Tuesday, July 1, 2014

பிரகாசமான வாழ்வருளும் ஸ்ரீசீதா ராம- கல்யாண வரதராஜப் பெருமாள்.
‘நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.


மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டார்.
பரிதி’ என்றால் சூரியன். சூரியன் சிவபெருமானை வழிபட்ட தலத்தை, பரிதியூர் என்று அழைத்தனர். அதுவே, தற்காலத்தில் பருத்தியூர் என்று வழங்கி வருகிறது. 

 ஒருமுறை கிரகண நாளில் சூரியனைப் பிடிக்க ராகு, தன் வாயைத் திறந்து கொண்டு சென்றான். தகித்துக் கொண்டிருந்த சூரியனின் கதிர்களைக் கண்டவுடன் ராகுவிற்குக் கடுங்கோபம் வந்தது.

பாம்பு உரு உடைய ராகு நச்சுக் காற்றை உமிழ்ந்தபடி சூரியனை நெருங்கி மறைக்கத் தொடங்கினான். 

அவனுடைய நச்சுக்காற்று சூரியனின் சுடர் முகத்தையே கருமையடையச் செய்துவிட்டது. 

ராகுவின் விஷக் காற்றால் தான் இழந்த சுடர் முகத்தை மீண்டும் பெற்றிட, சூரிய பகவான் இத்தலத்திற்கு வந்தான். 

குடமுருட்டி ஆற்றின் வடகரையில் சிவலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டு கடுந்தவமும் இயற்றினான். வில்வ மரத்தின் அடியில் தவமியற்றிய சூரியனின் முன்னால் ஈசன் அம்பிகையுடன் தோன்றிக் காட்சி கொடுத்தருளினார்.
அன்னை பார்வதி தேவி, மலர்ந்த முகத்துடன் தன் அருட்பார்வையை சூரியனின் மீது செலுத்தினாள்! ஈசனும் சூரியனை நோக்க! சூரியனின் முகத்திலிருந்த கருமை  நீங்கி  மலர்ந்த திருமுகம் பெற்றான்! 

சூரியனின் சுடர் முகத்தை மலரச் செய்ததால், அம்பிகைக்கு, ‘பிரசன்ன பார்வதி’ என்னும் திருப் பெயர் தோன்றியது! 

பிரசன்னம் என்றால் மலர்தல் என்று பொருள்.

 ராகுவின் விஷக்காற்றால் ஏற்பட்ட கொடுமையை அழித்ததால் இத்தலத்து ஈசனை, 'நஞ்சழித்த நாதன்' என்று போற்றினர். அப்பெயரே வடமொழியில், விஷஹரேஸ்வரன்.

‘‘உன்னுடைய பெயரால் இத்தலம் பரிதியூர் என்று வழங்கப்படும்’’ என்று சிவபெருமான் சூரியனிடம் கூறியருளினார். 

கிரகண வேளையில் சூரியனிடம் கடுமையாக நடந்து கொண்ட தன் செயலுக்காக வருந்தி ராகு, ஈசனிடம் மன்னிப்புக் கேட்டது. 

அத்துடன், ‘‘இத்திருத்தலத்தில் இனி, பாம்பின் விஷம் எவரையும் பாதிக்காது!’’ என்றும் உறுதி அளித்தது. 

இவ்வூரில் ஆங்காங்கே இருக்கும் பொந்துகளிலும், செங்கல் ஜல்லிக் குவியல்களிலும் நிறைய நல்ல பாம்புகள் வாழ்கின்றன. அவ்வப்பொழுது அவை வீடுகளில் உலாவுவதும், அடிப்பட்டு உயிர்விடுவதும் உண்டு.

ஆனால்,  இதுவரை எவரும் பாம்பு கடித்து இறந்தது கிடையாது. இது ஓர் அதிசயம்! 

இக்கோயில்கள் உள்ள வடக்குத் தெருவில், வடக்குப் பக்கத்தில் மட்டும் வீடுகள் உள்ளன. 

தெற்குப் பக்கத்தில் வைக்கோல் போர்களும், மாட்டுக்கொட்டகைகளும், விவசாய டிராக்டர்களும் காணப்படுகின்றன; 

ஒற்றைவாடையில் வீடுகள் இல்லாததன் காரணமே ஆதிவரதராஜப் பெருமாளின் தலவரலாறாக அமைந்துள்ளது! 

 சிறந்த விஷ்ணு பக்தனான மன்னன் அம்பரீஷன் திருமாலுக்கு உகந்த ஏகாதசி விரதத்தை தவறாமல் அனுஷ்டித்து வந்தார்..

ஓர் ஏகாதசி நாளில் துர்வாச முனிவர் அம்பரீஷனின் அரண்மனைக்கு வந்தார். 

அம்பரீஷன் அவரை மரியாதையுடன் வரவேற்றார். 

அன்று அரண்மனையில் தங்கி, அடுத்தநாள், அதாவது, துவாதசி நாளில் தன்னுடன் உணவு அருந்தும் படி வேண்டினார். 

அடுத்தநாள் துர்வாசர் நீராடி வரச்சென்றார். நதிக்கரையில் காலதாமதம் ஆகிவிட்டது. அப்போது, ஏகாதசி முடியப்போவதை உணர்ந்த அம்பரீஷன், துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்தி, தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

விருந்தினராகிய துர்வாசரை விடுத்து, தான் மட்டும் உணவு அருந்துதல் தகாது என்றாலும், தன் குலகுருவின் ஆலோசனைப்படி, துளசி தீர்த்தம் பருகி, உரிய நேரத்தில் விரதத்தை நிறைவு செய்தார். 

மன்னன் அவ்வாறு  செய்தது, தன்னை விடுத்து உணவு அருந்தியதற்குச் சமம் என்று துர்வாசர் கருதி கடுங்கோபம் கொண்ட துர்வாசர் ஒரு பூதத்தைப் படைத்து அம்பரீஷனைத் தாக்கச் செய்தார். 

அம்பரீஷன் தன் இஷ்ட தெய்வம் திருமாலைப் பணிந்தார். 

திருமால் அம்பரீஷனைக் காத்திட  சுதர்சனச் சக்கரத்தை ஏவினார். 

அது துர்வாசர் படைத்த பூதத்தை அழித்தது. 
பிறகு துர்வாசரையும் துரத்தியது!

அதனை எதிர்க்க இயலாத துர்வாசர் திருமாலிடம் சரண் அடைந்தார். 

திருமால், 'எம் பக்தன் அம்பரீஷன் உம்மை மன்னித்தால் மட்டுமே சக்கரம் எம்மிடம் திரும்பும்!' என்றார். 

துர்வாசர் மன்னனிடம் மன்னிப்புக் கேட்டார். 

சக்கரமும் பெருமாளிடம் திரும்பியது! 

பொதுவாக, திருமாலின் சுதர்சனச் சக்கரம் பக்கவாட்டில்தான் இருக்கும். ஆனால், பருத்தியூர் வரதராஜப் பெருமாள் கையில் உள்ள சக்கரம் குறுக்கு வாட்டில் ஏவிவிடும்  நிலையில் உள்ளது. 

பெருமாள் கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதாலேயே 
சக்கரம் இருக்கும் தெற்குப் புறத்தில் வீடுகள் இல்லை!

இந்தச் சக்கரத்தை, பெருமாளின் உத்தரீயத்தால் மூடியே வைத்திருக்கின்றனர். அவ்வப்பொழுது பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக   
விலக்கிக் காட்டுகின்றனர். 

பிரயோகச் சக்கரம் ஏந்திய இந்தப் பெருமாளை ஆதிவரதராஜர் என்று குறிப்பிடுகின்றனர். 

சாதாரண நிலையில் சக்கரத்தை ஏந்திய மற்றொரு பெருமாள் படிமமும் அருகில் உள்ளது. 

இவர், கல்யாண வரமளிக்கும் கல்யாண வரதராஜப் பெருமாள். இத்திருக்கோயில் ராமர் மிகவும் பிரபலமானவர். 

ஆண்டுதோறும் ஸ்ரீராம நவமி விழா பத்து நாட்களுக்குச் 
சிறப்பாக நடைபெறுகிறது.
கோயிலில் கொலுவிருக்கும்  ஆதிவரதராஜர், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோரின் படிமங்களை, சோழச் சக்கரவர்த்தி அளித்திருக்கிறார். 
இதனால் இப்படிமங்கள் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானவை என்கிறார்கள். 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் 
பருத்தியூர் ராமாயணம் கிருஷ்ண சாஸ்திரிகள். 

ராமாயண சொற்பொழிவின் வழியே ஈட்டிய பெருஞ் செல்வத்தை அவர், பருத்தியூர் பெருமாள் கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார்.

2003ம் ஆண்டு கிராமவாசிகள் இத்திருக்கோயில் திருப்பணிகளைச் செய்து குடமுழுக்கும் செய்வித்தனர். 
திருக்கோயிலில் புதிய கொடிமரம் நிறுவப்பட்டதன் தொடர்ச்சியாக, ஆண்டு தோறும் வரதராஜப் பெருமாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. 

ராமர் சந்நதிக்கு நேர் எதிரே கோதண்டராமர் சேவா அறக்கட்டளையினர் நிரந்தரமான கான்க்ரீட் மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளனர். 
நிறைவு நாளன்று விஸ்வ கல்யாண மஹால் என்ற புதிய மண்டபத்தில் ஸ்ரீசீதா-ராம கல்யாண விழா நடைபெறும். 
கோயிலின் வலப்புறத்தில் உள்ள   'அம்பரீஷ தீர்த்தம்' எனப்படும். குளத்தின் தென்கிழக்கு மூலையில்  தலவிநாயகராகிய  'வரசித்தி விநாயகர்' தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். 

அவருக்கு உரிய உற்சவம் நடத்திய பிறகே ஸ்ரீராமநவமி விழா தொடங்குகிறது. ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து (எண்.39) பருத்தியூர் வழியாகச் செல்கிறது. நன்னிலம், திருவாரூர், குடவாசல், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன33 comments:

 1. பரிதியூர் > பருத்தியூராக மாறிய தலபிராணம் படித்தேன். பெருமாளின் பல வண்ணக் கோலங்களும் கண்டேன். நன்றி!

  ReplyDelete
 2. கல்யாண வரதராச பெருமாள் அறிந்தேன்
  உணர்ந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. எம்பெருமானின் புகழ்பரப்பும் பக்திமிகு பதிவு! இறைவனின் ஆசியுடன் தொடரட்டும் பரவசமூட்டும் பக்திப்படையல்கள்!
  அன்னையின் அருளாசியுடன் நீடு வாழ்க! வளர்க!!

  ReplyDelete
 4. இக்கோயிலைப் பற்றி தற்போதுதான் அறிந்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 5. இக்கோயிலைப் பற்றி தற்போதுதான் அறிந்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 6. அழகிய படங்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

  ReplyDelete
 7. அழகிய படங்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

  ReplyDelete
 8. அழகிய படங்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

  ReplyDelete
 9. பருத்தியூர் ராமர்கோவில் வரலாறு பிரமிக்க வைக்கிறது. முதல் இரண்டு அழகான படங்கள். சிறப்பான தகவல்கள் நல்பகிர்வு.நன்றி.

  ReplyDelete
 10. கதை, அழகான படங்கள் ,,பருத்தியூர் ராமர் பற்றிய திரு , வேள்குடி அவர்களின் சொற்பொழிவு எல்லாம் மிக அருமை.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ’பிரகாசமான வாழ்வருளும் ஸ்ரீசீதாராம- கல்யாண வரதராஜப் பெருமாள்’

  மிகவும் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட தலைப்பூஊஊஊ

  இருப்பினும் நிறைவான பிரகாசமளிக்கும் / வாழ்வளிக்கும் தலைப்பு.

  பிரகாசமான வாழ்வு யாருக்கு? எப்படி? என்பதே என் கேள்வி.

  மேலும் படித்துப்பார்த்துவிட்டு வருகிறேன்.

  >>>>>

  ReplyDelete
 12. ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;

  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;

  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;

  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்;
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்; ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்.

  தங்கள் சொல்படியே இன்று 24 முறைகள் சொல்லிவிட்டேனாக்கும்.

  >>>>>

  ReplyDelete
 13. ஸ்ரீராமரின் அனைத்துப்படங்களும் வெகு அற்புதமாக உள்ளன.

  ஸ்ரீ ஸீதாதேவியுடன் சேர்ந்து ஸ்ரீராமரைப் பார்ப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 14. பரிதி ..... பரிதியூர் ..... பருத்தியூர் ..... பெயர் காரணங்கள் புரிந்தன.

  பிரசன்ன பார்வதி ..... பிரசன்னம் என்றால் [செந்தாமரைபோல] மலர்தல் ... கேட்கவே மிகவும் இனிமை.

  >>>>>

  ReplyDelete
 15. பெட் அனிமலாக வீட்டில் சுற்றும் நல்ல பாம்புகள். ஆனால் யாரையுமே கடிக்காது.

  சுவையான சுவாரஸ்யமான ந ல் ல தகவல் ....
  அந்த ஊர் ந ல் ல பாம்புகள் போலவே.

  அங்கு போனால் நல்லதாக நாலு பிடித்துக்கொண்டு வந்து, நம் வீட்டிலும் வளர்க்கலாம் போல ஆசையை ஏற்படுத்துகிறது. ;)

  >>>>>

  ReplyDelete
 16. அம்பரீஷன் சரித்திரம் தங்கள் பேருதவியால் ஏற்கனவே என்னால் ஒருமுறை கேட்டு இன்புற முடிந்தது.

  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html
  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html

  இன்று மீண்டும் தங்களின் திருவாயால் அதனை இங்கு கேட்டதில் மேலும் என் மகிழ்ச்சி இருமடங்காக ஆகியது.

  >>>>>

  ReplyDelete
 17. பருத்தியூர் கோதண்டராமஸ்வாமி கோயில்

  பருத்தியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜஸ்வாமி கோயில்

  பருத்தியூர் ஸ்வாமி விக்ரஹங்கள்

  எல்லாமே அழகழகாகக் காணொளி மூலமும், அவற்றின் பெருமைகளை அந்த வேல்குடி பெரியவரின் அழகான பிரவசனத்தின் மூலம் கேட்டு, மைசூர் மஹாராஜா அளித்த மர ஆஞ்சநேயர் உள்பட அனைத்தையும் வெகுவாக ரஸிக்க முடிந்தது. ;)

  மிகவும் ஆனந்தமளிக்கும் அபூர்வக் காட்சிகள்.

  >>>>>

  ReplyDelete
 18. முதல் ஆறு படங்களும் கடைசி படமும் அசத்தலாக உள்ளன.

  எல்லாவற்றையும் தூக்கிச்சாப்பிடும் ஜொலிக்கும் வைரமாக அந்த அம்பாள் படம் அதுவும் மூக்குத்தியுடன் [Blingee] ;))))))

  >>>>>

  ReplyDelete
 19. எப்படித்தான் இப்படியெல்லாம் தினமும் சிரத்தையாகவும், பல்வேறு படங்களுடனும், சத்தான முத்தான மனதுக்கு ஹிதமான விஷயங்களுடனும் பதிவுகள் தர முடிகிறதோ !

  You are So Great ! My Special Sweet !! All the Best !!!

  அனைத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். வாழ்க !

  ;) 1322 ;)

  ooo ooo ooo

  ReplyDelete
 20. பரிதியூரின் இனிய தல புராணத்தினை பதிவில் கூறிய விதம் அருமை. மிக்க மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  ReplyDelete
 21. இந்தமுறை ஆலய தரிசனத்தின் போது பருத்தியூர் செல்லலாம் என்று தோன்றுகிறது. படங்கள் எல்லாம் பிரமாதம் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 22. இந்த முறை ஆலய தரிசனம் செய்ய பருத்தியூரும் ஒன்றாக இருக்குமென்று நம்புகிறேன்.படங்கள் பிரமாதம் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 23. பின்னூட்டங்கள் ஏனோ போவதில்லை.

  ReplyDelete
 24. கீழிருந்து மேலே இரண்டாவது படத்தில், அந்தக் குரங்காருக்குக் கீழே மரத்தடியில் அமர்ந்து ஸீதா லக்ஷ்மண சகிதமாக ஸ்ரீ ராமரை தரிஸிக்கும் பாக்யம் கிடைத்த பெரியவர் ..........

  யாரோ .... அவர் .... யாரோ ? தெரிந்துகொள்ள ஆசை.

  ReplyDelete
 25. கீழிருந்து மேலே இரண்டாவது படத்தில், அந்தக் குரங்காருக்குக் கீழே மரத்தடியில் அமர்ந்து ஸீதா லக்ஷ்மண சகிதமாக ஸ்ரீ ராமரை தரிஸிக்கும் பாக்யம் கிடைத்த பெரியவர் ..........

  யாரோ .... அவர் .... யாரோ ? தெரிந்துகொள்ள ஆசை.

  ReplyDelete
 26. கீழிருந்து மேலே இரண்டாவது படத்தில், அந்தக் குரங்காருக்குக் கீழே மரத்தடியில் அமர்ந்து ஸீதா லக்ஷ்மண சகிதமாக ஸ்ரீ ராமரை தரிஸிக்கும் பாக்யம் கிடைத்த பெரியவர் ..........

  யாரோ .... அவர் .... யாரோ ? தெரிந்துகொள்ள ஆசை.

  ReplyDelete
 27. கீழிருந்து மேலே இரண்டாவது படத்தில், அந்தக் குரங்காருக்குக் கீழே மரத்தடியில் அமர்ந்து ஸீதா லக்ஷ்மண சகிதமாக ஸ்ரீ ராமரை தரிஸிக்கும் பாக்யம் கிடைத்த பெரியவர் ..........

  யாரோ .... அவர் .... யாரோ ? தெரிந்துகொள்ள ஆசை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் .. வாழ்க வளமுடன் .. கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைந்த நன்றிகள்..

   அந்த பெரியவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர்..!

   ஹிந்தி இலக்கியத்தின் தலை சிறந்த சிற்பிகளுள் ஒருவரான பெருங் கவிஞர் சூர்தாஸ் ..அவர் கோவர்தன கிரியிலேயே வாழ்ந்துகிரிதர கோபாலனைத் தவிர தன் உள்ளத்தில் வேறு யாருக்கும் இடமில்லை என்று
   பேரரசரான் அக்பரிடமே கூறியவர்..!

   சூர்தாஸ் சங்கீத ஸம்மேளன் என்று ஆண்டு தோறும்
   இசை விழாக்களும் நடைபெறுகின்றன ..!

   Delete
  2. //வணக்கம் .. வாழ்க வளமுடன் .. கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைந்த நன்றிகள்..//

   ;))))) சந்தோஷம் ! ;)))))

   //அந்த பெரியவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர்..! //

   அடடா ! ஏண்டா கேட்டோம் என ஆகிவிட்டதே, எனக்கு !

   //ஹிந்தி இலக்கியத்தின் தலை சிறந்த சிற்பிகளுள் ஒருவரான பெருங் கவிஞர் சூர்தாஸ் ..//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி.

   ஹிந்தியில் இராமாயணம் படைத்த துளஸிதாஸரைப்பற்றித்தான் ஓரளவுக்குத் தெரியும்.

   //அவர் கோவர்தன கிரியிலேயே வாழ்ந்து கிரிதர கோபாலனைத் தவிர தன் உள்ளத்தில் வேறு யாருக்கும் இடமில்லை என்று பேரரசரான் அக்பரிடமே கூறியவர்..!//

   அருமை. மிக அருமை.

   ”கோபாலனைத் தவிர தன் உள்ளத்தில் வேறு யாருக்கும் இடமில்லை” என்றல்லவா கூறி இருக்கிறார் !!!!!

   கோபாலகிருஷ்ணனிடம் அவ்வளவு பிரியம் போலிருக்கிறது. ;)))))

   //சூர்தாஸ் சங்கீத ஸம்மேளன் என்று ஆண்டு தோறும் இசை விழாக்களும் நடைபெறுகின்றன ..! //

   நடக்கட்டும் ..... நடக்கட்டும் .....

   நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்.

   அனைத்துத் தகவல்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   ஒன்று கேட்டால் ஒன்பது சொல்லக்கூடிய தகவல் களஞ்சியம் வாழ்க வாழ்கவே ! - vgk

   Delete
  3. பருத்தியூர் ராமாயணம் சாஸ்திரி ஸ்ரீ ராமரின் திவ்ய தரிசனம். சர்வம் ராம மாயம் புத்தகத்திலிருந்து.

   Delete
 28. சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 29. படங்களுடன் கல்யாண வரதராஜர் பற்றிய தகவல்களும், கூடுதலாக சூர்தாஸ் பற்றியும் அறிய வைத்தீர்கள் நன்றி.
  முதல் இரண்டு படங்களை விட்டு கண்கள் அகல மறுக்கின்றன. ஆழ்வார் ,"பல்லாண்டு, பல்லாண்டு " என பாடியது நினைவில் மோதுகிறது .

  ReplyDelete
 30. This is not Surdas. This picture is Paruthiyur Ramayanam Sastri having 'Divya Darisanam' on the banks of Kudamurutti river. The Lord asking him to build the temple kulam. Picture from book 'Sarvam Rama Mayam'.

  ReplyDelete