Friday, July 11, 2014

ஸ்ரீவில்லிபுத்தூர்ஆனி ஸ்வாதி உற்சவம்ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கோலம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்வித்திருக்காப்பு 

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

 ஸ்ரீமந்நாராயணன் வடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள திவ்யதேசம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம் பன்னிரு ஆழ்வார்களில் விஷ்ணுசித்தர் ஆகிய பெரியாழ்வாரும் அவர் தம் திருமகளாய் தோன்றிய ஸ்ரீஆண்டாளும் அவதரித்த பெருமை உடையது. 
பெரிய திருவடியான கருடாழ்வாரின் அம்சமாய் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த பெரியாழ்வார் சிறுவயது முதற்கொண்டே பரமனிடம் ஆழ்ந்த பக்தி உடையவராய், அழகிய நந்தவனம் அமைத்து ஸ்ரீவில்லிபுத்தூ உறையும் வட பெருங்கோயிலுடையானுக்கு மாலை கைங்கர்யம் செய்து வந்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் சன்னதி, ஸ்ரீபெரியாழ்வார் திரு ஆனி ஸ்வாதி உற்சவத்தில் ஆளேறும் பல்லக்கில் ஸ்ரீஆண்டாள் திருக்கோலத்தில் பெரியபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சி..!.

ஸ்ரீமந்நாராயணனின் நியமனப்படி மதுரையம்பதிக்குச் சென்று, வல்லபதேவ பாண்டிய மன்னனின் அவையில் குழுமியிருந்த அனைத்து வித்வான்களும் இசைந்து ஏற்றுக் கொள்ளும்படி, நாராயணனே பரம்பொருள் என்று பரதத்வ நிர்ணயம் செய்தார்.
 
மன்னனும் அவரை கௌரவிக்க எண்ணி, தம் பட்டத்து யானை மேல் ஆழ்வாரை ஏற்றி, மற்ற வித்வான்கள் புடைசூழ நகர்வலமாக அழைத்து வர, ஸ்ரீமந்நாராயணனும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திவ்யாயுதங்களை தரித்தவராய் கருடாரூடராய் வானிலே எழுந்தருளி ஆழ்வாருக்குக் காட்சி கொடுத்தார்.


இதைக் கண்ட பெரியாழ்வார், அன்பின் மிகுதியால் ஸ்ரீமந்நாராயணனின் எழிலுக்கு கண்ணேறு பட்டு விடுமோ என அஞ்சி, அவருடைய 
திவ்ய மங்கள ரூபம் நிலை பெற்றிருக்கும் வகையில் பட்டத்து யானை மீது இட்டிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டு பாடியருளினார். 
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளி, பாண்டியன் அரசவையில் பரிசாகப் பெற்ற பொற்கிழியைக் கொண்டு, வடபெருங் கோவிலுடையானுக்கு அரிய பல திருப்பணிகள் செய்து, உயர்ந்த கோபுரத்தையும் அமைத்தார். 
ஸ்ரீமத் பாகவத ஸாரமான பெரியாழ்வார் திருமொழியையும் 
அருளிச் செய்தார்.

ஸ்ரீபெரியாழ்வார் திருநட்சத்திரத்தில் ஆனி மஹோத்ஸவம் 
11 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் காலை 
தங்க தோளுக்கினியானில் புறப்பாடு நடைபெறும். 

இரவு பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு மண்டபங்களில் 
உற்சவர் புறப்பாடு நடைபெறும்..

 நாடகசாலைத் தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆளேறும் பல்லக்கில் ஸ்ரீஆண்டாள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீபெரியாழ்வார் அருள்பாலிப்பார்.


26 comments:

 1. ஆனி சுவாதி உற்சவம் அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. அற்புதமான படங்கள்... தரிசனம் கிடைத்தது அம்மா...

  ReplyDelete
 3. படங்களும்,செய்திகளும் அருமை....

  ReplyDelete
 4. அருமையான படங்கள்.
  பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.

  ReplyDelete
 5. அன்னையின் அற்புத தரிசனம்!
  ஆனி சுவாதி உற்சவம் அறியகிடைத்தது மகிழ்ச்சி!

  அழகிய படங்கள் யாவுமே அருமை!

  வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 6. படங்களும் பகிர்வும் சூப்பரா இருக்கு. உக்காந்த இடதுலேயே பரவசமான தரிசனங்கள் காணக்கிடைகுதே,

  ReplyDelete
 7. இந்த ஆண்டுக்கான ஆண்டாளின் முதல் வருகை மகிழ்வளிக்கிறது.

  வருக ! வருக !! வருக !!! என மனமார வரவேற்று மகிழ்கிறோம்.

  >>>>>

  ReplyDelete
 8. நாங்கள் இருக்கும் தெருவின் பெயர் : வடக்கு ஆண்டார் தெரு.

  பாதிபேர்கள் அதை ’ஆண்டாள் தெரு’ என்றும் உச்சரித்து / எழுதி வருகிறார்கள்.

  ஆண்டாரோ ஆண்டாளோ எதுவாகினும் சரிதான் !

  >>>>>

  ReplyDelete
 9. முதல் படத்தில் ஸ்ரீலக்ஷ்மி சும்மா ஜொலிக்கிறாள்.

  அதுவும் அந்தக் காது ஜிமிக்கிகளும், கை வளையல்களும்,
  கையிலிருந்து தொடர்ந்து கொண்டிக்கொண்டே இருக்கும் தங்க நாணங்களும், கிரீடமும், நெஞ்சும், மார்பும், வயிறும் மட்டுமல்லாமல் இருகைகளிலும் பிடித்துக்கொண்டுள்ள தாமரைகளிலும் ஜொலிப்போ ஜொலிப்பு .. ஜோர் ஜோர் !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. //தொடர்ந்து கொண்டிக்கொண்டே இருக்கும் தங்க
   நாணங்களும், //

   என்பது

   தொடர்ந்து கொண்டிக்கொண்டே இருக்கும் தங்க
   நா ண ய ங் க ளு ம் ,

   என்று இருக்க வேண்டும்.

   எழுத்துப்பிழைக்கு நாணம் ஏற்பட்டு நானும் வருந்துகிறேன்.

   Delete
  2. //கையிலிருந்து தொடர்ந்து கொண்டிக்கொண்டே இருக்கும் தங்க நாணங்களும்,//

   இதில் பாருங்கோ, மேலும் ஒரு எழுத்துப்பிழையுள்ளது. இப்போது தான் என் கண்களுக்குப்படுகிறது.

   ’கொண்டிக்கொண்டே’ என்பது தவறு ..... ;(
   அது .......
   ‘கொட்டிக்கொண்டே’ என்று இருக்கணும்.

   இதோ FRESH ஆகவே முழுவதும் கொடுத்துள்ளேன்.

   அதுவும் அந்தக் காது ஜிமிக்கிகளும், கை வளையல்களும்,
   கையிலிருந்து தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும் தங்க நாணயங்களும், கிரீடமும், நெஞ்சும், மார்பும், வயிறும் மட்டுமல்லாமல் இருகைகளிலும் பிடித்துக்கொண்டுள்ள தாமரைகளிலும் ஜொலிப்போ ஜொலிப்பு .. ஜோர் ஜோர் !

   Delete
 10. கொண்டையுடன் ஆண்டாள் ! படங்கள் அருமையோ அருமை.

  >>>>>

  ReplyDelete
 11. ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றிய காணொளி கொடுத்துள்ளது கண்கொள்ளாக் காட்சியாக அழகாக உள்ளது.

  அவசரமாக ஒருமுறை பார்த்து ரஸித்தேன். நேரமில்லை.

  சிப்பியிருக்குது ...... முத்துமிருக்குது ....... திறந்து பார்க்க ...... நேரமில்லடி ’ரா ஜா த் தி’ .......

  பாட்டுப்போல ஆகிவிட்டது, என் நிலைமையும்.

  மீண்டும் பொறுமையாகப் பார்ப்பேன்.

  >>>>>

  ReplyDelete
 12. அதுவும் ஆண்டாளின் பின் அலங்காரம் [பின்னல் அலங்காரம்] பின்னியெடுப்பதாக, பின்னிப்பெடலெடுப்பதாக சூப்பராக உள்ளது, அந்தக்காணொளியில்.

  >>>>>

  ReplyDelete
 13. கடைசியில் காட்டப்பட்டுள்ள இரு கோபுரங்கள் உள்பட அனைத்துப்படங்களும், விளக்கங்களும், மனதுக்குத் திருப்தியாக உள்ளன.

  அனைத்துக்கும் என் பாராட்டுக்கள், அன்பான நல்வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அதற்குள் அந்தக் கடைசியில் காட்டப்பட்டிருந்த இரண்டு ’கோபு’ரங்களும் தங்களுக்குள் ஒன்றாக இணைந்து இல்வாழ்க்கை அமைத்துக்கொண்டு, மூன்று குட்டிகளை வேறு ஈன்றுள்ளனவே ! ஆச்சர்யமாக உள்ளது.

   அவைகளும் ஹாட்-ட்ரிக் அடித்துள்ளன.

   இதுபோலெல்லாம் பதிவிட்டபின் மாற்றங்கள் செய்தால், ஏற்கனவே வருகை தந்து கருத்தளித்தவர்களுக்கு ஓர் தகவல் கொடுக்க வேண்டாமா?

   Delete
  2. உங்களைப்பார்த்து நானும் ஒருசில புதிய படங்களை என் லேடஸ்டு பதிவினில் இணைத்து, மேலும் ஒரு புதிய PARAவும் கடைசியில் சேர்த்துள்ளேன். எல்லாம் உங்களால் ஏற்பட்ட ஆசை தான்.

   ஆனால் இங்கு வந்து உங்களுக்குத் தகவல் PROMPT ஆகக் கொடுத்துட்டேன் பாருங்கோ.

   நான் எப்போதுமே எல்லாவற்றிலுமே VERY VERY PROMPT தானாக்கும். ஹூக்க்க்க்க்கும் !

   Delete
  3. வணக்கம்..வாழ்க வளமுடன்..

   அருமையான கருத்துரைகளுக்கும், தகவல்களுக்கும்
   இனிய நன்றிகள்..

   கடைசிப் படத்தை புதிதாக இணைக்கவில்லை.. பெரிய படமாக இருப்பதால் தாமதமதமாக காட்சிப்பட்டிருக்கலாம்..!

   Delete
  4. //கடைசிப் படத்தை புதிதாக இணைக்கவில்லை.. பெரிய படமாக இருப்பதால் தாமதமதமாக காட்சிப்பட்டிருக்கலாம்..!//

   இருக்கலாம். இருக்கலாம். அப்படியும் இருக்கலாம். நீங்கள் என்ன பொய்யா சொல்லப்போகிறீர்கள் ... அதுவும் என்னிடம்.

   நான் முன்பு பார்த்தபோது இரண்டே இரண்டு கோபுரங்கள் மட்டுமே இருந்தன. அத்துடன் பதிவு முடிந்து விட்டது போலத்தோன்றியது. பிறகு அகஸ்மாத்தாக மீண்டும் தங்கள் பதிவுப்பக்கம் நான் மேய்ந்தபோது, அந்த இரண்டு கோபுரங்களும் அதற்குள் குட்டிபோட்டதுபோல மேலும் மூன்று கோபுரங்கள் எனக்குக் காட்சியளித்தன.

   அதனால் நானும் குழம்பி உங்களையும் குழப்பி விட்டேன். Very Very Sorry ங்க ..... கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ். vgk

   Delete
  5. எப்படியோ இதுபோன்ற சில எதிர்பாராத நிகழ்வுகளால், நம் பின்னூட்ட எண்ணிக்கைகள் மேலும் சற்றே அதிகரிப்பதிலும், இதை சாக்கிட்டாவது தாங்கள் பெரிய மனது பண்ணி, ஏதோ இரண்டொரு வரிகள் எனக்காக பதில் தருவதிலும் எனக்கோர் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

   எல்லாம் நன்மைக்கே.;) வாழ்க ! வளர்க !!

   தங்களின் நாளைய பதிவு என்னவோ ஏதோ என்ற ஆவலுடன் இப்போதே காத்திருக்கிறேனாக்கும் ! ;)

   Delete
 14. ஆனந்தமான ஆனி சுவாதி!..
  இனிய படங்களுடன் பரவசமான பதிவு.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 15. ஸ்ரீவில்லிப்புத்தூர் வரை சென்று ஆண்டாள் [பதிவின்] அழகினில் மயங்கி அப்படியே சொக்கிப்போய் விட்டதால் என் வருகையில் இன்று தாமதமாகிவிட்டது. நம்புங்கோ. முறைக்காதீங்கோ. நாளை சந்திப்போம்.

  ;) 1332 ;)

  oo oo oo oo

  ReplyDelete
 16. பழைய பதிவுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏதோ கோளாறு ஆகியுள்ளது.

  திடீரென்று பழையபடி 2011=380, 2012=394, 2013=366 ஆகமொத்தம் 1140 எனக்காட்டுகிறது. நடுவில் எதைப்புதிதாகக் கொண்டு வந்துள்ளீர்களோ ...... அதில் என் பின்னூட்டம் உள்ளதோ இல்லையோ .... ஒரே விசாரமாக உள்ளது.

  2011= 380
  2012= 394
  2013= 366
  2014= 193
  ========
  Total-1333 as on Today 11/07/2014
  ========

  One triple three அழகான நம்பர் தான் ! மகிழ்ச்சி !!

  ;) 1333 ;)

  ReplyDelete
 17. ஆனி சுவாதிக்கு இப்படி ஒரு மகிமை இருபது அறிந்தேன் மகிழ்ச்சி.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 18. அழகான படங்களுடன் கூடிய அற்புதமான படைப்பு

  ReplyDelete
 19. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மிக அழகாக இருக்கு. ஆனி ஸ்வாதி பற்றி அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.

  ReplyDelete