட்டீர்களோ .... என்ன பதில் கிடைத்ததோ ... அறிய மிகவும் ஆவலாக உள்ளதே ! அது தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போலச் செய்துவிட்டீர்களே !

    தலைவெடிக்காமலிருக்க தற்காலிகமாக தாங்கள் சொன்ன ‘கரூர் தேவாங்கர்’ மற்றும் வெறும் ’தேவாங்க’ பக்கமெல்லாம் சென்று வந்தேனாக்கும். ஹுக்க்க்க்கும் !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டங்களை தனியாக அடித்து வைத்துக்கொண்டு, பிறகு Copy + Paste போட்டு தங்கள் பின்னூட்டப்பெட்டிக்குக் கொண்டு வருவதால், முதல் வரி முதல் வார்த்தை முதல் எழுத்து காணாமல் போய் உள்ளது. ;)))))

      ’தசாரிகாட்டாவுக்கே அழைத்துச்சென்று அசத்தி விட்டீர்கள். ’ என அது இருக்க வேண்டும்.

      அது தவறுதலாக ‘சாரிகாட்டா’ என விழுந்துள்ளது. சாரி. SORRY !

      SAREE கட்டா[மல்], SAREE காட்டா[மல்] என ஏதாவது தவறாக அர்த்தம் கொள்வதாக அமைந்திடுமே என அலறிப்பிடித்துக் கொண்டு வந்து இந்த விளக்கம் அளித்துள்ளேன்.

      However I feel SORRY for this.

      vgk

      Delete
  11. செளடேஸ்வரி அம்பாளை தரிஸிக்க பெங்களூர் தும்கூர் பாதையில் எப்படிச்செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது, சென்றுவர விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    போகும்போதோ அல்லது திரும்ப வரும்போதோ தும்கூரில் இறங்கி ‘தும்கூர் புளி’ வாங்கி வந்தால் சுவையான சாம்பார் + ரஸம் வைக்கவும் புளியோதரை செய்யவும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

    கிளி கொஞ்சும் பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள். வாழ்க !

    ;) 1297 ;)

    ooo ooo

    ReplyDelete
  12. சௌடேஸ்வரி அம்மன் ஆலயத் தகவல்கள் பிரமிக்க வைத்தன. அழகான படங்களுடன் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. சௌடேஸ்வரி அம்பிகையின் அற்புதத்தினை அறிந்து மெய்மறந்தேன்.. நல்லதொரு செய்தியினை பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி..

    ReplyDelete
  14. பதிவுகள் படிக்கும்போது அம்புலிமாமா படிக்கும், எதையும் நம்பும் வயதாய் இருக்கக் கூடாதாஎன்று ஏக்கம் வருகிறதுபடங்களுடன் பதிவு ஜொலிக்கிறது.

    ReplyDelete
  15. அருமையானதோர் பதிவு. வழக்கம் போல படங்கள் அனைத்துமே அருமை.

    ReplyDelete
  16. சௌடேஸ்வரி அம்மன் ஆலயத் தகவல்கள் அருமை.

    எழுதப் படிக்கத் தெரியாத இருவர், அம்மனின் அருளால், அரிசிமாவில் பதில்களை எழுதுவது அம்மானிடம் உள்ள சக்தியை நமக்கு உணர்த்துகிறது

    ReplyDelete